இந்து
முன்னணி பொறுப்பாளர் திரு. சுரேஷ் இன்று (18.06.2014) இரவு சுமார் 10
மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில்
வெட்டி கொலைச் செய்யப்பட்டார். தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக
கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அடிப்படைவாத இயக்கங்களை ஓட்டுக்காக
வளர்த்தி வரும் அரசியல் கட்சிகள் இந்த தொடர்கொலைகளுக்கு
பொறுப்பேற்கவேண்டும். இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் 24ஆண்டுகளாக
போலீசுக்கு தண்ணிக் காட்டிய முஸ்லீம் பயங்கரவாதியான ஹைதர் அலியை நீதிமன்றம்
ஜாமீனில் வெளியேவிட்டுள்ளது. அரசின் மெத்தனப்போக்கு தொடர்வதால் தமிழகம்
கொலைகளமாக மாறியுள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன்
பின்னனியில் உள்ள அமைப்புகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த படுகொலையை கண்டித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்கள் விடுத்த அறிக்கை:
இன்று (18.6.2014) இரவு சுமார் 9.30 மணி
அளவில் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் வைத்து இந்து முன்னணியின்
திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் திரு. கே.பி.எஸ். சுரேஷ் எனும் பாடி சுரேஷ்
சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் வெள்ளையப்பன் படுகொலை நடந்து ஒரு
வருடம் இன்னமும் முடியவில்லை. கொலையாளிகள் கைது செய்யப்பட்டாலும், கொலைக்கு
உடந்தையானவர்கள், கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் எல்லாம்
வெளியில் தான் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கொலையின் மூலம் தமிழக அரசுக்கு
பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அமைதி பூங்காவா இருக்கிறது,
பயங்கரவாதிகளுக்கு. 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளியை பிடித்த உடன்
ஜாமீன் கிடைக்கும் அளவில் தமிழகத்தின் காவல்துறை செயல்பாடு இருப்பதை கண்டு
தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள்.
தமிழக முதல்வர் அவர்கள் இக்கொலை வழக்கை
நேரிடையான கவனத்தில் கொண்டு குற்றவாளிகளையும், அவர்களுக்கு
உடந்தையானவர்களையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும்
உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில்
தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு
சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது
குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும்
திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து
முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி- VCRC
0 comments:
Post a Comment