பெரம்பலூர், : திறந்த நிலையிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, தற்போது பயனற்றுப் போனதால், பழுதாகிப் போனதால் உபயோகப்படுத்தப்படாமல், திறந்த நிலையிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருப்பின் அதுகுறித்த விரங்களை மாவட்ட நிர் வாகத்திற்கு உடனே தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக எங்காவது ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும்பணி நடந்தால் அந்தப் பணிகள் முடிவுற்றவுடன் அதன் வாய்பகுதியினை உடனடியாக உரிய மூடிகொண்டு மூடப்படவேண்டும் என்று ஆழ்குழாய் அமைக்கும் வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆழ்குழாய் கிணறுகள் திறந்த நிலையில் இருப்பின் அதில் குழந்தைகள் தவறி விழுவதற்கான அபாயம் உள்ளது.
எனவே ஆழ்குழாய் கிணறுகள் திறந்த நிலையிலிருந்தால் உடனே பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள 1077என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது v.kalathur seithi.
நன்றி-தினகாரன்.
0 comments:
Post a Comment