வருவாய்த்துறையில், 2,342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) காலி
பணியிடங்களை நிரப்ப, ஜூன், 14ல், போட்டிதேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக, ஏப்ரல், 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை, அஞ்சல் அலுவலகங்கள் அல்லது வங்கிகள் மூலம், ஏப்ரல், 17 வரை செலுத்தலாம். போட்டித் தேர்வு, ஜூன், 14 காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கும். இந்த தேர்வு, பொது அறிவில், 75 கேள்வி, வி.ஏ.ஓ., பணிகள் தொடர்பாக, 25 கேள்வி, திறனறிதல் பிரிவில், 20 கேள்வி மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில், 80 கேள்வி என, மொத்தம், 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், தலா 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக, 90 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குரூப் - 4, வி.ஏ.ஓ., போன்ற தேர்வுகளுக்கு, பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக இருப்பதால், ஒவ்வொரு முறையும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த, குரூப் - 4 தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். அதேபோல், இந்த தேர்வுக்கும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி-தினமலர்.

0 comments:
Post a Comment