பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும், 21ம் தேதி
துவங்குகிறது. தமிழகத்தில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்
தேர்வு, 26ம் தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அந்தந்த
தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், ஒரு மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
அங்கிருந்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் அறிவிக்கும், மாவட்டத்தில் உள்ள,
கல்வி மாவட்டத்துக்கு, விடைத்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. இம்முறை,
தனியார் பார்சல் வேன் மூலம், விடைத்தாள்கள் அனுப்பபடுகின்றன. விடைத்தாள்கள்
திருத்தும் பணி வரும், 21ம் தேதி துவங்கும் நிலையில், அவற்றை திருத்தி
முடிக்க, 10 முதல், 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம்
என, மொழி பாடங்களில், முதல் மற்றும் இரண்டாம் விடைத்தாள்களை, வரும், 21ம்
தேதி முதல் திருத்தி, மதிப்பெண் வழங்கும் பணியை, ஏப்., 5க்குள்ளும், பிற
பாடங்களை, வரும், 1ம் தேதி துவங்கி, 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் முதல் தாள் திருத்தம் முடிந்த பின், இரண்டாம் தாள்
திருத்தம் செய்ய, வழங்கப்படும். பெறப்பட்டுள்ள விடைத்தாள், ஆசிரியர்கள்
எண்ணிக்கையை பொறுத்து, ஒவ்வொரு நாளும், எவ்வளவு விடைத்தாள் திருத்தி வழங்க
வேண்டும் என, கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்.
நன்றி-தினமலர்.
0 comments:
Post a Comment