vkalathur வ.களத்தூரில் ஒவ்வொருமுறையும், சுவாமி ஊர்வலத்தின் போது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இடையூறு கொடுப்பது வழக்கமான ஒன்று. இந்த நடைமுறை வ.களத்தூரில் மட்டும் நடக்கிறது என்று கருதினால் நம்மைவிட முட்டாள்கள் வேறு இல்லை. இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ , அங்கெல்லாம் இந்த அராஜகம் அரங்கேறுவது வழக்கமாகிவிட்ட ஒன்று... இதோ சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த இஸ்லாமிய அராஜகம்......
பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் மிகவும்
பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின்
திருவிழாவை திருப்பூர், கோவை உட்பட நான்கு மாவட்ட மக்கள் கலந்து கொண்டு
கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த விழா 22 நாட்கள் நடைபெறும். அதில்
தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தேரோட்டம் மூன்று
நாட்களும், அப்பகுதி இந்துப் பெண்கள் திருவோடு எடுக்கும் நிகழ்வு 5
நாட்களும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் பெண்கள்
திருவோடு எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து அம்மனை தரிசித்து
செல்வார்கள். இந்த தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில்
நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் பிப்ரவரி 18 2014ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி மார்ச் 4 2014ம் தேதியிலிருந்து பெண்கள் பகுதிவாரியாக திருவோடு எடுக்கும் நிகழ்வும் தொடங்கியது.
பொள்ளாச்சி மாரியம்மன் தேர்திருவிழா சமயத்தில் சூலேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனி மற்றும் அதனருகே அமைந்துள்ள பகுதி இந்துக்கள் காலங்காலமாக திருவள்ளுவர் வீதி வழியாக ஊர்வலத்தை நடத்திச் சென்று கோவிலை அடைந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இந்த ஊர்வலமானது இரவு நடைபெறும். வழக்கம் போல் இவ்வருடமும் கடந்த 09.03.2014, ஞாயிற்றுக்கிழமை இரவு சூலேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனி மற்றும் அதனருகே அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இந்துக்கள் ஒன்று கூடி திருவோடு எடுத்து கோவிலை நோக்கி திருவள்ளுவர் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த ஊர்வலத்தினத்தன்று (09.03.2014) திருவள்ளூர் வீதியில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதற்காக அந்த வீதியை ஆக்கிரமித்து சாமியானா போடப்பட்டிருந்து. அன்று இரவு இவ்வீதி வழியாக ஊர்வலம் செல்லும் என்று அறிந்திருந்தும் ஊர்வலத்தை நடக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் காலையிலேயே தன் வீட்டு நிகழ்வு முடிந்திருந்தும் வேண்டுமென்றே சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த சாமியானவை கழற்றாமல் வைத்திருந்தார் அந்த அராஜக எண்ணம் படைத்த இஸ்லாமியர். இதை அறியாத இந்து மக்கள் எப்பொழுதும் போல் திருவோடு எடுத்துக்கொண்டு வழக்கமான தங்கள் ஊர்வல பாதையான திருவள்ளூர் வீதியை அடைந்த போது ஊர்வலம் செல்ல வழியில்லாமல் சாலை ஆக்கிரமித்திருந்தைக் கண்ட இந்துக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளரான இஸ்லாமியரிடம் ஆக்கிரமிப்பை அகற்றும்படி கோரினர். ஊர்வலத்தை சீர்குலைக்கும் எண்ணத்துடன் அந்த இஸ்லாமியர் இந்துக்களை வேறுவழியாக சுற்றிச்செல்லும்படியும் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது எனவும் பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு திடுக்கிட்ட இந்துக்கள் காலங்காலமாக நாங்கள் செல்லும் இந்த ஊர்வலப்பாதையை மாற்ற முடியாது இவ்வழியே தான் செல்லுவோம் என்று கூறி திருவோடுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதற்கிடையில் அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகையை முடித்துவிட்டு வந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் இந்து மக்களிடையே வாக்குவாதம் நடத்தி இவ்வழியே ஊர்வலம் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று பிரச்சினையில் இறங்கி இந்துக்களைத் தாக்க தொடங்கினர். அங்கு ஒரு கலவர சூழல் உருவானது.
என்ன நடந்தாலும் சரி எங்கள் பாரம்பரிய ஊர்வலப் பாதையை மாற்றிக்கொண்டு எங்களால் வேறு வழியாக செல்லமுடியாது என்று கூறி இந்துக்கள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் சாலையில் அமர்ந்து போராடினர். இதையறிந்து காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ”சாலையை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்தி ஊர்வலத்தை தடுப்பது சட்டப்படி குற்றம். ஆக்கிரமிப்பை அகற்றி வழிவிடவேண்டும்” என வற்புறுத்தி இந்துக்களுக்கு பாதுகாப்பளித்து ஊர்வலத்தை அனுமதித்தனர். ஆனாலும், அராஜக இஸ்லாமியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து ஊர்வலத்தில் அம்பிகையின் நாமத்தை இந்துக்கள் பக்தியுடன் கோஷம் போட்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஊர்வலம் பாரம்பரிய வழியாக செல்வதற்காவது அனுமதியளித்தனரே என்று இந்துக்களும் அமைதியுடன் ஊர்வலத்தை நடத்தி சென்றனர். இந்த அடிப்படைவாத முஸ்லீம்களின் அடாவடியால் இரவு ஒன்பது மணிக்கு மாரியம்மன் கோவிலைச் சென்றடைய வேண்டிய திருவோடு ஊர்வலம் தாமதமாகி நள்ளிரவு 1.40 மணிக்கு மாரியம்மன் கோவிலைச் சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சி தொடர்பாக நாம் உள்ளூர் பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டபோது, இந்த ஊர்வலத்தை சீர்குலைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் SDPI அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் செயல்பட்டுள்ளார்கள். இதே போல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போதும் பிரச்சினை செய்தார்கள் என்று கூறினார். மேலும், அவர் கூறுகையில் இந்த பிரச்சினையின் போது சில முஸ்லீம்கள் சாலையில் அமர்ந்திருந்த பெண்களை மோசமாக திட்டியதாகவும் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த அரசு அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட இரு பிரிவினரின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென பேச்சுவார்த்தைக்கு வந்ததிருந்த இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் அரசு அலுவலகத்திலேயே தொழுகையில் ஈடுபட, அதைக்கண்டு வெகுண்ட இந்துக்களும் தனியே சென்று பிரார்த்தனைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அதிகாரிகள் இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மீதும் மூன்று பிரிவுகளில் (506/1,448,353) வழக்கு பதிந்துள்ளனர். இந்த சமாதான பேச்சுவார்த்தையின்போது இனி மசூதி இருக்கும் தெருவின் வழியே இந்துக்களின் எந்த ஊர்வலமும் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருப்பதாக உள்ளூர் பிரமுகர் ஒருவர் நம்மிடையே கூறினார்.
சென்ற ஆண்டும் இது போலவே இஸ்லாமியர்கள்
தடையை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டும்
அவ்வாறே திட்டமிட்டு கலவரம் செய்கின்றனர். இந்த கலவரத்தை வாடிக்கையாக்கி
கோவில் திருவிழாவை முடக்குவதற்காக உள்ளூர் இஸ்லாமியர்களும் அவர்களுக்கு
ஆதரவாக பல தீவிரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில்
பெருகி வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வெளிப்பாடே இந்த சம்பவம் என்றார்
சமூகவியல் ஆராய்ச்சியாளர் திரு. ஹரிபிரசாத்.
இந்த சம்பவம் எழுப்பும் கேள்விகள்:
- சட்ட விரோதமாக சாலையை ஆக்கிரமித்து பந்தல் போட்ட இஸ்லாமியர் மீது எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை?
- காரணமேயில்லாமல் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி கலவர சூழலை உருவாக்கிய இஸ்லாமியர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
- இப்போது ஊர்வலம் சென்றிருந்தாலும் வரும் காலங்களில் அந்தப் பகுதி மக்கள் அதே தெருவில் ஊர்வலம் செல்லத்தடையில்லை என்ற உத்திரவாதம் அதிகாரிகளால் ஏன் வழங்கப்படவில்லை??
இது போல் சம்பவங்கள் தமிழகத்தின் பல
பகுதிகளிலும் நடந்த வண்ணம் உள்ளது. அரசாங்கமும், அதிகாரிகளும் இம்மாதிரி
சம்பவங்களில் தங்கள் நடுநிலைத் தன்மையிலிருந்து விலகி போலி மதச்சார்பின்மை
பேசி சிறுபான்மையினரின் அராஜகத்திற்கு ஆதரவாக செயல்படுவதையே கொள்கையாக
கொண்டுள்ளனர். தமிழகத்தில் வாழும் இந்துக்கள் பருவ மாறுதல்களுக்கு ஏற்றவாறு
பாரம்பரியமாக பல திருவிழாக்களை நடத்தி கடவுளர்களை போற்றி வணங்குவதை
வழக்கமாக கொண்டவர்கள். இந்நிலை நீடித்தால் இந்துக்களுக்கு அவர்கள் திருவிழா
நடத்துவதற்கும் அது சம்பந்தமாக ஊர்வலம் நடத்துவதற்கும் கூட உரிமை
மறுக்கப்படும் நிலை வந்துவிடுமோ என்ற சந்தேகம் நம்மிடையே ஏற்படுகிறது.
இந்துக்களின் உரிமையை காப்பாற்ற இனிவரும் காலங்களிலாவது அரசாங்கமும்,
காவல்துறையும் அராஜகத்திற்கும், அடிப்படைவாதிகளுக்கும் அடிப்பணியாமல்
செயல்படவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!
0 comments:
Post a Comment