Thursday, 3 April 2014

பெரம்பலூரில் போதையில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் தாக்கி அவர்களின் மண்டையை உடைத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள்  ஈடுபட்டிருந்தனர். இரவு சரியாக 10.30 மணிக்கு மேல் ஆயுதப்படையைச் சேர்ந்த  தலைமைக்காவலர்களான ரத்னா, பிரம்மா, வேலு, முத்தையா இவர்களுடன் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகிய ஐந்து பேரும் பெரம்பலூரில் உள்ள நாமக்கல் செல்வம் எனும் ஹோட்டலில் குடி போதையில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது  அந்த ஹோட்டலுக்கு துறையூர் வழியே உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்று விட்டு லாரியில் திரும்பிய 30க்கும் மேற்பட்டவர்களும், அதே ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது லாரியில் வந்தவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த காவலர் முத்தையா  லாரியில் வந்தவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், கல்லால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் வடிந்துள்ளது.
உறவினருக்கு ரத்தம் வடிவதை பார்த்த மற்றவர்கள், இனியும் விடக்கூடாது என போதையிலிருந்த காவலர்களை நைய புடைந்து விட்டனர். இதில்  தலைமைக்காவலர்கள் பிரம்மாவும், முத்தையாவும் பலத்த காயமடைந்தனர். இருவருக்கும் மண்டை உடைந்தது. பின்பு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து போய்விட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என  எதுவும் தெரியவில்லை. 

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment