பெரம்பலூரில் மர்மவிலங்கின் கால்தடம் பதிவானதால் சிறுத்தையாக இருக்கலாம் என்ற பீதி பொதுமக்களி டையே ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அடுத்த கவுல்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தன.
அந்த பகுதியில் சிறுத்தை நடமாடு
வதாக பொதுமக்கள் புகார் செய்ததால், வனத்துறையினர் கவுல்பாளையம் மலைப்பகுதியில் கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. அதை வனத்துறையினர் மீட்டு, சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர்.
அதன் பிறகும் கவுல்பாளையம், எளம்பலூர், பெரம்பலூர் புறநகர் பகுதியில் அடிக்கடி மர்ம விலங்கின் கால்தடம் பதிவானதால், அது சிறுத்தையாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. வனத்துறையினர் இதற்காக பல இடங்களில் கூண்டு வைத்தும், சிறுத்தை சிக்கவில்லை. அதன்பின் கடந்த 4, 5 மாதங்களாக இந்த பீதி அடங்கியிருந்தது.
இந்நிலையில் பெரம்பலூர் பாலக்கரை அண்ணா நகரை சேர்ந்த செல்லமுத்து என்பவரது வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டப்பகுதியில் மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளது. இதை அவரது மனைவி ஆசிரியை மல்லிகா நேற்று காலை பார்த்துள்ளார். இதே போல் மேலும் சில இடங்களில் விலங்கின் கால் தடம் பதிந்து இருந்தது. இதனால் அது சிறுத்தையாக இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி பெரம்பலூர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் ஏழுமலை, வனச்சரகர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவின்பேரில், வனக்காப்பாளர் கருப்பையன், வனவர் வீராசாமி ஆகி யோர் அங்கு சென்று மர்ம விலங்கின் கால் தடத்தை பார்வையிட்டு, செல் போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர்கள், மக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியில் படுக்காமல், பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-தினகரன்.
0 comments:
Post a Comment