Thursday, 9 October 2014


பெரம்பலூர் மாவட்டம்,   வ.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே  நடந்து சென்ற மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

 வ.களத்தூர் காட்டுகொட்டகை பகுதியைச் சேர்ந்தவர் மு. சின்னம்மாள் (75). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சின்னம்மாள், வண்ணாரம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுவிட்டு பசும்பலூர்- வ.களத்தூர் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் சின்னம்மாள் பலத்த காயமடைந்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பிறகு தீவிரச் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சின்னம்மாள் புதன்கிழமை அதிகாலை இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், வ.களத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த திருவாலந்துறையைச் சேர்ந்த செல்லதுரையை (23) கைது செய்தார்.


-

0 comments:

Post a Comment