பெரம்பலூர்:
மாவட்டத்தின் வடஎல்லையிலுள்ள திருவாளந்துறை கிராமத்திற்கு கூடுதல் பேருந்து இயக்கப்படவேண்டும். 7 மணி நேரத்திற்கு பேருந்து வசதியில்லாமல் அவதிப்படுகிறோம் கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வேப்பந்தட்டை தாலுகா, திருவாளந்துரை கிராமத்திலிருந்து வந்திருந்த மக்கள் கலெக்டர் தரேஸ்அகமதுவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தின் வடகோடியில் வெள்ளாற்றங்கரையில் உள்ளது திருவாளந்துறை கிராமம். இங்கு 3ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். அருகிலுள்ள இனாம் அகரம் கிராமத்தில் 2ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். திருவாளந்துறையில் ஆர்சி பள்ளியும், மாணவ,மாணவியர் விடுதியும் உள்ளது. இங்குள்ள மேல்நிலைக் கல்விபயி லும் மாணவ, மாணவியர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளியூரில் வேலை செய்பவர்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் வணிகம், மருத்துவம், கல்வி போன்ற அனைத்திற்கும் பெரம்பலூரையே சார்ந்துள்ளோம்.
திருவாளந்துறை கிராமத்திற்கு தடம் எண் 2 நகரப்பேருந்து காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும், இரவு 9 மணிக்கும் மட்டுமே இயக்கப்படுகிறது. மீதம் நான்கு முறை 4 கி.மீ. முன்னதாக இருக்கும் வி.களத்தூருடன் திரும்பி விடுகிறது. காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடைப்பட்ட 7 மணி நேரத்திற்கு பேருந்து வசதியே இல்லாமல் தவித்து வருகிறோம். இதனால் மருத்துவ தேவை க்கு கூட 4 கி.மீ. நடந்து சென்று வி.களத்தூரில் பேருந்து பிடிக்க வேண்டியுள்ளது.
எனவே பெரம்பலூரிலிருந்து வி.களத்தூர் வழியாக இயக்கப்படும் அனைத்து நடைகளையும் திருவாளந்துறை முடிய இயக்க உத்தரவிட வேண் டும். அதே போல தாலுகா தலைநகராக உள்ள வேப்பந்தட்டைக்குச் செல்ல 40 கி.மீ. கடந்து பெரம்பலூருக்கு சென்று, அங்கிருந்து வேப்பந்தட்டைக்கு 13 கி.மீ.செல்ல வேண்டியுள்ளது.
எனவே பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை வழியாக வி.களத் தூர் வரை இயக்கப்படும் நடைஎண் 15, அல்லது நடை எண் 18 ஆகிய நகரப்பேருந்துகளை திருவாளந்துறைவரை நீட்டித்து இயக்க உத்தரவிட வேண்டும், திருச்சியிலிருந்தும் திருவாளந்துறைக்கு நேரடியாக புறநகர் பேருந்து இயக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
-தினகரன்.
0 comments:
Post a Comment