இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: காணாமல் போன மாணவிகள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்குள்ள தேவாலயத்துக்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். அங்குள்ள பாதிரியார் அருள்தாஸ் இருவரையும் பலாத்காரம் செய்துள்ளார். இது தெரிந்ததும், திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். பின்னர் இருவரையும் விருத்தாசலத்தை சேர்ந்த கலா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். 2 நாள் வைத்திருந்த கலா, அதே பகுதியை சேர்ந்த ஜெமினா என்பவரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். தொடர்ந்து ஜெமினா, வடலூரில் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த சதீஷ்குமாரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.
புதுச்சேரி வில்லியனூர், விழுப்புரம், வடலூர் பகுதியில் உள்ள லாட்ஜ்களில் மாணவிகளை தங்க வைத்து சிலருக்கு சதீஷ்குமார் விருந்தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார், பாதிரியார் அருள்தாஸ்(60), சதீஷ்குமார்(28), லட்சுமி(30), கலா(48), ஜெமினா(28) ஆகியோரை போலீசார் கைது செய்து திட்டக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் மாணவிகள் இருவரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
நன்றி-தினகரன்.
0 comments:
Post a Comment