கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே ஆலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்
ரஜீஷ்(24). எலக்ட்ரீஷியனான இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில்
(டிஒய்எப்ஐ) செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரஜீஷ் தனது பேஸ்புக்
பக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் மாதா
அமிர்தானந்தமயி குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை
தெரிவித்திருந்தார்.
மத மோதலை ஏற்படுத்தும் வகையில் இவரது கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. இது
குறித்து கொல்லம் ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் உமேஷ் பாபு போலீசில் புகார்
செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பிரதமர்
நரேந்திரமோடி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ரஜீஷை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர் பேஸ்புக்கில் பிரசுரித்த கருத்துக்களுக்கு ஏராளமானோர் லைக்
செய்திருந்தனர். அவர்கள் குறித்த விபரங்களையும் போலீசார் சேகரித்து
வருகின்றனர்.
-one india.
-one india.
0 comments:
Post a Comment