இந்துக்களால் மிகவும் புனிதமாக
போற்றப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையில் அறநிலையத்துறையின்
ஊழல்களை கண்டித்தும், இஸ்லாமிய மயமாக்கப்படுவதை கண்டித்தும் பழனி
மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி
வருகிறது. அதில் ஒரு பகுதியாக சமீபத்தில் 04.03.2014 அன்று பின்வரும்
கோரிக்கைகளை மையமாக வைத்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
- பழனி மலையில் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளிலும், யானைப் பாதையிலும், முஸ்லிம்கள் கடைகள் வைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதால், அவைகளைக் காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உதவி செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை மதித்து, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை நிர்வாகம் உடனடியாகக் காலி செய்யவேண்டும்.
- தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையால் நடத்தப்படும் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், விரிவுரையாளர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியிடத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதன்மூலம் இந்து பக்தர்களின் நிதியில் நடத்தப்படும் கல்லூரி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. இந்த இந்துவிரோத முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில், நுழைவாயிலிலிருந்து 50 அடி தூரத்திற்குள் மதுபானக்கடையை அரசு நடத்தி வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்றி, பழனியைக் கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும்.
இது குறித்த செய்தி அறிக்கையை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த போராட்டத்தின் எதிரொலியாக
அறநிலையத்துறை, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு எதிராக புதிய
வழக்குறைஞரை நியமித்து சரியான முறையில் வழக்கை நடத்தியது. இதன் விளைவாக
ஏப்ரல் 17 2014 க்குள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று
உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதை தொடர்ந்து ஏப்ரல் 22 2014 அன்று பழனி
மலை பாதையில் (யானை பாதை, நடைபாதை இரண்டிலும்) இருந்த நடைபாதை கடைகள்
அகற்றப்பட்டன.
இதே போல், பழனி தண்டாயுதபாணி கலை மற்றும்
பண்பாட்டு கல்லூரி விவகாரத்தில் ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் முஸ்லீம்
இடஓதுகீட்டிற்கு கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதிலும்
இந்துக்களுக்கு வெற்றி கிடைத்தது.
இந்த இரண்டு வெற்றிகளை தொடர்ந்து பழனி
மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தொடர்ந்து பழனி இடும்பன்கோயில்
மலையடிவாரத்தில் அரசு நடத்தி வரும் மதுபானக்கடையை அகற்ற பல்வேறு
போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக இந்த பிரச்சினையை
நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்றனர். இதன் விளைவாக நீதிமன்றம்
டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பேரில்
அரசு பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில் நடத்தி வந்த டாஸ்மாக் கடைகளை
01.08.2014 அன்று அகற்றியது.
ஒற்றுமையாக இந்துக்கள் போராடியதின்
விளைவாக இந்த வெற்றிகள் படிப்படியாக பழனியில் கிடைத்துக் கொண்டு
இருக்கிறது. இதை ஒருங்கிணைத்து வழி நடத்திய பழனிமலைக் கோவில் பாதுகாப்பு
பேரவையை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். இதுபோலவே அனைத்து ஊர்களிலும்
இந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் அதர்மம் அகன்று தர்மம் நிலைபெறும்
என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!
0 comments:
Post a Comment