சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம்
கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு காலி மனையுடன் மாதம் ரூ.
20 ஆயிரம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தரேஸ்
அஹமதுவிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னகோணம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
கடந்த 2008ம் ஆண்டு திருமாந்துறை, பென்னகோணம், அயன்பேறையூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசால் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது, பென்னகோணம் கிராமத்தில் உள்ள நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.
இதற்காக, நில உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தகுதி அடிப்படையில் வீட்டில் உள்ள ஒருவருக்கு வேலை தருகிறோம், ஒரு காலிமனை தருகிறோம் எனக்கூறி பத்திரம் அச்சிட்டு கொடுத்த பிறகே மாவட்ட நிர்வாகத்தை நம்பி நிலங்களை வழங்கினோம்.
ஆனால், நிலங்கள் கையகப்படுத்திய பிறகு திட்டத்திற்கான பூர்வாங்கப் பணி இதுவரை எதுவுமே நடைபெறவில்லை. நிலங்களை வழங்கியவர்களுக்கு உறுதியளித்தபடி வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. 2008-ல் இருந்து கடந்த 6 ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்றியும், சொந்த நிலத்தை வழங்கியதால் விவசாயத்திற்கு வழியின்றியும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
எனவே, நிலம் வழங்கியோருக்கு இழப்பீட்டுத் தொகையாக ஒருவருக்கு 1 மாதத்திற்கு ரூ. 20 ஆயிரத்தை பெற்றுத் தர வேண்டும். மேலும், பத்திரம் வைத்துள்ள அனைத்து நபர்களுக்கும் காலிமனை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வரை, அப்பகுதியில் மதில் சுவர் எழுப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர v.kalathur seithi.
-தினமணி.

0 comments:
Post a Comment