வ.களத்தூரில் மோடி எடுத்தல் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தவருடமும் வெகு உற்சாகமாக தேரடித்திடலில் நடைபெற்றது.
This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 4 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
Tuesday, 20 January 2015
Tuesday, January 20, 2015
வ.களத்தூர் செய்தி
வருடங்களாக காவல்துறையின் கட்டுப்பாடு காரணமாக நடத்தப்படவில்லை. இந்த
வருடம் வ.களத்தூர் இளைஞர்கள் கடுமையாக முயன்று கண்டிப்பாக மாடி பிடி
திருவிழாவை எப்படியாவது நடத்திவிட வேண்டும் அல்லது அது முடியாமல்
போகுமானால் தேரடி திடலில் எருதுகளுக்கு அரசின் அனுமதியுடன் நடத்தப்படும்
தீபாராதனை நிகழ்ச்சியாவது நடத்திவிட வேண்டும் என தீவிரமாக இருந்தும் சில
உள்ளடி வேலைகள் காரணமாக நடைபெறாமல் போனது. அந்த உள்ளடி
வேலைகளின் விபரம் விரைவில் உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
ஆனாலும் வ.களத்தூர் இளைஞ்சர்கள் சிலர் ஆறுதலுக்காக வ.களத்தூர்
மாரியம்மன் கோவிலில் மாடுகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். முகநூலில்
நம்மவர்கள் பகிர்ந்த அந்த படங்கள் இதோ.. உங்கள் பார்வைக்கு.
Wednesday, 7 January 2015
Wednesday, January 07, 2015
வ.களத்தூர் செய்தி
Wednesday, January 07, 2015
வ.களத்தூர் செய்தி
பொங்கல் விளையாட்டுப் போட்டி வ.களத்தூரில் வருடம் தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. சென்றவருடம் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக தங்களின் பங்களிப்புடன் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இந்த வருடமும் மன்றத்தின்மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவை நடத்த ருபாய்.2௦௦௦௦/- (ருபாய்.இருபது ஆயிரம் மட்டும் ) செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான நிதிஉதவி தற்போது திரட்டப்பட்டு வருகிறது. விழாவில் தங்களின் பங்களிப்பும், ஆதரவும் எமக்கு அவசியம் தேவை. எனவே தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். விழா முடிந்த்ததும் செலவின விபரம் தங்களுக்கு தெரிவிக்கப்படும். சிறு தொகையாக இருந்தாலும் தங்களின் பங்களிப்பு அவசியம்….
Account No- 057401000010363,
IFSC Code: IOBA0000574
Indian Overseas Bank, V.kalathur.
K.மோகன் (கைபேசி-78454 84476)
பத்து இலக்க எண் கொண்ட Western Union Money Transfer எண்ணில் அனுப்பவும்.
செயலாளர்.
விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம்,
வ.களத்தூர்.
Wednesday, 31 December 2014
Wednesday, December 31, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர், டிச.31:பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகேயுள்ள 113-இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா(33), சங்கரி(27) தம்பதி. இவர்களுக்கு ராஜவிஷ்வா(7), சுஜிதா(5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராஜப்பா 4 மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊரு க்கு வந்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்று விட் டார். மாமனார்&மாமியாருடன் வசித்து வந்த சங்கரி தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கடந்த 24ம் தேதி மாலை தனது குழந்தைகளுடன் அரியலூர் மாவட் டம் உடையார் பாளையம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல் வதாக கூறிச் சென்றார்.ஆனால் அவர் கொடுக் கூருக்கு வரவில்லை. இதையடுத்து சங்கரியை அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து நேற்று வ.களத்தூர் போலீஸ் நிலையத்தில் சங்கரியின் தந்தை ராஜேந்திரன்(52) புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-தினகரன்.
Wednesday, December 31, 2014
வ.களத்தூர் செய்தி
மார்கழி மாதத்தில் அதுவும் ஜனவரி முதல் தேதியில் கல்லாற்றில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கல்லாறு நீர்பிடிப்பு பகுதிகளான அரும்பாவூர் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததும், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரி உட்பட பல ஏரிகள் நரம்பி வழிவதும் கல்லாற்றில் வெள்ளம் வர காரணம்.
நம்மவர்கள் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு...
Thursday, 25 December 2014
Thursday, December 25, 2014
வ.களத்தூர் செய்தி
கலவரங்ளை திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் திட்டமிட்ட கலவரம் லாப நோக்கத்தோடு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும். இதில் அடைய வேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதூர்யமாக காய்கள் நகர்த்தப்படும். கலவரம் எதற்கு நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஈடுபடுவர். தடுக்க வேண்டியவர்கள், லாபம் வரும் வரை காத்திருந்துவிட்டு, தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவர். இப்படிப்பட்ட திட்டமிட்ட கலவரம் சமீபத்தில் ஜூலை மாதம் 2012 ல் அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்தது. ஜூலை 19 அன்று கொக்ரஜார் மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள் மீது, ஊடுறுவிய பங்ளாதேசிகள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அவ்வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை ஊடுறுவிய வங்க தேசத்தினர் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம். இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தக்கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்?
எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?
அன்னிய ஊடுறுவல்
பாரதத் திருநாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அஸ்ஸாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப, அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 84.55% அஸ்ஸாமியர்கள் ஹிந்து/பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பன்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்து?
அஸ்ஸாம் மாநிலம், வங்க தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லீம்கள் ஊடுறுவி அஸ்ஸாமில் குடி அமர்கின்றனர். தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்காக, இந்த தேச ஆக்கிரமிப்புச் செயலுக்கு தூபம் போடுகின்றன. இந்த ஊடுறுவலால் பாதிக்கப்படும் பல பழங்குடி இனம்களில் ஒன்று போடோ பழங்குடிகள். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Tibeto-Burman பிரிவை சார்ந்த போடோ மொழியை தாய் மொழியாக்க கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம். இவர்கள் கோக்ராஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வ குடிகள். இந்த ஊடுறுவலால் இந்த பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களின் பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏர்ப்பட்டு விட்டது.
போடோ புரட்சி மற்றோர் தேசிய அபாயம்
வங்கதேச ஊடுறுவல் கட்டுக்கடங்காமல் போவதும், அடிப்படை வசதிகள் வேலை வாய்ப்பு போன்றவற்றை ஊடுருவும் வங்கதேசத்தினர் தட்டிப் பரிப்பது போடோ இன மக்கள் மனதில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர் போடோக்கள். இதை வாய்ப்பாக பயன் படுத்தி, இவர்களின் போராட்டத்தை பாரதத்திற்கு எதிராகத் திருப்ப, இவ்வின மக்களை ஆயுதப் புரட்சியில் ஈடுபடுத்தி ஐரோப்பிய- அமெரிக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் வெற்றி கண்டனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பன்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்கள். சலுகைக்காக பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பதிவு செய்யாமல், ஹிந்து என்று பதிவு செய்கின்றனர் அதனால் கிறிஸ்தவ மக்கள் தொகை 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு. அது மட்டுமல்லாமல் உல்பா (ULFA) போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிகையை முன் வைத்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.
2003 ஆம் ஆண்டு, 3082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் (Bodo Teritorial Council) என்ற சுய ஆட்சி பகுதி அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் ஏற்ப்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் (Bodo Liberation Tigers) என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டிற்க்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது National Democratic Front of Bodoland என்ற கிறிஸ்தவ ஆதரவு அமைப்பு.
போடோ மொழிக்கென்று தனி எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் பெங்காலி எழுத்துக்களையும், தேவநாகரி எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த இந்திய மொழித் தொடர்பை துண்டிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள், இலத்தீன் எழுத்தை பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்தி வருகின்றனர். இப்படி, போடோக்களை தேசிய நீரோட்ட்த்திலிருந்து பிரிக்கும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடந்து வருகிறது.
ஓட்டு வங்கி அரசியல் அபாயம்
1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர் தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வெளி மாநிலத்தவர்கள் உள்ளூர் மக்களின் நிலங்களையும், சலுகைகளையும் அபகரிக்கிறார்கள் என்று உணர ஆரம்பத்தினர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் சுதந்திர பாரதத்தில் ஆட்சியை தொடங்கிய காங்கிரஸால், மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல்,தவறான அரசியல் கொள்கை என்று பலதுறைகளில் தோல்வி அடைந்ததால், மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இந்நிலையில், அக்கட்சி பதவியை பாதுகாக்க ஓட்டு வங்கி அரசியலில் இறங்கியது. பாரதம் துண்டாடப்பட்டு பாகிஸ்தான் உருவாக முஸ்லீம்கள், மத ரீதியாக ஒன்றுபட்டு ஓர் அரசியல் சக்தியாகத் தங்களை வெளிக்காட்டினார்கள். இந்த மத ஓட்டு வங்கியை பயன்படுத்தி தன் சரியும் செல்வாக்கை ஈடுகட்ட காங்கிரஸ் முடிவு செய்தது. ஓட்டுக்காக தேசத்தின் நலனை அடகு வைக்க காங்கிரஸ் வங்கதேச முஸ்லீம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants(Determination by Tribunal) (IMDT) என்ற சட்டத்தை 1983ல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும் படியாக கொண்டு வந்தது.
இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும் போது அஸ்ஸாமிலிருந்து ஓர் உறுப்பனர் கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லீம்கள், இந்தியக் குடிமகன்களாக நம் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தச் சட்ட்த்தை பயன்படுத்தி குடியேறிய வங்கதேச முஸ்லீம்கள் அஸ்ஸாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக் காட்டி இச்சட்டத்தை உச்சநீதி மன்றம் 2005-ல் ரத்து செய்தது. இந்தச் சட்டத்தின் வாயிலாக அன்னியப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டு கலகங்களிலிருந்து மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசியல் சாஸனம் 355 குறிப்பட்டுள்ள கடமையை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று இந்தச் சட்ட்த்தை ஒரு தேசத் துரோகச் சட்டமாக அறிவித்தது நம் உச்ச நீதிமன்றம்.
இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் கூட அரசியல் விளையாடியிருக்கிறது. 1999ல் அஸ்ஸாம் அரசு இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் Affidavit தாக்கல் செய்தது. மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசும் அவ்வண்ணமே Affidavit தாக்கல் செய்தது. 2001 ல் அஸ்ஸாமில் நடைபெற்றத் தேர்தலில், ஊடுறுவிய அன்னிய முஸ்லீம்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன், இந்த IMDT என்ற தேச விரோதச் சட்டம் தொடரவேண்டும் என்று திருத்தப்பட்ட Affidavitஐ முந்தைய 1999 Affidavitஐ, பின்வாங்கிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டவுடன், இது போன்ற மாற்றுச்சட்டத்தை கொண்டுவருவோம் என்று சொன்னார் அஸ்ஸாமின் காங்கிரஸ் முதல் அமைச்சர்.
இந்தச் சட்டம் தேச விரோதம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தே தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2004 வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து, 2005ல் உச்சநீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்திற்குள் அஸ்ஸாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது. அஸ்ஸாமிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் 18 ஆண்டுகளுக்கு முன் குட்டி போட்டால் கூட 15.1% உயர்வு இருக்குமா என்பது சந்தேகமே! இப்படி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓட்டுக்காக அன்னிய நாட்டவரை குடியமர்த்திய தேசத் துரோகம் காங்கிரஸ்ஸால் நிகழ்த்தப்பட்டது.
இப்படி அஸ்ஸாம் அரசியலின் இந்த மூன்று கதாநாயகர்களான வெளிநாட்டு முஸ்லீம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள், ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இந்தக் கலவரத்தால் எப்படி பயனடைவார்கள்? எப்படி காய் நகர்த்துகின்றனர்?
குடியுரிமை பெறப்போகும் லட்சக்கணக்கான வங்கதேச முஸ்லீம்கள்
இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் முஸ்லீம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லீம்களும் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுறுவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்களாகப் போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப் போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின் மீது நம்பக்கை இல்லை என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஹுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லீம் எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி ஒரு முஸ்லீம் குழு அஸ்ஸாம் செல்ல வேண்டுமாம்!
இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லீம்களின் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து இந்திய உலோமா கவுன்சில், மர்கசுல் மாஆரிப் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை அமான் கமிட்டி, கைர்-இ-உம்மத் அறக்கட்டளை, மூவ்மண்ட் ஃபார் ஹுமன் வெல்பெர் போன்ற அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திட்டமிட்ட முறையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், ஊடுறுவிய முஸ்லீம்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அஸ்ஸாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்பா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறை செயலாளர் திரு.ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அன்னியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அஸ்ஸமிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்தப் பேட்டிகளும், கோரிக்கைகளும் தில்லியிலும், மும்பையிலும் அரங்கேரும்போது, கலவர பூமியான அஸ்ஸாம் மோகன்பூர் மற்றும் ஸோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பரப்பதை டைம்ஸ் நௌ (Times Now) என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லீம்கள் ஏன் பாகிஸ்தான் கொடி ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அன்னிய நாடில்லையா? இந்த பாகிஸ்தான் ஆதரவு சதியர்கள் தான் அப்பாவி முஸ்லீம்களா? இந்த வெளிநாட்டவரை காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது இந்திய நாடாளுமன்ற முஸ்லீம் உறுப்பினர்கள். இவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் முஸ்லீம் அரசு சாரா அமைப்புகள்.வெளி நாட்டு தலையிடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர். அப்படியாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டு, தீவிரவாத வெளிநாட்டு கும்பல் அகதி வேஷம் போட்டு, அனுதாபங்களை சம்பாதித்து குடியுரிமை பெறவும் போகிறது. ஜூலை 29 அன்று அஸ்ஸாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்டவர்கள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தும் விட்டார்.
ராணுவத்தை அவமதித்த முதல்வர்
கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகாய் தவறினார் என்ற புகார் வந்ததும், முதல்வர் பழியை ராணுவத்தின் மீது திருப்பிவிட்டார். நான் ராணுவத்தை அழைத்தேன் அவர்களோ, தில்லியிலிருந்து உத்திரவு வந்தால் தான் வருவோம் என்று கூறிவிட்டனர். அதனால் கால தாமதம் ஏற்பட்டது. ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்கிறார் முதல்வர். இது உண்மையா பொய்யா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்று பழிபோடுகிறாரே,அப்படி என்றால் ஊடுறுவும் வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறது என்று தானே பொருள்? தருண் கோகாய் பொய் சொல்கிறார் என்றால், இந்திய ராணுவத்தின் மீது முஸ்லீம்களுக்கிருக்கும் வெறுப்பை மேலும் வளர்க்கிறார் என்று தானே அர்த்தம்?
எந்த இனம் அழியப் போகிறது?
வங்கதேச அன்னிய முஸ்லீம்கள், இப்போது அனாதைகள் என்ற போர்வையிக் குடியமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம்காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமிலிருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அனாதையாகவே இருப்பர். போடோக்கள் மீது வழக்கு தொடரப்படும். அன்னிய முஸ்லீம்களின் ஜனத்தொகை பெருகும். போடோக்கள் வாய்ப்பு இழப்பர். போடோக்களின் அவல நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் போடோக்களை மதமாற்றம் செய்து இந்தியாவுக்கு எதிராகப் போரிடச் செய்வர். அரசியல் கட்சிகளோ, ஒட்டு மொத்த ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் தாஜா செய்து தேசிய நலனை பணயம் வைத்து ஆட்சிக் கட்டியலில் அமர்ந்து கொள்ளும். பாவம் மண்ணின் மைந்தன் மண்ணை இழப்பான். அன்னிய சதிகாரர்கள் ஆளுமை செலுத்துவர். அப்படியாக மூன்று கதாநாயகர்களும் பயனடைவர்.பத்திரிகைகளுக்கும் ஓரு வார விருந்து பரிமாரப்பட்டுவிட்டது. கலவரத்தின் நோக்கமும் நிறைவேறிவிட்டது.
-VSRC
Thursday, December 25, 2014
வ.களத்தூர் செய்தி
கட்டாய மதமாற்றப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. பிரதமர் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்தாக வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அடம்பிடித்து அவை நடவடிக்கைகள் நடக்கவிடாமல் தொடர்ந்து தடுக்கின்றன. பிரதமர் பதிலளிக்கப் போகிறாரா, எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரச்சனை விவாதத்திற்கு வந்திருக்கிறதே. அதுவே பெரிய மாற்றம்.
ஆக்ராவில் வேதநகரத்தில் 350 முஸ்லிம்கள் ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும் இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆசியுடனும், ஆதரவுடனும் நடத்தப்பட்டது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரலெழுப்புகின்றன. அவர்கள் சொல்வது போல ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன்தான் இது நடத்தப்பட்டது என்றால் அந்த அமைப்பு சாதூர்யத்துடன் செயல்பட்டிருக்கிறது. இது ஒரு சின்ன நடவடிக்கைதான் என்றாலும் சுறுசுறுப்பான, புத்திசாலித்தனமான செயல்பாடு!
மதமாற்றம் தொடர்பான விவாதம் எழும்போதெல்லாம் அதைத் தவிர்க்கவும், திசை திருப்பவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சாடவும் விமர்சிக்கவும் செய்துவந்தவர்களுக்கு இது ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. எந்த விவாதத்தை அவர்கள் தவிர்த்து வந்தார்களோ, அந்த விவாதத்தை அவர்களே இப்போது எழுப்ப வித்திட்டிருக்கிறார்கள்.
இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எப்போதுமே தந்திரமான எண்ணம் இருந்ததே இல்லை. இந்துக்களுக்கு குயுக்தியான எண்ணம் இல்லாததில் வியப்பொன்றும் இல்லை. மதம், கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ இந்துக்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, பிற மதத்தினரைத் தங்களது மதத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமோ இருந்ததே கிடையாது. அடிப்படையில் இந்துக்களுக்கு மதமாற்றத்தில் நம்பிக்கையும் கிடையாது.
"தி எகானமிஸ்ட்' சஞ்சிகை, 2013 மார்ச் 30-ஆம் தேதி இதழில், இந்தியாவுக்கு கலாசார சிந்தனையோ விழிப்புணர்வோ போதிய அளவு இல்லை; அதுதான் அந்த நாடு வல்லரசாவதற்குத் தடைக்கல்லாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது உண்மை. இந்துக்களிடம் எதிர்மறையான சிந்தனை இல்லை. அதற்கான தேவையும் இல்லை. இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சிகூட, தாமதமாக எழுந்ததுதான்!
மனிதநேயத்துடன்கூடிய இந்து சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் குறிக்கோள். இந்தியத் திருநாட்டை "இந்து ராஷ்ட்டிரம்' என்று அழைக்க வேண்டும் என்று விரும்புவது உண்மை. அனைத்து இந்தியர்களும் ஒரே மாதிரியான, வேறுபாடு இல்லாத கலாசாரத்தையும், முன்னோர்களையும் கொண்டவர்கள் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திடமான நம்பிக்கை. உண்மையாகவும் நியாயமாகவும் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தில் தவறு காண முடியாது.
இந்திய முஸ்லிம்கள் ஒன்றும் அராபியர்களின் வாரிசுகள் அல்லர்; கிறிஸ்தவர்களும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களா என்ன?
இந்தியாவில் வாழும் பல கோடி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நம்பிக்கையால் அந்த மதத்தைச் சார்ந்தவர்களே தவிர, அடிப்படையில் இந்தியர்கள், இந்துக் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள். இல்லையென்றால், இவர்கள் ஏன் இன்னும் தாலி கட்டுவது, கிறிஸ்துவ தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் திருவிழா நடத்துவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்? அவர்களது நம்பிக்கை மாறி இருக்கிறதே தவிர, அவர்களது அடிப்படைக் கலாசாரம் மாறவில்லை என்பதைத்தான் அவை காட்டுகின்றன.
1901-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் 6.6 கோடி முஸ்லிம்களில் வெறும் 3.5லட்சம் பேர்தான் தங்களை மொகலாய பரம்பரையினர் என்று கூறியுள்ளனர். இந்த கூற்றுப்படி இந்திய பரம்பரையைச் சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைத் தேசிய நீரோட்டத்தில் ஒன்றிணைக்கும் முயற்சியில்தான் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது.
அனைவரையும் மனிதநேயத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும். யாரிடமும் பகைமை கொள்ளக்கூடாது என்பதை 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற உலக மதத்தலைவர்கள் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தினார். ஒருங்கிணைப்பது எதையும் அழிப்பதாகாது. ஏனெனில் இது மதமாற்றம் அல்ல.
நோபல் பரிசுபெற்ற அறிஞர் வி.எஸ்.நைபால், "மதமாற்றம் என்பது கடந்தகால நிகழ்வுகளை, வரலாறுகளை முற்றிலும் அழித்துவிடுவது, என் முன்னோர்களுடைய கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என ஒருவரை அவரது பல தலைமுறை பாரம்பரியத்திலிருந்து வேரறுத்து விடுவது' என்கிறார். மதத்தை மாற்றுவதன் மூலம் அந்த மனிதனுடைய மண்ணின் மாண்பை அழித்து விடுவதுதான் அடிப்படைக் குறிக்கோள். இந்தியாவில் அது முழுமையாக எடுபடவில்லை என்பதிலிருந்தே, நமது கலாசார வேர்கள் எந்த அளவுக்கு ஆழமாகப் பரவிக் கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
டாக்டர்.அம்பேத்கரைத் தங்களது தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் போலி மதச்சார்புவாதிகளுக்கு ஆதரவாகக் குரலெழுப்புவது வேதனையாக இருக்கிறது. 1936-ஆம் ஆண்டு, ஜூலை 24-ஆம் தேதி "தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையில் அவர் மதமாற்றம் பற்றிய தனது கருத்தை மிகவும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
"மதமாற்றத்தால் நமது தேசத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், பின்விளைவுகளையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இஸ்லாம் மதத்துக்கோ, கிறிஸ்துவ மதத்துக்கோ மதமாற்றம் செய்யப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தளத்தில் வலுவிழக்கச் செய்துவிடும். இஸ்லாத்துக்கு மாறினால் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் தொடர்விளைவாக இங்கே இஸ்லாமிய ஆதிக்கம் வலுப்பெற்று, நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமலே போய்விடும். கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதன்மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பலப்படுத்துவதுடன் மேலைநாட்டு சக்திகளுக்கு நாம் அடிமைப்பட நேரிடும்.
சீக்கிய, புத்த, ஜைன மதத்திற்கு மாறுவதன் மூலம் இந்தியாவின் வருங்காலத்தையும், இந்திய நாட்டின் அடிப்படை தார்மிகக் கோட்பாடுகளையும் அது பாதிப்பதாக இருக்காது. அதன்மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் பலம் குறையாது. தேசநலன் பாதுகாக்கப்படும்'' என்று எழுதுகிறார் டாக்டர்.அம்பேத்கர்.
"மதமாற்றம் என்பது தேசத்துக்கு, கலாசாரத்துக்கு, நாம் வாழும் பகுதிக்கு அழிவை ஏற்படுத்துவது. ஒருங்கிணைப்பது என்பது இவற்றை நாம் கட்டிக்காப்பது. "பல்வேறு மதத்தினரும் இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் இந்தியா ஒரே தேசம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, அதைக் கைவிட்டு விடவும் முடியாது' என்று மகாத்மா காந்தியே கூறியிருக்கிறார்.
வெளிநாட்டினர் இங்கு வருவதால் தேசம் சீர்குலைந்துவிடாது. அவர்களும் நம்மோடு இணைந்து செயல்பட வேண்டும், நமது கலாசார பழக்கவழக்கங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும், அவ்வளவே! அனைவரும் ஒருங்கிணைவோம் என்று ஆர்.எஸ்.எஸ். சொன்னால், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், மகாத்மா காந்தி, விவேகானந்தர் கூறியதை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது வகுப்புவாத முத்திரை குத்துகின்றனர்.
-தினமணி.
Thursday, December 25, 2014
வ.களத்தூர் செய்தி
வணக்கம் வ.களத்தூர் சொந்தங்களே...
உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நம் வ.களத்தூர் சொந்தங்களுக்கு ஒரு இணைப்பு பாலமாய் , நம் குரலை உலகம் அறிந்துகொள்ள ஒரு மாற்று ஊடகமாய் http://www.vkalathurseithi.com/ என்ற இனைய தளம் தொடங்க முழு மூச்சாய் வேலைகள் நடைபெற்று வருகிறது.
பொங்கலுக்கு முன்பாக http://www.vkalathurseithi.com/ இணைய தளம் முழு அளவில் செயல்பட தொடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நம் ஊரின் நலனுக்காக நம் குரலாக என்றும் வ.களத்தூர் செய்திகள் இணைய தளம் செயல்படும் என்பதற்கு மன்றம் சார்பில் உறுதி கூறுகிறோம். தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.....
https://www.facebook.com/vkalathur1 ) மற்றும் சத்தியராஜ் ( https://www.facebook.com/sathyasatha.raj ) இருவருக்கும் விவேகானந்தர் மன்றம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தற்போது செயல்பட்டு வரும் http://vkalathurseithi.blogspot.in/ இணையதளம் வழக்கம்போல் செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
RSS Feed
Twitter















