Tuesday, 20 January 2015

வ.களத்தூர் மோடி எடுக்கும் நிகழ்ச்சி – 2015 

வ.களத்தூரில் மோடி எடுத்தல் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தவருடமும் வெகு உற்சாகமாக தேரடித்திடலில் நடைபெற்றது.



















வ.களத்தூரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த எருதாட்ட நிகழ்ச்சி சில
வருடங்களாக காவல்துறையின் கட்டுப்பாடு காரணமாக நடத்தப்படவில்லை. இந்த
வருடம் வ.களத்தூர் இளைஞர்கள் கடுமையாக முயன்று கண்டிப்பாக மாடி பிடி
திருவிழாவை எப்படியாவது  நடத்திவிட வேண்டும் அல்லது அது முடியாமல்
போகுமானால்  தேரடி திடலில் எருதுகளுக்கு அரசின் அனுமதியுடன் நடத்தப்படும்
தீபாராதனை  நிகழ்ச்சியாவது நடத்திவிட வேண்டும் என  தீவிரமாக இருந்தும் சில
உள்ளடி வேலைகள் காரணமாக நடைபெறாமல் போனது.       அந்த உள்ளடி
வேலைகளின் விபரம் விரைவில் உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.          
                                                                       
                                                                       
                                                                       
                                                                       
             



ஆனாலும் வ.களத்தூர் இளைஞ்சர்கள் சிலர் ஆறுதலுக்காக வ.களத்தூர்
மாரியம்மன் கோவிலில் மாடுகளுடன்   விளையாடி  மகிழ்ந்தனர்.       முகநூலில்
நம்மவர்கள் பகிர்ந்த அந்த படங்கள் இதோ.. உங்கள் பார்வைக்கு.





            1975021_748153845280877_3335700254707412116_n 10690089_748153875280874_3660328616351014539_n 10929249_748153771947551_7856616890503676139_n 10930907_748153808614214_2717788065083709755_n v.kalathur v.kalathur.jpg1 v.kalathur.jpg2 v.kalathur.jpg3 v.kalathur.jpg4 v.kalathur.jpg5 v.kalathur.jpg6 v.kalathur.jpg8 v.kalathur.jpg9 v.kalathur.jpg10 v.kalathur.jpg61va10933992_1578057645762509_8867499812481758405_n10417623_1578058082429132_2614617200005275003_n10407729_1578057202429220_9034351150793005119_n1450918_1578056929095914_8666301654569928576_n10402968_1578057899095817_5985306400385641177_n

Wednesday, 7 January 2015


வ.களத்தூர் விவேகானந்தர் இளைஞர் மன்றத்தின் சென்ற வருட வரவு செலவு கணக்கு அறிக்கை இதன்மூலம் தங்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. சுமார் அறுபது குழந்தைகளின் டியுசன் தங்களின் பங்களிப்பினால் சாத்தியமானது என்றால் மிகையில்லை. மேலும் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டதும் உங்களைப்போன்ற ஈகை உள்ளங்களால் தான் சாத்தியமானது.
எல்லாவற்றிற்கும் மேலாக வருடம்தோறும் பொங்கல் விழா நடத்த தங்களின் நிதியுதவிதான் பெரும் உதவியாக இருந்தது. நிதியுதவி அளித்த அனைத்து நல உள்ளங்களுக்கும் விவேகானத்தர் மன்றம் தந்து மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறது.
இந்த வருடமும் தங்களின் நல் ஆதரவை வேண்டுகிறோம்….


அன்பு வ.களத்தூர் நண்பர்களே  வணக்கம்,
பொங்கல் விளையாட்டுப் போட்டி வ.களத்தூரில் வருடம் தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. சென்றவருடம் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக தங்களின் பங்களிப்புடன் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இந்த வருடமும் மன்றத்தின்மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவை நடத்த ருபாய்.2௦௦௦௦/- (ருபாய்.இருபது ஆயிரம் மட்டும் ) செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான நிதிஉதவி தற்போது திரட்டப்பட்டு வருகிறது. விழாவில் தங்களின் பங்களிப்பும், ஆதரவும் எமக்கு அவசியம் தேவை. எனவே தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். விழா முடிந்த்ததும் செலவின விபரம் தங்களுக்கு தெரிவிக்கப்படும். சிறு தொகையாக இருந்தாலும் தங்களின் பங்களிப்பு அவசியம்….
வங்கி கணக்கில் அனுப்ப.…
P.சத்தியபாலன் (கைப்பேசி-97872 10823)
Account No- 057401000010363,
IFSC Code: IOBA0000574
Indian Overseas Bank, V.kalathur.
Western Union Money Transfer அனுப்ப……
K.மோகன் (கைபேசி-78454 84476)
பத்து இலக்க எண் கொண்ட Western Union Money Transfer எண்ணில் அனுப்பவும்.
தங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கும்,
செயலாளர்.
விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம்,
வ.களத்தூர்.

Wednesday, 31 December 2014


பெரம்பலூர், டிச.31:பெரம்பலூர் மாவட்டம்  வ.களத்தூர் அருகேயுள்ள 113-இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா(33), சங்கரி(27) தம்பதி. இவர்களுக்கு ராஜவிஷ்வா(7), சுஜிதா(5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராஜப்பா 4 மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊரு க்கு வந்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்று விட் டார். மாமனார்&மாமியாருடன் வசித்து வந்த சங்கரி தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கடந்த 24ம் தேதி மாலை தனது குழந்தைகளுடன் அரியலூர் மாவட் டம் உடையார் பாளையம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல் வதாக கூறிச் சென்றார்.ஆனால் அவர் கொடுக் கூருக்கு வரவில்லை. இதையடுத்து சங்கரியை அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து நேற்று   
வ.களத்தூர் போலீஸ் நிலையத்தில்  சங்கரியின் தந்தை ராஜேந்திரன்(52) புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

-தினகரன்.

           மார்கழி மாதத்தில் அதுவும் ஜனவரி முதல் தேதியில் கல்லாற்றில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கல்லாறு நீர்பிடிப்பு பகுதிகளான அரும்பாவூர் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததும், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரி உட்பட பல ஏரிகள் நரம்பி வழிவதும் கல்லாற்றில் வெள்ளம் வர காரணம்.

நம்மவர்கள் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு...