Friday, 25 October 2013

எம் அன்பான வ.களத்தூர் உறவுகளே...... கடவுள் இல்லை என்று கூறும் கூலிக்கு மா(ர்க்ஸ்)ரடிக்கும் கூட்டம் , நமது ஊர் நிலவரம் பற்றி , நமது சாமி ஊர்வலம் பற்றி ஒரு போலியான உண்மை(...........? ) கண்டறியும் குழு என்ற பெயரில் ஒரு அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட ஆட்சிதலைவரிடமும், ஊடகங்களிடமும் பரப்பப்பட்டுள்ளது....... அதன் மீதான விமர்சனம் உங்கள் பார்வைக்கு...........


http://www.peoplesrights.in/tamil/?p=623


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள, வ.களத்தூர் கிராமத்தில் இந்து -முஸ்லிம் பிரச்சினை கவலை அளிக்கத் தக்க அளவில் வடிவெடுத்துள்ளது. சென்ற பிப்ரவரி, 25 அன்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் மாவட்ட ஆட்சியர் வசம் தம் குடும்ப அட்டைகளைக் கொடுத்துவிட்டு ஊரை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். நேற்று சென்னையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்ட ஆர்பாட்டம் ஒன்றும் அவர்கள் சார்பாக நடத்தப்பட்டது.


///////குடும்ப அட்டை கொடுக்கப்பட்டதின் பின்னால் மதவெறி அமைப்புகள் உள்ளதை வசதியாக மறந்தது ஏனோ...........?/////////


மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையில் அக்கறை கொண்டவர்கள் என்கிற அடிப்படையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறிந்து, சமூக ஒறுமைக்கான வழி முறைகளைப் பரிந்துரைக்கும் நோக்கில் கீழ்ழ்க்கண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.


///////மத நல்லிணக்கத்திற்கும் மார்கிச நம்ம்பிக்கையில் வந்த இவர்களுக்கும் என்ன சம்பந்தம், இவர்களின் அறிக்கை பற்றி நாடே அறியும் , இவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு ஒருதலைபட்சமாக அறிக்கை தருவது நடுநிலைவாதிகளுக்கு நன்றாக தெரியும். அதனால் அவ்விடங்களில் மதநல்லிணக்கமும், சமூக ஒற்றுமையும் பாதிக்கப்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள்//////////


///////////// மார்க்ஸ் அந்தோணிசாமி என்கிற அ.மார்க்ஸ் பற்றி நாடே அறியும், இருந்தாலும் அவர்மீதான விமர்சனம் ஒன்று தங்களின் பார்வைக்கு.............. “கடந்த சில வருடங்களாக அ.மார்க்ஸ் செய்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு– இந்திய எதிர்ப்பு அரசியல் அப்பட்டமான ஒரு கூலித்தொழில். அதில் எந்த விதமான அடிப்படை நேர்மையையும் அவரிடம் எதிர்பார்க்க இயலாது. அவர் மறைமுகமாகச் சார்ந்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கொடுக்கும் துண்டுப்பிரசுரங்களுக்கும் அவரைப்போன்றவர்கள் எழுதும் ஒருபக்கம் சார்ந்த கட்டுரைகளுக்கும் அப்பால் அவர் எதையுமே படிப்பதில்லை. அவரது கருத்துக்கள் இவற்றிலிருந்து பெறப்பட்டவை. நாளிதழ்களை வாசிப்பவர்களுக்கு சாதாரணமாக இவற்றின் உண்மைநிலை தெரியும். ஆனால் தன் கருத்துக்கள் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டால் அ.மார்க்ஸ் அதைப்பற்றிக் கவலைப்படப்போவதும் இல்லை. அடுத்த அவதூறை கிளப்புவார். அதற்கு நாம் பதில் சொல்லப்போனால் அடுத்த அவதூறு”.
இதை நாம் சொல்லவில்லை மேற்கண்ட சுட்டியில் ஒருவர் நாம் அறிந்த எழுத்தாளர் ஜெய மோகனுக்கு , எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் இதனை பதிவேற்றி உள்ளார். ( http://www.jeyamohan.in/?p=799 ) /////////////


பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR), புதுச்சேரி,
பேரா. சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL), காரைக்குடி,
வழக்குரைஞர் கென்னடி, திருச்சி,
வழக்குரைஞர் ஷாஜகான், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
வழக்குரைஞர் அப்துல் காதர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
வழக்குரைஞர் அப்பாஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,

இக்குழுவினர் நேற்று முழுவதும் வ.களத்தூர் கிராமத்திற்குச் சென்று சகல தரப்பினரையும் சந்தித்தோம். சாதி இந்துக்கள் தரப்பில் முக்கியமான தலைவரான ராமசாமி உடையார் மற்றும் சுமார் பத்து முக்கியஸ்தர்களை அவரது வீட்டிலும், வ.களத்தூர் ஜமாத் தலைவர் லியாகத் அலி, துணைத் தலைவர் பஷீர் அகமது மற்றும் முக்கிய ஜமாத்தார்களை ஜமாத் தலைவரது வீட்டிலும், இவர்களிலிருந்து சில அம்சங்களில் கருத்து வேறுபடுகிற பழைய ஜமாத் உறுப்பினரும் இன்றைய வ.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரது கணவருமான இஸ்மாயில் மற்றும் சிலரையும் அவரது வீட்டிலும் சந்தித்து விரிவாகப் பேசி அவரவர் தரப்பு நியாயங்களைக் கேட்டுக் கொண்டோம். அவரவர் தந்த ஆவணங்களையும் கவனமாகப் படித்தோம். மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் எங்கள் குழுவிடம் அரசு அணுகல்முறையின் நியாயங்களை விரித்துரைத்தார். காவல் துறைக் கண்காணிப்பாளர் முதல்வர் பாதுகாப்பிற்குச் சென்றுவிட்டதால் துணைக் கண்காணிப்பாளர் ஆர், சுஹாசினி விரிவாக வ.களத்தூர் பகுதியில் காவல்துறை நடவடிக்கைகளை விளக்கினார். 1951 தொடங்கி இந்து – முஸ்லிம் பூசல்கள் தொடர்பான ஆவணங்களை ஆழமாகப் பரிசீலித்தோம்.
பின்னணி
வ.களத்தூரில் சுமார் 6500 முஸ்லிம்கள், 3500 சாதி இந்துக்கள், 2000 தலித்கள் வசிக்கின்றனர், சமூக நல்லிணக்கத்துடன் காலங்காலமாக வசித்து வந்த இம்மக்கள் மத்தியில் மத அடிப்படையிலான மோதல்கள் 1951, 1984, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன.
இந்தப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக இருந்தது ஊர்த் தொடக்கத்தில் உள்ள 0.31 ஹெக்டேர் பரப்புள்ள ஒரு நத்தம் புறம்போக்கு இடம் (சர்வே எண் 119/1). இதற்கு அருகில்தான் இந்துக்களின் மயானமும் முஸ்லிம்களின் கபர்ஸ்தானும் உள்ளது. சையது முராது ஷா என்கிற முஸ்லிம் சூஃபி ஞானி ஒருவர் அடக்கமாகியுள்ள தர்ஹாவும் அருகில் உள்ளது. காரை அரைக்கும் சாந்துத் தொட்டி மற்றும் ஊர்ப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கொல்லுப் பட்டறை, மூலையில் நிறுத்தப்பட்ட பழைய தேர் ஒன்று ஆகியன இந்தப் புறம்போக்கு இடத்தில் அமைந்திருந்தன. பேருந்துகளுக்குக் காத்திருப்பவர்கள் நிற்கும் இடமாகவும், இந்து முஸ்லிம் இரு தரப்பினரது திருவிழாக்களும் கொண்டாடப்படும் இடமாகவும் இருந்து வந்த இப் பொது இடத்தில் இந்துக்களில் சிலர் 1951ம் ஆண்டில் காரைத் தொட்டியை இடித்து ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்தது முதற் கலவரத்திற்குக் காரணமாகியது.
இரு தரப்பிலும் பெரும் சேதங்களும் பலர் கைது செய்யப்படுவதற்கும் இது காரணமாகியது. எனினும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இடத்தின் பயன்பாடு குறித்து வருவாய்த் துறையின் முடிவுக்கு இருவரும் கட்டுப்படுவது என்கிற அடிப்படையில் இது தொடர்பான வழக்கும் திரும்பப் பெறப்பட்டன. மீண்டும் தொடர்ந்து இரு தரப்பினரும் பயன்படுத்தி வந்த அந்த இடத்தில் 1984ல் நிரந்தரக் கட்டிடம் ஒன்றை அமைத்த இந்துக்களில் சிலர் அதை ஒரு இந்துக் கோவிலாக மாற்றிக் கோவில் வாகனங்களையும் புதிதாக ஒரு தேரையும் கொண்டு வந்து நிறுத்தினர். இது தொடர்பாக முந்திய நிலை மீட்கப்பட வேண்டும் என முஸ்லிம் தரப்பில் போடப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த முறை பெரிய கலவரம் நிகழாமல் முடிந்தது. அப்போதைய ஒருங்கிணந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் விசுவநாதன் போட்ட தடை ஆணை, அந்த இடத்தில் மேலும் புதிய கட்டிடங்கள் கட்டக் கூடாது எனவும் மிகுந்துள்ள இடத்தை வழக்கம் போலப் பொதுவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வரையறுத்தது. இன்றளவும் அது நடைமுறையிலுள்ளது.
எனினும் 1990ல் ரமலான் பண்டிகையை ஒட்டி மீண்டும் கலவரம் ஏற்பட்டது. முஸ்லிம்களின் சொத்துக்களும் பள்ளிவாசலும் தாக்கப்பட்டன. இந்துக்கள் தரப்பில் 126 பேரும் முஸ்லிம்கள் தரப்பில் சுமார் 30 பேரும் கைது செய்யப்பட்டனர். எனினும் சமாதான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.
ஒரு இருபதாண்டு காலம் பெரிய பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர். இந்துக்களின் திருவிழாவில் முஸ்லிம்கள் வடம் பிடிப்பது, முஸ்லிம்களின் விழாக்களில் இந்துக்கள் பங்கு பெறுவது என்பதெல்லாமும் கூட நிகழ்ந்துள்ளது. இந்துக்களும் முஸ்லிம்களும் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளை அடுத்தடுத்து மாற்றிக் கொள்வது என்கிற அடிப்படையில் முதல் தேர்தலில் முஸ்லிம் ஒருவரும் அடுத்த தேர்தலில் இந்து ஒருவரும் என போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


////// இவ்வாறு ஒற்றுமையாக இருந்த ஊரை ,இரண்டாக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தவ்கீத் ஜமாத் போன்ற இயக்கங்களில் , யார் முதல் என்ற போட்டியில் வ.களத்தூர் மக்கள் இரண்டாக பிரிந்து நிற்கிறார்கள்./////////


எனினும் 2011ல் மீண்டும் நிலைமை மாறியுள்ளது. இந்தத் தேர்தலில் முஸ்லிம் ஒருவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற முடிவுக்கு மாறாகப் போட்டி நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர் வென்றதைத் தொடர்ந்து தற்போதைய பிரச்சினைகள் முளைத்தன.
இன்றைய பிரச்சினை
2009ம் ஆண்டில் மேற்படி சர்வே எண் 119/1 என்னுமிடத்தில் கொடியேற்ற்று விழா ஒன்று நடத்த முஸ்லிம்கள் அனுமதி கேட்டபோது அதற்கு இந்துக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து 119/1ல் உள்ள காலி இடத்தில் எல்லா மக்களுக்கும் பயன்பட்டும் வகையில் பேருந்து நிலையம் அமைக்குமாறு முஸ்லிம்கள் தரப்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதை இந்துக்கள் தரப்பு ஏற்கவில்லை.
வ.களத்தூரில் முதலில் முஸ்லிம் பகுதிகளும் இறுதியாக இந்துக்களின் குடியிருப்பும் உள்ளன. இந்துக்களின் கோவில் மற்றும் திருமணம் உள்ளிட்ட ஊர்வலங்கள் வழக்கமாக முஸ்லிம்களின் பகுதிக்குள் நுழைந்து, அந்தக் குறுகலான வீதிகளின் வழியாகவும் பள்ளிவாசலை ஒட்டியும் சென்று இந்துக்கள் வசிக்கும் பகுதியை அடையும்..


/////// தேரோடும் ராஜ வீதியை குறுகலான வீதி என்று சொல்வதன் மூலம் இவரின் மன நோக்கம் தெளிவு....... குறுகலான வீதி எனக்கூறுவதன் மூலம் அப்பகுதியில் தேர் திருவிழா வரக்கூடாது என்ற அறிக்கை தர வசதியாக ஒரு காரணம் சொல்லலாம் அல்லவா .................... அவரின் கூற்று சரி எனில் ராஜ வீதியை குறுகலான வீதியாக மாற்றிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது... அது பற்றி அறிக்கையில் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்....?//////////


இத்தகைய ஊர்வலங்கள் இப்போது முன்னைக் காட்டிலும் அதிக அளவில் நடத்தப்பட்டன. புதிய புதிய திருவிழாக்கள், புதிய புதிய கடவுளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஊர்வலங்களுக்கு அனுமதி கோரப்பட்டன. இது தவிர குடும்ப நிகழ்ச்சிகள், திருமணங்கள் ஆகியவற்றை முன்வைத்தும் இந்துக்கள் முன்னை விட அதிகமாக முஸ்லிம் பகுதிகளின் வழியாக ஊர்வலங்களை நடத்தினர்..

/////////// புதிய திருவிழாக்கள் , புதிய கடவுள்கள் என்று கூறும் அ.மார்க்ஸ் , அவை என்ன என்று கூறாமல் விட்டது ஏனோ........ தேரோடும் ராஜவீதியில் திருவிழா ஊர்வலம் போக கூடாது என்ற முனைப்பு இவரின் அறிக்கையில் தெளிவாக தெரிகிறது...... புதிய கடவுள்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் இவரின் மத நம்பிக்கை என்ன என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது........... , மார்க்ஸ் அந்தோணிசாமி யிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.......? இதே போல் இஸ்லாமியரை விமர்சிப்பாரா என நாம் நினைக்க முடியாது ........... ஏனெனில் அவரால் செருப்படி வாங்க உடம்பில் சக்தி இல்லை என ஆளைபார்தாலே தெரியும்.////////////


இந்த ஊர்வலங்கள் தமது வீடுகள் வழியாகச் செல்லும்போதும் பள்ளிவாசல் அருகே வரும்போதும் மோசமான வார்த்தைகள் பேசுவது, முஸ்லிம்களைப் பார்த்து நாக்கைத் துருத்தி மிரட்டுவது, தொழுகை நடக்கும்போது தாரை தப்பட்டைகளை முழக்கிப் பிரச்சினை செய்வதாக முஸ்லிம்கள் எங்களிடம் கூறினர்.


/////////// பாதுகாப்புக்கு என வரும் நூற்றுக்கனக்கான போலீஸ் இதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களாம்......... இந்த அடிப்படை அறிவுகூட இல்லாத, மனித உரிமை போராளியல்லவா இவர்.....?//////////


எனவே இவ்வாறு முஸ்லிம் தெருக்கள் மற்றும் பள்ளிவாசல் வழியாக இந்துக்களின் ஊர்வலங்கள் செல்வதைத் தடை செய்யுமாறு வருவாய்க் கோட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு, மார்ச் 5, 2012, ஆகஸ்ட் 9, 2012, டிசம்பர் 13, 2012 முதலான தேதிகளில் மனுக்களை அளித்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் முடிவு ஏதும் ஏற்படவில்லை. பாரம்பரியமாக நடந்து வரும் இத்தகைய ஊர்வலங்களை நிறுத்த இயலாது என இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டது. .
இதற்கிடையில் ஊராட்சி மன்றத் தலைவரும் அவரது ஆதரவாளரான சுமார் 30 முஸ்லிம்களும் ஆர்.டி.ஓவைச் சந்தித்துத் தமக்கு இந்துக்கள் ஊர்வலம் நடத்துவதில் எந்த மறுப்பும் இல்லை என அறிவித்தனர். முன்னதாக இவர்கள் உட்பட முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணந்து ஊர்வலத்திற்கு எதிராகத் தீர்மானம் இயற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில், தம் பகுதியில் இந்துக்கள் ஊர்வலங்கள் நடத்துவது தொடர்பான கருத்தில் பிளவு உருவாகியுள்ளது தெரிய வந்தது. இதற்குச் சில நாட்கள் முன்னதாக இந்த அடிப்படையில் பழைய ஜமாத்தார்கள் பதவி விலகி, புதிய ஜமாத் ஒன்றும் உருவாகி இருந்து. இந்தப் புதிய ஜமாத்தார்கள் இந்துக்களின் ஊர்வலங்கள் தம் பகுதியில் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.


///////////// இதிலிருந்து முஸ்லிம் மத அமைப்புகள் , அவர்களிடையே பிரிவினைவாததை ஏற்படுத்தி ஊர்வலத்திற்கு தடைவிதிக்க முயன்றிருப்பது தெளிவு.... அந்த அடிப்படைவாத அமைப்புகளை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத உள்நோக்கம் என்ன.......... வாங்கிய காசுக்கு குரைக்காமல் இருக்க முடியுமா......? மேலும் பழைய ஜமாத்தார்கள் சமூக நல்லினக்கவாதிகள் , அவர்களை நீக்கிவிட்டு மத அடிப்படை அமைப்புகளில் உள்ள அடிப்படை வாதிகள் புதிய ஜமாதார்களாக வந்ததின் விளைவு , ஊர்வல தடை கோரிக்கை. ////////


முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா முதலான தமிழக அளவிலான முஸ்லிம் அமைப்புகள் களத்தில் இறங்கின. தமது தெருக்களின் வழியாக ஊர்வலங்கள் நடத்தக் கூடாது என முஸ்லிம்கள் தரப்பில் போடப்பட்ட வழக்கொன்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


//////// ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது..........? நம் பக்கம் நியாயம் இருப்பதால்தானே........... ஆனால் அதைப்பற்றி ஒரு மூச்சை விடக்கானோம்.///////////


டிசம்பர் 5, 2012ல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107 பிரிவின் கீழ் இரு தரப்பிலிருந்தும் 20, 20 பேர் அழைக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டபோதும் அதில் சில முஸ்லிம்கள் கையொப்பமிட மறுத்து விட்டனர். இதற்கிடையில் இந்துக்கள் தரப்பில் ஏதேனும் ஊர்வலங்கள் நடத்த அனுமதி கோருவதும் நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்குவதும் தொடர்ந்தது. இந்நிலையில் சென்ற ஜனவரி 21, 2013 அன்று இந்துக்கள் தரப்பில் நடத்தப்பட்ட திருமண ஊர்வலம் ஒன்று பள்ளிவாசல் தெருவில் வந்தபோது ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆட்சேபகரமான முழக்கங்களை எழுப்பி, முஸ்லிம்களை நோக்கிக் கற்களை வீசிக் காயப்படுத்தியதாக முஸ்லிம் தரப்பில் சொல்லப்படுகிறது. அதை ஒட்டி முஸ்லிம் தரப்பில் யாரொ சிலர் ஊர்வலத்தில் வந்த வாகனம் ஒன்றின் மீது கற்களை வீசிக் கண்ணாடியை உடைத்துள்ளனர். பதிலாக இந்துக்கள் தரப்பில் ஹாஜி அப்துல்லா ஷா பள்ளி வாகனம் ஒன்றும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கரும்புத் தோட்டம் ஒன்றும், முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஏ.டி.எம் ஒன்றும் தாக்கப்பட்டது. முஸ்லிகள் மத்தியிலிருந்தே முதல் தாக்குதல் தொடங்கியது என இந்துக்கள் தரப்பில் கூறப்படுக்கிறது. அரசுத் தரப்பும் அப்படியே கூறுகிறது.


/////////// திருமண ஊர்வலத்தில் ஆட்சேபகரமான முழக்கங்களை எழுப்பினார்களாம் ............ விந்தையாக இல்லை , கடன் பட்டு , கஷ்டப்பட்டு தன் மகளுக்கு நடக்கும் திருமணத்தில் இத்தகைய செயல்களை செய்ய எந்த திருமணவீடுகாரனுக்கு துணிச்சல் வரும், ........ இதனால் திருமணம் தடைபட்டால் மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என பெண்ணை பெற்ற தந்தைக்கும் ,திருமணதிற்கு வந்தவர்களுக்கும் தெரியாதா.......... அப்படிப்பட்டவர்கள் இந்த செயல்களில் இறங்கினார்களாம் .............. ஒரு அடிப்படை நீதி தர்மமும் இல்லாமல் இவ்வாறு எழுத இவர்களால் மட்டுமே முடியும்........./////////////



உடனடியாக அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் திரூமண ஊர்வல வாகனத்தை உடைத்ததற்காக 5 முஸ்லிம்களை ஒப்படைக்குமாறு முஸ்லிம்களிடம் கூறியுள்ளார். தாக்குதலை இந்துக்களே தொடங்கினார்கள் எனவும், தங்களில் ஐவருக்கு தலையில் காயம்பட்டுள்ள நிலையில் தாங்கள் யாரையும் ஒப்படைக்க இயலாது எனவும் முஸ்லிம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காவல்துறையினர் முஸ்லிம்கள் பகுதியில் தடுப்புகள் (barricades) அமைத்து அச்சுறுத்தியுள்ளதோடு, அடுத்த நாள் பெரிய படையுடன் வந்து, காவல்துறையினருக்கே உரித்தான முறையில் கேவலமாகத் திட்டி அங்கு கண்ணில் பட்ட முலிம்கள் பலரைக் கைது செய்து கொண்டு சென்றனர், கைது செய்யப்பட்ட நூறு பேர்களில் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 28 பெயர்களில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொலை முயற்சி, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தது முதலான கடும் குற்றப் பிரிவுகளின் கீழ் (294 b, 147, 148, 341, 324, 336, 153, 153A, 307 IPC r/w 3o7 PPD4 Act) வழக்கு (வ.களத்தூர், 17/13) பதிவு செய்து இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இந்துக்கள் தரப்பில் ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர்.


//////// நியாயமாக நடந்த காவல்துறை அதிகாரிகள் மீது இப்படி ஒரு அபாண்ட வார்த்தைகளை உபயோகிப்பதால்தான் , மனித உரிமை ஆரவலர்கள் எனகூறிகொள்பவர்கள் மீது மக்களுக்கு என்றுமே வெறுப்பு உண்டு......... ஒரு திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணின் வாழ்கை பாதிக்கப்படும் எனத்தெரிந்தும், கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை பிறகு என்ன கொஞ்சுவார்களா .............. //////


இத்தனைக்கும் மத்தியில் மீண்டும் பிப்ரவரி 25 அன்று மீண்டும் ஒரு மாசிமக ஊர்வலத்திற்கு இந்துக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊர்வலம் செல்லும் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் சுமார் நூறு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தமது குடும்ப அட்டைகள் முதலியவற்றை ஒப்படைக்க முயற்சித்துள்ளனர்.
இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் அரசுத் தரப்பினர் கருத்து
முஸ்லிம்கள் : 1. 119/1ல் பாரம்பரியமாக இரு தரப்பினருக்கும் பொதுவாக இருந்து வந்த இடத்தின் ஒரு பகுதி இன்று இந்துக்களால் ஆக்ரமிக்கப்பட்டு கோவிலாக மாற்றப்பட்டுவிட்டது. ஒப்பந்தப்படி மீதியுள்ள பகுதிகளிலும் நாங்கள் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிப்பதில்லை. ஆனால் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. எங்கள் ஊரில் பேருந்து நிலையம் இல்லை. இந்த காலி இடத்தில்தான் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. எனவே இந்தக் காலி இடத்தைப் பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும்.



//////////// பேருந்து நிலையம் அமைக்க ஊரில் வேறு இடமே இல்லையா..........? சர்சைக்க்குரிய இடத்தில் கட்டுவதன் மூலம் மேலும் பிரச்சினையை கிளப்பி அதில் குளிர்காய மத தீவிரவாத அமைப்புகள் முயற்சிக்கின்ன்றன என்பது தெளிவு.......... மேலும் கழிப்பறை கட்டுவதன் மூலம் அருகில் இருக்கும் கோயிலை இழிவுபடுத்தும் முற்சியாகவே இது தெரிகிறது..........////////////



2. எங்கள் பகுதியில் வம்பு செய்யும் நோக்குடன் வேண்டுமென்றே ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. ஊர்வலத்தில் வருபவர்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல் பள்ளி வாசல் தொழுகை நேரங்களில் தாரை தப்பட்டைகளை முழக்குவது, அவதூறுகள் முழங்குவது முதலானவற்றைச் செய்கின்றனர். இது எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே எங்கள் பகுதி வழியாக இந்துக்களின் ஊர்வலங்கள் செல்லுவது நிறுத்தப்பட்டு, ஊர்க் கோவிலிலிருந்து இந்துக்களின் பகுதிக்கு நேராகச் செல்லும் தார்ச் சாலை வழியாக அவர்களின் ஊர்வலங்கள் செல்ல வேண்டும்.


/////////// இவர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லை என தெரிந்ததால்தான் சென்னை உயர்நீதி மன்றம் ஊர்வலங்களுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது...........
  http://www.tamilhindu.com/wp-content/uploads/Vkalathurdocuments.pdf/////////



3. மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எதிராகப் பாரபட்சமாக நடந்து வருகிறது.


////////மாவட்ட நிர்வாகம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரால் நிவகிக்கப்படுகிறது......... (Dr.தரேஸ் அகமது IAS), பலமுறை இந்து தலைவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை கூற முயன்றும், இன்றுவரை முடியவில்லை ............. அப்படி இருக்கும் ஒரு நிலையில் , மாவட்ட நிர்வாகம் இந்துக்களுக்கு ஆதரவாக உளளது என்பது விநோதமாக உளளது........//////////


சாதி இந்துக்கள் : 1.. 119/1 ல் காலியாக உள்ள பொது இடம் இரு சாரராலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும் எக்காரணம் கொன்டும் பேருந்து நிலையத்தை இங்கு அமைக்க அனுமதிக்க மாட்டோம். 2. பாரம்பரியமாகத் தேரோடும் ராஜ வீதி என அழைக்கப்பட்ட வழியாகவே எங்கள் ஊர்வலங்கள் சென்ரு வந்தன. இனியும் அப்படியே செல்லும். எக்காரணம் கொண்டும் ஊர்வலப் பாதையை மாற்றமாட்டோம். ஊர்வலங்கள் இட வலத் திசையில்தான் நடத்தவேண்டும் நேரடியாக எங்கள் தெருவிற்குச் செல்லும் தார் சாலையில் செல்வது வல இடத் திசையில் அமையுமாகையால் அது சாத்தியமில்லை. 3. மாவட்ட நிர்வாகத்தின் அணுகல் முறையில் இந்துக்களுக்கு எதிர்க் கருத்து இல்லை.
அரசுத் தரப்பு : 119/1 தொடர்பாக வழக்கு உள்ளது பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். வ.களத்தூரிலிருந்து பேருந்தில் செல்வோரின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது அங்கு பேருந்து நிலையம் அமைப்பதற்கான தேவையே இல்லை என்றார் துணைக் கண்காணிப்பாளர் சுஹாசினி. பொது வழியில் ஊர்வலங்கள் செல்வதை யாரும் தடுக்க இயலாது. முஸ்லிம்களின் கோரிக்கை அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவுக்கு விரோதமானது என்பது தவிர அவர்கள் தம்மை இவ்வாறு பிற தொடர்புகளை விலக்கி முடக்கிக் கொள்வது (ghettoisation) .அவர்களுக்கே ஆபத்தானது என்றும் இது உத்தபுரம் போன்ற ஊர்களில் சாதி இந்துக்கள் தலித்களின் பாதையைத் தடுப்பதற்கு ஒப்பானது என்றார் மாவட்ட ஆட்சியர் தர்வேஸ் அகமது.. வ.களத்தூர் முஸ்லிம்கள் மத்தியில், குறிப்பாகப் பெண்களிடத்தில் கல்வி ஆர்வம் குறைவாக உள்ளது எனவும், அதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்துக்கள் ஊர்வலங்களை அமைதியாகவே நடத்துகின்றனர் எனவும் எந்த வகையிலும் நிபந்தனைகளை அவர்கள் மீறுவதில்லை எனவும், அதைத் தாமே நேரில் கண்டுள்ளதாகவும், சமீபத்திய தமது கைது நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமானவை எனவும் சுஹாசினி கூறினார்.
எமது பார்வைகள்
119/1 இடம் பொதுவாக இருந்து தற்போது அதில் ஒரு பகுதி ஒப்பந்தங்களை மீறி இந்துக்களின் கோவிலாக மாற்றப்பட்டுள்ளதை யாரும் மறுக்க இயலாது. கொஞ்சம் கொஞ்சமாக தற்போதுள்ள காலி இடமும் அவர்களால் வழிபாட்டு இடமாக மாற்றப்படலாம் என்கிற நியாயமான அச்சம் முஸ்லிம்களிடம் உள்ளது.
ஊர்வலப் பாதையைப் பொருத்தமட்டில் முஸ்லிம்கள் மத்தியில் இரு கருத்துக்கள் உண்டு. பெரும்பாலோர் தடுக்க வேண்டும் எனவும், ஒரு சிறுபான்மையோர் வழக்கம்போல ஊர்வலங்கள் செல்வதில் தடை இல்லை எனவும் கருதுகின்றனர். 1992க்குப் பின் இது போன்ற மத ஊர்வலங்கள் சிறுபான்மையோருக்கு எதிரான வன்முறைகளாக மாறி வருவது கண்கூடு. எனவே இது குறித்த இயல்பான ஒரு அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியுள்ளதை மாவட்ட நிர்வாகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது. பொது வழியாக ஊர்வலங்கள் செல்வது அவர்களின் உரிமை எனவும் அதற்கு எதிரான கோரிக்கையை ஏற்க இயலாது எனவும், அதற்குப் பாதுகாப்பு அளிப்பதே தம் கடமை எனவும் காவல்துறை சொல்வதை அப்படியே நாம் ஏற்க இயலாது. சட்ட ஒழுங்குப் பிரச்சினை வருமாயின் அதில் தலையிட நிர்வாகத்திற்கு உரிமை உண்டு. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முதலான இடங்களில் நீதிமன்றமே இப்படித் தலையிட்டுப் பாதையை மாற்றியுள்ளது. தவிரவும் தேர்தல் தோல்வியை ஒட்டி இப்போது வேண்டுமென்றே அதிக எண்ணிக்கையில் ஊர்வலங்களை இந்துக்கள் நடத்தத் தொடங்கியுள்ளதையும் அதன் உள் நோக்கத்தையும் கண்டுகொள்ள மாவட்ட நிர்வாகம் முற்றாக மறுக்கிறது. ஊர்வலங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி முற்றிலும் அமைதியாக நடக்கிறது என துணைக் கண்கானிப்பாளர் சுஹாசினி சொல்வதை முற்றிலும் ஏற்க இயலாது. வெளி நாட்டிலுள்ள மகனின் வருகையை முன்னிட்டு இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்தபோது ஊர்வலத்தைக் காரணம் காட்டி உடனடியாக அடக்கம் செய்ய வற்புறுத்திய நிகழ்ச்சிகளெல்லாம் அங்கு நடந்துள்ளன.
ஊர்வலம் கூடாது எனச் சொல்வது அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவுக்கு எதிரானது எனவும், இப்படிக் கூறுவது தீண்டாமைச் சுவர் எழுப்புவதற்கு ஒப்பானது எனவும், இது ஒருவகையில் தாமாகவே ஏற்படுத்திக் கொள்ளும் ghettoisation எனவும் மாவட்ட ஆட்சியர் சொல்வதை ஏற்க இயலாது முஸ்லிம்களின் பாதுகாப்பினமை (insecurity) தொடர்பான அச்சத்தை அவர் முற்றாகப் புறக்கணிக்கிறார். மத உரிமை தொடர்பான 25ம் பிரிவு என்பது சொத்துரிமை, கருத்துரிமை போன்று முழுமையான உரிமையாக அதை நமது அரசியல் சட்டம் வரையறுக்கவில்லை. “பொது அமைதிக்குப் பங்கம் வராமல்” என்கிற நிபந்தனைக்குட்பட்டே மத உரிமை நமது அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் வசதியாக மறந்து விடுகிறார். ஒரு ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் தம் வீதி வழியே நடந்தால் தீட்டுப்பட்டுவிடும் எனத் தீண்டாமைச் சுவர் வைத்துத் தடுப்பதையும், பெரும்பான்மை மதத்தவரின் வம்புப் போக்கால் பிற பல இடங்களில் ஏற்பட்டுள்ளதைப் போன்று இங்கும் வன்முறையும் தொழுகைத் தலங்களுக்கு அவமானமும் நிகழ்ந்து விடுமோ என்கிற அச்சத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம், ஊர்வலத்தை மாற்றுப் பாதையில் அனுமதிக்குமாறு நிர்வாகத்தை வேண்டிக் கொள்வதையும் மாவட்ட ஆட்சியர் ஒன்றாக்குவது வருந்தத் தக்கது. முஸ்லிம்கள் வேன்டுமென்றே தம்மை முடக்கிக் கொள்வதில்லை. Ghettoisation என்பது இன்றைய மதவாத அரசியலால் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. சச்சார் குழு அறிக்கை இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அமைப்புகளை மதக் கலவரங்களுக்குக் காரணமாகும் மதவாத அமைப்புகளாகக் காணும் பார்வை மாவட்ட நிர்வாகத்திடம், குறிப்பாக மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது.



/////// அதுதான் உண்மையும் கூட , இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் அப்படி கருத காரணம் உண்டு, முன்பே கூறியது போல முஸ்லிம் மத அமைப்புகளில் யார் மக்களிடம் முதலிடம் பெறுவது என்ற போட்டியில் அவர்களிடையே பிரிவினையை உருவாக்கி அதன்மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் , மேலும் இந்த அறிக்கையின் ஆரம்ப வரிகளில் இவைகளே வ.களத்தூர் முஸ்லிம் பெரும்பான்மை ஊர் என்று மக்கள் தொகை அடிப்படையில் ஒத்துக்கொள்கிறார்கள், அப்படி இருக்கும் போது வ.களத்தூரை பொறுத்த அளவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற வார்த்தை அர்த்தம் இல்லாத ஒன்றாகிவிடுகிறது , இந்துக்கள்தான் இங்கு சிறபான்மை மக்கள் , அப்படி இருக்கும்போது Ghettoisation என்ற வார்த்தை பதம் இந்துக்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் ///////



காவல்துறையும் மாவட்ட நிர்வாகம், குறிப்பாகக் கோட்டாட்சியர் ரேவதியும் வெளிப்படையாக ஒரு சார்பாக நடப்பதற்கு இரு எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். (1) ஜனவரி 26, 2013 அன்று தம் தெரு வழியே மிலாதுநபி ஊர்வலம் நடத்த முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் திருமண ஊர்வலத்தில் பிரச்சினை நடந்ததைக் காரணம் காட்டி இப்படி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுனானால் மீண்டும் பிப்ரவரி 25 அன்று முஸ்லிம் தெருக்கள் வழியே மாசி மக ஊர்வலம் நடத்துவதற்கு இந்துக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விளக்கம் அளிக்க துணைக் கண்காணிப்பாளராலும் மாவட்ட ஆட்சியராலும் இயலவில்லை. ஒப்பந்தப்படி 119/1 காலி இடத்தில் முஸ்லிம்கள் கந்தூரி விழா நடத்துவதை ‘ஆர்கெஸ்ட்ரா’ வைக்கிறார்கள் என்கிற பெயரில் நிர்வாகம் தடுத்துள்ளது.



////////// அனால் இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி ,மாவட்ட நிர்வாகம் அனுமதிகொடுத்ததின் பேரில் அவர்களின் மத சட்டதிட்டங்களுக்கு ஒவ்வாத பாட்டும் , மேல தாளமும் , சரவேடிகளும் கொளுத்தி....... சர்வே எண் 119/1 ல் , உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிராக இரவு முழுவதும் நடத்தப்பட்டது , அதை மாவட்ட நிர்வாகம்மும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது...///////




(2) ஜனவரி 21ம் தேதிச் சம்பவத்தில் இரு தரப்பிலும் வன்முறைகள் நடந்தாலும், இந்துக்கள் தரப்பிலேயே அதிக வன்முறைகள் நடந்துள்ளன. எனினும் இந்துக்கள் தரப்பில் வெறும் ஏழு பேர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்து அதில் மூவரை மட்டுமே கைது செய்த காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் முஸ்லிம்கள் மத்தியில் சம்பவத்தில் தொடர்பே இல்லாத மாணவர்கள், சம்பவ நேரத்தில் ஊரிலேயே இல்லாதவர்கள் உள்ளிட்ட 100 + 28 பேர் மீது கடும் பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளார். ஆதம் ஷெரீஃப் த/பெ அப்துல் மஜீது என்பவர் வெளி நாட்டில் உள்ளார். முகம்மது அலி த/பெ அப்துல் கரிம் என்பவரும் தற்போது வ.களத்தூரில் குடியிருக்கவில்லை. வெளிநாட்டில் உள்ளவர் மீது வழக்குப் போட்டுள்ளதை துணைக் கண்காணிப்பாளரும் ஏற்றுக் கொண்டார். வழக்கு பதிவு செய்யப்பட்ட ஏழு இந்துக்களில் நால்வர் ஏன் கைது செய்யப்படவில்லை எனக் கேட்டபோது அவர்கள் வயதானவர்கள் என்னும் காவல்துறை அதைவிட வயதான பல முஸ்லிம்களை இதே சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்துள்ளது. இதற்கும் உரிய விளக்கத்தை அவர்களால் அளிக்க இயலவில்லை. தாம் கேட்டபோது ஐவரை அனுப்பி வைக்காதற்காக இப்படி கண்மூடித்தனமாக காவல்துறை கைதுகளை நடத்தியுள்ளது. தனிப் பிரிவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் என்பவர் “தாடி வச்சவன எல்லாம் பிடிங்க” எனவும் பிற வார்த்தைகளாலும் தாறுமாறாகப் பேசியுள்ளார்.



///////// திருமண ஊர்வலத்தில் அமைதியாக சென்றவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதுசெய்த காவல்துறை அதிகாரிகளை குற்றம் சொல்லும் இவர்கள் , அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டிக்க மறுக்கிறீர்கள்............ , இதே போல் இஸ்லாமியர்கள் மீது. ஒரு சம்பவம் இது போல் நடந்திருந்தால் குஜராத் போல் ஒரு தாக்குதல் என வருணித்து இருப்பீர்கள்........... மேலும் ஒன்றுமே செய்யாத இந்துக்கள் எழு பேர்மீது வழக்கு பதிவு செய்து , முஸ்லிம்களை சமதானப்படுத்த பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்......... /////////



எமது பரிந்துரைகள்
சமூக நல்லிணக்க நோக்கில் கீழ்க் கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.
(1) வ.களத்தூர் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக உள்ள சர்வே எண் 119/1 இடத்தில் ஒப்பந்தங்களுக்கு விரோதமாகக் கட்டப்பட்ட இந்துக்களின் கோவில் அப்படியே இருக்கலாம் எனவும், மீதியுள்ள காலி இடத்தில் எல்லோருக்கும் பயன்படும்படியான பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் முஸ்லிம்கள் கோருவது முற்றிலும் நியாயமானது. அந்த இடம் வருவாய்த் துறைக்குச் சொந்தமனது என்பதால் நீதிமன்ற வழக்கை திரும்பப் பெறச் செய்து இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். வன்முறையாகப் பிரச்சினைக்குரிய இடத்தில் கோவில் ஒன்றைக் கட்டியுள்ள இந்துக்களின் மறுப்பை அரசு ஏற்கக் கூடாது.




//////////// சமூக நல்லிணக்க பரிந்துரை என்று ஆரம்பித்து , சர்சிக்குரிய இடத்தில பேருந்து நிலையமும், கழிப்பறையும் கட்டுவதன் மூலம் அருகில் இருக்கும் இந்துக்களின் கோவிலையும் , அவர்களின் மத நம்பிக்கையும் இழிவுபடுத்து கிறது இந்த பரிந்துரை, மேலும் வ.களத்தூரை மற்றுமொரு அயோத்தி பிரச்சினைபோல் ஆக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் என்பது திண்ணம்.............////////////



(2) ஊர்வலப் பாதை தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிலரிடம் மாற்றுக் கருத்துக்கள் உள்ளதை மறந்துவிட இயலாது. ஊர்வலம் தொடர்பான முஸ்லிம்களின் அச்சம் நியாயமாயினும் பாரம்பரியமாக அவ்வழியே ஊர்வலங்கள் சென்று வந்ததையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே காவல் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து இரு தரப்பு முக்கியஸ்தர்களும் அடங்கிய ஒரு நிரந்தரக் குழு ஒன்றை அமைத்து மிகவும் முக்கியமான ஊர்வலங்களை மட்டும் கடும் நிபந்தனைகளுடனும், கண்காணிப்புகளுடனும் நடத்த அனுமதிக்க வேண்டும் நடத்தப்படும் ஊர்வலங்கள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். ஊரைச் சுற்றிவிட்டு மீண்டும் திரும்பிக் கோவிலுக்கு வருவதற்குத் தேவையில்லாத திருமண ஊர்வலங்கள் நேரடியாகத் தார்ச்சாலையில் செல்லும்போது வல இடத் திசைப் பிரச்சினை வராது என்பதால் சாமி ஊர்வலங்கள் தவிர்த்த பிற ஊர்வலங்கள் முஸ்லிம் தெருக்கள் வழியாகச் செல்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.



////////ஆண்டாண்டு காலமாக பாட்டன் ,பூட்டன் காலத்திலிருந்து தேர்போகும் ராஜ வீதியாக இருந்த தெருவில் திருமண ஊர்வலமும் , மத ஊர்வலமும் , சாமி ஊர்வலங்களும் வெகு விமரிசையாக நடந்த நிலையில் இப்பரிந்துரை ஊர்வலங்களை கட்டுப்படுதவேண்டும் என கூறுகிறது , இதன் மூலம் வ.களத்தூரை மட்டுமொரு உத்தபுரமாக மாற்றும் முயற்சியே இப்பரிந்துரை,......////////



(3) பிப்ரவரி 22 அன்று மேற்கொள்ளப்பட்ட முறையற்ற கைதுகள், சட்டவிரோதக் காவல் ஆகியவை தொடர்பாக காவல்துறைக் கண்காணிப்பாளர் மீது துறை வாரியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறப்புப் பிரிவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.



///////// நியாயமாக நடவடிக்கை எடுத்த காவல்துறை மீது அவதுறு கூறும் இந்த அறிக்கை மீது மாவட்ட நிர்வாகமும் , காவல்துறையும் மான நஷ்ட வழக்கு தொடராமல் அமைதி காப்பது அவர்களை வாதங்களுக்கு வலு சேர்ப்பது போல் அமையும்........... //////////




(4) வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லாம் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காவல்துறையே ஏற்றுக் கொள்வதால் குற்ற எண் 17/13 என்கிற முதல் தகவல் அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உண்மையில் சமபவத்துடன் தொடர்புடையவர்கள் தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.




//////// புகார் கொடுத்தவர்கள் வழக்கை திரும்பபெறாத நிலையில் , இது தொடர்பாக காவல்துறை சட்டம் காட்டும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதோடு அல்லாமல் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்......../////////



(5) வ. களத்தூர் முஸ்லிம்கள் மத்தியில் கல்வி ஆர்வம் இல்லை என்கிற மாவட்ட ஆட்சியரின் கவலை நியாயமானது. முஸ்லிம்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வ. களத்தூருக்குப் போக்குவரத்து வசதிகள் அதிகமாக்கப் பட வேண்டும்.
(6) பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிய வ.களத்தூர் ஜமாத் பொருளாளர் அய்னுதீன் என்பவர் பழி வாங்கும் நோக்கில் திருவெறும்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.. ஆர்.டி.ஓ ரேவதியின் தலையீட்டால்தான் அவரை மாற்ற நேர்ந்தது என்பதை அதிகாரிகளே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது இடமாற்றம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.



////////// அரசு பணியில் இருக்கும் ஒருவர் நாட்டின் மத ஒற்றுமைக்கு எதிராக நடக்க கூடாது என்பது அடிப்படையான விஷயம்....... அனால் இச்செயல்களை செய்த அவர்மீது குற்ற நடவடிக்கை எடுக்காமல் பணி மாறுதல் என்ற நிர்வாக நடவடிக்கை எடுத்திருப்பது , சட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை கருத வேண்டி உளளது .////////////



இறுதியாக மார்க்ஸ் அந்தோணிசாமி என்கிற கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் மனித உரிமைக்கு ஆதரவாக போராடுகிறோம் என்ற போர்வையில் வ.களத்தூர் மட்டுமல்லாமல் , தமிழ்நாடு முழுவதுமே மத மற்றும் சாதி பிரிவினையை ஏற்படுத்திவருகிறது . இவர்களின் குரலுக்கு சில தேசிய சிந்தனை உள்ள ஊடகங்கள் துணைபோவது வருத்தத்துக்கு உரிய விஷயமாகும்........ பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் இவர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பது மக்களிடையே பிரிவினையை தூண்டும் என்பது திண்ணம் .. வ.களத்தூரை பொறுத்த அளவில் மத மோதல் களுக்கு அடிப்படையான காரணம் , இஸ்லாமிய மத தீவிர வாத அமைப்புகளின் நடவடிக்கையே காரணம், யார் இஸ்லாமிய மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளவர்கள், என்ற போட்டியில் வ.களதுரின் அமைதி மற்றும் மத நல்லிணக்கம் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது.............. சிந்திப்போம் உறவுகளே.............

3 comments:

  1. Thanks for all of your efforts and awareness.
    http://www.sakthiganesh.com/letter-to-tamil-hindus

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...... தங்களின் ஆதரவு அவசியம் எங்களுக்கு தேவை.

      Delete