=============================
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2 மற்றும் 3-வது இடங்களை பெற்று பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. அகல்யா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். மாணவி கே. அகல்யா, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காமராசு - யசோதா தம்பதிகளின் மகள் ஆவார். இவர், டாக்டர் ஆவதே தனது விருப்பம் என்றார்.
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். பார்க்கவி 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
மாணவி ஆர். பார்க்கவி, லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - வெண்ணிலா தம்பதிகளின் மகள் ஆவார். இவர் டாக்டர் ஆவதே தனது விருப்பம் என்றார்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் கே. அகல்யா, ஆர். பார்க்கவி ஆகியோரை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் இனிப்பு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் செயலர் எம். விவேகானந்தன், பள்ளித் தலைமை ஆசிரியர் கோமதி, உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் v.kalathur seithi .
0 comments:
Post a Comment