புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க நிதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது வலுவடைந்து வரும் இரு நாட்டு உறவை திசை திருப்பும் முயற்சி என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மோடி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முக்கியத்துவம் இல்லாத தவறான நோக்கம் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு விசாரணையில் தம் மீதான குற்றச்சாட்டுகளை மோடி மறுத்துள்ளார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மோடி மீதான குற்றச்சாட்டுகள் யூகத்தின் அடிப்டையிலானவை என்று இந்திய நீதிமன்றங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே முடிவு தான் அமெரிக்க நீதிமன்றத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிலும் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தலைவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தபடுவது இது முதல் முறை இல்ஙலை என்றும், இதே போல் டெல்லி சீக்கியர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீதும் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்.
எனவே மோடிக்கு அமெரிக்க நிதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள விவகாரத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டியது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2002-ம் ஆண்டு மோடி முதலமைச்சராக இருந்த போது குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக அமெரிக்க நீதிமையம் என்னும் மனித உரிமை தொடர்ந்த வழக்கில் நியூயார்க் நிதிமன்றம் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-தினகரன்.
0 comments:
Post a Comment