வ.களத்தூரில் இந்து முஸ்லிம்கள் சரிபாதியாக வாழ்ந்தாலும் பஞ்சாயத்து தலைவர் என்னவோ இஸ்லாமியர்தான். அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் என்னவாக இருந்தாலும் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்பது இங்கு எழுதப்படாத விதியாக உள்ளது. அதனால்தான் வ.களத்தூர் இந்துமக்கள் அதிகம் வாழும் பகுதிக்கென வெட்டப்பட்ட குடிநீர் கிணறு அருகே பஞ்சாயத்து நிர்வாகம் குப்பை தொட்டியை அமைத்திருகிறது.
வ.களத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு அருகில், கல்லாற்றின் ஆற்றோரம் அரசின் நிதியுதவியுடன் பல லட்சக்கணக்கான ரூபாயை கொட்டி அமைக்கப்பட்ட கிணறு உள்ளது. ஊரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இக்கிணறு வ.களத்தூர் இந்துக்கள் பெரும்பானமையாக வாழும் பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரு குழிகளை குப்பைதொட்டிக்கென தொண்டும்போதே அருகில் குடிநீர் கிணறு அமைந்துள்ள நிலையில் இதனை அமைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் குப்பை குழி வெட்டாப்பட்டு, குப்பை கொட்டப்படாமல் இருந்துவந்தது.
ஆனால் கடந்த சில தினங்களாக குப்பையை வ.களத்தூர் ஊராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. இங்கு குடிநீர் கிணறு அமைந்துள்ள நிலையில் குப்பை கொட்டக்கூடாது என மறுபடியும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த வேளையில் “அப்படிதான்கொட்டுவோம் உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்” என கூறியதாக தெரிகிறது.
குடிநீர் கிணற்றின் அருகே குப்பை கொட்டினால் மழை காலங்களில் குப்பையின் கழிவுநீர் கிணற்றுக்குள் இறங்கி குடிநீர் மாசுபடுவதொடு , தோற்று நோயும் தாக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிந்தும் உள்நோக்கத்தோடு வ.களத்தூர் ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. மாவட்ட ஆட்சியர் தக்க அறிவுரை கூறி குப்பைத்தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 comments:
Post a Comment