பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்துக்களின் அடிப்படை உரிமையான வழிபாடு மற்றும் பண்பாட்டு உரிமை மாற்றுமதத்தினராலும் ஒரு சார்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மூன்று நாள் நடக்கும் திருவிழாவை தேரோடும் ராஜவீதியில் தாங்கள் அதிகமாக வசித்து வருவதால் இது இஸ்லாமியர் தெரு எனவும் இதன் வழியாக இந்துக்களின் சுவாமி ஊர்வலம் வரக்கூடாது என மறுத்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் ஒரு தலை பட்சமாக ஒரு நாள் மட்டுமே சுவாமி ஊரவலத்தை அனுமதிக்க முடியும் என கூறிவிட்டது.
இதனை எதிர்த்து மூன்று நாள் திருவிழா நடத்த சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரந்த நிலையில் நீதி மன்றமும் மூன்று நாட்கள் திருவிழா நடத்த தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் உயர்நீதி மன்ற தீர்ப்பை காலில் தூக்கிப்போட்டு மிதித்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையோ வ.களத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்து இந்துக்களின் திருவிழாவை தடுத்து நிறுத்தியது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் சுவாமி ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் எப்படி உரிமையை மீட்டு தந்ததோ அதே போன்ற அறப்போராட்டத்தினை நடத்துவது ஒன்றே தீர்வு என வ.களத்தூர் இந்துக்கள் முடிவு செய்து, அருகிலுள்ள கிராம மக்களின் ஒருங்கினைப்போடு வ.களத்தூரில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இது தொடர்ப்பாக வ.களத்தூர் இந்துக்கள் அருகிலுள்ள கிராம மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அவர்களும் வ.களத்தூர் இந்துக்களின் திருவிழாவை அமைதியான முறையில் நடத்திட ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.
ஒன்றுபட்ட இந்து சக்தி வென்றே தீரும்...
0 comments:
Post a Comment