வ.களத்தூர் வரலாற்றில் ஒரு சிறப்பான ஒரு ஒப்பந்தம் பறையர் சமூகம் மற்றும் பிற சமூக இந்துக்கள் இடையே கையெழுத்து ஆகி உள்ளது. நீண்ட காலமாக கோவில் திருவிழா காலங்களில் ஒரு நாள் மண்டகப்படி, கோவில் காலி மனைகளில் இட ஒதுக்கீடு மற்றும் கோவில் மானியங்களில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கோரி வந்தனர் பறையர் சமுதாய மக்கள்.
வ.களத்தூரில் சுவாமி ஊர்வலம் தொடர்பாக நீண்ட காலமாக இந்து முஸ்லீம் இடையே தகராறு இருந்து வந்த நிலையில் இவர்களின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
வ.களத்தூர் சுவாமி ஊர்வலம் தொடர்பாக தனி நீதிபதி இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்து உள்ள நிலையில் தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் வ.களத்தூர் பறையர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஒப்பந்த மூலம் நிறைவேறி உள்ளது.
ஒப்பந்தத்தில் அம்சம் வருமாறு...
கோவில் திருவிழா காலங்களில் ஒரு நாள் மண்டகப்படி, கோவில் காலி மனைகளில் இட ஒதுக்கீடு மற்றும் கோவில் மானியங்களில் பறையர் சமுதாய மக்களுக்கும் பங்கு அளிப்பது என முடிவாகியுள்ளது.
ஆனால் சில சந்தேகங்கள் எழாமல் இல்லை...
கோவில் மண்டகப்படி , மானியங்களில் இடம் கோரும் பறையர் சமுதாயம் அதே கோவில் சுவாமி ஊர்வலங்களை நடத்த இனிவரும் காலங்களில் பிற இந்து சமுதாய மக்களுடன் இணைந்து போராடுமா..?
இந்த பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடந்த வழக்கறிஞரின் நோக்கமும் சந்தேகத்திற்கு உரியது. ஏனெனில் இதே வழக்கறிஞர் தான் இந்துக்களில் எதிர்ப்பையும் மீறி வ.களத்தூர் தேரடி திடலில் கழிவறை கட்ட வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் வழக்கு தொடந்தவர்.
வ.களத்தூர் ஒட்டு மொத்த இந்து சமுதாய மக்களின் ஒற்றுமையை நோக்கிய இந்த ஒப்பந்தத்தை வ.களத்தூர் செய்தி குழு முழு மனதுடன் ஆதரிக்கிறது... அதே வேளையில் சுவாமி ஊர்வலம் தொடர்பான பிரச்சினையில் மற்ற இந்து சமுதாய மக்களுடன் சேர்ந்து போராட பறையர் சமுதாய மக்களையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறது.
-வ.களத்தூர் செய்தி குழு.
0 comments:
Post a Comment