வ.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பிரபு மீது விமர்சனம் என்பது, அவர் சரி பாதி அளவு இந்துக்கள் இருந்தும் இந்துக்கள் இடம் ஓட்டே கேட்காமல் , இஸ்லாமியர்களின் பேராதரவை மட்டும் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட போதே ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல் பட போகிறார் என்று எண்ணிய வேளையில் முன்பிருந்த ஊராட்சி தலைவர்களின் ஊராட்சி பணிகளை விட சிறப்பாகவே செயல்பட்டு வருவதாகவே பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இவரின் செயல் பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...
இந்து மத கடவுள்களை கேலி செய்வது என்பது இவருக்கு இயல்பான ஒன்று என்பதும், இஸ்லாமியர்களின் பண்டிகை என்றால் ஜமாஅத் தை தேடி போய் வாழ்த்துவதும் காணக்கூடியதாக உள்ளது... செய்நன்றி கடன் போல
அடுத்து இவரின் சாதிய கண்ணோட்டம்... இவரின் முகநூல் பக்கங்களின் விவாதங்கள் சொல்லிவிடுகிறது இவர் எப்படிப்பட்டவர் என்று... அதில் ஒரு சிறு sample... வ.களத்தூர் ஊராட்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை வம்புக்கு இழுப்பது போல் உள்ளது இவரின் விவாதம். ஏற்கனவே மத மோதல்களால் தவிக்கும் வ.களத்தூர் இவரால் சாதி மோதல்களும் ஆரம்பித்து விடும் போல..
கடைசியாக சமீபத்திய மோதல் தொடர்பானது. வழக்கறிஞர் பிரபுக்கும், திமுக ஊராட்சி கிளை செயலாளர் செல்வராஜ் என்பவருக்குமான மோதல் என்பது முகநூலில் கடந்த ஆறு மாதமாக இருந்தது தேரடி திடலில் நேரடி மோதலாக அரங்கேறி யது. ஆனால் பிரபுவும் திமுக அனுதாபி என்பது கூடுதல் தகவல்.
இங்கு கவனிக்க தக்கது என்ன வென்றால் தன்னை எதிர்க்கும் எவரின் மீதும் வன்கொடுமை சட்டம் பாயும் என வழக்கறிஞர் தொடர்ந்து சொல்லி வருவது தான், மேலும் ஒரு விவாதத்தில் வ.களத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் செல்வராஜை நுழைய முடியாது என கூறுவது உச்ச பட்ச அராஜகம்... இவரின் சொந்த வீடு என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ..
அதே போல் இன்னொரு விவாதத்தில் இதே திமுக செல்வராஜை மறைமுகமாக குறிப்பிட்டு (செல்வராஜ் கட்டையன் எனவும் பொதுவாக ஊராரால் அழைக்கப்படுகிறார்) , மிரட்டல் விடுக்கும் தொனியில் பதிவிட்டிருப்பதும் கவனிக்க தக்கது.. இந்த முகநூல் பதிவுகளை கோர்ட்டில் வைத்தே செல்வராஜ் மீதான வங்கொடுமை வழக்கை ரத்து செய்ய வைக்க முடியும். செல்வராஜ் கிட்ட யாராவது சொல்லுங்கப்பு.
இறுதியாக நமக்கு அச்சம் என்ன வென்றால் நாம் ஏதாவது வ.களத்தூர் ஊராட்சி அலுவலகம் சென்று கேள்வி கேட்டால் நம் மீதும் வன்கொடுமை வழக்கு பாயுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது... உங்களுக்குமா...
RSS Feed
Twitter
Tuesday, September 29, 2020
வ.களத்தூர் செய்தி








0 comments:
Post a Comment