Tuesday, 30 September 2014


10.09.2014 துக்ளக் தலையங்கத்தில் இந்த நாடு ஹிந்து நாடு இல்லை என்று ஆணித்தரமாக எழுதி விட்டு இதை ஒப்புக்கொள்ளமுடியாத மாபெரும் குற்றம் என்றும் திரு. சோ அவர்கள் எழுதியுள்ளார். ஹிந்து மஹா சமுத்திரம் என்ற பெயரை பள்ளிப்புத்தகங்களில் இருந்து மாற்ற வேண்டும்  என்று போராடாமல் இருந்தால் சரி. 10.09.2014 தலையங்கத்தில் திரு. சோ அவர்கள்  //இது ஹிந்து நாடு. இங்குள்ள அனைவரும் ஹிந்துக்கள்தான். என்று பாஜகவினர் சிலரும் ஹிந்து அமைப்பினர் பலரும் பிரச்சாரம் செய்யத்தொடங்கி இருக்கின்றனர்.  ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூட இப்படி பேசியிருக்கிறார். இது சற்றும் ஏற்க முடியாத பேச்சு. இங்குள்ள அனைவரும் இந்துக்கள் தான் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வலுவாக திணித்து ’எல்லோருமே ஹிந்துக்கள் என்று பேசுவது சற்றும் ஏற்கக் கூடிய விசயம் அல்ல. ‘அனைவரும் இந்தியர்கள் என்றால் ஒப்புக்கொள்ளலாம்’. //
thuglak4
இப்படிப்பட்ட கருத்தை ஹிந்து மஹா சமுத்திரம் எழுதிய சோ பதிவிடலாமா? ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியன் என்ற சொல்லுக்கும் மொழி வேறுபாட்டை தவிர வேறு என்ன இருக்கிறது.
இந்தியா என்பது ஹிந்து என்ற சொல்லின் மருவு என்கிறது விக்கிபீடியா.
The name India is derived from Indus, which originates from the Old Persian word Hinduš.
http://en.wikipedia.org/wiki/India - retrieved on 28.09.2014
இந்தக்கருத்தை ஆங்கில அகராதியான oxford English dictionary மேற்கோள் காட்டியும் உள்ளது. இந்த முடிவிற்கு oxford English dictionary வருவதற்கான பின்னணி என்ன என்பதைச் சற்றே பார்க்கலாம். இந்தியா என்ற சொல்லின் விளக்கத்தை பதிவிட்ட சிகாகோ பல்கலைகழகத்தின் குறிப்புகளை நாம் சற்று பார்க்கலாம். ”Digital Dictionaries of South Asia” என்ற நூலில் ”A Glossary of Anglo-Indian Words and Phrases” என்ற தலைப்பில் இந்தியா என்ற சொல் பல தரவுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இந்த அகராதி, சிகாகோ பல்கலைகழகம் மற்றும் மத்திய ஆராய்ச்சி நூல்நிலையத்தின் வெளியீடாகும். இந்தியா என்பது United Kingdom, United States போன்ற பல நாடுகளின் தொகுப்பு என்ற பிதற்றல்களும், ஆங்கிலேயன் வருவதற்கு முன்னால் அப்படி ஒரு நாடே இருந்ததில்லை என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் ஊடகங்களில் சில காலமாக வளைய வந்து கொண்டிருக்கிறது. இந்த அரைவேக்காட்டு பிரச்சாரத்திற்கும் பதிலளிக்க திரு. சோ அவர்களின் தலையங்கத்தை பயன்படுத்துவது ஒருவகையில் மகிழ்ச்சிதான். Digital Dictionaries of South Asia, பல தரவுகளிலிருந்து வெளியிட்ட இந்தியா பற்றிய தொகுப்பை இப்போது பார்ப்போம்.
dds logo
//இந்தியா பற்றிய விளக்கங்களின் துல்லியம், சில கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பிரதிபலிப்பதோடு, இப்போது நாடு பற்றி நமக்கு இருக்கும் கருத்தோடு இசைந்து போகிறது; இந்தக் கருத்து தான் Hwen Tsang, இன்னும் பிற சீன யாத்ரீகர்களின் உரைகளில் துலக்கிக் காட்டப் பட்டிருக்கிறது. அசோகர் காலத்திய கல்வெட்டுக்களில் (கி.மு..250) இந்தக் கருத்தை கணிசமாக ஒட்டியபடி இந்திய ராச்சியங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன; கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத்தான தஞ்சாவூர் கல்வெட்டில் தஞ்சை சோழ அரசன் வீர சோழனால் இந்தியாவின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டது (கற்பனையோ நிஜமோ) தெளிவுபடுத்தப்பட்டிருப்பதோடு, அதிலும் இதே முறை தான் பின் பற்றப்பட்டிருக்கிறது. கல்யாணின் சாளுக்கிய வம்சத்தவர், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பட்டயத்தில், ”ஹிமாலயம் முதல் பாலம் வரை” என்ற ஒரு சொற்றொடர் வருகிறது (Ind. Antiq. i. 81) அதாவது ராமரின் பாலம் என்னும் நமது வரைபடங்களில் காணப்படும் Adam's Bridge. இதன் கீழே அதே காலத்தைச் சேர்ந்த முகம்மதிய விளக்கங்களிலும் இந்தப் பெயர் காணப்படும். விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த ஹிந்து அரசர்களின் (14ம் நூற்றாண்டு முதல்) கல்வெட்டுக்களிலும் இந்தியாவை இது போன்ற விளக்கங்கள் மூலம் குறிக்கிறார்கள்.
இந்தப் பெயரின் தோற்றம் சந்தேகமே இல்லாமல் (சமஸ்கிருதம்), சிந்து, ‘கடல்’, அது மேற்கில் இருக்கும் மகத்தான ஆறு, அதன் கரைகளில் இருக்கும் நாடு, இதை இன்றும் கூட நாம் சிந்த் என்றே அழைக்கிறோம். உலகின் பல பாகங்களில் நிலவும் மாற்றம் காரணமாகவும், இந்தியாவிலேயே கூட பல பாகங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், இந்தப் பெயர் இஸ் ஒலியின் இடத்தில் மெய்யொலி இடம் பெறுகிறது அதுவே கடைசியாக பாரசீகத்தில் ஹிந்து என்று ஆகி, கிரேக்கர்களுக்கும், லத்தீன் மொழிக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டு மக்களுக்கு INDOI எனவும், ஆற்றுக்கு INDO/S எனவும், INDIKH/ and INDIA என அதன் கரைகளில் இருக்கும் நாட்டுக்கும் மறுவிப் போனது, மேற்கத்தியர்களுக்கு இந்தப் பெயர் அளிக்கப்பட்டு, நாம் முன்னே கூறிய நாடு பற்றிய ஒட்டு மொத்த கருத்தும் அந்நிய நாட்டவர் வாய்களில் இயல்பாக, ஆனால் காலப் போக்கில் மொத்தமாகவே மாறிப் போனது.//
//கி.மு486இல் , “டேரியஸ் என்ற மன்னன் கூறுகிறான்: Ormazdஇன் கருணையால் நான் பாரசீகம் உட்பட இவை தாம் நான் கைப்பற்றிய நாடுகள். நான் என் அதிகாரத்தை அவற்றின் மீது நிறுவி இருக்கிறேன். அவர்கள் எனக்கு கப்பம் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூறியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் சட்டத்துக்கு கீழ்படிகிறார்கள். Medea.... Arachotia (Harauvatish), Sattagydia (Thatagush), Gandaria (Gadaara), India (Hindush)... " - Nakhsh-i-Rustamஇல் உள்ள Dariusஇன் கல்லறையில், Rawlinson's Herod, iv. 250 பார்க்கவும்.
இந்தியா என்ற நிலப்பரப்பை ஒரே நாடாக எப்படி உலகம் தொன்றுதொட்டே கருதி வந்ததோ அது போலவே தென்னகத்துச் சோழனும் வடநாட்டு அசோகனும் மத்திய இந்தியாவின் சாளுக்கியனும் பார்த்துவந்ததை இந்த நூல் மேற்கோள் காட்டியுள்ளது. வெளிநாட்டவன் வைத்த பெயர் இந்தியா என்று கொக்கரிக்கும் தமிழ் வியாபாரிகள் வீர சோழனை வந்தேரி என்று திட்டாமல் விட்டால் சரி தான். பெளத்தமே கதி என்று சொல்லி அடிப்படை பெளத்தம் தெரியாமல் ஹிந்துக்களை மதமாற அழைக்கும் பகுத்தறிவுவாதிகள், உலகத்திலேயே முதன்முறையாக அரசு எந்திரத்தை பயன்படுத்தி மதம்மாற்றம் செய்த ’பெளத்த’ மன்னன் அசோகனின் ஆதாரத்தையாவது நம்புவார்களா?
Ashoka
இந்த நிலப்பரப்பின் பெயர் ஹிந்து என்ற சொல்லின் அடிப்படையாக கொண்டது என்பதை நிறுவியுள்ளது Digital Dictionaries of South Asia. இதன் அடிப்படையில் இந்த நிலப்பரப்பில் வசிப்பவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் என்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இந்த India, Hindu என்ற சொல்லாட்சி எந்தெந்த காலங்களில் எப்படி யாரால் பயன்படுத்தபட்டது என்பதை Digital Dictionaries of South Asia தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது.
//கி.மு486இல் , “டேரியஸ் என்ற மன்னன் கூறுகிறான்: Ormazdஇன் கருணையால் நான் பாரசீகம் உட்பட இவை தாம் நான் கைப்பற்றிய நாடுகள். நான் என் அதிகாரத்தை அவற்றின் மீது நிறுவி இருக்கிறேன். அவர்கள் எனக்கு கப்பம் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூறியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் சட்டத்துக்கு கீழ்படிகிறார்கள். Medea.... Arachotia (Harauvatish), Sattagydia (Thatagush), Gandaria (Gadaara), India (Hindush)... " - Nakhsh-i-Rustamஇல் உள்ள Dariusஇன் கல்லறையில், Rawlinson's Herod, iv. 250 பார்க்கவும்.//
இதில் ‘Hindush’ என்று தான் இந்தியா அழைக்கப்பட்டுள்ளது. ஆக, ஹிந்துஸ்தான் என்பது இந்த நாட்டின் பெயர் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 486 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. இங்கு கூட நம்மவர்கள் கிரேக்க மன்னனுக்கு கப்பம் செலுத்திய செய்தி பதிவாகியுள்ளது. அந்த அடிமைத்தனத்தின் விளைவோ என்னவோ பிற்கால கிறிஸ்தவ மிஷனரிகளிடம் அடிமைப்பட்டு கிடக்கும் சிந்தனாவாதிகளால், இந்தியா ஒரே நாடு இல்லை என்றும் ஆங்கிலேயன் வந்த பிறகே இது ஒரு நாடானது என்ற கருத்து மேலோங்கியுள்ளது போலும்!.
கி.மு.440 ல் சிந்து நதி முதல் கடல் வரை இருக்கும் அனைவரும் இந்தியர்கள் அவர்கள் உதயசூரியனுக்கு மிகவும் நெருக்கமாக வசிக்கிறார்கள் என்ற குறிப்பு உள்ளது. இதைப் படித்து விட்டு தான் அண்ணா அமெரிக்கா சென்று அமெரிக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழனின் சின்னம் உதயசூரியன் என்று அறிவித்தார் என்று கழகக் கண்மனிகள் முழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரே ஒரு சிக்கல் அது சிந்து முதல் குமரி வரை என்று உள்ளது. சிந்துவுக்கு கூட புது விளக்கங்கள் உதயசூரியன் மண்ணில் உதயமாகலாம். இதோ அந்த கிமு 440 ஆண்டின் மேற்கோள்.
//கி.மு.. 440 - “இந்தியாவுக்கு கிழக்கே முழுமையாக மணலாக ஒரு பிரதேசம் விளங்குகிறது. ஆசியாவில் வசிக்கும் அனைத்து பேர்களிலும், அவர்களைப் பற்றித் தெரிந்த வரையில், இந்தியர்கள் தாம் கிழக்குக்கும், உதயசூரியனுக்கும் மிக நெருக்கமாக வசிக்கிறார்கள்.” Herodotus, iii. c. 98 (Rawlinson) //
இந்தியாவின் வரைபடத்தையே கிமு300ல் தத்ரூபமாக விளக்குகிறார் கிரேக்க பயணியும் புவியியலாளருமான மெகஸ்தனிஸ்.
//கி.மு. 300 - இந்தியா அப்போது (H (TOI/NUN*) INDIKH\) வரைபடத்தில் நான்கு பக்கம் கொண்டதாக இருக்கிறது, கிழக்கு நோக்கி ஒன்றும், தெற்கு நோக்கி ஒன்றும், பெரிய கடல் அதைச் சூழ்ந்தும்; வட துருவத்தை நோக்கிய பகுதி Hēmōdus என்ற மலைச் சங்கிலியால் Scythia முதல் பிரிக்கப் பட்டிருக்கிறது, அங்கே Sakai என்று அழைக்கப்படும் Scythianகள் பூர்வகுடிகள் வசிக்கிறார்கள்; நான்காவது பக்கமான மேற்கு நோக்கிய முகத்தில், இண்டஸ் எல்லைக்கோடாக இருக்கிறது, இது தான் நீல நதிக்குப் பிறகு மிகப் பெரிய அல்லது அனைத்து நதிகளிலும் பெரியதாக இருக்கிறது.” - Megasthenes in Diodorus, ii. 35. (ம்யூலரின் Fragm. His. Graec., ii. 402)//
 indimapl
இங்கு 'indikh' என்ற சொல் ஆளப்படுகிறது. இங்கிலாந்து என்ற நாடு உருவாவதற்கு பல் நூற்றாண்டுகள் முன்பே எல்லை வரையருக்கப்பட்டது மட்டுமின்றி இந்தியா என்ற பெயரும் பயன்பாட்டில் உள்ளதையாவது, ஆங்கிலேயன் வந்தபின் இந்தியா உருவானது என்று கொக்கரிக்கும் கூட்டங்கள் ஒப்புக்கொள்வார்களா? அல்லது போலி இனவாதம் பேசுவார்களா?
கி.பி. 590ல் இந்தியாவின் விஸ்தீரணத்தை அதைப் பயணித்துக் கடக்கும் நேரத்தைக்கொண்டு விளக்கும் பயணக்குறிப்பை Digital Dictionaries of South Asia கீழ்கண்டவாறு விளக்குகிறது.
//c. 590 - ஹிந்த் நிலத்தைப் பொறுத்த மட்டில் இது கிழக்கே பாரசீக கடலாலும், (அதாவது இந்தையக் கடல்) மேற்க்கிலும், தெற்கிலும், இஸ்லாத்தின் நாடுகளாலும், வடக்கே சீனப் பேரரசாலும் சூழப்பட்டிருக்கிறது..... இந்த ஹிந்த் நிலத்தின் நீளம் Mokraan நாட்டு அரசிலிருந்து, Mansoora நாடு, Bodha, சிந்த் முழுக்கவிருந்தும் Kannuj வரை நீண்டும், பிறகு Tobbat (TIBET) வரையும், சுமார் 4 மாதங்கள், அதன் அகலம் இந்தியக் கடலிலிருந்து Kannuj நாடு வரை சுமார் 3 மாதங்கள்”: Istakhri, pp.6ம் 11ம்.//
பன்நெடுங்காலமாகத் தொடர்ந்த அன்னியப் படையெடுப்புகளால் இந்தியாவின் பெயர் விளக்கம் பல சிக்கல்களை சந்திக்க தொடங்கியது. இந்தியாவை இந்து என்று அழைக்கவேண்டும் என்று ஹுவான் சுவாங் சொன்னதை மேற்கோள் காட்டுகிறது Digital Dictionaries of South Asia.
//c.650. - "Tien-chu (இந்தியா) என்ற பெயர் பல்வேறு, குழம்பிய நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது......... பண்டைய காலங்களில் அவர்கள் Shin-tu என்று அழைத்தார்கள் ஆனால் சில எழுத்தாளர்களோ, இதை Hien-teou என்று அழைத்தார்கள். இதன் உண்மையான உச்சரிப்பின் படி பார்த்தால் இதை In-tu என்று தான் சொல்ல வேண்டும்” - Pèl, Bouddh, i i, 57ல் ஹுவான் சுவாங்.//
இந்து என்ற பெயரைக்கேட்டவுடன் ஆரியம், வெள்ளையனின் கண்டுபிடிப்பு என்றெல்லாம் ஓலமிடுபவர்கள் அவர்கள் சிந்தனைகளை செதுக்கும் சீனா நாட்டின் பயணியின் குறிப்பை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டில் உள்ளவர்கள் ஹிந்துக்கள் என்று ஒப்புக்கொள்வார்களா?
சீனர்களும், கிரேக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த நாட்டின் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் வாங்காதவர்கள் அதனால் அவர்கள் இந்து சார்பு நிலையை எடுப்பவர்களாகத்தான் இருப்பார்கள் இந்த நாடுகளில் சகோதரத்துவம் சமத்துவம் கிடையாது. ஆகவே, சகோதரதுவத்தையும், அமைதியையும் உலகுக்கு கொடுத்த இஸ்லாமியர் சொன்னால் நம் நாட்டு அறிவுஜீவிகள் பொதுவாக ஒத்துக்கொள்வார்கள் சில சமயங்களில் ஒசாமா பின்லேடனுக்கு எதிராக அப்துல் கலாம் கருத்து தெரிவித்தால் கலாமை கலகம் என்று முத்திரை குத்தும் பழக்கமும் உண்டு. என்ன தான் நிலைக்கெட்ட மனிதர்களாக இருந்தாலும், பாரசீக முஸ்லீமான அபு அல்-ரைஹான் முகமது இபின் அகமது அல்-பிருனியின் 11ம் நூற்றாண்டு குறிப்பிற்கு தடைவிதிக்கக் கோரி மெளண்ட்ரோட்டுக்கு மூடுவிழா நடத்தினாலும் நடத்துவார்கள்! எப்படி இந்த நாட்டை அவர் வருணிக்கிறார் என்று பாருங்கள்.
Biruni-russian
// c. 1020. - ”இந்தியா (அல்-ஹிந்த்) என்ற ஒரு சமவெளி, தெற்கிலே இந்தியர்கள் கடலால் சூழப் பட்டிருக்கிறது. வானளாவிய மலைகள் அதன் மற்ற இடங்களை சூழ்ந்திருக்கிறது. இந்த சமவெளி வழியாக மலைகளிலிருந்து பெருகி வரும் நீர்கள் வெளியேறுகின்றன. மேலும் இந்த நாட்டை உங்கள் கண்களா நீங்கள் ஆராய்ந்தால், இங்கே உருண்டையான, தேய்ந்து போன கற்கள் இருப்பதை இதன் மண்ணில் காணலாம், ஆனால் நீங்கள் மலைகள் அருகே, ஆறுகள் வலிமையோடு கீழே பெருகி வரும் இடங்களில் தோண்டிப் பார்க்கலாம், அங்கே கற்கள் பெரியவையாக இருக்கின்றன; ஆனால் மலைகளிலிருந்து சற்றுத் தள்ளி நீரோட்டம் சற்று மட்டுப் பட்டிருக்கும் இடங்களில் சிறியவையாக இருக்கின்றன; நீரோட்டம் சலனமில்லாமல் இருக்கும் இடங்களில் மணல் நிரம்பிக் கிடக்கிறது, அங்கே நீர்கள் நிலத்தில் ஊறுவதைப் பார்க்க முடியும், கடல் இருக்கும் இட்த்தில், இந்த இடமே ஒரு காலத்தில் கடலில் இருந்திருக்கலாம் என்றும் நீரோட்டங்கள் கொண்டு வந்த மணல், கற்கள் மூலமே இது உருவாகியிருக்க கூடும் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது...... “ அல் பிரூனியின் Reinaud's Extracts, பத்திரிக்கை. As. ser. 4. 1844.//
அன்பு மணக்குது அருள் சுரக்குது அரபு நாட்டிலே என்று பாட்டு எழுதும் தமிழ் கவிஞர் பாரசீக அல்பரூனியை படித்திருந்தால் தெளிவு பெற்றிருந்திருப்பார். பாரசீகத்தில் இவர்கள் கண்ணில் தென்படுவது திருடர், கொள்ளையர் போன்ற குறிப்புகள் தானே. நீ எதுவாக இருக்கிறாயோ அதுபோல்வே தான் உனக்கு பார்ப்பதெல்லாம் தோன்றும் என்ற முதுமொழியை இப்போது நன்றாக புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு இஸ்லாமியர் இந்திய நிலப்பரப்பை மெகஸ்தனீஸ் போல் 13ம் நூற்றாண்டில் விவரிக்கிறார்.
//1205. - "இந்த மொத்த நாடான ஹிந்தும், Pershaur முதல் கடலின் கரைகள் வரையும், மற்ற திசையில், Siwistan முதல் Chin மலைகள் வரை.........” - Hasan Nizaami, in Elliot, ii. 236. அதாவது, வடக்கே பெஷாவர் தொடங்கி, தெற்கே இந்தியப் பெருங்கடல் வரையும்; Sehwan (இண்டஸ் நதியின் மேற்குக் கரையில்) தொடங்கி சீனாவை கிழக்கே பிரிக்கும் மலைகள் வரை.//
வாஸ்கோடகாமா ஒரு ரோமானியராக இருந்திருந்தால் தன் பெயருடன் இந்தியாவை சேர்த்திருப்பார் என்கிறது 16ம் நூற்றாண்டு குறிப்பு.
vasgodagama
//1533. - "வாஸ்கோடகாமா ரோமானியர்களைப் போன்ற மகோன்னதமான நாட்டைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், அவர் தனது குடும்ப பாணிக்கு அழகு சேர்த்திருப்பார், அதாவது Of India என்ற அடைமொழியை தன்னோடு சேர்ப்பதன் மூலமாக. ஏனென்றால், இத்தகைய கௌரவ சின்னங்கள் ஒருவருக்கு வம்ச வழியாக கிடைக்கும் சின்ன்ங்களை விட பெருமை சேர்ப்பதாக இருக்கும், ஆனால் Scipio தான் ஆப்பிரிக்காவைக் கண்டுபிடித்த அடையாளமாக Africanus என்று தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டார், கார்னீலியஸ் என்ற தன் குடும்பப் பெயரை சூட்டிக் கொள்வதால் அல்ல.//
கிறிஸ்து பிறப்பதற்கு 450 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம் நாட்டில் காலனி படையெடுப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படும் வரை இமயம் முதல் குமரி வரையிலான நிலப்பரப்பு இந்தியா, ஹிந்த் என்றும் இங்குள்ளவர்களை இந்தியர்கள் ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட்டு வந்ததை இந்தக்குறிப்புகள் உறுதி செய்கின்றன.

மேற்கூறப்பட்ட அனைத்து தரவுகளையும் தொகுத்தளித்த ‘Digital Dictionaries of South Asia’வின் லிங்க் இதோ:
இந்தியாவை ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் 'East India Company' என்ற பெயரையே தாங்கி நின்றன.
1600 -  English East India Company (இங்கிலாந்து)
1602 - Dutch East India Company (நெதர்லாந்து)
1628 - Portuguese East India Company (போர்ச்சுகல்)
1664 - French East India Company (பிரெஞ்சு)
இதில் வேடிக்கை என்னவென்றால் போர்ச்சிகீஸ் கிழக்கிந்திய கம்பெனியின் சின்னத்தில்(logo) நம் தென்னிந்திய கோவில் இடம் பெற்றிருக்கிறது போர்ச்சிகீசியர் இந்த நாட்டிற்குள் படையெடுத்து வரும் போது இங்கு ஹிந்துக்கள் முஸ்லீம்கள் பெளத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர். ஆனால் போர்ச்சுகீசியரோ ஹிந்து ஆலயத்தை மட்டும் சின்னத்தில் இடம்பெறச்செய்ததது இந்த நாட்டில் வழிபாட்டு முறைகள் வேறாக இருந்தாலும் பண்பாட்டில் அனைவரும் ஹிந்துக்கள் என்பதை உணர்த்துகிறது.
 portuguese east india company logo
தமிழ்நாட்டு அரசின் கோபுரசின்னமும் இதே கருத்தை பிரதிபலிக்கிறது. இந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் தெரிந்து ஹிந்து என்பது இந்த தேசமும் அதன் குடிகளும் என்று உரக்க முழங்கியவர் நாயக்கர் ராமசாமி.
//பொதுவாகச் சொல்லப்பட வேண்டுமானால் இந்து என்பது இந்தியனைத் தான் குறிக்கும். அரபிக்காரனை ஒரு அரப் என்பது போல், இந்தியனை வட மொழியில் இந்து என்று ஆதியில் அழைக்கப்பட்டது என்பது தான் என் அபிப்ராயம்//
- (குடி அரசு, டாக்டர் பி.வரதராசலு நாயுடு கட்டுரைக்கு விடை, 8.9.1940)- பெரியார் ஈ.வே.ரா.சிந்தனைகள், வே.ஆனைமுத்து அவர்கள் புத்தகத்தின் 348 ஆம் பக்கத்தில் இந்த மேற்கோள் இடம்பெற்றுள்ளது.
 ஹிந்துக்களை அனுதினமும் அவதூறாக பேசிவந்த நாயக்கர் இராமசாமிக்கு தெரிந்த இந்த உண்மை ஹிந்து மஹா சமுத்திரம் எழுதிய ஐயர் இராமசாமிக்கு தெரியாமல் போனது ஏனோ?



       சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் அதிமுகவினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஊர்வலத்தில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சுப்ரமணிய சுவாமி யைக்கண்டித்து முழக்கமிட்டனர். பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினரின் பேரணியால் முக்கிய சாலைகளில் கடைகள் மூடிக்கிடந்தன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பட உதவி : வசந்த ஜீவா.

Monday, 29 September 2014


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன். வழக்கை சட்டப்படி நடத்துங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு தொலைபேசி மூலம் சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்புப் பேட்டி:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சரியானது என்று நினைக்கிறீர்களா?
இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மை யான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது.
இந்த வழக்குக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எப்படிப்பட்டவை?
இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆதாரங்களை திரட்டுவதுதான் எனக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்பதால் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதே மிகப்பெரிய போராட்டம் என்று சொல்லலாம். நிறைய பிரஷர்கள், சமரச முயற்சிகள் எல்லாம் நடந்தன. ஆனாலும், வழக்கை வாபஸ் பெறுவது என்ற நிலைக்கு செல்லவே இல்லை.
தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?
உடல்நலத்தை காரணம் காட்டி அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். இதன்பேரில் ‘அவர் சிறையில் இருக்கக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட வேண்டும்’ என்றுகூட தீர்ப்புகள் வரலாம். ஆனால், மேல்முறையீட்டில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு சாதாரணமாக கிடைத்துவிடக் கூடாது.
இந்த வழக்கின் தீர்ப்பு, அதிமுக என்னும் பேரியக்கத்தின் ஸ்திரத்தன்மையை அசைத்துள்ளதாக கருதுகிறீர்களா?
அப்படியில்லை. இந்தியா ஜனநாயக நாடு. தற்போது நாட்டில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. ஆரம்பத்தில் நான்கூட, இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு மோடி ஏதாவது உதவி செய்வாரோ என்று நினைத்தேன். ஆனால், ‘வழக்கில் நான் தலையிட மாட்டேன். எல்லாம் சட்டப்படி நடக்கட்டும்’ என்று அவரே என்னிடம் கூறினார். இனி ஊழல் செய்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.
தமிழகத்தில் உங்களுக்கு எதிரான சூழல் அதிகரித்து வருகிறதே?
தமிழகத்தின் சில இடங்களில் சமூக விரோதிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசினேன். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறினேன். அரசியலமைப்புச் சட்டத்தின் 256-வது ஷரத்தின்கீழ் தமிழக ஆளுநருக்கு உள்துறை அமைச்சர் சில ஆலோசனைகளை அனுப்பியுள்ளார். அதன் அடிப் படையில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த ஆளுநர் உத்தர விட்டுள்ளார். இப்போது தமிழகத்தில் அமைதியான சூழல் உருவாகியுள்ளது.
2ஜி வழக்கு தீர்ப்பு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பைப் போலவே 2ஜி வழக்கிலும் ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை சேர்க்க மறுத்தது. வலுவான ஆதரத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்ப முடியாது.
சோனியா, ராகுல் மீதான ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் உங்களின் அடுத்தகட்ட செயல்பாடு என்ன?
இந்த வழக்கு குறித்த என்னுடைய வாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் 1-ம் தேதி நடக்கவுள்ளது. அப்போது தகுந்த ஆதாரங்களை எடுத்து வைப்பேன். தீபாவளி முடிந்து டிசம்பரில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார். 

-தி இந்து.


தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. அமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


 கண்ணீர் மல்க பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
கண்ணீர் மல்க பதவியேற்பு
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.
பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர். 

 
பதவியேற்பின்போது கண்ணீர்விட்ட அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தபோதே தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவராகத் தேம்பித் தேம்பி அழுதபடி இருந்தார் பா.வளர்மதி.
அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் பதவியேற்றபோது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர். பா.வளர்மதி அமைச்சராக பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுதார். 



கண்ணீருடன் பதவியேற்ற வளர்மதி, கோகுல இந்திரா. | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
2-வது முறையாக முதல்வரானார்:
டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார்.
அதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
முதல்வர் பொறுப்பேற்றார்:
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சந்தித்தார்.
பெங்களூர் விரைவு:
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அங்கு கையெழுத்திட்ட பின்னர் மாலை 4.45 மணிக்கு பெங்களூர் விரைந்தார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் விரைந்தனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது. 

-தி இந்து.

Sunday, 28 September 2014



 சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு, கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஈடுபட்ட ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதன் எதிரொலியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான தனியார் பேருந்துகள் மற்றும் கார் வேன், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் சனிக்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டன. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், மாலை 3 மணியிலிருந்து அரசுப் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சாலைகளில் ஆங்காங்கே இறக்கிவிடப்பட்டனர். இதில், அருகிலுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் நடந்தே சென்றனர்.

திருச்சி, துறையூர், ஆத்தூர், சேலம், கடலூர் உள்ளிட்ட வழித்தடங்களை சேர்ந்த பயணிகள் தங்களது பகுதிக்கு செல்ல முடியாமல், குழந்தைகளுடன் பேருந்து நிலையத்திலேயே காத்து கிடந்தனர்.

மேலும் தேநீரகம், உணவகம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். வெளியூரிலிருந்து வந்த, பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் பயணித்த பயணிகள் துறைமங்கலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்திலேயே இறக்கிவிடப்பட்டனர். அப்பகுதியிலும் செயல்பட்டு வந்த கடைகளும் மூடப்பட்டிருந்ததால் பயணிகளும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாகினர்.

இதையறிந்த, அங்குள்ள அரசு குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து சமைத்து அரசு போக்குவரத்து அலுவலக வளாகத்துக்கு வெளியே காத்திருந்த பயணிகளுக்கும், குழந்தைகளுக்கும் இலவசமாக உணவு வழங்கினர்.
ஜெயலலிதா குற்றவாளி என்ற அறிவிப்பு வெளியானவுடன் அ.தி.மு.க.வினர் கருணாநிதி உருவ பொம்மை எறித்து கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
 அங்கிருந்த 50 அடி உயர திமுக கொடி கம்ப த்தை வெட்டி சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து பெரம்பலூரில் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பஸ் நிலையத்தில் குவிந்திருந்த அதிமுகவினர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு, பலக்கரை அருகே உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
 பெரம்பலூரில்



அதிமுகவினர் அழிச்சாட்டியத்தின் காரணமாக  2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடைகள் அடைக்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வியாபாரிகள் அதிமுகவினரின் போராட்டத்துக்கு பயந்து பெரம்பலூரில் உள்ள உணவகங்கள், மருந்துக் கடைகள், பெட்டிக் கடைகள், தேனீரகங்கள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், மினி பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் நடமாட்டமின்றி பெரம்பலூர் நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் நகரின் பிரதான பகுதிகளான பாலக்கரை, பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள், காமராஜர் வளைவு, கடைவீதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஓ.பன்னீர் செல்வம் அடுத்த முதல்வராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக ஆளுநர் ரோசையாவைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் ரோசையாவிடம் தெரிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

இதற்கு முன்பு 2001ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வர் பதவியில் இருந்தார்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்ததால் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் அல்லது ஷீலா பாலகிருஷ்ணன் ஆகலாம் என்று யூகங்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமே மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.

-தி இந்து.

Saturday, 27 September 2014


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்து என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. வாசகர்கள் கேள்வி எழுப்ப தி இந்து (ஆங்கிலம்) இதழின் கே.வெங்கடராமன் பதில் அளித்துள்ளார்.

மேல்முறையீடு செய்யலாமா? அல்லது இதோடு அனைத்தும் முடிந்ததா?

அவர் மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றமே.

அடுத்த முதல்வர் யார்?

இதனை யார் வேண்டுமானாலும் ஊகிக்கலாம். இதே போன்ற ஒரு சூழலில் முன்பு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். இப்போது விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயர் பட்டியலில் முதலில் இருக்கிறது.

ஜெயலலிதா உடனடியாக காவலில் வைக்கப்படுவாரா?

தண்டனை 3 ஆண்டுகள் வரை கிடைத்தால், தீர்ப்பளித்த நீதிமன்றமே குற்றவாளி மேல்முறையீடு செய்வதை அனுமதிக்கும் விதமாக சிறையில் தள்ளப்படுவதை சற்றே ஒத்திவைக்க வாய்ப்புண்டு. ஆனாலும் இது நீதிமன்றத்தின் முழு விருப்பம் சார்ந்ததே. 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்படுமெனில் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஜாமீன் அளிக்கும் அதிகாரம் கிடையாது. குற்றவாளி உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். இப்படியொரு நிலை ஏற்பட்டால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படலாம்?

சட்டப்படி ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெறலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் குற்றவாளிகள் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யாக இருக்கத் தடை விதிக்கிறது. ஆனால் முதல்வர்/பிரதமர்/அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்படும் சட்டப்பிரிவு எது? ஜெயலலிதா எம்.எல்.ஏ.பதவியை இழந்தாலும் முதல்வராகத் தொடர வாய்ப்பிருக்கிறதா?

1951, மக்கள் பிரதிநித்துவச் சட்டம், எந்த ஒருவரையும் முதல்வர்/பிரதமர்/அமைச்சர் ஆவதை தடை செய்யவில்லை. இது அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவாகும். ஒருவர் எம்.எல்.ஏ. ஆக இல்லை என்றால் கூட 6 மாதங்களுக்கு முதல்வராகலாம். இப்படியிருந்தாலும், 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதிலும் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரது பதவியை தகுதி இழப்பு செய்தது. தற்போது தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தே தகுதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சொத்துக்கள் என்ன செய்யப்படும்?

வருவாய்க்கு அதிகமாகக் குவிக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை ஏலம் விடலாம். ஆனால் இதற்கெல்லாம் நீண்டகாலமாகும். காரணம் மேல்முறையீடு என்ற நடைமுறையெல்லாம் இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை என்ன ஆகும்?

சட்டப் பேரவை தொந்தரவு செய்யப்படமாட்டாது.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா?

தகுதி இழப்பு ஏற்பட்டது தொடர்ந்தால் அவரால் போட்டியிட முடியாது. இந்தத் தீர்ப்பு மேல்முறையீட்டில் மாற்றப்பட்டாலோ அல்லது குற்றவாளி என்ற தீர்ப்பு இடைநீக்கம் செய்யப்பட்டாலோ அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம்.

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு என்ற போதிலும் தற்போதைய அமைச்சர்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?

அமைச்சரவை என்பது முதல்வரின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்படுவது. இப்போது அவர் முதல்வர் இல்லை. முதல்வர் இல்லாத அமைச்சரவை கிடையாது. ஆகவே அடுத்த முதல்வர் ஆளுநரிடம் அமைச்சர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.

சிறைத்தண்டனை என்றால் அவர் எந்த மாநில சிறையில் அடைக்கப்படுவார்?

இப்போதைக்கு கர்நாடகா. ஆனால் தமிழகச் சிறைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை வைக்க உரிமை உண்டு.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்து தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியுமா?

மாநில அளவில் நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவர 18 ஆண்டுகள் ஏன்?

2000ஆம் ஆண்டிலேயே விசாரணை முடிவடையும் நிலையை எட்டியது. ஆனால் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்த பிறகு அனைத்து சாட்சிகளும் தங்கள் வாக்குமூலங்களை மாற்ற வைத்தது. இதனையடுத்த் உச்ச நீதிமன்றத் தலையீட்டின் பேரில் கர்நாடகாவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அங்கு இந்த வழக்கு மீண்டும் புதிதாகத் தொடங்கியது. பல மனுக்கள், ஏகப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் மாற்றங்கள் ஆகியவற்றால் காலதாமதம் ஆனது. 

-தி இந்து.
சேலத்தில் பஸ் உடைப்பு.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.

ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அதிமுக-வினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

சிறிய அளவில் உள்ள காவலர்களும் அதிமுக-வினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அங்கும் போலீஸ் வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கிறது.

மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலு பதற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு வரும் வோல்வோ பேருந்துகளை ரத்து செய்துள்ளது. 

-தி இந்து.

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக, அவர் ஜாமீனில் வெளிவர முடியாது என்பதால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சில மணி நேரத்துக்குப் பின்னர், பிற்பகலில் ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட்டார்.
மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக, நீதிமன்றம் அறிவித்தது. .

முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் 'தி இந்து'விடன் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.
அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு பின்னணி:
கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. வழக்கு
குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.
இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.
எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.
எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.
எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதம்:
ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார். 

-தி இந்து.
பெங்களூர்: கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு தீர்ப்பினை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி நீதிபதியாக உயர்ந்தது வரை நேர்மையானவராகவே இருந்து வந்துள்ள நீதிபதி குன்ஹா அளித்துள்ள தீர்ப்புக்கள் சரியானதாகவே இருந்துள்ளதாம்.
 6 நீதிமன்றங்கள்
 1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது.

90 நீதிபதிகள் விசாரணை
சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை ஏராளமான நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துனர். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் கடும் உழைப்பும், அசராத அணுகுமுறையுமே முக்கிய காரணம்.

வழக்கறிஞர் டூ நீதிபதி
மங்களுர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய நீதிபதி குன்ஹா 2002ல் நீதிபதி தேர்வு எழுதி பெல்காம் மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார். உமாபாரதிக்கு எதிராக 1994ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றியதனால் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உமாபாரதி மீது கலவரத்தை தூண்டுதல், கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது.  2002ஆம் ஆண்டு இந்த வழக்கினை திரும்ப பெற அப்போதய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு மாவட்ட நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. ஆனால் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உமாபாரதி எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஹூப்ளி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.குன்ஹா, நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து ஹூப்ளி நீதிமன்றத்தில் உமாபாரதி சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் குன்ஹா. லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அதன் பிறகு ஹார்வா மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின், பெங்களூரு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அங்கிருந்து பெங்களூரு புறநகர் கோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார்.
ஊழலுக்கு எதிரானவர்
ஊழலுக்கு எதிராக செயல்படுபவர் என்று பெயரெடுத்தவர். அதனால்தான் இவரை கர்நாடக அரசு விஜிலென்ஸ் துறையில் பதிவாளராக நியமித்தது. இந்த வழக்கை விசாரிக்க குன்ஹாதான் சரியான நபராக இருப்பார் என்று கர்நாடக அரசே இவரைப் பரிந்துரைத்தது.
 14 வது நீதிபதி குன்ஹா
 1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
11 மாதங்களில் தீர்ப்பு
பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும்தான் காரணம்.

கண்டிப்பான நீதிபதி
மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக்களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக்கறிஞருக்கும் அபராதம் விதித்த கண்டிப்பான நீதிபதி இவர்.
 18 மணிநேர வேலை
 டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார். தீர்ப்புக்கு ஆயத்தம் அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப் பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரிக்கின்றனர்.
 இரவு வரை பணி
 காலை 8.18 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குன்ஹா மாலை 7.30 மணி வரை பணியில் மூழ்கினார்.இன்று வழங்கவிருக்கும் தீர்ப்பின் பக்கங்களுக்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதுவும் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார். திருத்த முடியாத தீர்ப்புக்கள் நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Read more at: http://tamil.oneindia.in/news/india/jayalalithaa-s-asset-case-judge-michael-d-cunha-211814.html

Friday, 26 September 2014

Annamalaiyar-Sothu-Kaappaatrappadumaa---1
புகழ்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகத்தில் நிறைய சொத்துக்கள் உள்ளன. அவற்றில் சென்னை அடையாறு பகுதியில் ஆயிரக்கணக்கான சதுர அடிகள் நிலம் உள்ளது. இந்த நிலங்களும் மனைகளும் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பாளர்களின் பயனில் இருக்கின்றன. இந்த நிலங்களுக்கும் மனைகளுக்கும் சந்தை நிலவரப்படி வாடகைப் பணம் தீர்மானித்திருந்தால் கடந்த பலவருடங்களாக கோடிக்கணக்கான ரூபாய்கள் கோவிலுக்கு வருமானமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அறநிலையத்துறை மிகக் குறைவான கட்டணமே நிர்ணயித்து அதை “நியாய வாடகை” என்றும் பெயரிட்டுள்ளனர். சொத்துக்களின் பயனாளர்கள் கோவிலுக்குத் தரவேண்டிய நியாய வாடகையையும் பலவருடங்களாகத் தராமல் இருக்கின்றனர். பலர் தங்கள் வசம் உள்ள மனைகளை உள்வாடகைக்கு விட்டுப் பெரும்பணம் சம்பாதிக்கின்றனர்.
அறநிலையத்துறையின் விளம்பரம்
இந்நிலையில், அறநிலையத்துறை தினத்தந்தி நாளிதழில் செப்டம்பர் 14-ம் தேதியன்று பின்வருமாறு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது:

“அடையாறு ஊருர் கிராமத்தில் அமைந்துள்ள பழைய சர்வே எண் 41-ல் கீழ்காணும் விவரப்படியான சொத்துக்களில் கீழ்வரும் நபர்கள் வாடகைதாரர்களாக அனுபவித்து வருகிறார்கள். திருக்கோயில் அனுமதியின்றி வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை தங்கள் விருப்பம் போல் கட்டிக்கொண்டு மாதம் ஒன்றுக்கு பல இலட்சக்கணக்கான ரூபாய் உள்வாடகைக்கு விட்டு சட்ட விரோதமாக இலாபம் சம்பாதித்து வருகிறார்கள். அரசு நியாய வாடகை நிர்ணயம் செய்தபடி திருக்கோயிலுக்குச் செலுத்தவேண்டிய வாடகையை செலுத்தாமல் ‘அக்னி சொரூபமான அண்ணாமலையாரை’ ஏமாற்றி வருகிறார்கள். கீழ்வரும் திருக்கோயில் கேட்பு, வசூல், நிலுவை பதிவேட்டில் இடம்பெற்றுள்ள வாடகைதாரர்கள் தங்கள் நிலுவை வாடகையை இந்த அறிவிப்பு கண்ட 7 தினங்களுக்குள் செலுத்த அறிவிக்கப்படுகிறது. தவறினால் வாடகைதாரர்களின் வாடகை உரிமம் மறு அறிவிப்பின்றி ரத்து செய்ததாகக் கருதப்படும். இந்து சமய அறநிலைய சட்டம் 1959 சட்டப்பிரிவு 78-ன் கீழ் வாடகை செலுத்தாதவர்கள் ஆக்கிரமிப்பாளராகக் கருதப்பட்டு சுவாதீனத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது இதன் மூலம் இறுதியாக அறிவிக்கப்படுகிறது” என்று கூறி, 88 நபர்களின் பெயர்கள், மற்ற விவரங்களுடன் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது அறநிலையத்துறை. இந்த விளம்பரத்திற்கு “சிவன் சொத்து குல நாசம்” என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
Annamalaiyar Sothu Kaappaatrappadumaa - 2
இந்த விளம்பரத்தின்படி, அறநிலையத்துறைக்கு வரவேண்டிய பணம் ரூ.5,25,31,906/-. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் இரண்டாவது பட்டியலையும் தினத்தந்தி நாளிதழில் வெளியிட்டுள்ளது அறநிலையத்துறை. அதன்படி நிலுவையில் உள்ள தொகை ரூ.8,92,65,344/-. ஆக மொத்தம் அண்ணாமலையாரின் அடையாறு பகுதி சொத்துக்களின் பயனீட்டாளர்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டிய பணம் ரூபாய் பதினாலு கோடியே, பதினேழு லக்ஷத்து, தொண்ணூற்று ஆயிரத்து இருநூற்றி ஐம்பது (ரூ.14,17,97,250) ஆகும்.
மேலோட்டமாகப் பார்க்கையில் அறநிலையத்துறை வாடகை பாக்கியை வசூலிப்பதில் தீவிரமான நடவடிக்கை எடுத்துள்ளது போலத் தோன்றினாலும், அறநிலையத்துறையின் கடந்தகால நிர்வாக லட்சணத்தை நோக்கும்போதும், எந்த அளவுக்குத் தீவிரமாக இந்த நடவடிக்கையில் இறங்குவார்கள் என்பதை யோசிக்கும்போதும், நமக்குத் துறையின் மீது நம்பிக்கை எழவில்லை. நம் மனதில் எழும் நம்பிக்கையின்மைக்குக் காரணமாக இந்த மேற்கண்ட அறிவிப்பு விளம்பரத்திலிருந்தே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
அரசு விதிகளுக்குப் புறம்பான செயல்
ஜே.தாமஸ் என்பவரின் சுவாதீனத்தில் 83,602 சதுர அடி நிலம் உள்ளது. இதற்கு நியாய வாடகையாக மாதத்திற்கு ரூ.590 நிர்ணயம் செய்துள்ளது அரசு. இதில் இரண்டு விஷயங்கள் கவனத்திற்கு உரியவை.
முதலாவதாக, பயனாளியான தாமஸ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். ஹிந்துக் கோவிலின் சொத்துக்களை மாற்று மதத்தவருக்கு வாடகைக்கோ குத்தகைக்கோ விடக்கூடாது என்பது விதி. அரசு ஆணை (G.O. Ms. No. 689, Home dated 18th February 1958) படி, கோவில் சொத்துக்களை ஹிந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின்படி, தாமஸ் மட்டுமல்லாது, எட்வர்ட், அப்துல் கரீம் போன்ற மேலும் சில மாற்று மதத்தவர்களும் அண்ணாமலையர் சொத்தை அனுபவித்து வருகின்றனர். அரசு ஆணைப்படி அவர்களை வெளியேற்றாதது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து மிகக் குறைந்த வாடகையையும் இத்தனை வருடங்களாக வசூலிக்காமல் இருந்ததும் அறநிலையத்துறையின் குற்றமாகும்.
இரண்டாவதாக, D.Dis.No.2599/58, dated 1st February 1958 - D.Dis.No.2311/58, dated 7th April 1958 படி, கோவில் நிலங்களையும், மனைகளையும், கட்டிடங்களையும் வாடகைக்கு விடும்போது, அவற்றை உள்வாடகைக்கு விடக்கூடாது என்றும், அந்நிலங்களில் வாடகைதாரர்கள் எந்தவிதமான கட்டிடங்களையும் கட்டக்கூடாது என்றும் விதிகள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட தேதியில் வாடகை ஒப்பந்தம் தானாகவே ரத்தாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏல அறிவிப்பிலும், வாடகை அறிவிப்பிலும் இந்த விதிகளைக் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அடையாறு பகுதியில் உள்ள அண்ணாமலையாரின் சொத்துக்கள் வாடகைக்கு விடப்பட்டபோது இந்த விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பது தெளிவாக இல்லை. அவ்வாறு பின்பற்றப்பட்டிருந்தால் மேற்கண்ட நிலைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இத்தனை வருடங்களாக கோவில் நிர்வாகத்தினரும் சென்னை அறநிலையத்துறை தலைமை அலுவலர்களும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
Annamalaiyar-Sothu-Kaappaatrappadumaa-2

மூன்றாவதாக, சந்தை நிலவரப்படி அடையாறு பகுதியில் 83,602 சதுர அடிக்கு மாத வாடகை பல லட்சங்கள் இருக்கும் என்றாலும், அரசின் பார்வையில் ரூ.590 தான் “நியாயமாக”த் தெரிந்துள்ளது. சாதாரணமாக இந்த மாதிரி மிகக் குறைந்த வாடகை, தோப்பு அல்லது விவசாய நிலம் ஆகியவற்றிற்குத்தான் நிர்ணயம் செய்யப்படும். ஒரு மாநகரில் பெரும் மதிப்புள்ள பகுதியில் உள்ள நிலத்திற்கு இவ்வளவு குறைந்த வாடகை நிர்ணயித்திருப்பது வியப்பையும் சந்தேகத்தையும் அளிக்கிறது.
தனியார் நிறுவனங்கள் இப்பகுதியில் சதுர அடிக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை என்கிற கணக்கில் வாடகை வசூல் செய்கிறார்கள். ஆகவே, சந்தை நிலவரப்படி, தாமஸ் என்பவரின் சுவாதீனத்தில் இருக்கும் 83,602 சதுர அடி நிலத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வாடகை வரவேண்டும். இதே நிலத்தில் இரண்டு அடுக்கு தளமாக இருந்தால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாமல் வாடகை பெறலாம். அதே இடத்தை ஒரு சிறந்த வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு கொடுத்தால் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை கூட வாடகை பெறலாம். ஆக, சுமார் 5 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வரவேண்டிய இடத்திலிருந்து வெறும் 7080 ரூபாய் தான் பெறுகிறது அறநிலையத்துறை.
அறநிலையத்துறையின் விளம்பரத்தின்படி, அடையாறின் அந்தப் பகுதியில் அண்ண்ணாமலையாரின் சொத்தானது கிட்டத்தட்ட 13 லட்சம் சதுர அடிகள் (13, 14, 640) இருக்கிறது. எனவே, மொத்தத்தில் குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அண்ணாமலைக்கு வருமானம் பெற்றுத் தரவேண்டிய வேண்டிய அறநிலையத்துறை வெறும் சில லட்சங்கள் தான் பெற்றுத் தருகிறது. அந்த சொல்பத் தொகையிலிருந்தும் கோவிலை நிர்வாகம் செய்வதற்காக 14% தொகையைத் தான் எடுத்துக்கொள்கிறது அறநிலையத்துறை. மேலும் கடந்த 30 வருடங்களாக சந்தை நிலவரத்தின்படி வாடகை வசூலித்திருந்தால் குறைந்த பட்சமாக 500 கோடி ரூபாய்கள் கிடைத்திருக்கும். அந்த 500 கோடி ரூபாய் வருமானத்தில் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள் துவக்கியிருக்கலாம்! எத்தனை கோசாலைகள் திறந்து லட்சக்கணக்கான கால்நடைகளைக் காப்பாற்றியிருக்கலாம்! எத்தனை ஆயுர்வேத மருத்துவ மனைகள் கட்டியிருக்கலாம்! எத்தனை நலிவடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்திருக்கலாம்! எத்தனை சிற்பக்கல்லூரிகள் திறந்திருக்கலாம்! எத்தனை வேத ஆகம பாடசாலைகள் கட்டியிருக்கலாம்! எத்தனை திருமுறை திவ்யப்பிரபந்தப் பள்ளிகள் ஆரம்பித்திருக்கலாம்!
ஒரு கோவிலின் சொத்துக்கே இவ்வளவு செய்ய முடியும் என்றால், அனைத்துக் கோவில்களின் சொத்துக்களுக்கும் சந்தை விலையில் வாடகையும் குத்தகையும் வசூல் செய்திருந்திருந்தால் இத்தனை ஆண்டுகளில் பொது மக்களுக்கு எவ்வளவு சேவைகள் செய்திருக்க முடியும்! தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறியிருக்கும்!
விடையில்லா கேள்விகள்
அறநிலையத்துறையின் மேற்கண்ட அந்த விளம்பரத்தில் தாமஸ் என்பவர் மூன்று வருடங்களாகத் தரவேண்டிய நிலுவையில் உள்ள வாடகைத்தொகை 23,350 ரூபாய். மாதாமாதம் பல்லாயிரம் ரூபாய்கள் சம்பளம் பெறும் நிர்வாக அதிகாரி மூன்று வருடங்களாக வாடகை வசூலிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? வாடகை தராமல் இருக்கும் தாமஸ் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் படி நடவடிக்கையெடுத்து அவரை வெளியேற்றிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?
ஒரு புறம் வாடகைகளை வசூலிக்காமல் இருக்கும் அறநிலையத்துறை, மறுபக்கம் தன்னுடைய நிர்வாகச் செலவுக்காக, கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக இக்கோவிலிலிருந்து கட்டணமாக எடுத்துக்கொண்டுள்ளது.
எந்த ஒரு நிறுவனமும் தனது கணக்குகளைத் வெளித்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். தனக்குத் தானே ஒரு தணிக்கையை செய்துகொள்ள முடியாது. ஆனால் அறநிலையத்துறை தன் கணக்குகளை வெளித்தணிக்கைக்கு உட்படுத்துவது கிடையாது. தானேதான் சரிபார்த்துக்கொள்கிறது. இவ்வாறு ஒரு முறையை “அறிவியல்” பூர்வமாக வகுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். கடந்த 30 ஆண்டுகளாக தன்னுடைய கணக்கு வழக்கைத் தானே தணிக்கை செய்துகொண்டு வரும் அறநிலையத்துறையின் நிர்வாக லட்சணத்திற்கு இந்த ஒரு கோவில் உதாரணம் போதாதா? இதன் மூலமே அறநிலையத்துறையின் நிர்வாகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டதே!
அரைகுறை ஆவணங்கள்
ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு ஆண்டும் “கேட்பு, வசூல், நிலுவை பதிவேடு” என்கிற ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. அனால் அதில், தற்பொழுது இந்தச் சொத்தின் பயனாளிகள் யார் என்கிற விவரம்தான் இருக்கின்றதே தவிர, வாடகை ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. அறநிலையத்துறை “கேட்பு வசூல் நிலுவைப் பதிவேட்டில் உள்ளவர்” என்றுதான் குறிப்பிடுகிறது. அதாவது, குடியிருக்க ஒப்பந்தம் செய்துகொண்ட ஒருவர் அவ்விடத்தில் வணிக நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தால் அது அறநிலையத்துறையின் ஆவணத்தில் தெரியாது. ஆனால் சட்டப்படி, குடியிருக்க ஒப்பந்தம் செய்த ஒருவர் அவ்விடத்தை வணிகம் செய்வதற்குப் பயன்படுத்தத் தொடங்கிய அன்றே ஒப்பந்தம் காலாவதி ஆகிவிடும்.
அதன்படி, அண்ணாமலையார் கோவில் சம்பந்தமாக முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவைப் பதிவேட்டில், வாடகை ஒப்பந்தங்கள் முதலான விவரமான ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டபோது, அந்த ஆவணங்கள் தன் அலுவலகத்தில் இல்லை என்று கூறிவிட்டது அறநிலையத்துறை.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இக்கோயிலுக்கு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவை பதிவேட்டின் நகல்களை வழங்கச் சொல்லியும், சம்மந்தப்பட்ட பதிவேட்டில் உள்ள அசையா சொத்துகள் ஏதேனும் தற்பொழுது கோயில் வசம் இல்லாமல் இருக்கிறதா? அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தச்சொத்து உள்ள கிராமம், சர்வே எண், மொத்த அளவு, அந்தச் சொத்து கோயிலிடம் இருந்து யாருக்கு கிடைக்க பெற்றது? அந்தச் சொத்தைப் பெற்ற நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவலையும் வழங்கச் சொல்லியும் கேட்கப்பட்டது. மேலும், மேற்படி சொத்து விற்கப்பட்டது தொடர்பான அரசின் உத்தரவு, ஆணையரின் உத்தரவு, கோயில் தக்கார் மற்றும் அறங்காவலர் அனுமதி தொடர்பான ஆவண நகல், இது தொடர்பாக கொடுக்கப்பட்ட விளம்பர நகல்களை வழங்கவும் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம், “முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவைப் பதிவேடு ஆவணங்கள் தன்வசம் இல்லை; திருக்கோவில் சொத்துப்பதிவேட்டில் பதியப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் திருக்கோவில் வசம் உள்ளது என்ற விவரம் தகவலாகத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று பதிலளித்திருக்கிறது.
அதாவது, பல நூறுகோடி ரூபாய் முறைகேட்டை வெளிக்கொண்டு வர உதவும் முக்கிய ஆவணங்களைத் தன்னிடம் இல்லையென்று, கோவிலிலிருந்து “நிர்வாகத்திற்காக” ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ளும் அறநிலையத்துறை கூறுகிறது. அறநிலையத்துறையின் இந்தப் போக்குதான் அதன் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கிறது.
மேற்கண்ட விளம்பரத்தின் கூறப்பட்டுள்ள அடையாறு பகுதியில் உள்ள பயனாளர்கள் அனைவருக்கும் மின்சார இணைப்பு உள்ளது; அவர்களுக்கு வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவைகளும் உண்டு. ஆகவே மின்சார அலுவலகம், ரேஷன் அலுவலகம், தேர்தல் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் இந்தப் பகுதியில் இருப்பவர்களின் தகவல்களைத் திரட்டுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. மேலும், அந்தப் பகுதியில் இருக்கும் வங்கிகளிடமும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் கணக்குகள் இருக்கும்; சாலைப் போக்குவரத்து அலுவலகத்திலும் (RTO) அந்தப் பகுதியில் வாகனப் பதிவுகள் செய்தவர்களின் விவரங்கள் இருக்கும்; அந்தப் பகுதியில் வாணிபம் செய்பவர்களின் தகவல்கள் பதிவுத்துறை அலுவலகங்களிலும் இருக்கும். ஆகவே, மேற்கண்ட தினத்தந்தி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 88 பேர் அவர்கள் சுவாதீனத்தில் உள்ள இடங்களை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரங்களைச் சேகரிப்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லையே! எத்தனை பேர் ஆரம்ப காலத்திலிருந்து குடியிருப்போர், எத்தனை பேர் புதியதாகக் குடியேறியவர்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் போன்ற தகவல்களைச் சுலபமாகச் சேகரிக்கலாமே! முறைகேடு செய்துள்ளவர்களை சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுத்து வெளியேற்றலாமே!
கோவிலுக்குப் பயன்படாத வாகனங்கள்
தினத்தந்தி விளம்பரத்தில், குறிப்பிட்ட பயனாளிகள் பல கட்டடங்களைக் கட்டியுள்ளனர் என்றும், உள்வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிக்கின்றனர் என்றும் கூறியுள்ள அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் உதவியுடன் அந்த சட்டத்திற்குப் புறம்பான கட்டிடங்களை இடித்திருக்கலாமே! புறம்போக்கு நிலத்தைக்கூட வருடத்திற்கு இரண்டு முறை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில், கோவில் சொத்துக்களை வருடத்திற்கு ஒருமுறை கூட பார்வையிட வேண்டும் என்கிற சட்ட விதிமுறை எதுவும் இல்லையா என்ன? ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் பெறும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதைவிட வேறு என்ன வேலை?
கோவில் பயன்பாட்டிற்கு என்று சொல்லி லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து வாகனங்களை வாங்கிக் குவிக்கும் அறநிலையத்துறை, அந்த வாகனங்களை வைத்துக்கொண்டு என்ன செய்கிறது? இந்த கோவில் சொத்துக்களை முறையாகப் பார்வையிடுவதற்கு அந்த வாகனங்களை பயன்படுத்தாமல் வேறு எந்த காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அனுப்பிய மனு ஒன்றிற்கு, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் கடந்த 2004ம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகு, கோவில் பயன்பாட்டிற்காக, 1 டிராக்டர், 3 பொலீரோ ஜீப்புகள், 1 மினி டிப்பர் லாரி, 1 டாடா ஏஸ் ஆகிய வாகனங்களை வாங்கியிருப்பதாகவும், இதில், ஒரு பொலீரோ ஜீப்பு மட்டும் 18-04-2012 முதல் அறநிலையத்துறை அமைச்சர் அலுவலகப் பயன்பாட்டில் உள்ளதெனவும், அதற்கு 17-06-2013 முதல் ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டுனராக மாதம் ரூ.12,000/- சம்பளத்தில் பணியில் இருப்பதாகவும் பதில் அளித்திருக்கிறது. மற்ற இரண்டு பொலீரோ ஜீப்புகளும் ஒரு டாடா ஏஸும் எந்த்த் துறையின் பயன்பாட்டில் இருக்கின்றன, எந்த அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர், ஓட்டுனர்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் போன்ற கேள்விகளுக்கு கோவில் நிர்வாகம் பதிலளிக்கவில்லை.
கோவில் நிர்வாகத்திற்கு என்று வாகனங்கள் வாங்கிவிட்டு அவற்றைக் கோவில் நிர்வாகத்திற்குப் பயன்படுத்தாமல், அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டிற்கும் மற்ற துறைகளின் பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தி வருகிறது அரசு. அதாவது கோவில்களிலிருந்து கிடைக்கும் வருமானம் மற்ற துறைகளின் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
நிர்வாக லட்சணம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அனுப்பிய மனுவுக்குப் பதிலாக, அண்ணமலையார் கோவில் 1934ம் வருடம் மே மாதம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் மற்றொரு மனுவிற்குப் பதிலளிக்கையில் 1964-ம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் வந்த்தாகக் கூறப்பட்டுள்ளது. .
இந்து அறநிலையத்துறை சட்டம் 29ம் பிரிவின்படி கோவிலைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அடங்கிய பதிவேடு (Ledger 29) ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 30ன் படி, அப்பதிவேடும் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டின் கூட்டல்கள், கழித்தல்கள் கணக்கில் கொண்டு (Updating) சரி செய்யப்படவேண்டும். சட்டப்பிரிவு 31ன் படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பதிவேடு (Ledger 29) முழுமையாகத் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் அண்ணாமலையார் கோவிலில் இந்தப் பதிவேடுகள் முறையாகத் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்படவில்லை. முதல் சொத்துப் பதிவேடு 1954-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டப்பதிவேடும் மரப்பதிவேடும் 1998ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தும் பதிவேடுகள் முறையாகத் தயாரிக்கப்படவில்லை.
கோவிலுக்குச் சொந்தமாக 390 ஏக்கர் 56 செண்ட் நிலமும், 28,885 சதுர அடி மனையும், 34, 590 சதுர அடி கட்டிடமும் உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை அடையாறு பகுதியில் மட்டுமே லட்சக்கணக்கான சதுர அடிகள் உள்ளதைப் பார்த்தோம். ஒரு எளிய கேள்விக்குப் பதிலளிப்பதில் கூட நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொள்வது இதன் மூலம் தெரிகிறது.
மற்றொரு மனுவிற்கு அளித்துள்ள பதிலில் சென்னையில் அடையாறு ஊருர் கிராமத்தில் 30 ஏக்கர் 18 செண்டில் வீட்டு மனைகள், சென்னை மீர்சாகிப் பேட்டை பகுதியில் 7 ஏக்கர் வீட்டு மனைகள், சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில் 23 கிரவுண்டுகள் வீட்டு மனைகள் இருப்பதாகச் சொல்லியிருந்தது கோவில் நிர்வாகம். ஆனால் தற்போது தண்டையார்பேட்டை தனபால் நகரில் இருக்கும் 23 கிரவுண்டுகளும் கோவில் வசம் இல்லை. ஏனென்றால் மற்றொரு கேள்விக்கு ஊருர் கிராமம் மற்றும் மீர்சாகிப் பேட்டை சொத்துக்களை மட்டும்தான் தெரிவித்திருக்கிறார்கள். தண்டையார்பேட்டை சொத்தை மீட்கப்போகிறார்களா என்பது விடையில்லா கேள்வி!
கோவிலின் கோசாலையில் பசுக்கள் இறந்துபோய், அதன் பிறகு தொடரப்பட்ட வழக்கில் தற்போது உயர்நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட மூவர் குழு தமிழகமெங்கும் உள்ள பசு மடங்களை ஆய்வு செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தக் கோவிலில் கோசாலை எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, அது சம்பந்தமான விவரம் அலுவலகத்தில் இல்லை என்று பதில் கூறியுள்ளது. ஆனால், மற்றொரு மனுவுக்குப் பதில் அளிக்கையில் கோசாலை 1991-ம் ஆண்டு துவங்கப்பட்டதாகச் சொல்லியுள்ளது. அந்தக் கோசாலைக்கு 2007 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை ரூ.49,59,151/- செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது கோவில் நிர்வாகம். அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் கோசாலை பராமரிப்புக்குச் செலவு செய்துள்ளது! ஆயினும் பசுக்கள் தொடர்ந்து இறந்து வந்துள்ளன. பசுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்துள்ளது; பசுமடத்திலும் பசுக்கள் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்குவதற்கான ஏற்பாடுகளும் இல்லை; தீவனங்களும் அவ்வளவாகக் கொள்முதல் செய்யப்படுவதில்லை; செலவு மட்டும் லட்சக்கணக்கில் காண்பிக்கப்படுகிறது.
கோவிலின் சொத்துக்களுக்கும் பசுக்களுக்கும் தான் பாதுகாப்பு இல்லையென்றால் அனுதினமும் இறைவனைப் போற்றித் திருப்பணி செய்து வரும் குருக்கள்களுக்கும் சரியான பொருளதாரப் பாதுகாப்பு இல்லை. இக்கோவிலின் பணியாளர்களுக்கு 01-07-1997 முதல் 10-06-98 தேதியிட்ட அரசு ஆணை நிலை எண் 257ன் படியும், 17-06-98 தேதியிட்ட ஆணையரின் உத்தரவுப் (எண் 2534097 ஐ 1) படியும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 11 குருக்கள்களுக்கு அந்த உத்தரவின்படியான ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஐந்து பேருக்கு ரூ.800ம் ஒருவருக்கு ரூ.785ம் மற்றும் ஐந்து பேருக்கு முறையே வெறும் ரூ.94, ரூ.72, ரூ.67, ரூ.66, ரூ.65, மாதச் சம்பளமாகத் தரப்படுகிறது (பட்டியல் புகைப்படத்தைப் பார்க்கவும்). இந்த பதினோரு பேருக்கும் அரசு ஆணையின் படி ஊதிய நிர்ணயம் செய்யாதது மட்டுமல்லாமல், அதற்கான காரணமும் விளக்கப்படவில்லை.
Annamalaiyar Sothu Kaappaatrappadumaa-3
கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உள்ள ஒரு பெரிய கோவிலிலேயே குருக்கள்களின் நிலை இதுவென்றால், வருமானம் இல்லாத நூற்றுக்கணக்கான கோவில்களில் இறைப்பணி செய்யும் குருக்கள்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் வேதனையும் வருத்தமும்தான் மிஞ்சுகிறது. அறநிலையத்துறையின் அலுவலர்கள் யாராவது ஒருவராவது இந்த மாதிரி 60 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்ப்பாரா? அல்லது துறை அதிகாரிகள்தான் இந்த மாதிரியான ஊதியத்தைத் தங்கள் அலுவலர்களுக்கு நிர்ணயம் செய்வரா? அடுக்குமா இந்த அராஜகம்?

 இந்த நிர்வாக லட்சணத்திற்குக் கோவிலிலிருந்து நிதி
கோவிலின் சொத்து மற்ற விவரங்கள் பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு ஆண்டும் முறையாகத் தயாரித்துப் பராமரிப்பதில்லை என்பதைப் பார்த்தோம். மேலும் கோவிலின் கணக்கு வழக்குகளை வெளித்தணிக்கைக்கு விடாமல் இவர்களே பெயருக்கு ஒரு தணிக்கை செய்கிறார்கள் என்பதையும் பார்த்தோம். இவர்களின் இந்தத் தணிக்கை நாடகத்திற்கு ”தணிக்கைக் கட்டணம்” என்கிற பெயரில் கோவிலிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக கடந்த 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரைக்கும் 11 ஆண்டுகளுக்கு தணிக்கக் கட்டணமாக மொத்தம் இரண்டு கோடியே ஐம்பத்தியேழு லட்சத்து தொண்ணூற்றி எட்டாயிரத்து அறநூற்று இருபத்தி ஐந்து (ரூ.2,57,98,625/-) எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூபாய் 23 லட்சத்திற்குக் குறையாமல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதே போல கோவில் சொத்துக்களையும் பசுமடங்களையும் இவர்கள் எவ்வாறு நிர்வாகம் செய்கிறார்கள் என்பதையும் விரிவாகப் பார்த்தோம். இந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்வதற்கு, ”சகாயத்தொகை” என்கிற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்கள் ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக மேற்கண்ட அதே 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரையிலான 11 வருடங்களுக்கு மொத்தமாக ஆறு கோடியே எண்பத்திநாலு லட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து இருபத்தி ஏழு ரூபாய் (ரூ.6,84,98,027/-) நிர்வாகக் கட்டணமாக கோவிலிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூபாய் 62 லட்சத்திற்குக் குறையாமல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதோடு மட்டுமல்லாமல், ”ஆணையர் பொதுநல நிதி” என்கிற பெயரில் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள். இதற்காகவும் கணிசமான தொகையை கோவிலிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள். 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரையிலான 11 ஆண்டுகளுக்கு ஒரு கோடியே ஐம்பத்தி மூன்று லட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாய் (ரூ.1,53,90,000/-) எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொதுநல நிதியிலிருந்து, திருக்கோவில்கள் திருப்பணிகளுக்குச் செலவு செய்வதாக அறநிலையத்துறை சொல்கிறது.
கனன்று கொண்டிருக்கும் எரிமலை
ஆயினும் முறையாகக் கணக்கு வழக்குகளும் தணிக்கைகளும், நிர்வாகமும் இல்லாத நிலையில், இந்த மாதிரியான தணிக்கைக்கட்டணம், சகாயத்தொகை மற்றும் பொதுநல நிதி ஆகிய பெயர்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் எடுத்துக்கொள்ளப்படுவது பலவித கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பத்தான் செய்கிறது. இந்த மாதிரி எடுத்துக்கொள்ளப்படும் நிதி, திருக்கோவில் காரியங்களுக்குத்தான் செலவு செய்யப்படுகிறதா? அல்லது அரசாங்கத்தின் பொது விஷயங்களுக்கும் (Civic Issues), மற்ற துறைகளின் செலவுக்கும் (Issues concerning other departments) மற்ற மதத்தவரின் விஷயங்களுக்கும் (Minority Issues) செலவு செய்யப்படுகிறதா? இந்த அண்ணாமலையார் கோவிலின் நிர்வாகமே குறைகளுடனும் குளறுபடிகளுடன் இருக்கும்போது, அவற்றையெல்லாம் நீக்கிச் சரி செய்யாமல், மற்ற செலவீனங்களுக்கு இங்கேயிருந்து நிதி எடுக்க வேண்டுமா, என்கிற கேள்வியும் எழுகிறது.
கோவிலுக்குச் சொந்தமான கணக்கும் நிலையும் தெரியவில்லை; அவற்றிற்கு வரவேண்டிய வாடகை மற்றும் குத்தகைத் தொகைகளை முறையாக வசூல் செய்வதில்லை; பசுமடங்களைச் சரியாக நிர்வாகம் செய்து பசுக்களைப் பாதுகாப்பதில்லை; இறைப்பணி செய்யும் குருக்கள்களுக்கும் நியாயமான சம்பளம் கொடுப்பதில்லை; அனைத்து வரவு செலவுகளுக்கும் கணக்கு வைத்துக்கொண்டு முறையாகத் தணிக்கை செய்வதில்லை; நிலங்களுக்கும் பசுக்களுக்கும் பாதுகப்பு இல்லாத சூழலில், கோவிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள பஞ்சலோக மூர்த்தங்களுக்கும் வெள்ளி, தங்க, வைர நகைகளுக்கும் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, பதிவேடுகள் முறையாகத் தயார் செய்யாத நிலையில் அவைகள் பத்திரமாக இருக்கின்றனவா, போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.
இந்த ஒரு கோவிலின் நிர்வாகமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, தமிழகமெங்கும் உள்ள அனைத்து கோவில்களின் நிர்வாகமும் கழக அரசுகளின் கரங்களில் சிக்கிக்கொண்டிருப்பதை தமிழ் ஹிந்துக்கள் எவ்வாறு சகித்துக்கொண்டிருக்க முடியும்? கனன்று கொண்டிருக்கும் இப்பிரச்சினை எரிமலையென வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க நிதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது வலுவடைந்து வரும் இரு நாட்டு உறவை திசை திருப்பும் முயற்சி என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மோடி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முக்கியத்துவம் இல்லாத தவறான நோக்கம் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு விசாரணையில் தம் மீதான குற்றச்சாட்டுகளை மோடி மறுத்துள்ளார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மோடி மீதான குற்றச்சாட்டுகள் யூகத்தின் அடிப்டையிலானவை என்று இந்திய நீதிமன்றங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே முடிவு தான் அமெரிக்க நீதிமன்றத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிலும் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தலைவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தபடுவது இது முதல் முறை இல்ஙலை என்றும், இதே போல் டெல்லி சீக்கியர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீதும் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்.

எனவே மோடிக்கு அமெரிக்க நிதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள விவகாரத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டியது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  2002-ம் ஆண்டு மோடி முதலமைச்சராக இருந்த போது குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக  அமெரிக்க நீதிமையம் என்னும் மனித உரிமை தொடர்ந்த வழக்கில் நியூயார்க் நிதிமன்றம் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-தினகரன்.

சிமென்ட் விலை உயர்வால் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சலுகை விலையிலான "அம்மா' சிமென்ட் விற்பனைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190 என்ற விலையில் விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வீடு கட்டும் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் சிமென்டினை குறைந்த விலையில் ஏழை மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன். அதன்படி, மலிவு விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்படும். இந்த சிமென்ட் மூட்டைகள் தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைத்து மூட்டைக்கு ரூ. 190 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறை அலுவலர், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர், பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும்.
இந்த சிமென்ட் விற்பனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
மாவட்ட விநியோக மற்றும் விற்பனைச் சங்கங்களுக்குச் சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு சிமென்ட் விற்பனை செய்யும் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்.
ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனை செய்யப்படும் சிமென்ட்டை பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல-மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக தொடர்ந்து செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிடங்குகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்படுவார்.
பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.220 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், இந்தத் திட்டங்களின் பயனாளிகளுக்கும் அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் சிமென்ட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
காரணம் என்ன?
அம்மா சிமென்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் மாதமொன்றுக்கு சராசரியாக 17 முதல் 18 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து மாதத்துக்கு 4 முதல் 4.5 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் வரப் பெற்று விற்பனையாகி வந்தது. இது தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த சிமென்ட்டில் நான்கில் ஒரு பங்காகும்.
அண்டை மாநிலங்களிலுள்ள சிமென்ட் நிறுவனங்கள், குறிப்பாக ஆந்திரத்திலுள்ள சிமென்ட் நிறுவனங்கள், சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ.80 முதல் ரூ.100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.
இது இப்போது மூட்டைக்கு ரூ.310 என்ற அளவில் ஆந்திரத்தில் இருந்து விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக, முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் சிமென்ட் அளவு மாதத்துக்கு 1.50 லட்சம் முதல் 3 லட்சம் மெட்ரிக் டன் வரை குறைந்தது.
இது முந்தைய வருகையில் 35 முதல் 60 சதவீதம் மட்டுமே ஆகும். இது தமிழகத்திலுள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை ஏற்றுவதற்கு உரிய சாதகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துள்ளது.
சிமென்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சலுகை விலையில் சிமென்ட் விற்பனை செய்யும் அம்மா சிமென்ட் திட்டம் என்னும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

-தினமணி.

Thursday, 25 September 2014


சிவகங்கை: மானாமதுரை மாணவர் ஒருவர், வறுமையால் சுடுகாட்டில் பிணம் எரித்து கல்லூரி படிப்பை தொடர்கிறார்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தில் வசிப்பவர்கள் முருகேசன்,- பஞ்வர்ணம். இத் தம்பதிக்கு ஆனந்தன், மணிகண்ட ன், சங்கர் , பரிமளா, ராக்கம்மாள் என, 5 குழந்தைகள். முருகேசனுக்கு சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழில். இதில், கிடைக்கும் வருமானத்தில் இவர், 2 மகன், ஒரு மகளை கரையேற்றினார். ஒரு மகள் இறந்துவிட்டார். இருமகன்கள், மகள் தனித்தனி குடும்பமாக வசிக்கின்றனர். திருமணமாகாத மகன் சங்கருடன் முருகேசன், பஞ்சவர்ணம் வசிக்கின்றனர்.பள்ளிப்படிப்பை முடித்த சங்கருக்கு கல்லூரி எட்டாத இடமாக இருந்தது. வெளியூர் சென்று படிக்க வசதியில்லை, 'வெட்டியான்' தொழிலிலும் வருமானம் குறைவு. வறுமை துரத்தினாலும், தன்னம்பிக்கை இழக்காத சங்கர், தந்தைக்கு உதவியாக சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலுக்கு சென்றார்.கிடைக்கும் வருமானத்தில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பி.எஸ்.சி.,(வேதியியல்) படித்து முடித்து, எம்.எஸ்.சி,க்கு உயர்ந்தார். அவரது தொழிலை பிறர் ஏளனமாக பேசினாலும், 'செய்யும் தொழில் தெய்வம்' என அவர் கூறியது தன்னம்பிக்கையை காட்டுகிறது.

அவரை சந்தித்தபோது கூறியதாவது:சாதாரண குடிசை வீட்டில் வசிக்கிறோம். தந்தையின் சொற்ப வருமானத்தில் சகோதரர், சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். அவரவர் குடும்பத்தை ஓட்டுவதே கஷ்டம். எனது உயர் படிப்பு கனவு நிறை வேறுமா என்ற அச்சம் இருந்தது. எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்தது. தந்தையுடன் சுடுகாட்டில் பிணம் எரிக்க சென்றேன். இரு நபர்கள் என்றால் சில நேரத்தில் கூடுதல் பணம் கிடைக்கும். திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நானே பிணம் எரிப்பேன். பிணம் எரிந்து கொண்டிருக்கும் போது, அதன் வெளிச்சத்திலும் படித்துள்ளேன். பி.எஸ்.சி., முடித்த பின், அரசு வேலை கிடைக்கும் என நம்பினேன். கிடைக்காததால் எம்.எஸ்.சி.,யில் சேர்ந்தேன். படிப்பு செலவு, குடும்ப செலவு என, வருமானம் போதவில்லை. நேரம் கிடைக்கும்போது, மானமாமதுரை ரயில்வே ஸ்டேஷன் கேன்டீன் மூலம் ரயில் வரும்போது, பிளாட்பாரத்தில் டீ, காபி விற்பேன். டான்ஸ் கற்றுக்கொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செல்கிறேன். ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவரை குருவாக கருதுகிறேன். அவர் என்னை ஒரு ஓவியனாக மாற்றினார். தற்போது, ஓவியனாகவும் வலம் வருகிறேன். பல்வேறு போட்டியில் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளேன். ஓவியத்தில் 'சுடர்மணி' விருது பெற்றுள்ளேன். வெட்டியான், டான்சர், ஓவியன் என, மும்முனையில் வறுமையை வென்று படிப்பை முடிக்க வேண்டும். அரசு வேலையில் சேர்ந்து எனது குடிசையை மாற்ற வேண்டும். 'வெட்டியான்' கள் நல வாரியத்தில் பெற்றோர் உறுப்பினர்களாக இருந்தும், அரசு வேலைக்கான வாய்ப்பு, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. எனது சுய தொழில் மீது நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் உயர்வேன், என்றார்.

-தினமலர்.