Friday, 23 October 2015

வ.களத்தூரில் நேற்று (22.1௦.2௦15 வியாழன்) பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு நாள் அனுமதியின் பேரில் நடைபெற்ற கும்பாபி ஷேக நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. வ.களத்தூர் இந்துக்களின் சுவாமி ஊர்வலத்தை , தாங்கள் வசிக்கும் ராஜவீதி  தெருவின் வழியாக அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என வ.களத்தூர்  ஜமாஅத் சார்பாக ரிட் மனு  சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வ.களத்தூர் ஜமாஅத் தின் ரிட் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம் “மூன்று நாட்கள் சுவாமி ஊர்வலம் நடத்த தடை இல்லை” என அறிவித்த பிறகு கூட பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் , காவல்துறையும் ஒருநாள் மட்டுமே சுவாமி ஊர்வலம் செல்ல அனுமதிக்க முடியும் என அறிவித்தனர்.
 வ.களத்தூர் இந்துக்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு கூட “இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகை வருவதன் காரணமாக இம்முறை ஒருநாள் மட்டுமே அனுமதிக்க முடியும்” எனவும் , “இனி வரும் காலங்களில் மூன்றுநாள் ஊர்வலம் செல்ல தடையேதுமில்லை”  எனவும் பெரம்பலூர் மாவட்ட SP சொனல் சந்திரா உறுதியளித்ததன் பேரில் , வ.களத்தூர் இந்துக்கள் ஒருநாள் திருவிழா நடத்த ஒப்புக்கொண்டனர்.

இத்தகைய கடும் போராட்டங்களுக்கு பிறகு நேற்று காலை நடைபெற்ற  கும்பாபிஷேக விழாவில்  வ.களத்தூர் வரலாற்றில் இல்லாத அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமியருள் பெற்றனர்.  வருகை புரிந்து சுவாமியருள் பெற்ற அனைவருக்கும் வ.களத்தூர் மக்களின் சார்பாக நன்றி கலந்த வணக்கங்கள்










































































Monday, 17 August 2015


பெரம்பலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, விவசாயத்திற்காக  கிணறு அமைப்பதற்கு கூட தேசிய வங்கிகளில் கடன் தரப்படாத கட்டுப்பாடு உள்ளது. சில மாதங்களுக்கு முன்  பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் வயலில் கிணறு அமைப்பதற்கு முன் உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பதோடு அதற்காக ஆயிரக்கணக்கில் அரசுக்கு பணம் கட்ட வேண்டும் என்ற அரசானை வெளியிடப்பட்டது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்க அடிப்படையான காரணம் பெரம்பலூர் மாவட்டம் நிலத்தடி நீர் குறைவான மாவட்டம் என்பதனால்தான். எனவே நிலத்தடிநீரை   பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தான் இவ்வவளவு கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது.
அனால் இதே பெரம்பலூர் மாவட்டத்தில் எவ்வித கட்டுப்படும் இல்லாமல் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகத்தாலும், தமிழக அரசாலும், ஏன் சென்னை உயர்நீதி மன்றத்தாலும் அனுமதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் ஆதாரம் குறைவான ஒரு மாவட்டத்தில் விவசாயத்திற்காக கிணறு அமைக்க பல கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு , இதே பெரம்பலூர் மாவட்டத்தில் பல நூறு கல் குவாரிகளை அனுமதித்திருக்கிறது .
இக்கல் குவாரிகளில் பல நூறு அடி ஆழத்திற்கு கிரானைட் கற்கள் தொண்டப்படுவதொடு மட்டுமலாமல். கற்களை வெட்டி எடுக்கும்போது  ஊறும் நீரை வீணாக ஓடைகளில் சாலையோரங்களிலும் விட்டுவிடுகிறார்கள். இவ்வாறு பல நூறு அடி ஆழத்திற்கு தோண்டப்படும் குவாரிகளால் அருகிலுள்ள விவாசாய கிணறுகள் வற்றுவதோடு, அல்லாமல் கிராம ஊராட்சிகளால் குடிநீருக்கென அமைக்கப்பட்ட கிணறுகள் கூட வற்றுவதன் காரணமாக கோடை காலங்களில் கடும் குடிநீர் பஞ்சம் சில வருடங்களாக அதிகரித்து வருவது நாம் அறிந்தது.
சரி, கை விடப்பட்ட குவாரிகளில் கிடைக்கும் நீரையாவது கோடை காலங்களில் மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தால் அதனையும் தனியார் கல்வி நிறுவனங்கள் களவாட , மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கும் போக்குதான் உள்ளது. இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் முருக்கன் குடி கைகாட்டி அருகிலுள்ள கல்குவாரி குடிநீர் தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் கல்வி நிறுவனத்திற்கு களவாட அனுமதிக்கப்பட்டது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம்.
இது தொடர்பான சமீபத்திய உதாரணம் N.புதூர்…..
பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டத்தில் நெயகுப்பை பஞ்சாயத்தின் கீழ் உள்ள ஒரு குக்கிராமம் தான் N.புதூர். இங்கு விவசாயம் என்பது வனம் பார்த்த பூமியாக மட்டுமே உள்ளது. வசதியான சிலர் கிணறு வெட்டி நன்செய் விவசாயம் செய்துவருகின்றனர். கோடை காலமானால் குடிநீருக்கு கூட பஞ்சம் ஏற்படும் பெரம்பலூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் N.புதூரும் ஒன்று.
சில நூறு மக்களை கொண்ட இந்த கிராமத்தில் இருந்து சுமார் 350 அடி தொலைவில் கல்குவாரி அமைந்துள்ளது. இதில் சுமார் இருநூற்று ஐம்பது அடி ஆழத்திற்கு கற்கள் வேட்டிஎடுக்கப்பட்டதன் காரணமாக அருகிலுள்ள N.புதூர் கிராமத்தில் கோடை காலங்களில் கடும் குடிநீர் வறட்சி ஏற்பட்டதோடு விவசாய கிணறுகளும் வற்றிப்போய் ஊரையே காலி செய்யும் நிலை வந்ததன் காரணமாக மக்கள் குவாரியை மூட வலியுறுத்தினர். இதன் காரணமாக 5 வருடங்களுக்கு முன் மூடப்பட்டது.
அனால் கடந்த சில நாட்களாக மீண்டும் குவாரியிலுள்ள நீரை மின் மோட்டார் கொண்டு வெளியேற்றும் பனி நடைபெற்று வருகிறது. கிராம மக்களால் மாவட்ட ஆட்சியரிலிருந்து முதலமைச்சர் வரை மனு போட்டு பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் கல்குவாரி வேலை ஜரூராக நடைபெற்றுவருகிறது. சுமார் 250 அடி தொலைவில்தான் குழந்தைகளுக்கான ஆரம்ப பாட சாலை ஒன்று உள்ளது. எந்த நேரம் தலையில் கல் விழுமோ என்ற பயத்தில் மாணவர்கள் கல்வி பயிலும் சூழ்நிலை, மக்களோ அடுத்து என்ன போராட்டம் செய்யலாம் என்ற மன நிலையோடு இருக்கிறார்கள். மாவட்டம் நிர்வாகம் கருணை காட்டுமா…? பொறுத்திருந்து பார்ப்போம்.



Wednesday, 5 August 2015


வ.களத்தூர் கிராமத்தை சுற்றி வாழும் அன்பார்ந்த சொந்தங்களே…
வ.களத்தூரில் கடந்த ஒரு நூற்றாண்டாக இந்துக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை கண்டும், கேட்டும் சில நேரங்களில் பாதிக்கப்பட்டும் வந்துள்ளீர்கள். தொன்னூறுகளில் நடந்த கலவரத்தில் நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பாக நின்றதால்தான் வ.களத்தூர் இந்துக்களாகிய நாங்கள் இன்றும்  சுய மரியாதையோடு வாழ்ந்துவருகிறோம். வ.களத்தூர் இந்துக்களின் பிரச்சினை என்பது வ.களதுருக்கு மட்டுமான பிரச்சினை என்று நீங்கள் கருத முடியாது, ஏனெனில் நீங்களும் உங்கள் குடும்ப பெண்கள் உட்பட அனைவரும் வ.களத்தூரை சார்ந்துதான் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்ற நிதர்சனமான உண்மையை உணரும் நேரம் இது.
ஏனெனில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதிலிருந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது வரை வ.களத்தூருக்கு வந்துதான் செல்ல வேண்டியுள்ளது. நாளை உங்களுக்கோ , உங்கள் குழந்தைகளுக்கோ ஏதேனும் பிரச்சினை என்றாலும் முதலில் உதவுவது நாங்களாகத்தான் இருக்க முடியும். இந்த பிரச்சினையை 113 அகரம் கிராமத்தினர் உணர துவங்கி விட்டனர்… நீங்களும் இதனை உணரும் காலம் வெகு தொலைவு இல்லை.
நம் இந்து சமுதாயத்த்தில் இருக்கும் முகப்பெரிய ஓட்டை நம்மிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதுதான். சுற்றிலும் நம் சமுதாய மக்கள் இருந்தும் வ.களத்தூர் இந்துக்களாகிய எங்களால் எங்கள் தேர் திருவிழாவை சுதந்திரமாகவும் , சுயமரியாதையோடும் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஒவ்வொரு முறையும் தேர் திருவிழாவை நடத்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் கையேந்த வேண்டிய நிலையில் உள்ளோம். எண்ணிக்கையில் சிறிய அளவில் உள்ள ஒரு சமுதாயத்தின் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் அரசாங்கம், பெரும்பான்மை சமுதாய மக்களின் குரலை மதிப்பதில்லை. ஏனெனில் நம்மிடையே ஒற்றுமை இல்லை என்ற ஒரு விஷயத்தை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதுதான் காரணம்.
எம் இந்து சொந்தங்களே எவ்வளாவு காலம் இப்படியே சாதியின் பின்னால் செல்லப்போகிறோம்.  சாதியால் நாம் பிளவு பட்டிருந்தாலும் நமக்கான பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுதானே… எல்லா சாதியை சேர்ந்த மக்களும் மாரியம்மனை வழிபடவில்லையா..? தாலி கட்டிக்கொள்வதில்லையா…? இப்படியே பிரிந்து நின்றால் என்றாவது ஒருநாள் உங்கள் ஊரும் வ.களத்தூராகும் நிலை வெகு தொலைவில் இல்லை.
கடந்த உள்ளாட்சித்தேர்தலில் வ.களத்தூரில் இந்துக்களின் சார்பாக நின்றவர் தோற்க பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் நாங்கள்  சாதி ரீதியாக பிளவு பட்டு நின்றதுதானே… வ.களத்தூர் இந்து சமுதாயத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்களில் சிலர் மாறி வாக்களித்ததுதான் காரணம் என்று தெரிந்திருந்தும் இன்னமும் சாதி ரீதியாக பிளவு பட்டுத்தானே நிற்கிறோம்.
வழிபடும் தெய்வம் ஒன்றான பிறகு உயர்சாதி இந்துக்களாகிய நாம்,  நம் சகோதரர்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களை இன்னமும் நம் கோவில் உள்ளே நுழையவிட வில்லை எனும்போது எப்படி அவர்கள் நம்மோடு ஒற்றுமையாக இருப்பார்கள். திருவலந்துரை சிவன் கோவிலில் நுழைய அனுமதிக்கும்போது  நம் வ.களத்தூர் கோவில்களில் நம் தாழ்த்தப்பட்ட சகோதர்களை எப்போது உள்ளே நுழைய விடப்போகிறோம்..?

இந்த பிரச்சினைக்கு இடையில் கிறித்தவ சமயத்தை சேர்ந்த சிலர் நம்மிடையே  ஏற்றத்தாழ்வை பயன்படுத்திக்கொண்டு மேட்டுச்சேரி, ராயப்பா நகர் போன்ற இடங்களில் மதம் மாற்றும் வேளைகளில் வேறு ஈடுபட்டு வருகின்றனர். வாரம் தோறும் நம்மில் சிலரும், நமக்கு தெரிந்தவர்களும் அயன் பேரையூர் கைகாட்டி யிலுள்ள கிறித்தவ ஆலயத்திற்கு சென்று வருவதும், சிலர் மதம் மாறி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
முடிவாக ஒன்றே ஒன்றுதான் இந்து சொந்தங்களே… ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பாரதியின் வாக்கு பொய்க்காத வாக்கு. வ.களத்தூரின் இந்துக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பது எங்களை மட்டும் சார்ந்தது அல்ல… வ.களத்தூரை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினை என்று உணர்ந்தால் மட்டுமே இனி நம் பகுதியில் சுய கவுரவத்துடன் வாழ முடியும். அதற்க்கு நம் ஒற்றுமை ஒன்றுதான் வழி…
நமக்கிடையே ஒற்றுமையை முன்னெடுக்க நாங்கள் தயாராகிவிட்டோம்… ஆம் எம் இந்து சொந்தங்களே வ.களத்தூரில் இன்னும் சில மாதங்களில் அனைத்து கோவில்களுக்கும் சேர்த்து குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு ஆகியுள்ளது. இந்த விழாவிற்கு வ.களத்தூரை  சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களையும் அன்போடு அழைக்கிறோம்.
அனைவரும் வாரீர்… நம் ஒன்று பட்ட இந்து சக்தியை நாம் உணரும்,,, உணர்த்தும் நேரமிது..