வ.களத்தூரில் நேற்று (22.1௦.2௦15 வியாழன்) பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு நாள் அனுமதியின் பேரில் நடைபெற்ற கும்பாபி ஷேக நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. வ.களத்தூர் இந்துக்களின் சுவாமி ஊர்வலத்தை , தாங்கள் வசிக்கும் ராஜவீதி தெருவின் வழியாக அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என வ.களத்தூர் ஜமாஅத் சார்பாக ரிட் மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வ.களத்தூர் ஜமாஅத் தின் ரிட் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம் “மூன்று நாட்கள் சுவாமி ஊர்வலம் நடத்த தடை இல்லை” என அறிவித்த பிறகு கூட பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் , காவல்துறையும் ஒருநாள் மட்டுமே சுவாமி ஊர்வலம் செல்ல அனுமதிக்க முடியும் என அறிவித்தனர்.
வ.களத்தூர் இந்துக்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு கூட “இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகை வருவதன் காரணமாக இம்முறை ஒருநாள் மட்டுமே அனுமதிக்க முடியும்” எனவும் , “இனி வரும் காலங்களில் மூன்றுநாள் ஊர்வலம் செல்ல தடையேதுமில்லை” எனவும் பெரம்பலூர் மாவட்ட SP சொனல் சந்திரா உறுதியளித்ததன் பேரில் , வ.களத்தூர் இந்துக்கள் ஒருநாள் திருவிழா நடத்த ஒப்புக்கொண்டனர்.
இத்தகைய கடும் போராட்டங்களுக்கு பிறகு நேற்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் வ.களத்தூர் வரலாற்றில் இல்லாத அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமியருள் பெற்றனர். வருகை புரிந்து சுவாமியருள் பெற்ற அனைவருக்கும் வ.களத்தூர் மக்களின் சார்பாக நன்றி கலந்த வணக்கங்கள்

0 comments:
Post a Comment