Monday, 16 November 2015

வருந்துகிறோம் வருந்துகிறோம் ..
வண்ணாரம்பூண்டியில் வசித்து வந்த மாரிமுத்து,இந்திராவின் இளைய மகனான ரகு வயது 19 நேற்று மாலை நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிர் துறந்தான் ...
ரகு :
நல்லுள்ளம் படைத்தவன்,தன்னை சுற்றி உள்ளவர்களை சந்தோசமாக வைத்துகொள்பவன், எந்தவித தீய பழக்கமும் இல்லாதவன் , பொய்யாக கூட யாரையும் வெறுக்க தெரியாதவன் ,கருப்பாக இருந்தாலும் வெள்ளை மனம் உடையவன் ,
நண்பர்களின் துயரம் :
கடவுளே 
நல்லவர்களை சீக்கிரம் அழைத்துகொள்வாய் என்று கேள்வி பட்டதுண்டு ஆனால் அதை உண்மை என இன்று உணர்கிறோம்,
எந்த தீய எண்ணமும் இல்லாதவனை அழைத்துகொண்டாயே நல்லவர்களை சீக்கிரம் அழைத்துகொள்ளும் உன்னிடம் உள்ள தீய எண்ணத்தை என்று கைவிடபோகிறாய் ,
இவ்வுலகத்தில் கெட்ட எண்ணம் படைத்தவர் பலர் இருக்க இவனை ஏன் அழைத்துகொண்டாய் , 
கடைசியாக விநாயக சதுரத்தியன்று சந்தோசமாக நடனமாடியவனை இனி எப்பவுமே எலாதபடி மண்ணில் படுக்க வைத்துவிட்டாயே ,ரகுவின் பெற்றோருக்கும் அண்ணன்களுக்கும் நாங்கள் எப்படி ஆறுதல் கூறுவது,
கடவுளே 
எங்களுக்காக இதையாவது செய் 
ரகுவின் ஆத்மா சாந்தியடைய உன்னிடம் மன்றாடி வேண்டுகிறோம் எங்கள் கண்ணீருடன் .

0 comments:

Post a Comment