non-MRP பாஸ்போர்ட் |
கையால் எழுதப்பட்ட / போட்டோ ஒட்டப்பட்ட மற்றும் 2௦ வருட செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் வரும் நவம்பர் 25- 2௦14 முதல் செல்லாது என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சிவில் விமான அமைப்பு , வரும் நவம்பர் முதல் இத்தகைய பாஸ்போர்டுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என உறுப்பு நாடுகளுக்கு அறிவுறித்தி உள்ளதால் இனி வெளிநாடுகள், கையால் எழுதப்பட்ட non-MRP என அழைக்கப்படும் எந்திரத்தால் படிக்க முடியாத இத்தகைய பஸ்போர்டுகள் செல்லாது என அறிவிக்க உள்ளன. எனவே இத்தகைய பாஸ்போர்டுகள் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்டுகள் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் உதவிக்கு தேசிய அழைப்பு எண் 18002581800 எண்ணுக்கோ அல்லது www.passportindia.gov.in என்ற இணையதள முகவரிக்கோ சென்று விபரம் அறியலாம். மேலும் பாஸ்போர்ட் விபரம் அறிய 9704100100 என்ற எண்ணுக்கு sms அனுப்பியும் விபரம் பெறலாம்.
0 comments:
Post a Comment