Sunday, 2 March 2014

வேப்பந்தட்டை அருகே ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த போது சேற்றில் சிக்கிய மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மான்கள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், கை.களத்தூர், அய்யனார்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் சமூக வனக்காடுகள் உள்ளது.
இந்த வனக்காடுகளில் நூற்றுக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. இந்த மான்கள் மழைகாலங்களில் வனப்பகுதியில் உள்ள குட்டை மற்றும் நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து உயிர் வாழும்.
வனப்பகுதியை விட்டு
வெயில் காலங்களில் வனப்பகுதியில் மான்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விவசாய கிணற்று பாசன வாய்க்கால் மற்றும் ஏரி, குளம் போன்றவற்றில் தேங்கியுள்ள தண்ணீரை குடிக்கும்.
அவ்வாறு மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் போது விவசாய பயிர்களை மான்கள் சேதப்படுத்துவதும், ஊருக்கு அருகில் மான்கள் வரும் போது அவற்றை தெரு நாய்கள் துரத்தி கடித்து குதறி உயிரைப்பறிப்பதும் இப்பகுதி யில் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
சேற்றில் சிக்கிய மான்
இந்நிலையில் வேப்பந் தட்டை அருகே திருவாலந் துறை ஏரியில் 2 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக வந்த போது சேற்றில் கால் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தடுமாறியது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சேற்றிலிருந்து மானை மீட்டு வனசரகர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் வனசரகர் உத்தர வின் பேரில் வனக்காப்பாளர் பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானை மீட்டு சென்று வெண்பாவூர் வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்.

நன்றி-தினத்தந்தி.

0 comments:

Post a Comment