vkalathur வ.களத்தூரில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் மார்ச் -9 அன்று அடிப்படை எழுத்து தேர்வு ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு நமதுபகுதி கற்கும் பாரதம் மைய தொடர்பாளர் அல்லது 7373003187 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், அனைவருக்கும் கல்வி இயக்க கற்கும் பாரதம் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளில் 15 வயது முதல் 80 வயதிற்குள்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு மார்ச் 9-ம் தேதி அடிப்படை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வை, கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்றவர்களும் எழுதலாம்.
மேலும், கடந்தமுறை நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சிப் பெறாதவர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பெற்றவர் என்ற சான்று வழங்கப்படும். பதிவு செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள கற்கும் பாரத மைய பொறுப்பாளர்கள்
(அல்லது) தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373003187 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி-தினமணி.
0 comments:
Post a Comment