பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகேயுள்ள எண்புதூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் இளையராஜா(வயது 32).சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம மனிதர்கள் இவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். இதே போன்று அதே ஊரை சேர்ந்த ராஜ்முகமது மகன் முஹம்மது யூனுஸ் (45) வீட்டிலும் நள்ளிரவில் பின்புற கதவை உடைத்து ரூ.10 ஆயிரம் பணத்தையும் வெள்ளி கொலுசையும் திருடி சென்ற மர்ம மனிதர்கள் ராமசாமி, பொன்னுசாமி ஆகியோரின் வீடுகளிலும் பின்புறம் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து வ.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-தினகரன்.
0 comments:
Post a Comment