Saturday, 20 December 2014


கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சினேகா (வயது 24). இவர் எம்.பி.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், கோவையில் நடனப்பயிற்சி மாஸ்டராக இருக்கும் முகமது முக்தருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் சினேகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் காதலை கைவிடும்படி வற்புறுத்தினர்.
இந்த நிலையில் சினேகாவும், முகமது முக்தரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அதன் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை மாற்றி கலப்புதிருமணம் செய்து கொண்டனர். இதனால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தனது மகளை காணவில்லை என்று சினேகாவின் தந்தை கோவை ரத்தினபுரி போலீசில் புகார் செய்து இருந்தார். அதன் பேரில் சினேகாவை போலீசார் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
முஸ்லிம் அமைப்பினர் இதற்கிடையில் அந்த பெண்ணை பெற்றோருடன் ஒப்படைக்க 3 முதல் 5 கோடி பேரம் பேசி முடித்ததாக செய்தி தாள்களில் செய்திகள் வெளியாகி உள்ளது..
நேற்றைய செய்தி..

காதல் திருமணம்: கும்பலுக்கு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட தொழில் அதிபரின் மகள் மீண்டும் மாயம்
கோவை,டிச.18–

கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).24 வயது நிரம்பிய இந்த பெண் எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவருக்கும் கோவையில் நடனப்பயிற்சி மாஸ்டராக இருந்த வாலிபர் மஜித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்த காதல் விவகாரம் ராணியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கொதித்து எழுந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 3.12.2014 அன்று பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
மகளை செல்போனில் தொடர்பு கொண்ட ராணியின் பெற்றோர் காதலனை உதறி தள்ளிவிட்டு தங்களுடன் வருமாறு கூறினர். ஆனால் அதை ராணி ஏற்றுக்கொள்ளவில்லை.
காதல் கணவரை கைவிட்டு வரமறுத்தார். ஆனால் மகளை எப்படியும் பிரித்து தங்களுடன் கொண்டு வர வேண்டும் என்று அவரது பெற்றோர் உறுதியாக இருந்தனர். அதற்கான நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கினர்.
இதை அறிந்த ராணியும், மஜீத்தும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
காதல் ஜோடி கமிஷனர் அலுவலகத்தில் இருப்பதை அறிந்து ஒரு கும்பல் அங்கு வந்தது. காதல் ஜோடியிடம் பேசிய அந்த கும்பல் தாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர். இதனை காதல் ஜோடியும் நம்பியது. அந்த கும்பலுடன் அவர்கள் சென்றனர்.
மஜீத்தையும், ராணியையும் ஒரு வீட்டில் அந்த கும்பல் தங்க வைத்தது. ராணியின் குடும்ப சூழ்நிலையை அறிந்த அந்த கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியது. “உங்கள் மகள் எங்கள் வசம் தான் இருக்கிறாள். எங்களுக்கு ரூ.5 கோடி கொடுங்கள். உங்கள் மகளை உங்களிடம் பத்திரமாக ஒப்படைக்கிறோம்” என்று பேரம் பேசினர்.
மகளை எப்படியும் பிரித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ராணியின் தந்தை ரூ.3 கோடி கொடுக்க தயாரானார். இந்த விவகாரம் ரகசியமாக காதல் ஜோடிக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தங்க வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றனர்.
அப்போது அந்த கும்பல் மஜீத்தை தாக்கி பேப்பரில் கையெழுத்து பெற்றது. பின்னர் ரூ.3 கோடி பெற்றுக் கொண்டு ராணியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் வெளிப்படையாக வெளியே தெரியாவிட்டாலும் கோவையின் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ராணி நேற்றிரவு 8.15 மணிக்கு பிறகு திடீரென மாயமானார். பதறிப்போன ராணியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் மகள் மாயமானது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராணியை தேடி வருகிறார்கள். ராணி மீண்டும் காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா? அல்லது வேறு யாராவது கடத்தி சென்று விட்டனரா? அல்லது வேறு ஏதும் சம்பவம் நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்றைய தினமலர் செய்தி:


நன்றி- https://www.facebook.com/BjpCoimbatoreThondamuthurMandal/posts/390368464453311:0

0 comments:

Post a Comment