கல்லாற்று நீர்த்தேக்கம். |
பெரம்பலூர் மாவட் டத்தில் போதிய பருவ மழை இல்லாததால், காட்டாறுகளில் நீர்வரத்து இன்றி பெரம்பலூர்-கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டு போனது.
வறட்சி மாவட்டம்
தமிழ்நாட்டிலேயே வறட்சி யான மாவட்டமான பெரம்ப லூர் மாவட்டம் கரிசல் மண்பூமியை பெரும்பாலும் கொண்டதாகும்.தமிழகத் திலேயே பருத்திவிளைச்சலில் முதன்மை மாவட்டமாக திகழ்ந்த பெரம்பலூர் மாவட் டம் தற்போது மக்காச்சோள உற்பத்தியில் முன்னோடியாக விளங்கிவருகிறது.
வடகிழக்கு பருவமழையை நம்பி உள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாகவும், அரணாகவும் விளங்கும் பச்சைமலையில் இருந்து கல்லாறு, சின்னாறு, வெள்ளாறு, கோனேரிஆறு, சுவேதநதி போன்ற காட்டாறு கள் உற்பத்தியாகின்றன. காட்டாறுகள் கலந்துவிடும் வெள்ளாறு வேப்பந்தட்டை, வேப்பூர் ஒன்றியங்கள் வழியாக சென்று கடலூர் மாவட்டம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதுதவிர சிறுவாச்சூர் அருகே பெரியசாமி மலையில் உற்பத்தியாகும் மருதையாறு, பெரம்பலூர், ஆலத்தூர், அரியலூர், திருமானூர், தா.பழூர் ஒன்றியங்கள் வழியாக பாய்ந்து, கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்காளவிரிகுடாவை சென்றடைகிறது.
சாரல் மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் 2011 -ம்ஆண்டு முதல் நடப்பு ஆண்டுவரை வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாமல் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டிலாவது வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யுமா? என்று விவசாயிகள் எதிர் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் சாரல் மழையாக பெய்து மழைகாலத்திற்கும் விடைகொடுக்கும் நிலைக்கு பெரம்பலூர் மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் பெரம்பலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான அரும்பாவூர் ஏரி, பாண்டகப்பாடி ஏரி ஆகியவை நிரம்பி உள்ளன. தொண்டமாந்துறை ஏரி 80 சதவீதம் நிரம்பி உள்ளது. பச்சைமலையில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கோரையாறு, கல் லாற்றில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. நீர்ஓட்டம், வெள்ளப் பெருக்கு என்பது நினைவாகவே உள்ளது.
கிணற்றுப்பாசனம்
இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனம் அதிகம் நடைமுறையில் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் நிலத் தடி நீர்மட்டம் 150 அடியில் இருந்து 250 அடிவரை சென்று விட்டது. பயிர், காய்கறிகள் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 908 மி.மீ. ஆகும். கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் மொத் தம் 814.36 மி.மீ. மழைஅளவு பதிவாகி இருந்தது. நடப்பு ஆண்டில் நடப்பு தேதிவரை 828.20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் வெள்ளாற்றில் 16 கண் மதகுகளில் 2 மதகுகளில் மட்டும் தேங்கி உள்ள மழைநீர் கசிந்தவண்ணம் உள்ளது. இதனால் வெள்ளாறு நீர்த் தேக்கம் சிறிதளவு நீருடன் வறண்டு போகும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரத்திடம்கேட்டபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் அடைமழை பெய்தால்தான் விவசாயம் தழைக்கும், நிலத்தடிநீர் மட்டம் உயரும். இல்லாவிட்டால் காய்கறிகள், விளைச்சல் குறைந்து விலை அதிகரிப்பதை தடுக்க முடியாது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசனில் 21 நாட்கள் அடைமழை பெய்தாலே நீர் நிலைகளில் போதிய நீர் ஊற்றம் கண்டு, அந்த ஆண்டு வேளாண்மை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். ஆனால் பெரம்பலூர் மாவட் டத்தில் அடை மழையை காண்பது கடந்த 4 வடகிழக்கு பருவமழை காலங்களில் அரிதாகிவிட்டது. இந்த ஆண்டும் ஆண்டு சராசரி மழைஅளவைவிட குறை வாகவே மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.
- தினத்தந்தி.
0 comments:
Post a Comment