வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளில் உறுப்பினராக இருந்தது ஊர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அவர்களில் பலர் அருகிலுள்ள வழிகண்டபுரம், மில்லத் நகர், தைக்கால் மற்றும் லப்பைகுடிக்காட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.
தங்கள் அரசியல் பலத்தை காட்ட வ.களத்தூர் இந்து - முஸ்லீம் பிரச்சினையை தூண்டி வரும் இந்த இயக்கங்கள் உள்ளூர் ஜமாத்தின் முடிவினை தங்கள் நெருக்குதல் மூலம் திசை திருப்பி அமைதியை சீர்குலைத்து வருகின்றன.
சமீபத்திய சுவாமி ஊர்வலம் தொடர்பான பிரச்சினை யில் கூட வ.களத்தூர் ஜமாத்தின் பொறுப்பில் உள்ள பலர், வணிக நிறுவனங்கள் நடத்திவரும் இஸ்லாமிய சமூக வியாபாரிகள் மற்றும் தயமார்கள் அரசினை அணுகி " பேச்சு வார்த்தையில் மூலம் சமாதானமாக செல்லலாம் " என அரசினை அணுகி கூறியுள்ளதாக தெரிகிறது.
ஆனால் அடிப்படை இஸ்லாமிய அமைப்புகள் இந்த அமைதி முயற்சியை தடுத்து ஊர் அமைதியை குலைக்கும் செயலில் இறங்கி உள்ளனர். அரசு கவனமுடன் செயல்பட்டு ஊரின் அமைதியை சீகுலைக்கும் அடிப்படை வாத அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே வ.களத்தூர் ஓட்டுபிமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 comments:
Post a Comment