Wednesday, 9 July 2014

‘தோட்டத்தில் பாதி கிணறு என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப படிக்கும் எவரும், அதிலுள்ள விலையில்லாத் திட்டங்களுக்கான பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டைக் காண முடியும்.
உளுந்தூர்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் மரத்தடி வகுப்பு
உளுந்தூர்பேட்டை மேல்நிலைப் பள்ளியில்   மரத்தடி வகுப்பு

தவிர, பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் இதேபோன்ற இலவசத் திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாணவ மாணவிகளின் விலையில்லாத் திட்டங்களுக்கு திசை திருப்பப்படுகிறது; சமூகநலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருமணத் திட்டத்திற்கு பயனாகிறது.
இது தவறு என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொரு துறையிலும் கவர்ச்சி அரசியலைத் தாண்டிச் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பல பணிகள் உள்ளன. அதற்கான நிதி போதிய அளவுக்குக் கிடைக்காததால் அத்துறைகளின் வளர்ச்சியை எட்ட முடிவதில்லை.
உதாரணமாக, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான கட்டட வசதியும் ஆசிரியர் பணியிட உருவாக்கமும் அரசின் முக்கியமான கடமை. ஆனால், அதற்குரிய நிதி பெரும்பாலும் கல்வித்துறைக்கு வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக, பல அரசுப் பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களிடம் உயர்ந்த தரத்துடன் கல்வி கற்பித்தலை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்துக்கு சமூகநலத்துறையின் நிதி செலவிடப்படுவது ஏற்கத் தக்கதே. ஆனால், ஆதரவற்றோர் நலம், முதியோர் நலம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டுமே. அதற்கான நிதி அத்துறைக்கு கிடைப்பதில்லை. இதற்கு, முன்யோசனையின்றி தடாலடியாக அறிவிக்கப்பட்டும் கவர்ச்சி அரசியல் திட்டங்களே காரணம்.
மத்திய அரசிடம் நிதிக்கு கெஞ்சல்:
மத்திய அரசிடம் நிதி கோரிக்கை
மத்திய அரசிடம் நிதி கோரிக்கை

இதன் காரணமாகவே மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கும் கூட மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 4-ஆம் தேதி தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, 64 பக்கங்கள் கொண்ட, கோரிக்கை மனுவை அளித்தார். அதில் தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு, ரூ. 3.54 லட்சம் கோடி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
அவர் அளித்த கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள பல திட்டங்கள் மாநில அரசின் நிதி வரம்பில் வருபவை. உதாரணமாக, கீழ்க்கண்ட சில கோரிக்கைகள் கவனத்திற்குரியவை:
தமிழக காவல் துறையை நவீனப்படுத்த, ரூ. 10 ஆயிரம் கோடி  வழங்க வேண்டும்; தமிழகத்தில், அத்திக்கடவு- அவிநாசி வெள்ளநீர் கால்வாய் இணைப்புக்கு, ரூ. 1,862 கோடி வேண்டும் (கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டம் குறித்து அரசுகள் வாக்குறுதி அளித்து வந்துள்ளன) ; பெண்ணையாறு- பாலாறு இணைப்புக்கு, ரூ. 500 கோடி; காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக்கு, ரூ.  5,166 கோடி; தமிழகத்தில் உள்ள, 32 ஆயிரம் கட்டுமரங்களை மோட்டார் படகுகளாக மாற்ற, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 9 கோடி; ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தேவையான,  உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள,  ரூ. 420 கோடி; மீன்பிடித் துறைமுகங்களை ஆழப்படுத்த,  ரூ. 1,520 கோடி ரூபாய் தேவை. எனவே, ஆண்டுக்கு,ரூ. 10 கோடியாவது ஒதுக்க வேண்டும். காவிரி கால்வாய்களை நவீனப்படுத்த, ரூ. 11,421 கோடி வழங்க வேண்டும்.
இவ்வாறாக, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களின் பட்டியலைப் படித்தாலே மலைப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதீதமானது. இவ்வாறு வழங்கப்படும் நிதி மாநில அரசின் இலவசத் திட்டங்களுக்கு அளிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதைத் தான் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று சொல்கிறார்களோ?
மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்கும் வரவினங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், மத்திய நிதிநிலையே வலுவாக இல்லாத நிலையில், அனைத்து மாநிலங்களும் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைக்கும்போது மத்திய அரசால் என்ன செய்ய முடியும்?
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது  ‘தமிழகத்தின் தேவைகளை மன்மோகன் அரசு புறக்கணிக்கிறது; மாநில அரசு கோரும் நிதியில் மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது’ என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டிவந்தார். அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. மன்மோகன் தலைமையிலான மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கண்டித்திருக்கிறார். அவர்தான் இப்போது நாட்டின் பிரதமர்.  ‘அனைத்து மாநிலங்களும் சம உரிமையுடன் நடத்தப்படும்’ என்ற அவரது அறிவிப்பு அனுபவப்பூர்வமானது.
அதேசமயம், மத்திய அரசால் பூர்த்தி செய்ய இயலாத அளவிற்கு கோரிக்கை மனுவை சமர்ப்பிப்பதால் யாருக்கு லாபம்? தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு இலவச (விலையில்லா) திட்டங்களில் செலவழிக்கப்படும் நிதி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டாலே தமிழக அரசு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைமை வராதே? வரவுக்கேற்ற செலவு தானே நிம்மதியான பொருளாதாரச் சூழலை அளிக்கும்?
விலையில்லாத் திட்டங்கள் ஏழை, எளியவருக்கானவை; அவற்றின் பயனாளிகளைக் கட்டுப்படுத்த வருமான வரம்பு கண்டிப்பாக அவசியம். அவ்வாறில்லாமல், வாக்களிக்கும் அனைவருக்கும் விலையில்லாத் திட்டங்கள் சென்றுசேர வேண்டும் என்று எண்ணுவது தேர்தல் அரசியலுக்கு உதவுமே ஒழிய, ஏழை மக்களுக்கு நலம் சேர்க்காது.
அதிமுகவின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இப்போதே 2 ஆண்டுகள் கழிந்துவிட்டன. மீதமுள்ள காலத்தில் அரசின் நலத்திட்டங்கள், உண்மையாகவே தேவைப்படும் கடையருக்குச் சென்றுசேர வேண்டும். அனைவருக்கும் விலையில்லாத் திட்டங்கள் என்ற கோஷம் அதற்கு உதவாது. தவிர, மாநில அரசின் நிதிச்சுமையை அதிகரித்து, பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தொடரவே வழிவகுக்கும்.
அபாயமான அஸ்திவாரம்:
போதையில் வீழ்ந்துகிடப்பது தமிழகம் மட்டும் தானா?
போதையில் வீழ்ந்துகிடப்பது தமிழகம் மட்டும் தானா?

தமிழக அரசின் விலையில்லாத் திட்டங்கள் பல மாநிலங்களாலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகின்றன. இத்திட்டங்களை அப்படியே நகலாக்கம் செய்ய பல மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. இலவச மடிக்கணினித் திட்டம் உத்தரப் பிரதேசத்திலும், மிதிவண்டித் திட்டம் பிகாரிலும் பின்பற்றப்படுகின்றன. அம்மா உணவகத்தை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களே ஆய்வு செய்கின்றன. இவை பெருமைக்குரியவையே. ஆனால், இத்திட்டங்கள் எந்தக் கட்டுமானத்தின் மீது எழுப்பப்படுகின்றன என்ற கேள்வியும் அத்தியாவசியமானது.
தமிழகத்தின் பெரும்பாலான விலையில்லாத் திட்டங்களுக்கு நிதி வழங்குவது, தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) அளிக்கும் மது விற்பனை வருவாயே என்ற தகவல் எளிதாகக் கடந்துபோகக் கூடியதல்ல. இந்த நிதி போதாமல் தான் மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்கிறது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. அப்போது அதன் முதலீட்டுத் தொகை ரூ. 15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 21,500 கோடி. 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மடங்கு வளர்ச்சி. நாட்டில் வேறெந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது. ஆனால் இது நிதர்சனத்தில் ‘வளர்ச்சி’ தானா?
மது விற்பனையை தனியார் மூலம் (ஏலமுறையில்) நடத்திவந்த அரசு 2003 -04 இல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த ஆண்டு வருவாய் ரூ. 2,828 கோடி. 2012- 13-இல் இது ரூ. 21,500 கோடியைத் தாண்டி விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2010- 2013) மட்டும் ரூ. 55,000 கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
tn_Data
டாஸ்மாக் வருவாய்- ஒரு புள்ளிவிவரம்

அண்மையில் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம்  பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில்,  “டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ. 23,401 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இதில் விற்பனை வரியாக ரூ. 17,533 கோடியும்,  கலால் வரியாக ரூ. 5,868  கோடியும்  செலுத்தப்பட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 26,295 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் ரூ. 19,812 கோடி விற்பனை வரியும்,  ரூ. 6,483 கோடி கலால் வரியும் கிடைக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, 2003- 04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ. 2,828 கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2013-14ஆம் நிதியாண்டில் இது ரூ. 21,500 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதில் பெரும்பகுதி தான் விலையில்லாத் திட்டங்களில் செலவிடப்படுகிறது.
இதைத் தான் “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று ஆவேசத்துடன் கேட்பார் மகாகவி பாரதி. இந்த டாஸ்மாக் வருமானம் முழுவதும் தமிழக இளைஞர்களின் ஆற்றலை உறிஞ்சி, தமிழகப் பெண்களின் கண்ணீரில் விளைவிக்கப்பட்ட வருவாய் தான். மாநிலத்தையே மலடாக்கும் டாஸ்மாக் அளிக்கும் வருவாயில் தான் தங்களுக்கு விலையில்லாத் திட்டங்கள் அள்ளிவிடப்படுகின்றன என்ற உண்மையை சாமானிய தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்களா?
எனவே தான் பல்வேறு சமூகநல இயக்கங்களின் தொடர் போராட்டத்தையும் மீறி தமிழகத்தில் மதுவிற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. தனது அரசியல் வெற்றிக்காக இலவசங்களை வழங்கும் கவர்ச்சி அரசியலைக் கட்டவிழ்த்துவிடும் தமிழக திராவிட அரசியல்வாதிகள் (இவ்விஷயத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் வேறு வேறல்ல), தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாவது பற்றி ஏன் அச்சம் கொள்வதில்லை?
தமிழகத்தின் எந்தத் தெருவிலும் வீழ்ந்து கிடப்பது போதை ஆசாமிகள் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலமும் தான் என்பதை ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உணர மறுக்கிறார்?
1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்டம் (பி.ஏ.பி.), பவானிசாகர், அமராவதி உள்ளிட்ட அணைக்கட்டுகளும், துவக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் (என்.எல்.சி.), திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை போன்ற பெருந்தொழில் நிறுவனங்களும் தான் இன்றும் தமிழகத்தை வாழவைக்கின்றன.
கல்விக்கண் திறந்த காமராஜர்
கல்விக்கண் திறந்த காமராஜர்

அவரும் இலவசம் வழங்கினார்-  ஏழை மாணவர்கள் வயிறார உண்டால் தான் கல்வி செழிக்கும் என்றுணர்ந்து இலவச மதிய உணவுத் திட்டத்தை அவர்தான் கொண்டுவந்தார். அதன்மூலமாக கல்வியை அனைவருக்கும் கொண்டுசேர்த்தார். அத்திட்டம் தான் பின்னாளில் எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவுத் திட்டமாக மாறியது. தற்போது அதில் முட்டை, கலவை சாதங்கள் வழங்கல் என்று திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. காமராஜரின் இலவசம் கவர்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. தற்போதைய திட்டங்களை அவ்வாறு ஒப்பிட முடியுமா?
இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் எதிர்காலத்தில் எவ்வாறு நினைவுகூரப்படப் போகிறது? போதையில் தமிழகம் தள்ளாடக் காரணமான ஆட்சியாகவா? விலையில்லாத் திட்டங்களுக்காக தங்களை அறியாமலேயே அடகு வைத்த பரிதாபமான மக்களிடம்  ‘விலையில்லாக் கையூட்டு அளித்து’ செல்வாக்குப் பெற்ற ஆட்சியாகவா?
தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் காட்சி, எங்கும் அம்மா, எதிலும் அம்மா என்பதாகவே இருக்கிறது. இதன் உடனடி அரசியல் சாதகங்கள் புலப்படுவது போலவே, எதிர்கால வீழ்ச்சியின் தடயங்களும் தென்படுகின்றன. அவ்வாறு தமிழகம் வீழுமானால், அதற்கும் அம்மாவின் இணையற்ற ஆட்சியே காரணமாக இருக்கும்.
எனினும், இலவசங்களை வாரி இறைக்கும் விலையில்லாத் திட்டங்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் மட்டுமே அமலாகிவரும் சில பிரத்யேகத் திட்டங்களும் கவனத்திற்குரியவை.  ‘அம்மா’வை கடுமையாக விமர்சிக்கும்போது, இத்திட்டங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
உதாரணமாக, தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்கள்,  விற்பனையாகும் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அண்மையில் துவக்கப்பட்ட அம்மா மருந்தகம்,  ‘அம்மா முகாம்’ எனப்படும் மக்களைத் தேடி வருவாய்த்துறை முகாம்கள் போன்றவை மாநிலம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரவலாக நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளன. அவை குறித்து அடுத்த பகுதியில் காணலாம் v.kalathur seithi .

நன்றி-தமிழ் இந்து.
JeyaFree1
தமிழக இல்லத்தரசிகளைக் கவரும் விலையில்லா திட்டங்கள்…

ஒரு மக்கள்நல அரசு என்பது எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவே இருக்க வேண்டும். சமுதாயத்தில் வலிவுள்ளோர் பெறும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் எளியோர் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இல்லாவிடில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலைக்கு எளியோர் தள்ளப்பட்டு, அவர்களின் முன்னேற்றம் தடைப்படும். எனவே தான் மக்களாட்சி முறையில் எளியோரின் நலமே பிரதானம் என்ற கருத்து உருவானது. ஆனால், எளியோர் யாவர் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. வாக்குவங்கி அரசியலே மக்களாட்சி முறையைத் தீர்மானிப்பதால், எளியோரை மட்டும் கண்டறிந்து அவர்களைக் கைதூக்கிவிடுவது சிரமமான காரியமாகி விடுகிறது. இதற்கு நல்ல உதாரணம், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள்.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இலவசத் திட்டங்களும் (விலையில்லா திட்டங்கள் என்கிறது அரசு), மலிவுவிலை திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே அண்மையில் நடைபெற்ற லோக்சபை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்ற கருத்தும் உண்டு.
இலவச கலாசாரம் துவங்கிய பின்னணி:

Free tv
திமுகவின் இலவச தொலைக்காட்சிப் பெட்டி திட்டம் துவக்கம்

தமிழகத்தில் இலவச கலாசாரத்தைத் துவக்கிவைத்தவர் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி தான். அவருக்கு முன்னரே பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை, புத்தகங்கள், மிதிவண்டி உள்ளிட்டவை வழங்குவதை எம்.ஜி.ராமசந்திரன், ஜெயலலிதா ஆகியோர் முதலவர்களாக இருந்தபோதே துவக்கி இருந்தாலும், சாமானிய மக்களுக்கு இலவசப் பொருள்கள் வழஙகப்பட்டது கருணாநிதி ஆட்சியில் தான். அவரது சமத்துவபுரம் திட்டம் கூட, திமுகவுக்கு சாதகமான வாக்காளர் படையை உருவாக்கும் நோக்கம் கொண்டதே.
கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் (2006- 2011) வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் மாநிலம் முழுவதும் 50 சதவீத மக்களுக்கு மேல் சென்று சேர்ந்தன. அதில் வேடிக்கை என்னவென்றால், தொலைக்காட்சிப் பெட்டி வாங்க வசதி இல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம், தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் மக்களின் அதிருப்திக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற விழிப்புணர்வால், அனைவருக்குமான திட்டமானது. அதன் காரணமாக, வசதி உள்ளவர்களும் கூட- வீட்டில் நவீன தொலைக்காட்சி வைத்திருந்தவர்களும் கூட- தமிழக அரசின் இலவச வண்ன தொலைக்காட்சிப் பெட்டியை வாங்க முண்டியடித்தனர். தமிழக அரசும், இருப்போர்- இல்லாதார் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவித்தது. இலவச சமையல் எரிவாயு இணைப்புடன் அடுப்பு வழங்கபட்டதும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான்.
அதன்மூலமாக, இலவச கலாசாரம் தமிழகத்தில் வேரூன்றியது. தவிர, எளியோருக்கு உதவ வேண்டும் என்ற திட்டத்தின் நோக்கமும் புதையுண்டது. அதாவது, தேர்தலில் மக்களின் வாக்குகளை வெல்வதற்கான உபாயமாக, முன்கூட்டியே வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் கையூட்டாக தொலைக்காட்சிப் பெட்டி மாறியது.
JeyaFree 3
விலையில்லா மடிக்கணினி திட்டம்

இந்த உபாயத்தை வெல்ல, அதிமுக தலைவி ஜெ.ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதே, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும் என்ற தேர்தல் பிரசார உறுதிமொழி. சொன்னது போலவே, தேர்தலில் வென்று முதல்வரானவுடன், இம்மூன்றையும் அளிக்கத் துவங்கினார் ஜெயல்லிதா. ஒரே வித்யாசம், கருணாநிதி காலத்தில் வழங்கப்பட்ட தொலைக்காட்சி  ‘இலவசம்’ என்று குறிப்பிடப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சியில் வழங்கப்படும் இலவசப் பொருள்கள்  ‘விலையில்லாப் பொருள்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
ஆனால், இப்பொருள்களுக்கு விலையில்லாமல் இல்லை. திமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 1000-க்கு வெளிச்சந்தையில் கிடைத்த்து போலவே, அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் சுமார் ரூ. 5,000-க்கு விற்பனைக்கு உடனுக்குடன் கைமாறுவதையும் காண முடிகிறது.
தற்போதைய சூழலில் மின்விசிறியோ, கிரைண்டரோ, மிக்ஸியோ இல்லாத வீடுகள் குறைவு என்பதால், வீட்டில் ஒன்றுக்கு மேல் இவற்றை வைத்திருப்பதை விட விற்பதே மேல் என்ற எண்ணத்துடன் இவை விற்கப்படுகின்றன. தவிர, இத்திட்டத்திலும், எளியோர் அடையாளம் காணப்படாமல், இருப்பவர்- இல்லாதவர் உள்ளிட்ட  அனைவருக்கும் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அரசு உண்மையில் எளியோர் மீது அக்கறை கொண்டிருந்தால் வருமான அடிப்படையில் இவற்றை ஏழைகளுக்கு மட்டும் வழங்க முடியும். ஆனால், அதனால் பிறரது அதிருப்தியைச் சந்திக்கும் திராணியின்றி, அனைவருக்கும் அவற்றை அள்ளி வழங்குகிறது அரசு. மதுரையில் இரவில் பலரது வாசல் கதவைத் தட்டிய பொற்கைப் பாண்டியன் கதையைப் போலத்தான் இது இருக்கிறது.
ஒரு மக்கள்நல அரசு, வாக்குகளின் அடிப்படையில் சிந்திக்காமல், ஏழை மக்களை மட்டும் கண்டறிந்து அவர்களை தரம் உயர்த்துவது தான் சரியாக இருக்கும். ஆனால், தேர்தல் அரசியலை மனதில் கொள்ளும் எவரும், ஏழைகளை மட்டும் கவனத்தில் கொள்ளும் துணிச்சல் இல்லாதவர்களாகி விடுகின்றனர். இதற்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே விதிவிலக்கல்ல. எது எப்படியோ, தமிழகத்தில் இலவச அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. இதன் வெற்றியைக் கண்டு, பிற மாநிலங்களும் இத்திட்டங்களை சுவீகரிக்க முயற்சிக்கின்றன.
விலையில்லாத் திட்டங்களின் பெருக்கம்:

JeyaFree 4
பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி திட்டம் 

தமிழகத்தில் தற்போது விலையில்லா நலத்திட்ட உதவிகள் பல வகைகளில் வழங்கப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. தவிர கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கணினி வழங்கப்படுகிறது.
2001-12 நிதியாண்டு முதல் 2013-14 நிதியாண்டு வரையிலான மூன்றாண்டுகளில் சுமார் 17 லட்சம் லேப்டாப் கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் திட்ட மதிப்பு ரூ. 2,500 கோடி. நிகழும் 2014-15 நிதியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து அதிமுக அரசின் பிரதானத் திட்டமான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி திட்டம் மாநிலம் முழுவதும் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கிராமப்புறங்களிலும் அடுத்து நகர்ப்புறங்களிலும் இத்திட்டம் சென்று சேர்ந்து வருகிறது.  இதுவரை 1.05 கோடி வீடுகளை இத்திட்டம் சென்று சேர்ந்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. அதிமுக ஆட்சியின் மீதமுள்ள இரு ஆண்டு காலத்திற்குள் மேலும் 35 லட்சம் வீடுகளை இத்திட்டம் சென்று சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டதிலும், உதகை, கொடைக்கானல் போன்ற குளிர்ப்பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்று, அப்பகுதிகளில் மின்விசிறிக்குப் பதிலாக விலையில்லா மின்சார வெப்பமூட்டி (ஹீட்டர்) வழங்கப்படுகிறது.
இது கலைஞரின் பொங்கல் பரிசு!
இது கலைஞரின் பொங்கல் பரிசு!

அடுத்ததாக தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமலாகியுள்ளது. இதன்படி, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் (அரை பவுன்) தங்கத்துடன் நிதி உதவியாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை பல்லாயிரக் கணக்கான பெண்கள் பலனடைந்துள்ளனர். தவிர, பார்வையற்றோர் திருமணத் திட்டத்தில், ரூ. 15,000 நிதியுதவியும் அரசால் வழங்கப்படுகிறது.
அதேபோல, ரேஷன் கடைகளில் தகுதியுள்ள 1.80 கோடி குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் தலா 18 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்த அரிசியின் தரமின்மை காரணமாக இத்திட்டம் முழுமையாகப் பயனளிக்கவில்லை. எனினும், வருமானத்திற்கே வழியில்லாத ஏழை மக்கள் பசியாற இத்திட்டம் உதவி வருகிறது. இத்திட்டம் மத்திய அரசின்  ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் பிரதிபலிப்பே. இத்திட்டத்திலும், தகுதியுள்ள பயனாளிகள் மட்டும் வடிகட்டப்படுவது, அரசின் திட்டம் தேவையானோர் அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும்.
ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருள்கள் திட்டம் வித்யாசமானது. இதனை வழக்கம்போல கருணாநிதி துவக்கிவைத்தார். இதனை அடுத்த நிலைக்கு ஜெயலலிதா கொண்டுசென்றிருக்கிறார். தைப்பொங்கலிட பச்சரிசி ஒரு கிலோ, அரை கிலோ வெல்லம், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய தொகுப்புப் பையை உதயசூரியன் சின்னத்துடன் இலவசமாக வழங்கி மகிழ்ந்தார் முந்தைய முதல்வர் கருணாநிதி. அதையே, கூட நூறு ரூபாய் (நோன்புக் காசு?) செலவுக்கு ரொக்கமாகவும் வழங்கி, ஜெயலலிதா உருவப்படத்துடன் தற்போதைய  ‘அம்மா’ ஆட்சி வழங்குகிறது. இந்த நூறு ரூபாயை வாங்க மாதம் ரூ. 20 ஆயிரம் சம்பாதிப்பவரும் ரேஷன் கடையில் வரிசையில் நின்றதைக் காண முடிந்தது. எல்லாம் இலவசம் படுத்தும் பாடு! :)
இது ‘அம்மா’வின் பொங்கல் பரிசு
இது ‘அம்மா’வின் பொங்கல் பரிசு 

முதியோர் உதவித் தொகையாக ரூ. 500 வழங்கப்பட்டு வந்ததை ரூ. ஆயிரமாக உயர்த்திய ஜெயலலிதா அரசு, 36 லட்சம் முதியோருக்கு இந்த உதவித்தொகையை வழங்கி வருகிறது. இவையல்லாது ஊனமுற்றோருக்கு உதவித் திட்டம், கைம்பெண் உதவித் திட்டம் உள்ளிட்ட பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
முந்தைய கருணாநிதி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதன் விளம்பரப்படத்தில் முதல்வர் படம் மட்டும் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டம் ஒருவகையில் ஏழை மக்களும் நவீன மருத்துவ சிகிச்சை பெற உதவினாலும், இதன் பலனை பெருநிறுவன மருத்துவமனைகள் துஷ்பிரயோகம் செய்வதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்திட்டம் அரசால் அவ்வப்போது மீள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பசுமை வீடுகள் திட்டம்:
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை  மக்களுக்கு பசுமை வீடுகளை தமிழக அரசு கட்டிக் கொடுத்து வருகிறது. சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளில், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையலறை, தாழ்வாரம் ஆகிய வசதிகளுடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பும் அமைக்கப்படுகிறது. 300  சதுர அடி அளவில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.
JeyaFree 5
பசுமை வீடு திட்டம்

இதற்கு முதலில் ஒரு ரூ. 1.80  லட்சமாக இருந்த நிதி, பின்னர் ரூ. 2.10  லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த பசுமை வீடுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட நிதியுடன் கழிப்பிடம் அமைக்க ரூ. 11 ஆயிரம் வழங்கப்படுகிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் இதுவரை பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் திமுக ஆட்சியில் செயப்டுத்தப்பட்ட சமத்துவபுரம் திட்டத்தின் மேம்பட்ட வடிவமே. எனினும், அரசியல்ரீதியான பயனாளிகள் தேர்வு இத்திட்டத்தில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தவிர, ஏழை விவசாயிகளுக்காக விலையில்லா ஆடு, மாடு வளர்க்கும் திட்டமும் தமிழகத்தின் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 6  மாத வயதுடைய 4 ஆடுகள் (3 பெட்டை 1 ஆண்) வழங்கப்படுகின்றன. மேலும் ஆடுகளுக்கு தீவனம் வாங்கவும், இருப்பிடக் கொட்டகை அமைக்கவும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆடுகள் நோய் தாக்கி இறந்தால் இழப்பீடு பெறும் வகையில காப்பீடும் செய்யப்படுகிறது. இலவச மாடு வளர்க்கும் திட்டம், ஆடு வளர்க்கும் திட்டம் அளவிற்கு அரசால் கவனம் கொடுக்கப்படவில்லை.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டமும் அதிமுக அரசின் கவர்ச்சித் திட்டங்களில் ஒன்று. 2001-2002 இல் தாழத்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சார்ந்த மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2005இல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
திருக்கோவில் அன்னதானத் திட்டம்
திருக்கோவில் அன்னதானத் திட்டம்

இத்திட்டத்தில் ஆண்டுதோறும் பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை பல லட்சமாகும். நடப்பு நிதியாண்டில், 2.86 லட்சம் மாணவர்களுக்கும், 3.57 லட்சம் மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கல், திருக்கோவில்களில்  அன்னதானத் திட்டம்,  மசூதிகளுக்கு ரமலான் நோன்பிற்கான இலவச அரிசி வழங்கும் திட்டம் ஆகியவையும் ஜெயலலிதாவின் கவர்ச்சி அரசியல் திட்டங்களில் முக்கிய இடம் வகிப்பவை.
அடுத்து, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ‘அம்மா’  திட்டங்கள் குறித்தும்,  அவற்றின் தாக்கம் குறித்தும் விரிவாகக் காணலாம். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழியை தமிழக அரசு மத்திய அரசு நிதியைக் கொண்டு எவ்வாறு வெற்றிகரமாக நிரூபித்து வருகிறது என்பதையும் அடுத்த பகுதியில் காணலாம் v.kalathur seithi .

நன்றி- தமிழ் இந்து.

Monday, 7 July 2014

 வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை . இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையை நம் மன்றத்தின் சார்பாக முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு.

முகப்பு பக்கம் | முதலமைச்சரின் தனிப்பிரிவு | கோரிக்கைப் பதிவு | கோரிக்கை நிலவரம் | உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | வெளியேறு
 
 
தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் தனிப் பிரிவு

 
 கோரிக்கை எண்  2014/789416/AH  கோரிக்கை தேதி  08/07/2014






 கோரிக்கை  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம், பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு சுகாதரக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாத அவலநிலை நிலவுகிறது. இதனால் மாணவர்கள் சுகாதாரமற்ற நீரை குடிப்பதன்காரணமாக வாயிற்று உபாதைகள் மற்றும் தோற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 


இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், தமிழகத்தில் தொடர்ச்சியாக கொல்லப்படுவதால், தமிழக பா.ஜ., தலைவர்கள் கவலையில் ஆழ்ந்திருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னால், அரவிந்த ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், வரிசையாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

மர்ம நபர்களால்... :

அது தொடர்பான போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்க, கடந்த ஒரு மாதத்துக்கு முன், சென்னை அருகில் ஆவடியில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி செயலர், சுரேஷ் குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அது தொடர்பான பதற்றம் அடங்குவதற்குள், நேற்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி செயலர் ஜீவராஜ், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் குடும்பப் பிரச்னையில்தான் கொல்லப்பட்டார் என சொல்லப்பட்டாலும், அவருக்கு தீவிரவாதிகளிடம் இருந்து, தொடர் மிரட்டல்கள் இருந்து வந்தது, என்றும் நெல்லை மாவட்ட இந்து முன்னணியினர் தெரிவிக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாக, இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள், தமிழகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டு வருவது, பா.ஜ., தலைவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது:

குறிவைத்து கொல்லும்...:

லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையான இடங்களில் வென்று, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பது, இந்து அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும், தீவிரவாதிகளாலும் தீவிரவாத அமைப்புகளாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.இந்து அமைப்புகளிலும், பா.ஜ.,விலும் யாரெல்லாம் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனரோ, அவர்களையெல்லாம் குறிவைத்து கொல்லும் காரியங்களில், அவர்கள் இறங்கி இருக்கின்றனர். அதோடு, இயக்க செயல்பாடுகளில், தீவிரமாக ஈடுபடும் அந்த நபர்களை கொல்வதன் மூலம், இந்தியா முழுவதும் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தவும், அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். மோடி அரசாங்கத்தை நிம்மதியாக செயல்பட விடக்கூடாது என்பதிலும், அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

பலம் பெறக்கூடாது:

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தை அவர்கள் குறி வைத்திருக்கின்றனர். காரணம், தமிழகத்தில் இந்து அமைப்புகளும், பா.ஜ.,வும் பலம் பெற்றுவிடக் கூடாது என்றும் எண்ணுகின்றனர். இதற்காக அவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொலை பட்டியலில், 30க்கும் அதிகமானவர்கள் இருப்பதாக, ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், பா.ஜ.,வில் இருக்கும் அத்தனை தலைவர்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். இருந்தும், திருவள்ளூர் சுரேஷ் குமார், சங்கரன்கோவில் ஜீவராஜ் ஆகியோரை பயங்கரவாதிகள் கொன்று விட்டனர். கடந்த 1ம் தேதி, வெள்ளையப்பனின் முதலாவது நினைவு தினம். அதேபோல வரும் 19ம் தேதி, ஆடிட்டர் ரமேஷ், இறந்த தினம் வருகிறது. இந்த இரண்டு தினங்களுக்குள், இரண்டு பேரை தீவிரவாதிகள் கொல்ல திட்டம் போட்டிருப்பதாக, கிடைத்த தகவல் படியே, கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதனால், அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால், பா.ஜ., மாநிலத் தலைவர் பணியை முழுமையாக செய்ய முடியவில்லை. அதனால், தமிழக பா.ஜ.,வுக்கு உடனடியாக புதிய தலைவரை கட்சித் தலைமை நியமிக்க வேண்டும்.அதன்பின், அவர் மாநில அரசுடன் பேசி, இந்த கொலை பயங்கரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர் v.kalathur seithi.

-தினமலர்.

புதுடில்லி: 'ஷரியத் நீதிமன்றம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல; அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடையாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நீதித்துறைக்கு இணையான, ஒரு அமைப்பு முறையை, முஸ்லிம்களின் ஷரியத் கோர்ட்டுகள் பின்பற்றுகின்றன. அதனால், ஷரியத் கோர்ட்டுகள் அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா என, கேள்வி எழுப்பி, விஷ்வா லோச்சன் மேதம் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், 'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
விசாரணைஇந்த பொதுநல மனு, நீதிபதிகள் சி.கே.பிரசாத் தலைமையிலான, உச்ச நீதிமன்ற, 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, முஸ்லிம்களின் தனிச்சட்டமான, ஷரியத் சட்ட விதிகளை பாதுகாக்கும் பொறுப்பில் ஈடுபட்டுள்ள, அகில இந்திய தனிச்சட்ட வாரியம் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் (பாத்வா) மக்களை கட்டுப்படுத்தாது. அது, முஸ்லிம் மத தலைவர்களின் கருத்துக்களே. அந்த கருத்துக்களை அமல்படுத்தும் அதிகாரம் எதுவும், அவருக்கு கிடையாது. ஒரு நபரின் விருப்பத்திற்கு மாறாக, தன் உத்தரவை, முஸ்லிம் மத தலைவர் அமல்படுத்த விரும்பினால், அதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.இவ்வாறு, அந்த வழக்கறிஞர் கூறினார்.
ஏற்றுக்கொள்ள முடியாதுஇந்நிலையில், இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தங்கள் முன் ஆஜராகாத அல்லது இல்லாத ஒரு நபருக்கு எதிராக, ஷரியத் நீதிமன்றங்கள், 'பாத்வா' என்ற உத்தரவுகள் பிறப்பிப்பது சரியானதல்ல; அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷரியத் நீதிமன்றங்கள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டவை அல்ல. அவற்றுக்கு சட்ட ரீதியான அந்தஸ்து எதுவும் கிடையாது.இந்த ஷரியத் நீதிமன்றங்கள், சில நேரங்களில் பிறப்பிக்கும் உத்தரவுகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், அப்பாவிகளை தண்டிப்பதாகவும் உள்ளது. அது, சரியல்ல. இஸ்லாம் உட்பட, எந்த மதமும், அப்பாவி நபர்களை தண்டிக்க அனுமதி வழங்குவதில்லை.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்v.kalathur seithi .

-தினமலர்.

வ.களத்தூர் முக்கியஸ்தர்   மறைந்த திரு.பரமசிவம் உடையார் அவர்களின் பேரனும், நம் விவேகானந்தர் இளைஞர் மன்ற பொறுப்பாளருமாகிய திரு.சத்தியபாலன் அவர்களின் திருமண விழா வ.களத்தூர் adm திருமண மண்டபத்தில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது .

மணமக்களுக்கு விவேகானந்தர் மன்றம் சார்பாக மனமகிழ் வாழ்த்துக்கள்...




Saturday, 5 July 2014

பெரம்பலூரில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளான்மைப்பொருட்கள்  கிடைக்கிறது... வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


சங்கரன் கோயில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவராஜ் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை இந்து முன்னணி வன்மையாக் கண்டிக்கிறது. கொலை செய்ய தமிழகத்தில் எந்த பயமும் இல்லை என்ற நிலையை கொலையாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை என்பது கவலை அளிக்கிறது.
கொலை நடந்த பிறகு தனிக்குழு, தனிப்படை அமைக்கும் காவல்துறை, கொலையாளிகளை உடன் பிடிக்கவும், தண்டிக்கவும் உடனடி நடவடிக்கையும் எடுத்தால் மட்டுமே கொலைகளைத் தடுக்க முடியும். குற்றம் செய்ய பயம் வரும்.
ஆனால் தமிழக காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு வேலை செய்கிறதா என்பதே தெரியவில்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமா இருக்கிறது.
இப்படிப்பட்ட கொடூர குற்ற செயல்கள் தமிழக முதல்வரின் பார்வைக்குச் செல்கிறதா என்பதை ஊடகங்கள் தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் காவல்துறை முதல்வரின் கீழ் உள்ளது. முதல்வரின் கண் அசைவிற்காக காவல்துறை காத்து நிற்கிறதா? அரசாங்கத்தின் அலட்சியத்தால் தனது கடமையிலிருந்து தவறுகிறதா காவல்துறை? என்ற கேள்விகள் எழுகின்றன.
கடந்த சில வருடங்களில் நடந்த படுகொலைகளையும், காவல்துறையின் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் தமிழகத்திலா இப்படிப்பட்ட நிலையா என்ற கேள்வி எல்லோரும் மனதிலும் எழும்! இதற்கு காவல்துறையோ, தமிழக முதல்வரோ பதில் சொல்லாமல் இருக்கலாம்? காலம் பதில் சொல்லும். என்பதை மறக்க வேண்டாம்! ஜனநாயகத்தில் மக்கள் தங்களது பதிலையும் ஆட்சியாளர்களுக்கு எதிராக தக்க நேரத்தில் பதிவு செய்வார்கள்!
காவல்துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், மக்கள் நடமாடும் இடங்கள் இவற்றில் படுகொலைகளை பகிரங்கமாக நிறைவேற்றிவிட்டு, நிதானமாக கொலையாளிகள் தப்பிக்கிறார்கள்.
இந்து முன்னணி இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்துகொள்வது எதனால்?
காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டால் அது பேராபத்தாகவிடும் என எச்சரிக்கிறோம்.
சாதாரணமாக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்யும் பெண்களிடம் கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்களே ஏன்? மக்கள் அரசு மீது நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்காக! ஆனால் நமது அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட படுகொலையின் மீது வாய் மூடி மௌனியாக நின்றால்,மக்கள் கோபவேசமாக மாறிவிடுவார்கள், நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!
எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்திரவிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமுதாய சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

அடுத்த பலிதானம் நாமாகவும் இருக்கலாம்... தயாராகுங்கள் இந்து அமைப்பு தலைவர்களே...

சங்கரன்கோவில் ஜீவா... இன்றைய பலிதானம்... இன்னும் எத்தனை பேரை பலிகொடுக்கலாம் என தீர்மானித்துள்ளதோ தெரியவில்லை இந்துமுன்னணி போன்ற இந்து மத அமைப்புகள் .

இந்து தலைவர்கள் படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தோடு அனுகாதவரை இதனை தடுத்து நிறுத்த முடியாது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி கொடுக்கும் ஆத்தா இந்து தலைவர்களுக்கு விலையில்லா  வாக்கரிசி திட்டத்தை அமல்படுத்துகிறது.சிறுபான்மை இஸ்லாமியனின் மூத்திரத்தை கூட குடிக்க தயங்காத ஆத்தா அரசு இனியும் இந்துக்களை காக்கும் என நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம்.

இந்த படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தில் அணுக இஸ்லாமியனுக்கு குண்டி கழுவும் ஜெயா அரசு செய்யாது என்பது ஏன் இந்து மத அமைப்பு தலைவர்களுக்கும் , தமிழக பாஜக தலைவர்களுக்கும் தெரிவில்லை... அல்லது தெரிந்தே மௌனமாக இருக்கிறார்களா...?

இவ்வளவு படுகொலைகள் நடந்தபிறகும் ஏன் மத்திய பாஜக  அரசின் தலையீட்டை வற்புறுத்தவில்லை...? ஜிகாதிய படுகொலைகள் சர்வதேச தொடர்பு கொண்டவை. அதனை விசாரிக்க தமிழக காவல்துறையால் இயலாத காரியம் மட்டுமல்ல... இப்படுகொலைகளை கள்ளக்காதல், கந்துவட்டி  என காரணம் கூறி ஊற்றி மூட முயன்றதும் இதே தமிழக காவல்துறைதான்.

மத்திய அரசின் தேசிய தீவிரவாத தடுப்பு பிரிவோ... தேசிய புலனாய்வு அமைப்போ அல்லது CBI யோ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த முடியும். அவர்களால் மட்டுமே இஸ்லாமிய  ஜிகாதி படுகொலைகளை திறம்பட விசாரிக்கமுடியும் என்பதோடு அதன் சர்வதேச தொடர்புகளையும் கண்டறிய முடியும். கேரளாவின் மலப்புரம் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானிய தலிபான் தீவிரவாதிகள் மதரசாக்களில் தங்கி ஜிகாதி சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் என்றால், பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு இலங்கை வழியாக இஸ்லாமிய தீவிரவாதிகளை தமிழ்நாட்டுக்குள் அனுப்பி சதிவேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்க்கு சமீபத்திய உதாரணம் கடலூர் மதரசாவில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு சதிவேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதி கைதுசெய்யப்பட்டது .

 சரி என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது... அடுத்த பலிதானத்திற்க்கு காத்திருப்போம். அடுத்து நாமாகவும் இருக்கலாம்.


Monday, 30 June 2014



களவு போகும் தண்ணிர்
( முருகன்குடி - பெரம்பலூர் மாவட்டம்)

பெரம்பலூர் மாவட்டம் மிகவும் வறட்சி மிகுந்த
மாவட்டம் என அனைவருக்கும் தெரிந்ததே. அரசும், அரசு அதிகாரிகளும் கூட்டு குடி நீர் திட்டம் எனும் பெயரில் மக்களை
ிசை திருப்புகின்றனர். இது வறட்சிக்கு நிரந்தர தீர்வாகாது. கூட்டு குடி நீர் திட்டம் மூலம்
பல மயில்களுக்கு அப்பால் பல கோடி செலவில் சிலருக்கு மட்டுமே தேவையான தண்ணீரை வாரி வழங்கி
மாவட்ட நிர்வாகம், எப்பொழுதும்  மக்கள் தேவயை பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் பெரம்பலூரிலிருந்து சில கிலோ மீட்டரில் உள்ள முருகன் குடி எனும் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னால்
குவாரிக்கு விடபட்ட மலை, அளவுக்கு அதிகமாக தோண்டியாதாக கூறப்படுகிறது. அப்படி தோண்டியதால்
வற்றாத ஜீவன் போல ஊற்று எடுத்து கடல் போல காட்சி அளிக்கிறது.
சில ஆண்டுகளாக மக்களுக்காக குறைந்த அளவிலும், பணம் கொழிக்கும் கல்வி நிறுவனுங்களுக்கு மறை முகமாக குடிநீரை
வாரி வழங்கியுள்ளது. ஆனால் தற்பொழுது மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை என முழுவதும் தனியார் கல்வி
நிறுவனங்களுக்கே தாரை வார்த்துள்ளது. அந்த பகுதி மக்கள் கூட அந்த தண்ணீரை பருக முடியாத நிலை உருவாகியுள்ளது.
என் நண்பர்களுடன் அங்கு சென்ற நான் அந்த தண்ணீரை பருகிய போது சுத்திகரிகபட்ட தண்ணீரை விட
சுவையாக உள்ளது. தினமும் பல லட்சம் தண்ணீர் எடுத்தாலும் இரவுக்குள் ஊறி விடும் என அங்கு உள்ள காவலாளி
மகிழ்ச்சியுடன் கூறினார். தண்ணீர் இல்லாத காவிரியில் தண்ணீர் எடுக்க பல கோடி செலவு செய்யும் அரசும் மாவட்ட
நிர்வாகமும், சில லட்சம் செலவில் வற்றாத இந்த அமிர்தத்தை தனியாருக்கு ஏன் தாரை வார்த்தது.
சாதாரன மக்களின் சிறு பிரச்சனைகளில் கூட கடும் நடவடுக்கை எடுக்கும் அரசு துறைகள் நடவடிக்கை மகிழ்ச்சியே.
ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசும், அரசு அரசு துறை அதிகாரிகளும் என்ன செய்ய போகிறது.
இந்த செய்தியை ஊடகங்களும், நாளிதழ்களும் வெளியிட்டு மக்களை விழிப்படைய செய்ய வேண்டும் என
கேட்டு கொள்ளபடுகிறது. சமூக ஆர்வலர்கள் இதை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
 
 

Sunday, 29 June 2014

நேற்று மாலை சென்னை போரூர் அருகே மொலிவாக்கம் பகுதியில் 11 மாடி கட்டிடம் இடித்து விழுந்தது. இடிபாடிகளின் இடையே பல கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் RSS அமைப்பைச்சேர்ந்த தொண்டர்கள் மீட்ப்புப்பணியில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளை அகற்ற கொண்டுவரப்பட்ட கிரேன்களுக்கு வழியமைப்பு செய்வது தொடங்கி மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசெல்லுதல், காஸ் வெல்டிங் செய்ய மீட்ப்பு பணிக்கு உதவியாக இருப்பதுவரை இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்.
கேஸ் சிலிண்டருடன் கம்பிகளை வெட்டியெடுக்க உதவியாக.
தீயணைப்பு வீரர்களுடன் RSS தொண்டர்கள்.



Friday, 27 June 2014

கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவிய நம் வ.களத்தூரில் இன்று மாலை மழை பெய்தது.

தமிழக அரசே பாரபட்சமாக நடக்காதே! ஆடி மாதம் அம்மன் கோயிலுக்கும் கூழுக்கு அரிசி வழங்கு! 

தமிழக முதல்வரின் ஆணைப்படி 3000 மசூதி / தர்க்காகளுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழக அரசின் பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பசித்திருக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, கூழ் அளிப்பது நல்ல விஷயம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மசூதிக்கு அரிசி தரும் தாயுள்ளம் ஏன் பல்லாண்டுகளாக ஆடிக்கூழ் ஊற்றும் அம்மன் கோயில்களுக்கு அரிசி வழங்குவதில்லை?

தமிழக முதல்வர் தாம் பதவி ஏற்றபோது, எடுத்துக்கொண்ட பிரமாணத்தில் இறைவன் மீது ஆணையாக தாம் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மசூதிக்கு மட்டும் அரிசி வழங்கும் செயல் பாரபட்சமாக இல்லையா?

அறநிலையத்துறையின் இரும்புக்கோட்டையில் சிக்கி சீரழியும் திருக்கோயில்களில் கல்லா கட்டும் சில நூறு கோயில்களில் மட்டும் அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக முதல்வர் அதனை அறிவித்தார் என்பது மட்டுமே அவரது சாதனையின் பங்காக இருக்கலாமா? அன்னதான திட்டத்தை நடத்திட யானை உருவில் பக்தர்களை பயமுறுத்தும் பெரிய பெரிய உண்டியல், அதுவும் கோயில் பணத்தில் வைத்து பக்தர்களிடம் வசூலித்தே அன்னதானம் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் தனது ஆணைக்கு மதிப்பளிக்க தமிழக அரசின் பொது விநியோகத்துறையிலிருந்து தேவையான நல்ல அரிசியை அளித்திருக்க வேண்டாமா?

தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள ஆடி கூழுக்கு அம்மன் கோயிலுக்கும், அன்னதான திட்டம் செயல்படுத்தம் திருக்கோயில்களுக்கும் தேவையான அரிசியை அளிக்க உத்திரவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது


 நம் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகிலுள்ள ஊட்டத்தூர் சிவன் கோவிலின் சிறப்புகளை அருகிலிருந்து அறியாமல் இருக்கிறோம்.... ஒருமுறையாவது சென்று தரிசிப்போம்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற தலத்தில் உள்ள அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி.

பஞ்சநத நடராஜர்.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி.இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது.
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.
சிவகாமி அம்மையும் அழகோ அழகு.


 தனிப்பாடல் என்று இல்லாமல் மற்றொரு பாடலில் வைத்து பாடல் பெற்ற வைப்புத்தலம்.

ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்).

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம் உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணலாமே.

-அப்பர் சுவாமிகள் தேவாரம்.


இறைவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் இருந்தது வியப்பாக தோன்றுகிறது


நன்றி-  https://www.facebook.com/saravanan.sivathanu
 https://www.facebook.com/malar.mannan.923724

Thursday, 26 June 2014


 
அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.


எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.


- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


Monday, 23 June 2014


 தனிமனித பிரச்சினை காரணமாக செய்யப்பட கொலை போன்ற தோற்றத்தை சுரேஷ்ஜி வரை நிறுவ தமிழ் ஊடகங்களும் தமிழக ஓட்டுபொறுக்கி முதவரும் முயலுகிறார்கள். மக்களை மட்டுமல்லாது பாஜகவினரையும் நம்ப வைக்கும் வேலையில் அவர்கள் ஜெயித்துவிட்டதாகவே தோன்றுகிறது.பாஜகவின் அறிவு கொழுந்துகளில் ஒருவர் எனக்கருதப்படும் தமிழிசை யின் status அதைத்தான் காட்டுகிறது.

அர்ஜுன் சம்பத் கூறுவதுபோல் இது இஸ்லாமிய ஜிகாதிகளின் ஒரு சதிவேலை என்று காவல்துறையும் , காவல்துறைக்கு ஏவலாளியாக இருக்கும் ஆத்தாவுக்கும் தெரியாமல் இல்லை . ஆனால் தமிழக இந்து தலைவர்கள் கொல்லப்படும் விசயத்தை ஜிகாதிகளின் சதிவேலையாக கருதி நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் இஸ்லாமியர்களின் ஒட்டு கிடைக்காது என்று கருதி திசைதிருப்பும் வேலையில் இரங்கியிருக்கிறார்கள் .

இந்த உண்மை தமிழக பாஜக தலைவர்களுக்கு தெரியாமல் போனதா.. அல்லது தெரிந்தே மௌனமாக இருக்கிறார்களா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. சுரேஷ்ஜி படுகொலையை தமிழக பாஜக தலைவர்கள் ஏன் CBI க்கு மாற்றக்கூடாது என்று கேட்கவில்லை.......? சரி அவர்கள்தான் கேட்கவில்லை என்றால் இந்துமுன்னணி போன்ற பாதிப்புக்குள்ளான இந்து அமைப்பு தலைவர்கள்கூட இதுபற்றி வாய் திறக்காது வருத்தமளிப்பதாக உள்ளது.

சுரேஷ்ஜிக்கு முன்னர் கொல்லப்பட்ட வர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட பண்ணா இஸ்மாயில் கூட்டத்தினால் என்றால், அவர்கள் சிறையில் இருக்கும்போது யார் சுரேஷ்ஜியை கொன்றிருக்க முடியும்... என்ற வினா நம் மனதில் இயல்பாக எழுவதில் வியப்பில்லை.

நேற்று சேலம் நீதிமன்றத்தில் மூன்று முஸ்லிம்கள் குஜராத்தில் பாஜக கட்சித்தலைவரை கொலை செய்தது தொடர்பாக சரணடைந்தார்கள் என்ற செய்தியை கூர்ந்து கவனிக்கும்போது இந்து தலைவர்கள் கொலைபிரச்சினை என்பது இந்திய அளவிலானது என்பது மட்டுமல்லாது இது மிகப்பெரிய இஸ்லாமிய ஜிகாதிய சதித்திட்டத்தின் ஒரு அங்கம்தான் சுரேஷ்ஜி படுகொலை என்பது தெரியவருகிறது. அதோடு எந்தஒரு அடித்தளமும் இல்லாமல் குஜராத்தில் கொலைசெய்துவிட்டு சேலத்தில் சரணடையவேடிய காரணம் இருப்பதற்கில்லை. ஏற்கனவே கேரளா முஸ்லிம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதையும்,  இந்து தலைவர்கள் கொலைசெய்யப்படும் சம்பவங்களையும் தொடர்பு படுத்திபார்க்கும்போது இது மிகப்பெரிய ஜிகாதி சதித்திட்டம் என்பதை நாம் அறியலாம்.

சமீபத்தில் உத்திர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும்  உத்திராகண்ட் மாநிலங்களைச்சேர்ந்த பாஜக மற்றும் இந்து மத இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டுவரும் சம்பவங்களை  இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாதி சத்திட்டம் என்ற முறையில் அணுகினால் மட்டுமே இதற்க்கு தீர்வு காணமுடியும். அகில இந்திய அளவில் விரவிக்கிடக்கும் இந்த ஜிகாதி சத்திட்டங்களை மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்போ, தேசிய தீவிரவாத தடுப்பு அமைப்போ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கண்டு களைய முடியும். பண்ணா இஸ்மாயில், போலிஸ் பக்ருதின் கூட்டம் தமிழகத்தில் கொலைகளை நிகழ்த்திவிட்டு ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்ததை நாம் மறந்துவிடலாகாது என்பதோடு அவர்கள் பிடிபட்டதாலேயே இப்படுகொலைகள் நின்றுவிடவில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

தமிழக காவல்துறை உண்மையான கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் என நாம் நம்பவும் முடியாது. அரவிந்த் ரெட்டி கொலையை கூலிப்படை செய்தது என்று கதைகட்டியதோடு கள்ளக்காதல்தான் காரணம் என கூறியவர்கள் தானே இந்த காவல்துறை.

இறுதியாக இந்த ஜிகாதி படுகொலைகளை மத்திய அரசின் புலனாய்வுத்துறைகள் விசாரித்தால் மட்டுமே  வரும்காலங்களில் இந்து மத அமைப்பு தலைவர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும். இதை செய்ய தமிழிசை... பொன்னார் போன்ற பாஜகவினர் மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள்... இது நடக்காவிட்டால் மறுபடியும் மற்றொரு தலைவர் கொல்லப்படும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கவேண்டியதுதான் .



சென்னையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் குடும்பத்திற்கு, வேலூர் தங்ககோவில் நாராயணி பீடம் சார்பில் ரூ.5 லட்சம் கல்வி நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து நாராயணி பீட மேலாளர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் சக்தி அம்மாவால் கடந்த 20 ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களும், வித்யா நேத்ரம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்வி படிப்பதற்கு நிதிஉதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 18–ந் தேதி சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணியின் திருவள்ளூவர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார்.
அவரின் 2 பெண் குழந்தைகளின் கல்வியை தொடர்ந்து படிப்பதற்கு வசதியாக, வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தை வழங்க ஸ்ரீநாராயணிபீட அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கல்வி நிதியுதவி காசோலையை அடுத்த வாரத்தில் சுரேஷ்குமார் குடும்பத்தினரிடம் சக்தி அம்மா வழங்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-மாலைமலர்.

பெரம்பலூரில் ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தீரன் நகர் எதிரே ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த மே 4-ம் தேதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. கடந்த 18-ம் தேதி தொடங்கிய விழாவையொட்டி, 19-ம் தேதி பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து முளைப்பாரி ஊர்வலமும், 20-ம் தேதி யாகசாலை பூஜையும் நடைபெற்றன. 
21-ம் தேதி 2-ம் கால யாகபூஜை, இரவு பக்தி மற்றும் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை காலை 4-ம் கால பூஜை, தீபாராதனை, காலை 9 மணியளவில் கலசங்கள் புறப்பாடு, 10 மணிக்கு விமான கோபுரம் மற்றும் மூல தேவர்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. மதியம் மகா அபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் ஆ. கலியபெருமாள் உள்பட பல்வேறு பகுதிகளின் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.