பெரம்பலூர்
மாவட்டத்திற்கான பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவிலான
இணையதளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள்
துவக்கி வைத்தார்.
பெரம்பலூர்
மாவட்டத்திற்கான பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவிலான
இணையதளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கென்று www.perambalur.nic.in
என்ற முகவரியில் பிரத்தியேக இணையதளம் செயல்பட்டு வருகிறது. தற்போது தேசிய
தகவல் மையத்தின் மூலம் புதிய தொழில் நுட்பத்துடன் பல்வேறு சிறப்பு
அம்சங்களுடன் கூடிய இணையதளமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தினை
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி
வைத்தார்.
இந்த
இணையதளத்தில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்புடைய அனைத்து தகவல்களும்
இடம்பெற்றிருக்கும். மேலும் முக்கியச்செய்திகள், அனைத்து அலுவலர்களின்
தொலைபேசி எண்கள், பெரம்பலூர் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த
விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களும், முக்கியமான
திட்டங்கள் குறித்தும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தேவையான தகுதிகள்
குறித்த விவரங்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும்
ஆன்லையின் மூலம் பல்வேறு தேவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பங்களை
பெறுவதற்கான இணையதள முகவரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய்
அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களின் அன்றாட
நிகழ்வுகள் குறித்த செய்திகளும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
பொதுமக்கள் இந்த இணையதளத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட
ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்
போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கி.கண்ணதாசன், தேசிய
தகவல் மைய அலுவலர் திரு.ரமேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.
0 comments:
Post a Comment