Saturday, 26 April 2014


வாக்கு எண்ணிக்கை மே.16-ம் தேதி வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அரசு நிர்வாகம் முடங்கிப் போய் மக்கள் பெரும் பாதிப்புள்ளாவார்கள் என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்.24-ம் தேதி நடைபெற்ற 2014 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட ஏப்.5-ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் பலவ்ேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த தேர்தல் நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் மே.28-ம் தேதி வரை இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அமைச்சர்கள், அலுவலகம் செல்லலாம். அதிகாரிகளை சந்திக்கக்கூடாது. அலுவலகம் செல்ல மட்டுமே அரசு வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிய அறிவிப்புகள் மற்றும் ஆணைகள் எதையும் அரசு பிறப்பிக்க கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் முறைகேடு ஏற்படாமல் இருக்க தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் ஏப்.24-ம் தேதியே தேர்தல் முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை வரை, வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் அமைச்சர்கள் தொடர்பு கொள்ளக்கூடாது என தெரிவித்தால் அது நியாயமாக இருக்கும். ஆனால் மேலும் ஒரு மாதத்திற்கு இந்த கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளதால், அரசு நிர்வாயம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தேர்தல் ஆணையம் முடக்கி வைப்பதற்கு சமமாகும். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு மேல் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஒரு மாதம் அரசு நிர்வாக முடங்கிப் போனால் பொதுமக்களுக்கு தான் பெரும் வேதனையை தரும். மக்கள் நலனுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி.

0 comments:

Post a Comment