பிரதமர் மோடி, அனைவரும் வெறுக்கும் தன்மையில் இருந்து தன்னை நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக மாற்றிக் கொண்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் சசிதரூர் மோடியை வெகுவாக பாராட்டி உள்ளார். தி ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் தான் எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி பக்கம் சாயும் காங்கிரஸ் : அனைவரின் குற்றச்சாட்டுக்களுக்கும், வெறுப்புக்கும் ஆளான மோடி, தற்போது நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக திகழும் வகையில் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார். தனது முரட்டு தனமாக பிடிவாதத்தின் காரணமாக காங்கிரஸ் அவருடன் ஒத்துப் போக தவறிவிட்டது; இந்து மதவெறி கட்சி என்ற வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பா.ஜ.,வை ஆட்சி அமைக்கும் தகுதி பெற்ற தன்மையுடைய கட்சி என்ற இடத்திற்கு கொண்டு சென்றவர் மோடி; பா.ஜ., வின் மொழியையும், தன்மையையும் மாற்றி அமைத்துள்ளார் மோடி; மோதல்கள், பிரச்னைகள் ஆகியவற்றின் அப்பாற்பட்ட பாதையில் மோடி பயணிக்க துவங்கி விட்டார்; இந்தியாவில் மதரீதியாக சிறுபான்மையினராக உள்ள மக்கள் தங்களுக்கு எதிரானவர்களை கண்டு கொள்வார்கள்; அவர்களின் விமர்சனங்களுடன் நட்பு வைத்துக் கொள்வர். இவ்வாறு சசிதரூர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசுக்கு வரவேற்பு: நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிதரூர், நாங்கள் அரசிடம் இருந்து இணக்கமான நிலையை கோரியதற்கு அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது; நாங்கள் எதிர்க்கட்சி தரப்பில் இருப்பதால் அரசு ஒப்புதல் அளிக்கும் விவகாரங்களை கண்மூடித்தனமாகவும், பிடிவாத போக்குடனும் எதிர்க்க மாட்டோம்; தனக்கு ஓட்டளிக்காதவர்களாக இருந்தாலும் அனைத்து இந்தியர்களுக்கும் தான் பிரதமராக இருப்பேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்; இது போன்றதொரு வார்த்தைகள் அவரிடம் இருந்து வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை; அநேகமாக மோடி தனது 2ம் பகுதியில் இறங்கி உள்ளார்; ஆனால் மோடியின் முதல் பாகம் மீண்டும் திரும்புமானால், பிரிவினையை ஏற்படுத்துவது போன்று அவரோ அல்லது அவரது அரசோ செய்தால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் v.kalathur seithi .
-தினமலர்.
0 comments:
Post a Comment