Sunday, 1 June 2014


 வ.களத்தூரில் குறைந்த மின்னழுத்தத்தால் கூடுதல் மின் இணைப்பு வழங்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதில் நம் பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கவேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வ.களத்தூர் பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க அரசு முடிவுசெய்துள்ளது.

துணை மின் நிலையம் அமைய உள்ள மற்ற இடங்கள்:

பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த மின்னழுத்தத்தால் ஏற்படும் மின்வெட்டுப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும், கூடுதல் மின்இணைப்புகள் வழங்கிடவும் ஏதுவாக பேரளி, எசனை, பென்னக்கோணம், வெண்மணி, அ.மேட்டூர், நன்னை, அசூர், கூட லூர், மேட்டுப்பாளையம், நெற்குணம், வ.களத்தூர், புதுக்குறிச்சி ஆகிய 12இடங்க ளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் துணைமின்நிலையங்கள் அமைக்க அரசுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கி நடைபெறவுள்ளது v .kalathur seithi .

0 comments:

Post a Comment