வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் ரகுமான் அவர்களின் மகள் சபியா பானு கடந்த வருடம் வாகன விபத்தில் மரணமடைந்தார். அவரின் நினைவாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் கலையரங்கம் அமைக்க முடிவுசெய்து ரகுமான் அவர்களின் பங்களிப்புடன், கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதாக அறிகிறோம்.
வ.களத்தூர் மதரீதியாக மிகவும் பதற்றமான ஊராகும். கடந்தவருடம் இந்து-முஸ்லிம்களிடையே மோதல்கள் ஏற்பட்டது நினைவிருக்கலாம். இன்றளவும் இந்துக்களின் பயன்பாட்டில் இருந்துவரும் இடம் தொடர்பாக தற்போதும் பிரச்சினை இருந்துவருவது நாம் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் விபத்தில் மரணமடைந்த சபியா நினைவாக வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் அமைக்கும் இடத்தில் ஒருசாராருக்கு சார்பாக மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வதாக இந்துக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. அரசுக்கு சொந்தமான ஒரு பள்ளியில் மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடந்துகொள்ளவேண்டும் என்பதே வ.களத்தூர் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...
0 comments:
Post a Comment