Tuesday, 5 September 2017


https://m.facebook.com/vkalathur.seithi/photos/a.240198313006967.1073741828.240160529677412/473714592988670/?type=3&source=48

வ.களத்தூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் வகையறா மற்றும் அருள் மிகு ஸ்ரீ செல்லியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் , அருள் மிகு ஸ்ரீ ராயப்பா சுவாமிகளுக்கு திருவிழா நடைபெற உள்ளது...

வரும் வெள்ளி 08.08.2017 அன்று மாலை குடி அழைப்பு மற்றும் பொங்கல் மாவிளக்குடன் திருவிழா தொடங்குகிறது.

சனி 09.09.2017 அன்று காலை மாரியம்மனுக்கு அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தும் நிகழ்வு வ.களத்தூர் தேரோடும் ஊரை சுற்றி ராஜவீதியில் நடைபெறும். மாலை பொங்கல் மாவிளக்கு நடைபெறுவதோடு அன்று இரவு வானவெடிக்கை மேளா தாளம் மற்றும் கலை நிகழ்சியுடன் சுவாமி.ஊர்வலம் ராஜவீதியில் பெறும்.

ஞாயிறு 10.09.2017 அன்று காலை மஞ்சள் நீருடன் விழா இனிதே நிறைவடைய உள்ளது... அனைவரும் வருகை.புரிந்து சுவாமி அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

Monday, 28 August 2017

விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு பெரம்பலூர் நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 20 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகர் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப் பட்டது...















Saturday, 26 August 2017


கொல்கத்தா

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது. 

இந்த் வழக்கு தொடர்ந்தவர்களில்  மேற்குவங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணும் ஆவார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம் இவருக்கு விடிவு கிடைத்து விடும் என நினைத்தால் அது நடக்கவில்லை. மீண்டும் அவருடைய துன்பம் தொடருகிறது.

இஷ்ரத்தின்   குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பக்கத்தில் உள்ளவர்கள் , நீதிமன்றத்தில் வழக்கு எதிராக போராடி அவளை கோபமாக பார்க்கிறார்கள்  அவளை ஊரைவிட்டே ஒதுக்கிவைக்க  முடிவு செய்து உள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததில் இருந்து, எனது சொந்தங்கள் மற்றும் அண்னை வீட்டாரிடம் இருந்து என்மீது அவமதிக்கும் கருத்துகள் கற்றும் என்னை களங்கபடுத்தும் விமர்சனங்கள் கூறப்படுகிறது என இஷ்ரத் கூறினார்.

அவருடைய அண்டை வீட்டாரில் பலர் அவரை  அழுக்கு பெண் என்று அழைத்தார்கள். அவர் ஆண்களின் எதிரி, மற்றும்  காபீர் என  அவர்களில் பெரும்பாலானோர் அவரிடம் பேச மறுத்துவிட்டனர்.

இஷ்ரத்தின் 15 ஆண்டு கால திருமண வாழ்க்கை ஏப்ரல்  2015 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.  அவரது கணவர் துபாயில் இருந்து  போன் மூலம் அழைத்து மூன்று முறை தலாக் கூறினார்.பின்னர்  மீண்டும் விரைவில் திருமணம் செய்து கொண்டார்.

அவரது கணவர் மூன்று மகள்களுக்கு தாயான  அவரை அவமானப்படுத்தி, தொந்தரவு செய்ததாக" இஷ்ரத் கூறினார், மேலும்  கணவர் தனது சகோதரருடன் ஒரு "உடல்ரீதியான உறவை" வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார் . 2014 இல் ஒரு மகன் பிறந்த போது, அவரது கணவர் இன்னொரு பெண்மணியை மணம் செய்ய முடிவு செய்து இருந்தார்.
-தின தந்தி.

Friday, 25 August 2017

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழி பாடு செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வ.களத்தூர் பழைய காவல் நிலையம் எதிரில் விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி தோறும் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடை பெற்று வந்தது. ஆனால் சில வருடங்களாக பல காரணங்களால் விநாயகர் சிலை வைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் வ    .களத்தூர் இள  வட்டத்தின் முயற்சியால் மேலத்தெரு மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு திரளான மக்கள் வழிபட்டு வருக்கினறனர். 



பெரம்பலூர் மாவட்டம் பெண்ணக்கோணம் வடக்கு (லெப்பை குடிகாட்டில்) வெண்கல சிலை விநாயகர் ஊர்வலம் ம ங்கள மேடு டி எஸ் பி பாதுகாப்பு தர ஊர்வலம் கோலாகலமாக நடை பெற்றது... ஊர்வலதில் தப்பாட்டம் முழங்க விநாயகர் ஊர்வலம் நடை பெற்றது..




Tuesday, 25 July 2017

அரும்பாவூரில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முகமது யாசர் என்ற காம கொடூரனை பஞ்சாயத்து நடத்தி வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை விடுத்துள்ளது...



பெரம்பலூர்-எளம்பலூர் ரோட்டில் உப்புஓடை அருகே ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இங்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த வளாகத்தில் கட்டிட விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், வடமாநிலத்திலிருந்தும் வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள் கேண்டீன் அருகே கீற்று கொட்டகை அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் அந்த தொழிலாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தங்கியிருந்த கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீயால் கீற்று கொட்டகை கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதன் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போது கீற்று கொட்டகையினுள் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் குண்டு வெடித்தது போல் அங்கு சத்தம் கேட்டது.
இதைக்கண்ட அந்த கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் எரிந்து கொண்டிருந்த கீற்று கொட்டகையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கீற்று கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீ விபத்தில் கொட்டகையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மொபட் ஒன்று எரிந்து நாசமானது. மேலும் கட்டிட தொழிலாளர்களின் சமையல் பாத்திரங்கள், உடைமைகள், அரிசி-பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மட்டம் பார்க்க பயன்படுத்தப்படும் கட்டிட தொழில் உபகரணங்களும் சேதமடைந்தன. தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என அந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது அந்த கீற்று கொட்டகையினுள் ஆள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் எரிந்து போன கீற்று கொட்டகையை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கட்டைகளை எரித்து சமையல் செய்யும் போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இந்த முடிவின்படி அரசு மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் எல்லாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டு இருப்பதும் இந்த கொள்கையின் அடிப்படையில் தான். இது தவிர ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்ததற்கு ஏற்ப தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை அப்போது இருந்த தி.மு.க. அரசு வெளியிட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்க வேலைகளும் நடந்தன. 2011-ம் ஆண்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் தான் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கும் பொறுப்பு டீன் ஆக நியமிக்கப்பட்டார். ஆனால் காலச்சுழற்சியினால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே துறையூர் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 70 டாக்டர்கள், 100 செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக(பொறுப்பு) உள்ள அனிதா தான் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அமைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த சமயத்தில் விபத்தின் போது தலையில் படுகாயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எந்திரம் மருத்துவமனையில் இல்லை. மேலும் தீக்காயத்துடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்கவும், மூளைநரம்பியல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றுக்கும் நவீன வசதிகள் இல்லை. புற்றுநோய் பாதிப்பு குறித்து டாக்டர்கள் கண்டறிந்தாலும், நோயாளிகளின் சதைக்கூறு செல்லினை ஆய்வு செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிமுறைகளை கூறி சிகிச்சைக்காக பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி கட்டு வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் திட்டத்தை உடனே தொடங்கவேண்டும். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகளை தொடங்கி அதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கவேண்டும். கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி தொடங்குமா? என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு தமிழக அரசு சரியான பதில் அளிக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டப்படி உணவு வியாபாரிகளுக்கு 5.8.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங் கப்பட்டு விட்டது. எனவே தற் சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவு வியாபாரிகள் தங்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப ரூ.100 அல்லது ரூ.2,000 செலுத்து சீட்டு (சலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி, www.fo-o-d-l-i-ce nis-i-ng.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகலுடன் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பித்து கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிம எண் பெறுவதோடு அபராத தொகையினையும் தவிர்க்கலாம்.
மேலும் வணிகர்கள் தங்கள் வணிக கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்த வட்டங்களில் இ – சேவை மையங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு விற்பனையாளர் களும், மாணவ மாணவிகளும் தங்களது உணவுப்பொருட் களின் தரம் குறித்து புகார் செய்வதற்கு உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அவர் களுக்கு 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு கட்செவி (வாட்ஸ்-அப்) மூலமாக புகார் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப் படும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நட வடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றது.

Sunday, 23 July 2017


அணுக்கூரில் வயதான முதட்டியிடம் திருட முயன்ற கொள்ளையடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து வெளுத்தனர்...

Thursday, 20 July 2017

 பொன்னார் மூலம் சிறுவாச்சூருக்கு விடிவுகலாம் கிடைக்கிறது
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மூலம் தீர்வு கிடைக்க உள்ளது. சிறுவாச்சூரில் அமைந்துள்ள தே சிய நெடுஞ்சாலை பாலம் இல்லாத காரணத்தால் பலரை விபத்து மூலம் காவு வாங்கியுள்ளது.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டினால் மட்டுமே இதற்க்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் ஏங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்குகு முன் பேரம்பலுருக்கு வருகை புரிந்த போது பொது மக்கள் பாலம் கட்ட கோரிக்கை வைத்தனர். அப்போது பாலம் கட்ட பொன்னார் உறுதி அளித்த நிலையில் , தேசிய நெடுஞ்சாலைத் துறை சிறுவாச்சூர் பகுதியில் பாலம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. vkalath u r seithi. 
பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் பாஸ்போர்ட் சேவை மையம் ஆகிறது. இனி பாஸ்போர் புதுப்பித்தல் விண்ணப்பித்தால் போன்ற சேவைகளை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தலைமை தபால் அழுவலகத் தை அணுகி பயன் பெற முடியும். vkala thur seithi. 

Monday, 8 May 2017


வ.களத்தூர் தேரடி திடலில் அமைந்துள்ள மண்டபத்தில் அனைத்து கோவில்களின் வாகனங்கள் வைத்து பாதுகாப்பதோடு அல்லாமல் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடம் சில சமூக விரோதிகளால் தேரடி மண்டபம் தீ வைத்து கொழுத்தப்பட்டது. சுவாமிகளின் வாகனங்கள் , அய்யப்ப சுவாமி சிலை மற்றும் பல லட்ச மதிப்புள்ள சுவாமி சிலைகளும் எரிந்து சாம்பலானது. இது தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கை என்ன என்பது புதிராக உள்ளது. 

சமூக விரோதிகளால் எரிக்கப்படட மண்டபத்தை சீரமைக்க அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு வ.கள த் தூ ர் கிராம முக்கியஸ்தர்கள் தொடர் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. 

பல்வேறு மனுக்கள் சீரமைப்பு பணிகளை தடுக்க வேண்டி அரசிடம் கொடுக்கப்படடாளும் , தடையின்றி பணிகள் நடந்து வருகிறது. இதன் படங்கள் உங்கள் பார்வைக்கு...















Friday, 31 March 2017


பெரம்பலூர் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 பேர் மதுரை மாவட்டம், கல்லுக்குறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, வேனில் அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை மாலை வந்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்சமது மனைவி காஜாமுத்து (50) உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் காயமடைந்த 10 பேரை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Friday, 24 March 2017


தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அதேபோல ஏரியைத் தூர்வாரவில்லை என்று நீதிமன்றமும் பல்வேறு விதத்தில் தமிழகஅரசுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. நீதிமன்றத்தைச் சமாதானப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு கட்டமாக அரியலூரில் தூர்ந்துபோய் ஆக்கிரமிக்கபட்டுக் காணாமல்போன ஏரியை, அரியலூர் கலெக்டர் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அவரே முன்னின்று ஏரியைத் தூர்வாரவும் ஐடியா கொடுத்துள்ளார். தற்போது, கலெக்டருக்கு  தமிழகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. இவரைப் பாராட்டி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளங்களில் செய்திகள் இரண்டு நாளாக வந்துகொண்டிருக்கின்றன.
அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் அருகே, மருக்காலங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது, மங்களா ஏரி. இதைக் காணவில்லை என்று கடந்த வருடம் ஜூலை மாதம் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் புகார் கொடுத்துள்ளார்கள் கிராம மக்கள். அதன் அடிப்படையில் ஏரியைக் கண்டுபிடித்துள்ளார், கலெக்டர்.


ஏரியைக் காணோம் என்று புகார் கொடுத்த உதயகுமாரிடம் பேசினோம். "மங்களா ஏரி 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்தக் காலகட்டத்தில், இந்த ஏரியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பயன் அடைந்திருக்கிறார்கள். அதேபோல வரத்து வாய்க்கால்கள் சரியாக இருந்ததால், மழைநீர் ஏரியில் கலந்ததால், வற்றாத ஏரியாக இருந்துள்ளது. இருபோகம் விவசாயம்செய்து, எங்கள் பகுதி செழுமையாக இருந்துள்ளது. ஆனால், இப்போது இந்த நிலைமை தலைகீழாக உள்ளது. காரணம், இந்த ஏரியை 50 வருடங்களாகத் தூர்வாராமல் விட்டதால், ஏரி தூர்ந்துபோய், சரிசமமான கட்டாந்தரையாக மாறிவிட்டது. ஒரு சிலர், இந்த இடத்தைச் சரிசெய்து விளைநிலங்களாக மாற்றி, பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒருசில கட்சிப் பிரமுகர்கள், ஆளுக்குஆள் இடத்தை அபகரித்துக்கொண்டு, வீடு கட்டவும் தொடங்கினார்கள். இதை எதிர்த்து, நாங்கள் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள், எங்களை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டினார்கள். அதன் பெயரில், கடந்த ஆண்டு ஏரியைக் காணோம் என்று கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். அவரும் எங்க முன்பே இதை உடனடியாக விசாரித்துத் தகவல் சொல்லுங்கள் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அது மட்டுமில்லாமல், இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு விசாரித்ததில், 6 ஏக்கருக்கும் மேல் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்தது தெரியவந்தது. அவர்களை அழைத்து, ''ஏரியின் இடத்தை அபகரித்துள்ளதால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க என்னால் முடியும். இருந்தாலும் உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். நேற்று, 'தண்ணீர் தினம்' என்பதால், எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றிவிட்டு, கலெக்டரே வந்து நின்று ஏரியைத் தூர்வாரவும் உத்தரவிட்டார். உடனடியாக ஜே.சி.பி எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது. இந்த ஏரி, முறையாகத் தூர்வாரி விவசாய பயன்பாட்டுக்கு வந்தால், வடவீக்கம், மருக்காலங்குறிச்சி, தண்டலை, மா மங்களம், வடுகர் பாளையம் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைவதோடு 86 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பயன்தரும். கலெக்டர் முயற்சியால் எங்க ஊர் மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கப்போகிறது" என்றார்.

பெரம்பலூர் அருகே தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் - ரோவர்  கல்லூரி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். போட்டி போட்டுக்கொண்டு பஸ்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தனியார் கல்லூரிகளின் பஸ்கள்
பெரம்பலூர் அருகே துறையூர் மெயின்ரோட்டில் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி உள்ளது. இதேபோல் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் ரோவர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட துங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை அந்த பகுதிகளை மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு 2 கல்லூரிகளின் பஸ்களும் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தன.
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் பகுதியில் உள்ள அருமடல் பிரிவு ரோட்டில் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி பஸ் நின்று மாணவ, மாணவிகளை ஏற்றியது. பின்னர் அங்கிருந்து பஸ் புறப்பட்டபோது, பின்னால் வந்த ரோவர் கல்லூரி பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய பஸ்சின் முன்புறத்தில் அமர்ந்திருந்த மாணவிகள் சிலர், கண்ணாடியை உடைத்து கொண்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் சில மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.
மாணவ, மாணவிகள் படுகாயம்
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அங்குசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்தில் நின்ற 2 பஸ்களையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பெரம்பலூர் அருகே துறையூர் ரோட்டில் உள்ள ஸ்ரீநிவாசன்க கல்லூரியில் படிக்கும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரியவெண்மணியை சேர்ந்த மணிகுயில்(வயது 20), புதுவேட்டக்குடியை சேர்ந்த கவுசல்யா(19), நல்லறிக்கையை சேர்ந்த செல்வராணி (20), கோவில்பாளையத்தை சேர்ந்த அறிவுக்கொடி (20) உள்ளிட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தண்ணீர்பந்தலில் உள்ள ரோவர்  கல்லூரியில் படிக்கும் சின்னவெண்மனியை சேர்ந்த சாத்தபிள்ளை (20), காரைப்பாடியை சேர்ந்த மாயவேல் (20) உள்பட 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விபத்தில் படுகாயம் அடைந்திருப்பதும், மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிலர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பதறி அடித்து கொண்டு ஆஸ்பத்திரிகளுக்கு ஓடி வந்தனர். மாணவ, மாணவிகள் அங்கு நலமுடன் இருப்பதை கண்ட பின்னரே அவர்கள் நிம்மதியடைந்தனர். விபத்தில் காயடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினர்.
இதற்கிடையே பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் பார்வையிட்டு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவகுமார் விசாரணை நடத்தினார். விபத்து குறித்து தனியார் கல்லூரி பஸ்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 டிரைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டதா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர்.
டிரைவர் கைது
இதனை தொடர்ந்து பெரம்பலூர்– துறையூர் ரோட்டில் உள்ள ஸ்ரீநிவாசன்க கல்லூரியின் பஸ் டிரைவர் குன்னம் தாலுகா காரைப்பாடியை சேர்ந்த ராஜதீரனை(27) மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மற்றொரு பஸ்சின் டிரைவரான நம்மக்கோணம் பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் (30) போலீசாரிடம் கூறுகையில், அருமடல் பிரிவு ரோடு பகுதியில் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு பஸ்சை எடுத்தபோது குறுக்கே மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததாகவும், இதனால் திடீரென பிரேக் போட்டவுடன் பின்னால் வந்த பஸ் மோதிவிட்டதாகவும், தெரிவித்தார். 2 கல்லூரி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவ, மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Thursday, 23 March 2017


பெரம்பலூர்,: குன்னம் தாலுக்கா, வேப்பூரைச் சேர்ந்த மோகன். இவரது மனைவி ஜெயந்தி. ஆசிரியை. இவர் சம்பளம் பெறும்   வேப்பூர் ஐஓபி கிளையில் வங்கிக் கணக்கிலிருந்து எல்ஐசி நிறுவனத்திற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்த 2011 ஜூன் 20ம்தேதி ரூ16,618க்கான காசோலையை எல்ஐசி நிறுவனத்திற்கு அனுப்பினார். சி, நாட்கள் கழித்து ஜெயந்தி கொடுத்த காசோலையிலுள்ள கையெழுத்து ஒப்பாகவில்லையெனக் கூறி காசோலை திரும்பிவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட எல்ஐசி நிறுவனம், ஜெயந்தி அனுப்பிய ரூ.16,618ஐ, அபராதத் தொகையாக ரூ.135 ஐயும் சேர்த்து ரொக்கமாகத் தரும்படி வலியுறுத்தியது. தனது வங்கிக் கணக்கில் தேவையான அளவுக்குப் பணம் இருப்பு வைக்கப்பட்டி ருந்தும், குறிப்பிடத்தகுந்த காரணமின்றி, சேவைக் குறைபாடு செய்துள்ளதால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, கடந்த 2012 ஜனவரி 23ம் தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். நேற்று நீதிமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட் சுமி ஆகியோர் முன்னிலையில் வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிபதி கலியமூர்த்தி, சம்மந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளர், ஜெயந்தியின் மனஉளைச்சலுக்கு இழப்பீடுத் ரூ.10 ஆயிரத்தையும், வழக்கு செலவுக்காக ரூ. 3ஆயிரம் என மொத்தம் ரூ. 13ஆயிரத்தை வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டார்.

பெரம்பலூர்-:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நெடுஞ்சாலை ஓர உணவகங்களில் உணவு தரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று நடத்தியது. பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது :நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தரம் குறித்த புரிதல் நம்மிடையே இருக்க வேண்டும். இதன்மூலம் தரமான உணவுப் பொருட் களைத்தான் பயன்படுத்துகிறோமா என்ற விழிப்புணர்வு நம்மிடையே உருவாக வேண்டும். மேலும், கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளை பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே வளர வேண்டும். 

எனவே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர் அனைவரும் தங்கள் பள்ளி களில் பயிலும் சக மாணவ,மாணவிகளும் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுப் பொருட்களை உண்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். வெளியூர் செல்லும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் தங்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளும் சுகாதாரமான உணவகங்கள் மூலமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.  மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) துரை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்ட மைப்பின் நிர்வாக செயலாளர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.