Thursday, 1 May 2014

church enjambakkam1 small
சென்னை ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையில் புனித தோமையர் ஜெபவீடு உள்ளது. இந்த ஜெபவீடு அந்த பகுதியின் இந்து மீனவ சமுதாயத்தினருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தாம்பரம் சிவில் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

 ஈஞ்சம்பாக்கம் சர்ச்
இந்த நிலையில் கடந்த 27.4.14 அன்று ஜெபவீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் ஜெபவீட்டை விரிவுபடுத்தி புதிய கொட்டகை அமைக்கும் பணியில் சர்ச் நிர்வாகம் ஈடுபட்டது. இதற்காக வெளியூர்களிலிருந்து வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவலாயத்தில் கூடியிருந்தனர். இதனை அறிந்த இந்து மீனவ சமுதாய மக்கள் ஒன்று கூடி சர்ச் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து மீனவ சமுதாயத்தை சார்ந்த ஆண்களும் பெண்களும் அதிகளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த போலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தனர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே தடியடி நடத்தி மீனவ மக்களை விரட்டி அடித்தனர். இதில் பல பெண்கள் காயம் அடைந்தனர். இது குறித்து அப்பகுதி ஊர்மக்கள் கூறுகையில் //இந்த இடத்தில் ஈஸ்டர் கொண்டாட தற்காலிகமாக பந்தல் அமைக்க மட்டுமே நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. புதிய ஓலை கொட்டகை அமைப்பதன் மூலம் அவர்கள் எங்கள் நிலத்தை ஆக்கரமிக்கின்றனர்// என்றனர்.

பிரச்சினையின் வீரியத்தை புரிந்து கொண்ட சோழிங்கநல்லூர் தாசில்தார் திரு. ரவிச்சந்திரன் அவர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும் இருதரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு சர்ச் நிர்வாகத்தினர் வர மறுத்துவிட்டனர். சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பாழடைந்த கொட்டகையை அகற்றி புதிய கொட்டகை அமைக்க யாருடைய அனுமதியையும் பெற தேவை இல்லை என்று ஃபாதர் மார்ட்டின் ஜோசப் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நியாயமற்ற அடாவடி சர்ச் தரப்பினர் மிரட்டலுக்கு அடிப்பணியக்கூடாது என்று வலுவாக இந்து மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் வேறு வழியின்றி சர்ச் நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும், மீண்டும் பிரச்சினை வராமல் தடுப்பதற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..

இந்த சம்பவம் குறித்து அறிந்து கொள்ள வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினர், இந்து முன்னணி நிர்வாகி திரு. சத்ய நாராயணனுடன் ஈஞ்சம்பாக்கம் சென்று, அப்பகுதி வாழ் மக்களை நேரில் சந்தித்தனர். ஈஞ்சம்பாக்க மீனவ சமுதாய பிரதிநிதி திரு. மதியழகன் அவர்கள் நமது குழுவுக்கு அளித்த நேர்காணலில் இந்த சர்ச் இடப்பிரச்சினையின் வரலாற்றை தெளிவாக விளக்கினார்.

 mathialgan enjambakkam small
1965ல் ஈஞ்சம்பாக்கத்தில் திரு. அருளப்பா என்ற பாதிரியார் மீனவர்களுக்கு பண உதவி மற்றும் பொருளுதவி கொடுத்து உதவ இந்த ஊருக்கு வந்தார். இப்பணிகளுடன் சேர்த்து எங்களுக்காக பிரார்த்தனை செய்ய ஒரு சிறிய இடத்தை கேட்டார். நாங்களும் கொடுத்தோம். இங்கிருக்கும் பெரும்பாலான மீனவர்கள் இந்துக்களே. அவருடைய ஜபத்தில் பெரும்பாலும் எங்கள் சமுதாய மக்கள் தான் கலந்து கொள்வர். ஜபக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பழைய கம்பளி,பனியன் மற்றும் பால் பவுடர் இலவசமாக கொடுத்து உதவுவார். சில மாதங்களுக்குப் பிறகு திரு. அருளப்பா அவர்களை சாந்தோம் சர்ச்சுக்கு மாற்றிவிட்டனர். அவருக்குப்பிறகு வந்த சர்ச் நிர்வாகம் இந்த இடத்தில் உங்களுக்காக பள்ளிக்கூடம் அமைக்கப்போகிறோம் என்றனர். நாங்களும் இவர்களின் நிலமோசடி மற்றும் மதமாற்ற சதியை புரிந்துகொள்ளாமல் எங்கள் சமுதாய குழந்தைகளின் படிப்பை நினைத்து இந்த இடத்தைக் கொடுத்தோம். கொடுத்த இடத்தில் 1980 முதல் 1987 வரை சுமார் ஏழு ஆண்டுகாலம் மட்டுமே அந்தப் பள்ளி இயங்கியது. நானும் இந்தப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினேன். திடீரென போதிய இடவசதி இல்லை என்ற காரணத்தைக்காட்டி பள்ளியை வெட்டுவாங்கண்ணி என்ற இடத்திற்கு மாற்றிவிட்டனர். பள்ளிக்கூடத்தை மாற்றியபின் அந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்ட முயற்சித்தனர். இதனை நாங்கள் தடுத்தோம். ஆனால் மீனவ மக்களுக்காக ஜபம் செய்வதற்காக சிறிய அளவிலான இடமாவது தாருங்கள் என்று எங்களை பாதிரியார் நச்சரிக்க இவர்களின் சூழ்ச்சியை அறியாது நாங்களும் ஒத்துக்கொண்டோம். காலம் செல்லச், செல்ல சத்தமில்லாமல் ஓலைக்குடிசையில் இயங்கிய ஜெபக்கூடம் பெரியளவிலான கட்டிடமாக எங்களின் எதிர்ப்பையும் மீறி உருவானது என்று திரு. மதியழகன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த புனித தோமையர் சர்ச் வந்த பிறகு இப்பகுதியில் மதமாற்றங்கள் நடந்து வருகின்றது. அமெரிக்காவிலிருந்து உங்களுக்கு உதவி பெற்றுத் தருகிறோம். கட்டுமரம்,மீன் வலை வாங்கித்தருகிறோம் என்று ஆசை வார்த்தை சொல்லி பலரையும் மதம் மாற்றியுள்ளனர். கிருஸ்துவத்திற்கு மதம் மாறியவர்கள் மூலம் எங்களின் பாரம்பரியத்தை மாற்ற முயல்கின்றனர். மேலும், எங்கள் பாரம்பரியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத புதிய பழக்க வழக்கங்களை திணிக்கின்றனர்.

கிருஸ்துவ மதபோதகர்கள் இந்து மீனவ பகுதிகளில் செய்யும் மதமாற்ற செயல்பாடுகளை நாங்கள் தடுக்க நினைத்தாலும் இவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி மதமாற்ற மோசடி வலையில் சிக்கி சில அப்பாவிகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறி விடுகின்றனர். சில நேரங்களில் இதனால் பிரச்சினைகளும் வருகின்றன என்றார். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார் திரு.மதியழகன். நாங்கள் ஆடிமாதத்தில் கூழ்வார்க்கும் திருவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம். அந்தவேளைகளில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பேண்டு இசை முழங்க கிருஸ்துவர்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த கிறிஸ்தவர்கள் கலவர நோக்கத்தோடு நடத்தும் பேண்டு ஊர்வலம் நம் இந்து மீனவர்களின் கடுமையான எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.

இப்படி மதமாற்ற நோக்கத்துடன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் தொடர் தாக்குதலால் அமைதி இழந்த இந்த ஊர் மீனவர்கள் இந்த சர்ச்சைக்குறிய ஜெபவீட்டை அப்புறப்படுத்தாமல் ஓயப்போவதில்லை என்று உறுதிபட கூறினர்.

தொடர்ச்சியாக மதமாற்றத்திற்காக இங்கு கிறிஸ்தவர்கள் ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறார்கள். இந்த பணம் வெளிநாடுகளிலிருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உதவிக்காக வந்த பணம். இந்த பணத்தை மோசடி செய்து அதில் வானளாவிய உயரத்திற்கு சர்ச்களை கட்டி மேலும் வெளிநாடுகளிலிருந்து பண உதவியை பெற்று வருகின்றனர் என்று சொன்னார் ஒரு மீனவ பிரமுகர்.

இந்த சர்ச் நிர்வாகத்தினர் அரசிடம் அனுமதிப் பெற்று கிருஸ்துவ விழாக்களை கொண்டாடுகின்றனர். ஆனால் எங்களின் இடத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பெரிய பந்தல் அமைக்கின்றனர். இனி இதுபோல் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவதோடு இந்த கட்டிடத்தை அகற்றும் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கும் நாங்கள் தயாராகிவிட்டோம் என்றார் மதியழகன். இந்தப் பகுதியில் இனி மேலும் மதமாற்றம் நடக்காமல் தடுக்க இந்தப்பகுதி இந்து மீனவ குழந்தைகளுக்கு சமயவகுப்புகள் நடத்தவேண்டிய அவசியத்தையும் தெரிவித்தார்.

மீனவர்களின் இடத்திற்கான பாரம்பரிய உரிமையை சர்ச் பிடியிலிருந்து மீட்டு மீனவர்களிடமே கொடுக்க வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் அவர்களுக்கு உதவவேண்டும். பாதிக்கப்படும் நம் மீனவ சொந்தங்களின் போராட்டத்தில் நாமும் பங்கெடுப்போம். v.kalathur seithi 


காசோலை பயன்பாட்டில், ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள, சி.டி.எஸ்., என்ற புதிய நடைமுறை, இன்று முதல் தீவிரமாக கடைபிடிக்கப்பட உள்ளது. இதனால், சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலைகளை, வங்கி களில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும்.
பழைய காசோலை திட்டத்தின் படி, பொது மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் காசோலையில், தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண், வங்கியின் பெயர், சின்னம், குறியீட்டு எண் போன்றவை வங்கிக்கு வங்கி மாறுபடும். காசோலையின் நீள, அகலத்தில் கூட, மாற்றம் இருக்கும். காசோலைகளை வங்கியில் செலுத்தும் போது, வங்கி ஊழியர் மூலம், ரிசர்வ் வங்கி கருவூலத்திற்கு சென்று, அங்கிருந்து, மற்ற வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும். இதனால், காசோலைகள் சரிபார்த்தல் மற்றும் பண பரிவர்த்தனையில், காலதாமதம் ஏற்பட்டது. முறைகேடு நடக்கவும், தொலைந்து போகவும் வாய்ப்பு இருந்தது. எனவே, சில ஆண்டு களுக்கு முன், 'பண பரிவர்த்தனையில், மோசடியை தடுக்கவும், காலதாமதத்தை குறைக்கவும், காசோலையின் தரத்தை உறுதிப்படுத்த, வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 2008ல், டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில், சி.டி.எஸ்., (செக் டிரங்கேஷன் சிஸ்டம் - cheaque truncation system), என்ற புதிய காசோலை திட்டத்தை, வங்கிகள் அறிமுகம் செய்தன. அதன்படி, வங்கியில் செலுத்தப்படும், சி.டி.எஸ்., காசோலைகள், ரிசர்வ் வங்கி மூலம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ஊழியர் மூலம் அனுப்புவதற்கு பதில், அதை, 'ஸ்கேன்' செய்து, 'நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா - என்.பி.சி.ஐ.,' என்ற ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனத்திற்கு கம்ப்யூட்டர் சர்வர் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து, சி.டி.எஸ்., காசோலைகளின், 'இமேஜ்' சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, கம்ப்யூட்டர் சர்வர் மூலம் அனுப்பப்படும். வங்கிகள், அதை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையெனில், வாடிக்கையாளர் கணக்கில், பணத்தை வரவு வைக்கும்.


கணக்கில் பணம் இல்லை; பிழை போன்ற காரணங்களால், காசோலை 'ரிட்டர்ன்' ஆனால், அந்த விவரம், என்.பி.சி.ஐ., மூலம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்கப்படும். பின், அந்த சி.டி.எஸ்., காசோலை வங்கிகள் மூலம், வாடிக்கையாளர்களிடம் திரும்ப அளிக்கப்படும். முதல் கட்டமாக, டில்லியில் அறிமுகம் செய்யப்பட்ட, சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு, அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. டில்லியை தொடர்ந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், 2010ல், சி.டி.எஸ்., காசோலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 'வாடிக்கையாளர்கள், சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு மாற வேண்டும்' என, வங்கிகள், பலமுறை அறிவுறுத்தியும், ஒரு சில வாடிக்கையாளர்கள், இன்னும் புதிய திட்டத்திற்கு மாறவில்லை. இந்நிலையில், 'மே, 1ம் தேதி முதல் சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு மாறாத காசோலைகள், வங்கிகளுக்கு வரும் போது, திங்கள் மற்றும் வெள்ளி என, வாரத்திற்கு, இரண்டு நாட்கள் மட்டும், பணப் பரிவர்த்தனைக்காக, ரிசர்வ் வங்கி கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். அக்டோபர், 1ம் தேதி முதல், வாரத்திற்கு ஒரு முறை மட்டும் அனுப்ப வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலைகளை, இன்று முதல், வங்கிகளில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, பொதுத்துறை வங்கியின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'பழைய காசோலைகளை, வங்கி கிளைகளில் கொடுத்து, புதிய சி.டி.எஸ்., காசோலைகளை பெற்று கொள்ளலாம்' என, பல முறை அறிவுறுத்தப்பட்டது. சில வாடிக்கையாளர்கள், இன்னும் இந்த திட்டத்திற்கு மாறவில்லை. அடுத்த ஆண்டு முதல், சி.டி.எஸ்., காசோலை மட்டும் நடைமுறையில் இருக்கும். பழைய முறையில், காசோலையை வங்கியில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். சி.டி.எஸ்., முறையின் படி, இரு தினங்களில், பண பரிவர்த்தனை முடிந்து விடும். இத்திட்டத்தை, ம.பி., மகாராஷ்டிரா, உ.பி., பஞ்சாப் மாநிலங்களில், அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.



சிறப்பு என்ன?

'சி.டி.எஸ்., 2010 ஸ்டேண்டர்டு' என்று, அச்சிடப்பட்ட காசோலையில், தேதி, கணக்கு எண் போன்றவை எழுதுவதற்கு, தனித்தனி கட்டங்கள் உள்ளன. அனைத்து வங்கிகளின் காசோலையும், ஒரே நீள, அகலத்தில் இருக்கும். காசோலையில், வங்கியில் கணக்கு வைத்துள்ளவரின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இந்த காசோலையை, 'கலர் ஜெராக்ஸ்' எடுக்கும் போது, போலி என, கண்டுபிடிக்க, தனியாக, ரகசிய குறியீட்டு எண்ணும் அச்சிடப்பட்டுள்ளது. v.kalathur seithi

நன்றி-தினமலர்.
காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், 'டிவி' சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுடன், தனக்கு உறவு உள்ளதாக, வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவர், திக்விஜய் சிங், 67. மத்திய பிரதேச மாநில முதல்வராகவும், பதவி வகித்த அனுபவம் உள்ளவர். இவரின் மனைவி ஆஷா, 58, புற்றுநோய் பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு காலமானார்.

இணையங்களில் செய்தி:

சமீப காலமாகவே, பிரபல 'டிவி'யின் நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுக்கும், திக்விஜய் சிங்கிற்கும் உறவு உள்ளதாக, இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இத்தனை நாட்களாக, இதுகுறித்து மவுனம் காத்து வந்த திக்விஜய் சிங், நேற்று இதை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், அவர் கூறியுள்ளதாவது: அம்ரிதாவுடன், எனக்குள்ள உறவை ஒப்புக்கொள்வதில், எந்த தயக்கமும் இல்லை. அம்ரிதாவும், அவரின் கணவரும், ஒருமித்த கருத்துடன், விவாகரத்து கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு முடிவடைந்ததும், எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்போம். அதேநேரத்தில், என் தனிப்பட்ட விஷயத்தில், மற்றவர்கள் மூக்கை நுழைப்பதை, நான் விரும்பவில்லை. இவ்வாறு, அவர், அதில் தெரிவித்துள்ளார்.

'விவாகரத்தானதும்...':

அம்ரிதாவும், 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில், 'என் கணவரும், நானும், பிரிந்து வாழ்கிறோம். இருவரும், விவாகரத்துக்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். விவாகரத்து கிடைத்ததும், திக்விஜய் சிங்கை திருமணம் செய்வது குறித்து, முடிவு செய்வேன்' என, தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம், காங்கிரஸ் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. v.kalathur seithi

நன்றி-தினமலர்.
நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுவதற்காக "எக்ஸாம் பேட்' என்ற நவீன உபகரணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு என எல்லாவகைத் தேர்வுகளும் காகிதத்தால் ஆன விடைத்தாளில் தான் எழுதப்பட்டு வருகின்றன. இப்போது தேர்வு
முறைகளில் நவீனத் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எக்ஸாம் பேட்' என்ற தொழில்நுட்பம் மூலம் நவீன உபகரணத்தின் உதவியோடு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த 2013 டிசம்பரில் நடந்த தேர்வுகள் அனைத்தும் "எக்ஸாம் பேட்' உதவியோடு எழுதப்பட்டுள்ளன.
இதன்மூலம் மாணவர்கள் தேர்வுக்கால முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். மாணவர்கள் "எக்ஸாம் பேட்' நவீன உபகரணத்தில் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்து தேர்வு எழுத முடியும். தற்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து உபகரணம் பெற்று தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு விடைத்தாள்கள் அனைத்தையும் சர்வரில் சேமித்து, ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது.
வருங்காலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக "எக்ஸாம் பேட்' பெறப்பட்டு தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உபரகணத்தில் இணையவழி பாடத்திட்டங்களைப் படிக்கமுடியும்.
தேர்வுக்காலத்தில் மட்டும் மற்றொரு கணினிச் செயல்பாட்டில் (ஆப்ரேஷன் சிஸ்டம்) தேர்வெழுத முடியும். தேர்வு நேரத்தில் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். v.kalathur seithi

நன்றி-தினமணி.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்  வரும்  4ம் தேதி தொடங்கி 28 வரை நீடிக்கிறது. பெரும்பாலான நகரங்களில் இப்போதே வெயில் 1000 டிகிரியை தாண்ட்டியுள்ளது. 
வெயிலின் கொடூரத்தால், பகலில் அனல் காற்றும் வீசுகிறது. பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இந்நிலையில்  நேற்று தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. . இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கோடையின் வெப்பம் வாட்டி வதைக்கும் நேரத்தில் இதுபோன்று பெய்யும் திடீர் மழை மக்கள் மனதுக்கு மகிழ்ச்சையை கொடுக்கிறதது.
எனினும் இந்த ஆண்டு கோடை வெயிலின் வெப்பம் அதிகமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.v.kalathur seithi


நன்றி-தினமணி.

Tuesday, 29 April 2014


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மருதையான் கோவில் அருகே உள்ள வரிசைப்பட்டி கிராமத்தில் வரதராஜன் கல்வி அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 மற்றும் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் உயர் கல்விக்கு பலனளிக்கும் வகையில் இலவசமாக கணினி பயிற்சி வகுப்பு மற்றும் ஆங்கிலத்தில் தடையின்றி பேச, எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் மே 7-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு அரியலூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருதையான் கோவில் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களிலிருந்து காலை 9 மணிக்கு கல்லூரி பேருந்து இயக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04329-295225, 9842057711 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். v.kalathur seithi

நன்றி-தினமணி.

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஏர்கண்டிஷனர் மற்றும் பிரிட்ஜ் பழுது நீக்கம் தொடர்பான இலவச பயிற்சி மே 5-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மே 5-ம் தேதி முதல் முதல் ஏர் கண்டிஷனர் மற்றும் பிரிட்ஜ் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் 18 வயதிலிருந்து 35-க்கு குறைவாக, குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேந்தவராக, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
30 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்குவதோடு, பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328277896 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். v.kalathur seithi

நன்றி-தினமணி.

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். இது காஞ்சி பரமச்சாரியாளான ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம் என்கிறார்கள்.



 இந்த ஆலயம் உள்ள இடத்தின் மலையின் பெயர் மதிர மலை என்பார்கள். இந்த ஆலயத்தில் உள்ள காளி தேவி ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பஸ்வாமி என்ற இரண்டு காவல் தேவதைகளுடன் இந்த ஊரைக் காத்து வருவதான ஐதீகம் உள்ளது. ஆலயத்தின் தல விருஷம் மதுர மரம். ஆலயம் 1000 அல்லது 1500 வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
இந்த ஆலயம் குறித்து பல சுவையானக் கதைகள் உள்ளன . ஆனால் அவற்றுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் வாய்மொழிக் கதையாகவே ஆண்டாண்டு காலமாக விளங்கி வருகின்றது.
ஒரு முறை ஆதி சங்கரர் இந்த மலைப் பிரதேசத்தின் வழியே வந்து கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம். அவருக்கு தாகம் எடுத்தது, ஆனால் சுற்றிலும் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அவர் தேவியை நினைத்து மனமுருகி வேண்டிக் கொண்டபோது, அங்கு இருந்த மதுர காளியம்மான் அவர் முன் தனது சுய ரூபத்தில் தோன்றி அங்கு ஒரு நீர் ஊற்றை வரவழைத்து அவர் தாகத்தைத் தீர்த்தாளாம். அதன் பின் அங்கேயே அவள் ஒரு நான்கு அடி உயர கல் சிலையாக மாறிவிட, ஆதி சங்கரர் அந்த சிலையை எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.



இன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் இந்த மலைப் பிரதேசத்தின் மூன்று ரிஷிகள் வசித்து வந்தார்கள். அவர்கள் அங்கு தாபத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் ஒரு குழந்தை அங்கு அழுதுகொண்டு அனாதையாகக் கிடந்தது. அதை அவர்கள் கருணையோடு எடுத்து வந்து வளர்த்து அறிவு புகட்டினார்கள். அந்தக் குழந்தை நன்கு அவர்களிடம் ஆன்மீகப் பாடம் கற்றுக் கொண்டவுடன், அங்கிருந்து கிளம்பி ஷேத்ராடனம் சென்றுவிட்டது. அந்த நேரத்தில் ஒரு நாள் அந்த மூன்று ரிஷிகளும் அந்த மலையின் (தற்போது ஆலயம் உள்ள இடத்தில்) ஒரு மரத்தில் தேன்கூடாக மாறி விட்டார்களாம். அதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரு முனிவரிடம் பெற்று இருந்த சாபமே. பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரே குடும்பத்தினர். அந்த மலையில் தேன் எடுப்பவர்கள். ஒரு முறை அவர்கள் அந்த முனிவர் அங்கு தவத்தில் இருந்ததைப் பார்க்காமல் அவர் தவம் இருந்த மரத்தின் மீது இருந்த தேன் கூட்டை கலைக்க அந்த கூட்டில் இருந்த தேன் அந்த முனிவர் மீது வாய் மீது விழுந்து அவர் தவம் கலைந்தது. ஆகவே அவர் அவர்களை தேன்கூடுகளாக மாறி விடுவார்கள் என்றும் பல காலம் பொறுத்து ஒரு சாபத்தினால் அங்கே வந்து குழந்தையாக பிறக்க உள்ள நாரத முனிவர் அவர்களின் சாபத்தைத் தீர்ப்பார் என்றும் சாபமிட்டார். ஆகவே அந்த முனிவர்கள் அந்த மரத்தின் மீதே தேன் கூடுகளாக மாறி அமர்ந்து இருந்தார்கள். அபோது அந்த மரத்தடியில் வந்து இளைப்பாறும் ரிஷி முனிவர்களின் வாயில் ஒரு சொட்டு தேன் விழுமாறு அவை பார்த்துக் கொள்ளும். அதன் காரணம் தமது பூர்வ ஜென்மக் குழந்தை அங்கு வந்தால் அந்த செய்கையை புரிந்து கொண்டு தமக்கு சாப விமோசனம் தரும் என்பதற்காகவே.

 தேசிய நெடுஞ்சாலையில் வரும்
வளைவில் திரும்ப வேண்டிய இடம் 
(படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )
இப்படியாக பல ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்கள் வளர்த்து ஆளாக்கிய பூத்தார் என்ற பெயர் கொண்ட முனிவராக மாறி இருந்தக் குழந்தை மீண்டும் அங்கு வந்து அவர்களைத் தேடினார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. அப்போது அந்த மூன்று முனிவர்கள் தேன்கூடாக இருந்த மரத்தின் அடியில் படுத்து இருந்தபோது அவர் வாயில் ஒரு சொட்டு தேன் விழுந்தது. உடனேயே அவர் அந்த செய்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். அங்கேயே இருந்த காளியின் முன் தவமிருந்து அவளது அருளைப் பெற்று அவர்களுக்கு சாப விமோசனம் பெற்றுத் தந்தார். ஆகவே இனிமையான தேனை போன்ற வாழ்கையை வழங்கும் இடமான அந்த ஆலயம் மதுர (இனிமை என்று பொருள்) பெயர் கொண்டு மதுர மலை ஆயிற்று.

 ஆலயத்தில் ஒரு காட்சி 
(படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )
நான்கு கைகளைக் கொண்ட அன்னையின் ஒரு கையில் அக்ஷயபாத்திரம் இருக்க தந்து இடது காலை மடித்து வைத்துக் கொண்டு ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். சாதாரணமாக காளி உக்ரஹ வடிவில்தான் அனைத்து ஆலயத்திலும் காலடியில் தான் வதம் செய்த மனிதன் மீது நின்றபடி காட்சி தருவாள். ஆனால் இங்குள்ள காளியோ கருணை முகத்துடன் காட்சி தந்து அருளைத் தருவதால் மதுர காளி அம்மன் என்ற பெயரைப் பெற்றாள். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பக்தர்கள் தரிசிக்க ஆலயம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் கண்களுக்குத் தெரியாமல் அங்குள்ள சித்தர்களும் ரிஷி முனிவர்களும் அந்த ஆலயத்து தேவியை வணங்க ஆலயம் மூடப்பட்டு உள்ளதாம். இந்த மதுர காளி தேவியும் உக்ரஹமான காளியின் அவதாரமே. v.kalathur seithi


நன்றி- http://santhipriyaspages.blogspot.in/


 
 ஆலயம் செல்லும் வழி 



பெரம்பலூர் அருகேயுள்ள புகழ்பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 29) இரவு நடைபெறுகிறது.
விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை மூலவர் அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 11 மணியிலிருந்து 30-ம் தேதி காலை 10 மணி வரை பூச்சொரிதல் விழாவும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, மே 6 இரவு 12 மணிக்கு பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் மே 14 வரை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 15-ம் தேதி காலை 10.30-க்கு நடைபெறுகிறது. சிறுவாச்சூரில் உள்ள பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்படும் திருத்தேர் மாலையில் நிலைக்கு வந்தடையும். தொடர்ந்து, 16-ம் தேதி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஊஞ்சல் நிகழ்ச்சி, 17-ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா, 19-ம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை, திருச்சி உதவி ஆணையரும், தக்காருமான து. ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் இரா. சங்கர சுந்தரேஸ்வரன் ,விழா குழுவினர் செய்தனர். v.kalathur seithi

நன்றி-தினமணி.

பெரம்பலூர்,: தேசியஅடையாள அட்டைக்கான (ஆதார்) பதிவு செய்யும் 2ம் கட்ட முகாம்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மே 3ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்திருப்பதாவது:
     பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாளஅட்டை எனப்படும் தேசிய அடை யாள அட்டைக்கான பதிவுசெய்யும் 2 ம் கட்ட முகாம்கள் பெரம்பலூர், வேப்பந் தட்டை, குன்னம் மற்றும் ஆலத்தூர் ஆகிய அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2010ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் தேசிய அடையாள அட்டையைப் பெற புகைப் படம், கை ரேகை, விழித்திரை பதிவு செய்யாதவர்கள் வட்ட அலுலவங்களில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் தங்களது பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பதிவினை பெரம்பலூர் வட்ட அலுவலத்தில் மேற்கொள்ளலாம். இந்த முகாமிற்கு பதிவுசெய்ய வரும் பொதுமக்கள் அனைவரும் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல்சான்று அல்லது விஏஓ சான்று, குடும்ப அட்டை, வாக்காளர்அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. புதியதாக தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவம் தாக்கல் செய்த நபர்களும் தற்போது தங்களது பதிவினை மேற்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம்கள் மேமாதம் 3ம் தேதியுடன் முடிவடைவதால் இந்த வாய்பினை பொதுமக்கள் தவறாது பயன்படுத்தி தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். v.kalathur seithi

நன்றி-தினகரன்.

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் எசமலை அடிவாரத்தில் எழுந்தருளிக்கும் மாசி பெரியண்ணன், பெரிய சாமி அறப்பளீஸ்வரர் கோவிலில் புதியதாக முனீஸ்வரன், காமாட்சியம்மன் உருவ சிலை நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஜெயராஜ், செல்வகுமார், பாத்திரம்பிச்சை,  அண்ணாமலை, கோவில் பூசாரி சுப்ரமணி யன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளை சேலம் மாவட்டம் தம்மப்பட்டியை சேர்ந்த சிவாச்சாரியார்  குழுவினர் நடத்தினர். v.kalathur seithi .

 நன்றி-தினத்தந்தி.

Sunday, 27 April 2014


பேஸ்புக்'கை பயன்படுத்துவோரால் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வசதியாக, புதிய செய்தி பக்கத்தை, "பேஸ்புக்' நிறுவனம், அறிமுகப்படுத்தி உள்ளது. "பேஸ்புக்'கை பயன்படுத்துவோர், தினசரி, கோடிக்கணக்கான நிகழ்வுகளையும், செய்திகளையும், நொடிப்பொழுதில், தங்கள், "பேஸ்புக்' பக்கத்தில் வெளியிடுகின்றனர். அவர்களால் வெளியிடப்படும் தகவல்கள், பெரும்பாலும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தான் இருக்கும். அதனால், அவற்றில் சில தகவல்கள், ஊடகங்களில்
செய்திகளாக வெளியிடும் வகையில் அமைந்துவிடுகின்றன. எனினும், அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடிவதில்லை. அதற்காக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், "ஸ்டோரிபுல்' எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம், "பேஸ்புக்'கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, ஆங்கில ஊடகங்களுடன் மட்டும், தற்போது பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில், "பேஸ்புக்' நிறுவனம், "ஸ்டோரிபுல்' நிறுவனத்தின் உதவியுடன், "பேஸ்புக்'கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, facebook.com/FBnewswire  எனும் பக்கத்தில், செய்தியாக வெளியிட திட்டமிட்டது. இதை தொடர்ந்து, அந்த பக்கத்திற்கான சேவை, நேற்று முதல், உலகம் முழுவதும் துவங்கப்பட்டது. அதில், தனி நபர் பகிர்ந்து கொள்ளும் தகவல் மட்டுமில்லாமல், அரசு சார்ந்த நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களும், செய்தியின் மதிப்பை பொறுத்து வெளியிடப்படுகின்றன. இந்திய மொழிகளில், இது போன்ற செய்தி சேவை துவங்குவது குறித்து, "பேஸ்புக்' நிறுவனம், எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நன்றி-தினமலர்.
v.kalathur வ.களத்தூர் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் இலவச டியூஷன் சென்டரின் முதலாம் ஆண்டு விழா நேற்று வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் வேகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் என்பது மாணவ மாணவியர்கள் இன்று இந்த இலவச டயுசன் சென்டரில் பயின்றுவருகிறார்கள். விவேகானந்தர் மன்றத்தினால் நடத்தப்படும் இலவச பயிற்சிவகுப்பானது தன்னார்வ ஆசிரியைகளால் மிகக்குறைந்த தொகையை சம்பளமாக பெறுபவர்களின் சீரிய தொண்டினால் நடைபெற்றுவருகிறது..

நேற்று நடைபெற்ற விழாவில் வ.களத்தூர் ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க, மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியுடன் இனிதே நடைபெற்று முடிந்தது.

இலவச டியுசன் செண்டர் நடத்த இன்றுவரை தங்களால் இயன்ற நிதியுதவியை தன்னலம் பாராமல் தந்து உதவும் நல்ல உள்ளங்களுக்கும்,
மிகக்குறைத்த தொகையை சம்பளமாக பெற்று தங்கள் கடும் உழைப்பை தந்துவரும் ஆசிரியைகளுக்கும்,
மாணவ மாணவிகளை அனுப்பி பயிற்சி வகுப்பு நன்றாக நடைபெற காரணமாக இருக்கும் பெற்றோர்களுக்கும்,

விவேகானந்தர் இளைஞர் மன்றத்திற்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு நல்கும் ஊர் பிரமுகர்களுக்கும் விவேகானந்தர் மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 




Saturday, 26 April 2014


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த சதாசிவம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.
இதையடுத்து இப்பதவிக்கு ராஜோந்திர மால் லோதா என்பவர் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று பொறுப்பேற்க உள்ளார். லோதா, இதற்கு முன் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாக்கு எண்ணிக்கை மே.16-ம் தேதி வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அரசு நிர்வாகம் முடங்கிப் போய் மக்கள் பெரும் பாதிப்புள்ளாவார்கள் என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்.24-ம் தேதி நடைபெற்ற 2014 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட ஏப்.5-ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் பலவ்ேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த தேர்தல் நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் மே.28-ம் தேதி வரை இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அமைச்சர்கள், அலுவலகம் செல்லலாம். அதிகாரிகளை சந்திக்கக்கூடாது. அலுவலகம் செல்ல மட்டுமே அரசு வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிய அறிவிப்புகள் மற்றும் ஆணைகள் எதையும் அரசு பிறப்பிக்க கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் முறைகேடு ஏற்படாமல் இருக்க தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் ஏப்.24-ம் தேதியே தேர்தல் முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை வரை, வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் அமைச்சர்கள் தொடர்பு கொள்ளக்கூடாது என தெரிவித்தால் அது நியாயமாக இருக்கும். ஆனால் மேலும் ஒரு மாதத்திற்கு இந்த கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளதால், அரசு நிர்வாயம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தேர்தல் ஆணையம் முடக்கி வைப்பதற்கு சமமாகும். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு மேல் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஒரு மாதம் அரசு நிர்வாக முடங்கிப் போனால் பொதுமக்களுக்கு தான் பெரும் வேதனையை தரும். மக்கள் நலனுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி.

Thursday, 24 April 2014

 v.kalathur வ.களத்தூரில் இன்று நடைபெற்ற மக்களவைத்தேர்தலின் வாக்குப்பதிவு விபரம் வருமாறு....

1.பாகம் எண் – 90 ல் மொத்த வாக்காளர்கள் – 769  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.503

 1-நடுத்தெரு வார்டு 1
2-தெற்கு தெரு வார்டு 1


2.பாகம் எண் – 91 ல் மொத்த வாக்காளர்கள் – 668 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 422 

1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1
2-மில்லத் நகர் வார்டு 4
3-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
4-அக்கரகாரத்தெரு வார்டு 3


3.பாகம் எண் – 93 ல் மொத்த வாக்காளர்கள் – 940  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 604
 1-அக்கரகாரத்தெரு வார்டு 3


4.பாகம் எண் – 94 ல் மொத்த வாக்காளர்கள் – 1031  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 554
 1-மேலத் தெரு வார்டு 4
2-தெற்கு தெரு வார்டு 4
3-மேட்டுச் சேரி வார்டு 5
4-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2


5.பாகம் எண் – 95 ல் மொத்த வாக்காளர்கள் – 560  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 721
 1-காமராஜர் நகர் வார்டு 4
2-மில்லத்நகர்வார்டு 4
3-தெற்கு தெரு வார்டு 4


6.பாகம் எண் – 96 ல் - மொத்த வாக்காளர்கள் – 966  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 353 
1-வி.களத்தூர் பள்ளிவாசல் வீதி வார்டு 1,2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள் 


7.பாகம் எண் – 97 ல் - மொத்த வாக்காளர்கள் – 1113  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 825
 1-வண்ணாரம்பூண்டி ரேசன்தெரு வார்டு 4
2-மில்லத் நகர் வார்டு 4
3-வண்ணாரம்பூண்டி காலனிதெரு வார்டு 5


வ.களத்தூர் ஊராட்சியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 6863
பதிவாகிய வாக்குகளின் எண்ணிக்கை – 4619
இவற்றில் ஆண்கள் – 1959
பெண்கள் – 2660
மொத்தம்  - 4619


Wednesday, 23 April 2014



பெரம்பலூர் மக்களவை தொகுதியைப் பொறுத்த அளவில் போட்டி என்பது திமுக வின் சீமானூர் பிரபு, அதிமுக வின் மருதைராஜா மற்றும் IJK ன் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து இடையேதான் என்பது நாம் அறிந்த ஒன்று.....

சீமானூர் பிரபு முன்னாள் திமுக அமைச்சர் KN நேருவின் பினாமி என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்று. திமுக வைப் பொறுத்தவரை குறுநில மன்னர்கள் போல் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெரிய தலை இருக்கும். அப்பகுதிகளில் அவர்கள் வைத்ததுதான் திமுகவை பொறுத்தவரை சட்டம். திருச்சியில் நேரு குறுநில மன்னர் என்றால் வேலூரில் துரைமுருகன், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் , அவருக்கு பிறகு அவரது மகன் . இதுதான் திமுகவைப்பொருதவரை நிதர்சனம்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கையில் நேரு தனது குறுநில மன்னருக்கான கோட்டவில் பெற்ற சீட்டில் தான் அவரின் பினாமி சீமாநூர் பிரபு திமுக சார்பாக நிறுத்தப்பட்டிருக்கிறார். ஒரு பினாமி எந்த அளவுக்கு பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு நன்மை செய்துவிட முடியும் என்பதை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். நேரு தனது சாம்ராஜ்யத்தை காக்க தேர்ந்தெடுத்த ஒரு பினாமி நமக்கு என்ன செய்துவிடமுடியும்...?

அடுத்த பிரதமர் பாஜகவின் நரேந்திர மோடி என்று உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் திமுகவின் சீமானூர் பிரபு ஜெயித்தாலும் அதனால் பெரம்பலூர் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. ஏனெனில் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் அவர் 2G பற்றி நாடாளுமன்றத்தில் கூச்சல் போடமுடியுமே தவிர நமக்கு எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை.

அதிமுக சார்பில் போட்டியிடும் மருதைராஜா அம்மாவை மீறி ஒரு வார்த்தைகூட பேசமுடியாது. இந்த லட்சணத்தில் எங்கே நமக்காக நாடாளுமன்றத்தில் பேசப்போகிறார்.. மேலும் அவரும் மோடி அரசின் அங்கமாக அமையப்போவது இல்லை.

பாரிவேந்தர் என்றழைக்கப்படும் பச்சமுத்து IJK கட்சிக்கு பாஜக கூட்டணியில் வழங்கப்பட்ட ஒரே ஒரு தொகுதியான பெரம்பலூரில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு வரும் முன்பே இவர் கல்வித்துறையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி காட்டியவர். இவர் பணம் சம்பாதிக்க கண்டிப்பாக வரவில்லை என்பது இவரின் சொத்து மதிப்பை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

வேறு என்ன நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்திருந்தாலும் அவர் பாஜக வின் தேர்தல் சின்னமான தாமரை யில் போட்டியிடுகிறார். அவர் வெற்றிபெற்றால் பாஜக MP யாகவே கருதப்படுவார். பாஜக ஆட்சிபீடத்தில் அமரும் வேளையில் அதன் MP யாக இருக்கும் பாரிவேந்தர் ஆளும் கட்சி MP என்ற முறையில் உரிமையுடன் அவர் பெரம்பலூர் தொகுதிமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கேட்டு பெறலாம்.

பாரிவேந்தரின் தனிப்பட்ட செல்வாக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல், அடுத்த பிரதமர் மோடி வரை, அனைவரையும் தனது SRM பல்கலைகழக விழாக்களுக்கு அழைத்துவந்து தனிப்பட்டமுறையில் பேசும் செல்வாக்கு கொண்டவர். இத்தகைய செல்வாக்குடன் ஆளும் கட்சி MP என்ற உரிமையில் அவர் பெரம்பலூர் தொகுதிக்காக கேட்கும் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றமுடியாதா என்ன.....?

சிந்தித்து வாக்களிப்போம் பெரம்பலூர் சொந்தங்களே.... நமக்கு தேவை, நேருவின் பினாமியா......? அம்மாவின் அடிமையா... அல்லது பாரிவேந்தரா...?

Tuesday, 22 April 2014


v.kalathur அன்பான வ.களத்தூர் சொந்தங்களே...... நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும்.
 இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள  இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்..........

1.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ) 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்.

1-நடுத்தெரு வார்டு 1
2-தெற்கு தெரு வார்டு 1
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147090.pdf

2.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்

1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1
2-மில்லத் நகர் வார்டு 4
3-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
4-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147091.pdf

3.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி வடக்கு பார்த்த மேற்கு ஓட்டுக்கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147092.pdf

4.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் தென்வடல் மெத்தைக்கட்டிடம் மேற்கு பார்த்தது வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-மேலத் தெரு வார்டு 4
2-தெற்கு தெரு வார்டு 4
3-மேட்டுச் சேரி வார்டு 5
4-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147093.pdf

5.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரபூண்டி கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்குபகுதி தெற்கு பார்த்தது வி.களத்தூர்

1-காமராஜர் நகர் வார்டு 4
2-மில்லத்நகர்வார்டு 4
3-தெற்கு தெரு வார்டு 4
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147094.pdf

6.அயல்நாடு வாழ் வாக்காளர்கள்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பகுதி 5 வடக்கு பார்த்த கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் தெற்குபகுதி வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-வி.களத்தூர் பள்ளிவாசல் வீதி வார்டு 1,2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147095.pdf

7.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் வடக்கு பார்த்த கற்போம் கற்பிப்போம் மெத்தை கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-வண்ணாரம்பூண்டி ரேசன்தெரு வார்டு 4
2-மில்லத் நகர் வார்டு 4
3-வண்ணாரம்பூண்டி காலனிதெரு வார்டு 5
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147096.pdf

8.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி கிழக்குபார்த்த ஒட்டு கட்டிடம் வ.களத்தூர்


1-ராயப்ப நகர் வார்டு 6
2-வள்ளியூர் வார்டு 6
3-இந்திரா நகர் வார்டு 6
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147097.pdf
நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும். பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் காண கிடைக்கிறது. PDF கோப்பாக கிடைக்கும் பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகர பட்டியல் விபரத்தை இனைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 292 தலைப்பில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. உடும்பியம் கிராமத்தில் ஆரம்பித்து படாலுரில் பட்டியல் முடிவடைகிறது. PDF கோப்பில் உள்ள இந்த பட்டியலை பின்வரும் இணைப்பில் சொடுக்கி (click) செய்து உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்.
 http://www.elections.tn.gov.in/pdf/ac147.htm
பெரம்பலூர் நகரில், திமுக முஸ்லிம்களுக்கு என்னவெல்லாம் செய்தது என்ற அடிப்படையில் திமுக விற்கு வாக்கு கேட்டு நோட்டிசு வினியோகிக்கப்பட்டுள்ளது...... அதில் முக்கிய அம்சம் முஸ்லிம்களுக்கு திமுக அளித்த இடஒதுக்கீடு பற்றியது.

திமுக தனது சாதனையாக கூறும் இந்த இடஒதுக்கீடு முறையால் பாதிக்கப்படப்போவது யார் தெரியுமா.....?

தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் என அழைக்கப்படும் BC இனத்தவர் ஐம்பது சதவீத மக்களுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முப்பது சதவீத இடஒதுக்கீடு கிறித்தவர்களுக்கும, முஸ்லிம்களுக்கும் ஆளுக்கு 3.5 சதவீதம் என்ற அடிப்படையில் கருணாநியால் 2௦௦7ல் பங்குபோட்டு கொடுக்கப்பட்டதால் 23 சதவீதமாக குறைந்தது.

கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடான 3.5% ல், பழைய இடஒதுக்கீடு முறையைப் போல் அதிக இடங்களை அரசு வேலைவாய்ப்பில் பெறமுடியாததன் காரணமாக எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என கருணாநிதியிடம் கிறித்தவ அமைப்புகள் கூறியதன் காரணமாக கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்பொழுது கிறித்தவர்கள் தமிழ்நாட்டில் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமான இடங்களில் அரசு வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர்.

அனால் முஸ்லிம் மதத்தினர் இதற்க்கு மாறாக தற்போது வழங்கப்பட்டுவரும் 3.5 சத ஒதுக்கீட்டிலிருந்து ஏழு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என கேட்கின்றனர். கிறித்தவர் இடஒதுக்கீடு வேண்டாம் என்கின்றனர் ஆனால் முஸ்லிம் மதத்தவர் இடஒதுக்கீடு தாற்போது வழங்கப்படும் 3.5% லிருந்து ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறும்போது, இதில் உள்ள சதிதிட்டதையும் இதனால் பாதிக்கபடபோவது யார் என்பதையும் நாம் அறிவது அவசியம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இடஒதுக்கீட்டின் அதிகபட்சவரம்பு 5௦ சதவீதம் . ஆனால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 69 சதவீதம். இந்த முரண் நமக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டமும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பாட்டாலும் அது அரசியலைமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையை பாதிக்கும் வைகையில் அமைந்தால் அதனை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு .

இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்த நாட்டின் முதல் சட்டத்திருத்தம் 1951 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி புதிதாக 9 வது schedule கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற வரைமுறையின் படி அல்லாமல் 69 சதவீதம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது . அனால் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்பதாவது shedule ல் உள்ள சட்டங்களும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்றது. அதனால் தமிழ்நாட்டின் தற்போதைய இடஒதுக்கீடு முறையின் செல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தின் கருனைக்காக காத்துக்கிடக்கிறது.

தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 69 சதவீதத்தில் MBC 2௦% , SC/ST- 19% மற்றும் BC-3௦%. இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடானது பிற்படுத்தோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3௦ சதவீத ஒதுக்கீட்டில் இருந்துதான் பிடுங்கப்பட்டது. கருணாநிதியின் திமுக விற்கு வெற்றிவாய்ப்பு அமைந்தால் தற்போது இஸ்லாமிய அமைப்புகள் கேட்கும் ஏழு சதவீத இடஒதுக்கீடும் கொடுக்கப்படும்.

அதிமுக வும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறுகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உள்ள BC என்றழைக்கப்படும் , பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சேர்ந்த மக்களே. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு முறை செல்லாது என வருமாயின் பாதிக்கப்படப்போவதும் இவர்களே.

இந்துசமுதாயத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இந்துக்களே.... திமுக மற்றும் அதிமுக வின் கட்சிக்கொடியை சுமந்து அதன் வெற்றிக்காக உழைக்கும் பிற்படுத்தப்பட்ட இந்து தோழர்களே ... உங்கள் குழந்தைகளின் எதிகாலத்தை எண்ணி வாக்களியுங்கள். 



முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி அதிமுக நிலை.

Sunday, 20 April 2014

3. பல துறைகளில் தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி குஜராத்துடன் ஒப்பிடும் படியாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளதே..
தில்லி, ஹரியானா, கோவா போன்றவை மிகச் சிறிய மாநிலங்கள். அவற்றை குஜராத்துடன் ஒப்பிட முடியாது. மற்ற பெரிய மாநிலங்களைத் தான் ஒப்பிட முடியும்.
உதாரணமாக, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டை விடவும் வேட் (VAT – Value Added Tax) வரி வருமானம் குஜராத்தில் குறைவாக உள்ளது என்கிறார்கள். ஆனால் அது மேம்போக்கான ஒப்பீடு. இந்த மூன்று மாநிலங்களின் மக்கள் தொகையையும் கணக்கில் எடுத்துக்  கொண்டு,  மதுக் கடைகளினால் வரும் வரி வருமானத்தை கழித்து விட்டுப் பாருங்கள். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் முன்னணியில் இருக்கிறது. எனவே அதிக வரி வருமானம் என்ற பெயரில் தமிழக அரசு காட்டும் கணக்கு என்பது டாஸ்மாக் கடைகளால் சீரழிந்த எத்தனையோ குடும்பங்களின் கண்ணீராலும், இழந்த உயிர்களாலும், சீரழிந்த எதிர்காலங்களாலும் நிரம்பியுள்ளது.
TH-TASMAC_SHOP_1_1621736g
கிராம சுகாதாரம், கிராமக் குடிநீர் விநியோகம் இரண்டிலும் தமிழ்நாடு குஜராத்தை விட நல்ல நிலையில் உள்ளது என்பது உண்மையே. இவற்றை  துரித கதியில் குஜராத் அரசு இப்போது மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவர்களின் செயல்திறன், எண்ணிக்கை இரண்டிலும் இப்போது தமிழ்நாடு குஜராத்தை விட நல்லநிலையில் உள்ளது தான். ஆனால், மோதியின் அரசு சும்மா இருக்கவில்லை. இந்தப் பிரசினைக்கு முதன்மை அளித்து வேலை செய்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இன்னும் சில வருடங்களிலேயே இவற்றில் தமிழ்நாட்டை குஜராத் மிஞ்சி விடலாம்.
மாநில அரசின் ஒட்டுமொத்த செயல்திறன், அரசாட்சியில் தொழில் நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றில் கட்டாயம் இந்த இரு மாநிலங்களை விடவும் குஜராத் மிகச் சிறப்பாக உள்ளது.
4. குஜராத் எப்போதுமே தொழில் வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் முன்னேறிய மாநிலமாகத் தான் உள்ளது. மோதி பெரிதாக என்ன செய்தார்?
எப்போதுமே என்பது தவறு. 1980களின் நடுப்பகுதி வரை குஜராத்தில் ஓரளவு நல்ல மாநில அரசாட்சி இருந்த்து. பிறகு சீரழிவுக் காலம் தொடங்கியது. 1960ல் தனி மாநிலமாக ஆன குஜராத், 1991ல் முதன்முறையாக நிதிப் பற்றாக்குறை மாநிலம் என்று தன்னை அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. வளர்ச்சி குன்றிய தேக்க நிலை 1998 வரை நீடித்தது. பாஜக ஆட்சியைப் பிடித்து கேசுபாய் படேல் முதல்வரான உடன் தான் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. 2001ல் மோதி முதல்வராகப் பதவியேற்கும் போதும் குஜராத்தின் நிலைமை படுமோசமாகத் தான் இருந்தது. மிகப் பெரும் அழிவையும் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்திய கட்ச் பூகம்பமும் அதனுடன் சேர்ந்து கொண்டது.
ஆனால் மோதியின் அயராத உழைப்பினாலும், சிறந்த அரசாட்சி செயல்பாடுகளாலும், 1991க்குப் பிறகு 2006ல் தான் குஜராத் நிதி மிகை மாநிலமாக ஆகியது. 2007 முதல் 2012 வரையிலான காலத்தில் வருடந்தோறும் சராசரியாக 12 சதவீதம் குஜராத்தின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. எந்த அளவீட்டை வைத்துப் பார்த்தாலும், இது ஒரு அசாதாரணமான சாதனை. மின்சக்தி, எரிசக்தி, விவசாயம், தொழில் உற்பத்தி என்று எல்லாத் துறைகளையும் தழுவியதாக இந்த வளர்ச்சி உள்ளது.
இது முழுக்க முழுக்க மோதியின் அரசியல் தலைமை மற்றும் உழைப்பால் விளைந்தது தான். அப்படி இல்லை என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.
5. மோதி ஆட்சிக்கு என்று தனிச்சிறப்பு ஏதாவது இருக்கிறதா என்ன?  மோதியின் மாடலுக்கும்,  தமிழ்நாடு மாடல், மகாராஷ்டிரா மாடல் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அரசாட்சியின் தரம், அரசின் தொலைநோக்குப் பார்வை, அரசு செயல்படும் முறை இந்த மூன்றிலும் மோதியின் குஜராத் மாடல், மற்ற மாநிலங்களில் இருந்து தனித்து நிற்கிறது.  சொல்லப் போனால், மற்ற மாநிலங்களின் விஷயத்தில் “மாடல்” என்று சொல்லத் தக்க வகையில் அந்த மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருக்கிறதா, ஏதேனும் புதிய சிந்தனை இருக்கிறதா என்பதே சந்தேகம்.
ஒரு உதாரணத்திற்காக, மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம்.
மகாரஷ்டிரத்திலும் தமிழ்நாட்டிலும் மின்சாரத் துறை என்பதே அரசியல் தரகு வேலைகளுக்கும், வாக்கு வங்கிகளை குஷிப் படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. ஆனால், மோதியின் குஜராத்தில், அது நல்லாட்சிக்கான ஒரு உதாரணமாக விளங்குகிறது.  குஜராத் ஊர்ஜா விகாஸ் நிகம் லிமிடட் (GUVNL) என்று புதிய பெயர் சூட்டப் பட்டுள்ள குஜராத் மின் வாரியம், இவ்வளவு காலமாக சேர்த்து வைத்திருந்த 2500 கோடி ரூபாய்கள் (2003ம் ஆண்டுக் கணக்குப் படி) நஷ்டத்தை துடைத்தெறிந்து விட்டு, கடந்த சில வருடங்களாக 500 கோடி ரூபாய்களுக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறி இருக்கிறது.
மின்சாரத் திருட்டை  முற்றிலுமாக ஒழித்ததும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கிக் கெடுக்காமல் உரிய கட்டணத்தைச் செலுத்த வைத்துக் காட்டியதுமல்லாமல் அதற்கு அடுத்த தேர்தலில் வெல்லவும் செய்தார் மோதி.  ஆனால், மகாராஷ்டிர, தமிழ்நாடு மாநில ஆட்சியாளர்களுக்கு இதில்  கால் பங்கு நடவடிக்கைகளைக் கூட எடுக்கும் முனைப்பும், வாக்கு வங்கி அரசியலுக்கு சவால் விடும் துணிவும் கிடையாது.
மாநில பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை வேண்டியவர்களை பதவியில் அமர்த்தவும் சலுகைகள் காட்டவும் மட்டுமே உருவாகியுள்ள சீழ் பிடித்த அமைப்புகளாகத் தான் மற்ற மாநிலங்களில் உள்ளன. ஆனால் மோதியின் குஜராத்தில், பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள், அரசியல் குறுக்கீடு இல்லாமல், தொழில் நேர்த்தியுடன் மிளிரும் புரஃபஷனல் நிறுவனங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன.
சத்துணவுத் திட்டம் என்ற ஒரு விஷயத்திற்காக எம்.ஜி.ஆர் என்ற மாநில ஆட்சியாளர் வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப் படுவார். இப்படி ஒன்றிரண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்திய ஆட்சியாளர்கள் எல்லா மாநிலங்களிலும் உண்டு. ஆனால் மோதியின் நல்லாட்சி குஜராத்தில் புரிந்துள்ள சாதனைகள் எண்ணிக்கையிலும் சரி, அளவிலும் சரி, இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரியவை. அதனால் தான் ஒரு “மாடல்” என்ற அடைமொழிக்கு அவை தகுதியுடையவை ஆகின்றன.
6. ரதன் டாடா, கௌதம் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வாரி வழங்கினார் மோதி. கார்ப்பரேட்டுகளை அளவுக்கு மீறி ஊக்குவித்தார். அது தானே உண்மை?
ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது – மோதியின் அரசு அடிப்படையில் ஒரு கொள்கை சார்ந்த அரசு (Policy driven government). சலுகைகளும், அதற்கு இசைந்த அதிகார அடுக்குகளும் வலைப்பின்னல்களும்  அதில் ஊக்குவிக்கப் படுவதில்லை என்பதை மோதி எதிர்ப்பாளர்களே கூட பதிவு செய்திருக்கிறார்கள்.
பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று  உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார்.  இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது.
டாடா நேனோ தொழிற்சாலை மட்டும் குஜராத்துக்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து ஃபோர்ட், மாருதி மற்றும் பல வாகன உற்பத்தியாளர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்ட தொழில் வளர்ச்சிக் கொள்கை தான் இதை சாத்தியமாக்குகிறது.  அதே போலத் தான் அதானி குழுமத்தின் “முந்த்ரா (Mundra)  தொழில் வளாகமும். கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை இத்தகைய தொழில் மையங்கள் குஜராத்தில் உருவாக்கியுள்ளன.
tata_nano_factory_sanand
இவ்வளவு கார்பரேட் நிதி குவியும் இடத்தில்  சிறிது கூட ஊழல் நடக்காமல் இருக்குமா என்று கேட்கலாம்.. ஆங்காங்கு சிறு சிறு ஊழல்கள் நடந்திருக்கலாம்.  ஆனால், வளர்ச்சியையும் மக்கள் நலனையும் பாதிக்கும் அளவிலான பெரிய ஊழல்களோ விதி மீறல்களோ கட்டாயம் நடக்கவே இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும். நடந்திருந்தால் காங்கிரஸ் கடுவாய்களும், ஊடக ஓநாய்களும் சும்மா இருந்திருப்பார்களா என்ன, கடித்துக் குதறியிருப்பார்களே.. குறிப்பாக, கூரை இடிந்து விழும் நிலையில் ஜீவனை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு மழை நாளிலும் ஒழுகிக் கொண்டிருக்கும், “தரமற்ற கட்டுமானங்கள்” வரிசையில் உலகப்புகழ் பெற்று விட்ட சென்னை விமான நிலையம் போல முற்றிப் போன ஊழல் எல்லாம் மோதியின் குஜராத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. நர்மதை நதியின் நீர்ப்படுகை முழுவதும் சோலார் தகடுகளைப் பதித்தது மூதல், நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்கள் மாநில நெடுஞ்சாலைகள் போட்டது வரை மோதியின் குஜராத் அரசு மாபெரும் திட்டங்களை செய்து முடித்து, கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது. எந்தத் திட்டம்  குறித்தும் இதுவரை  குறைந்த தரம் கொண்டது, அக்கிரமமாக செய்யப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்ற புகார்கள்  இல்லை. இது ஒன்றே போதும், கார்பரேட்டுகளும், முதலாளிகளும்  அநியாயமாக மக்களுக்கு தீங்கிழைப்பதற்கு ஒரு போதும்  அனுமதிக்கப் படவில்லை என்பதற்கு.
7. மோதியின் குஜராத் மாடல் பணக்காரர்களுக்கு, நடுத்தர மக்களுக்கு மட்டுமே நன்மை செய்யும். கீழ்நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் அதில் ஒன்றுமே கிடையாது என்று கூறப் படுகிறதே..
இது சிறிதும் ஆதாரமற்ற கூற்று. கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின் சராசரி தனி நபர் வருமானம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.  மாநில மக்கள் தொகையில் வேலைவாய்ப்பின்மை ஒரு சதவீத அளவிலேயே உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் இந்த மற்ற எல்லா மாநிலங்களையும் விட மோதியின் குஜராத் முன்னணியில் உள்ளது என்பது மத்திய அரசின் கணக்கீட்டு நிறுவனங்கள் உட்பட அனைவரும் ஒத்துக் கொள்ளும் விஷயம்.
முக்கியமாக, வளர்ச்சி செலவினங்கள் (development expenditure) , வளர்ச்சிக்குத் தொடர்பில்லாத செலவினங்கள் (non development expenditure ) இடையேயான விகிதம் மிக ஆரோக்கியமாக உயர்ந்துள்ளது. சமூக நலத் திட்டங்களுக்காக செலவழிக்கப் படும் அரசுப் பணம், மற்ற பணிகளுக்காக செலவிடப் படுவதை விட அதிகம் என்பதையே இது காட்டுகிறது.  பொதுவாக மோதியை எதிர்ப்பதாகக் கூறப் படும் பல என்.ஜி.ஓ அமைப்புகள் கூட, குஜராத் அரசின் “வனபந்து” பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தைப் புகழ்ந்து, இந்தியா முழுவதும் அந்த திட்டம் விஸ்தரிக்கப் படவேண்டும் என்று  பரிந்துரைக்கிறார்கள்.
இவை தான் மோதியின் குஜராத் மாடல் பற்றிய உண்மைகள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கௌஹாத்தி வரை உள்ள வாக்காளர்கள்,  மோதி என்ற உன்னதத் தலைவரை, பாரத அன்னையின் தவப் புதல்வரை நேசிக்கிறார்கள். அவர் பிரதமராகி இதே போன்ற நல்லாட்சி நாடு முழுவதும் மலர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
தமிழக வாக்காளர்களே, நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
வரும் ஏப்ரல்-24 அந்த நினைவுடன் தான் நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்.
வரும் மே-16 அந்த நம்பிக்கையைக் கட்டாயம் நிரூபிக்கவும் போகிறது.
 (முற்றும்)

 மேலும் படிக்க-http://othisaivu.wordpress.com/

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93-2/

மேலும் படிக்க-
இந்தியப் பாராளுமன்றம் “தில்லி தர்பார்” என்றே பொதுவாக அறியப் படுகிறது. தில்லியில் தான் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கங்கள், அமைச்சகங்கள், அரசியல் தரகர்கள் எல்லாமே மையம் கொண்டிருப்பது. பூகோள ரீதியாக தில்லி இருப்பது ஓரிடத்தில் தான். ஆனால் இந்திய நிலப்பரப்பின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதன் மாயக்கரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு பொதுவான அரசியல் நம்பிக்கை.
ஆனால், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், நாட்டின் அரசியல் மையம் தில்லியிலிருந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்து விட்டதோ என்று சொல்லுமளவுக்கு குஜராத் பற்றிய பேச்சுக்களும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  மோதி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவர் கைகளாலும் ஓசைப்படும் மத்தளமாகி விட்டது குஜராத். தேசிய அரசியலின் மையத்தில், அதிகார வர்க்கத்தினரின் மேல்பூச்சு வாசத்திற்குப் பதிலாக உண்மையான இந்திய மண்ணின் மணம் வீசப் போவதற்கான அறிகுறி இது என்று தவ்லீன் சிங் போன்ற அரசியல் நோக்கர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
“குஜராத்” என்ற பெயரை மதக் கலவரங்கள், சமூக மோதல்கள், வன்முறைகளின் குறியீடாக தேசத்திலும் உலக அரங்கிலும் முன் நிறுத்த மீண்டும் மீண்டும் காங்கிரசும், எதிர்க்கட்சிகளும், போலி அறிவுஜீவிகளும், ஊடக சதிகாரர்களும் தொடர்ந்து முயன்றனர். ஆனால் பல்வேறு புலன் விசாரணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் உண்மையை ஓங்கி அறைந்து வெளிக்கொணர்ந்தன. அந்த முயற்சிகள் மண்ணைக் கவ்வின. இப்போது “குஜராத்” பற்றிய கருத்துரைகள் அனைத்துமே வளர்ச்சி, பொருளாதாரம், சமூகநலத் திட்டங்கள், தொழில்துறை ஆகிய விஷயங்களையே சுற்றி வருகின்றன. வளர்ச்சி பற்றிய சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும்  ஒரு அளவீடாகவே ஆகியிருக்கிறது, மோதியின் “குஜராத் மாடல்”. இந்த திசைமாற்றம் நரேந்திர மோதியின் தலைமையிலான பாஜக, களத்தில் அடைந்துள்ள முதல் வெற்றி.

நரேந்திர மோதி நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கத் தகுதியானவர் என்பதை அழுத்தமாக சொல்வதற்காக, அதற்கான நிரூபணமாகத் தான், குஜராத்தில் அவர் செய்த சாதனைகளும், கொண்டு வந்துள்ள மாற்றங்களும் பரப்புரை செய்யப் படுகின்றன. இதன் நோக்கம் மற்ற மாநிலங்களை மட்டம் தட்டுவதோ அல்லது அவற்றில் எந்த வளர்ச்சியுமே ஏற்படவில்லை என்று சொல்வதோ அல்ல.  குஜராத் எட்ட வேண்டிய எல்லா இலக்குகளையும் எட்டி விட்டது, அது எந்தக் குறைகளும் அற்ற சொர்க்க பூமி என்று சொல்வதல்ல. ஆனால், மேம்போக்காக ஒரு சில புள்ளி விவரங்களைப் போட்டுக் காட்டி வெட்டி சவடால்கள் விடும் எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம் மோதியின் ஆட்சித் திறன் பற்றிய உண்மைகளை இருட்டடிப்பது. குறுகிய காலத்தில் மோதியின் தலைமை நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைகள் பற்றிய உண்மைகள் மக்களின் மனதில் பதிவதைத் தடுப்பது. தங்கள் தோல்விகளை மறைப்பது. எந்தவொரு தொலைநோக்குத் திட்டமும் இல்லாமல் வெட்டி அராஜக அரசியல் மட்டுமே நடத்தினாலும் கூட, முன்பே பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களின் இயல்பான தொடர்ச்சியை, ஏதோ தாங்கள் செய்த பெரிய சாதனை போல காட்டிக் கொண்டிருப்பது.
ஒரு புறம் காங்கிரசின் மெகா ஊழல்கள், கடும் தோல்விகள். மறுபுறம் பாஜகவின் நல்லாட்சி நிரூபணங்கள். தொலைநோக்கு செயல்திட்டங்கள். இது தான் இந்தத் தேர்தலில் மையமாக உள்ள  மோதல்.  இதைப் பேசுவதற்குப் பதிலாக, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு விஷயத்துடன் குஜராத் வளர்ச்சியை ஒப்பிட்டு, இங்க பார் குஜராத் ஒரு சதவீதம் கம்மி, அங்க பார், குஜராத் இரண்டு சதவீதம் கம்மி என்று சொல்வதன் மூலம், இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்?  நடப்பது மாநிலங்களுக்கு இடையேயான போட்டி அல்ல,  பாராளுமன்ற தேர்தல். தேசியத் தலைமையை தேர்வு செய்வதற்கான போட்டி.  இப்படி செய்வதன் மூலம் மற்ற மாநில மக்களை உசுப்பி விட்டு, குஜராத்தை விட நாங்கள் இளப்பமா என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மோதி அலையை மழுங்கடித்து விடலாம் என்று இவர்கள் கணக்குப் போட்டால், அது கட்டாயம் நிறைவேறப் போவதில்லை. அது இவர்கள் மீதே பூமராங்க் ஆகி திருப்பி அடிக்கப் போகிறது.
ஏனென்றால், இந்தியாவின் பொதுஜன கருத்து வெளி என்பது  புள்ளி விவரங்களைப் போட்டு விளையாடும் சாதுர்யம் மட்டும் அல்ல. ஊடகங்களும் பரப்புரைகளும் சொல்லும் செய்திகளை தங்கள் அனுபவங்கள், நேரடியான தகவல் தொடர்புகள் மூலம் உறுதி செய்து கொண்டு தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அரசியல் தேர்வுகளை செய்வார்கள். குஜராத்தை விட தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று ஜெயலலிதா மேடைகளில்  கெக்கலிக்கிறார். அந்தக் கெக்கலிப்புக்குப் பின் உள்ளவை அரைகுறை உண்மைகள் என்பதையும், மிகச் சில துறைகளில் ஏற்பட்டுள்ள ஒரு நீண்டகால வளர்ச்சியைத் தவிர்த்து மற்றதெல்லாம் வெறும்  பம்மாத்து என்பதையும் தமிழக வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.  இதுவரை தமிழகத்தில் நடந்த எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  60 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மோதி பிரதமராக வேண்டும் என்று கூறியிருப்பது யாரோ செய்தி சதி அல்ல. தானைத் தலைவர் சொல்வது போல தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்களும் அல்ல. ஜெயலலிதா கடந்த கால சீரழிவு அரசியலின், கழக அரசியலின் ஒரு எச்சம்; ஆனால் மோதி எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியை மையப்  படுத்திய அரசியலின் ஒளிக்கீற்று என்று மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்தக் கதைகளின் உண்மையான ஹீரோக்கள் ஆர்.வெங்கட்ராமன், காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தானே அன்றி, ஜெயலலிதா அல்ல. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர்  ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் வளர்ச்சிக் கொள்கைகளை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு உள்ள தகுதியின் இலட்சணம் என்ன என்று தமிழக மக்கள் அறிவார்கள். அம்மாவே இப்படி என்னும் போது கலைஞர்களையும், தளபதிகளையும் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
சர். சி வி.ராமன் கண்டுபிடித்ததை “ராமன் எஃபெக்ட்” என்றும், ஜெய்ப்பூரில் வடிவமைக்கப் பட்ட செயற்கைக் கால்களை “ஜெய்ப்பூர் கால்கள்” என்றும் சொல்வது போல, குஜராத்தில் நடைமுறைப் படுத்தியதால் “குஜராத் மாடல்” என்று அழைக்கிறார்கள். மற்றபடி, மோதியின், பாஜகவின் நல்லாட்சி பற்றிய கொள்கைகளும் திட்டங்களும் இந்தியா முழுவதற்கும் பொருத்தமானவையும் ஏற்றவையும் ஆகும். இவை வெறும் கோட்பாடுகளோ, தேர்தல் கோஷங்களோ அல்ல. உண்மையில்  இந்த நல்லாட்சிக் கொள்கைகளை குஜராத்தில் பரிசோதனை செய்து, அதில் உள்ள குற்றம் குறைகளைக் களைந்து மேலும் பல நல்ல அம்சங்களையும் சேர்த்து ஒரு செயல்திட்டமாக மோதி முன்வைப்பது எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று யோசித்துப் பாருங்கள். மோதிக்கு ஒரு வாய்ப்பளித்தால், இந்த நல்லாட்சியின் பலனை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும், ஒவ்வொரு மாநிலமும் அனுபவிக்கும்.  மோதி பிரதமராகவே கூடாது என்று வெறுப்புடனும் வன்மத்துடன் கையெழுத்துப் போட்டு கோரிக்கை விடுக்கும் அறிவுஜீவி, எழுத்தாளர், சிந்தனையாளர் பூர்ஷ்வாக்களுக்கும் அந்த நல்லாட்சியின் பலன்கள் கிடைக்கும். இடைவெட்டு இல்லாத 24 மணி மின்சாரத்தில், இன்னும் ஜோராக பெரிதாக எப்படி மோதி மீது வெறுப்பு கக்குவது, மக்களை முட்டாளாக்குவது என்று அவர்கள் யோசிக்கலாம்.
  • மோதி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்து மோதினாமிக்ஸ் (Modinomics) என்ற புத்தகத்தை சமீர் கோச்சார் எழுதியிருக்கிறார்.  இவர் Skoch  Group  தொழில் குழுமத்தின் தலைவர் சிறந்த பொருளாதார நிபுணர். அனைவரையும் அரவணைக்கும் பொருளாதாரம் (Inclusive Economics),  அனைவரையும் அரவணைக்கும் அரசாட்சி (Inclusive Governance) என்ற இரண்டும் தான் மோதினாமிக்ஸின் தாரக மந்திரங்கள் என்பதை விரிவாக இந்தப் புத்தகத்தில் பல ஆதாரங்களுடன் விளக்குகிறார். பார்க்க: http://modinomics.net/
  • இந்தியா டுடே இதழின் மூத்த பத்திரிகையாளர் உதய் மாஹூர்கர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள Centrestage: Inside the Narendra Modi Model of Governance என்ற புத்தகம்,  மோதி அரசின் சாதனைகளைப் பற்றியதாக  மட்டுமல்லாமல், சிறு குறைகள், இன்னும் நன்றாக செயல்பட வேண்டிய துறைகள் என்பதைப் பற்றிய நடுநிலையான விமர்சனமாகவும் அமைந்துள்ளது.
*********
மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.


1. குஜராத் மாடல் என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள்? அதன் முக்கிய அம்சங்கள் என்ன?
இந்தியாவில் இதுவரை  ஒவ்வொரு “பாதிக்கப் பட்ட” சமூகக் குழுக்களையும் தனித்தனியான அலகுகளாகக் கருதி எந்த ஒத்திசைவும் இல்லாமல் தான் பெருமளவு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப் பட்டு வந்துள்ளன. இது வாக்கு வங்கிகள் உருவாகவும், நீடிக்கவும் தான் வகை செய்திருக்கிறதே தவிர வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, மக்களிடையே எந்தப் பெருமித உணர்வையும் உண்டாக்கவில்லை. இதிலிருந்து மாறுபட்டு, நல்லாட்சி (good governance) மூலமாக, அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரும் வளர்ச்சி என்பது தான் குஜராத் மாடல்.
சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடம் உறைந்துள்ள ஆற்றல் குறித்த சுய பெருமித உணர்வை ஏற்படுத்தி, அதை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைப்பது மோதியின் குஜராத் மாடல்.
சாமானிய மக்களுக்கு “உதவுவது” அல்ல, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க எல்லாவிதமான ஊக்கங்களையும் வசதிகளையும் அளிப்பது.
கண்மூடித் தனமான, பொத்தாம் பொதுவான மானியங்களைத் தவிர்த்து, சுகாதாரம், கல்வி போன்ற குறிப்பிட்ட துறைகளில் மட்டும் ஏழை மக்களுக்கு உண்மையிலேயே நேரடியாக உதவும் வகையில் மானியங்களைப் பயன்படுத்துவது.
காளையின் கொம்பைப் பிடித்து மடக்குவது போல, வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பிரசினைகளை ஆயத்த நிலையில் (mission mode) நேரடியாக எதிர்கொள்வது, அவற்றை துரிதமாகத் தீர்ப்பது.
இந்த மாடல் அமல் படுத்தப் பட்ட போது, நடைமுறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. சில விஷயங்களில் நினைத்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், மோதி அரசு தொடர்ந்து அந்த விஷயங்களில் கூடுதல் கவனமும் அதிக முனைப்பும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. அது தான் மோதிக்கும் மற்ற அரசியல் தலைமைகளுக்கும் உள்ள வேறுபாடு.
2. சமூக வளர்ச்சியில் குஜராத் மிகவும் பின்தங்கியுள்ளதே.. ?
தீர்க்கவேண்டிய சில பிரசினைகள் உள்ளன என்பது உண்மை தான். ஆனால், “மிகவும் பின் தங்கிய” என்பது எந்த வகையிலும் சரியல்ல.
உதாரணமாக, சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான சராசரியை விட மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பழங்குடியினர் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் குஜராத் என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற இத்தகைய மாநிலங்களிலும் அந்த விகிதங்கள் சராசரியை விட மோசமாகத் தான் உள்ளன. இதற்குக் காரணம், பழங்குடியினர், கிராம நகர மக்களைப் போல நெருக்கமாக கூடி வசிக்காமல், தூர தூரமுள்ள பிரதேசங்களில் சிதறி வாழ்கின்றனர். அத்தகைய இடங்களுக்கு மருத்துவ வசதிகளைக் கொண்டு செல்வது மிகவும் கடினம்.  அப்படியும் கூட,  மோதி அரசின் சிறந்த முயற்சிகளால் 2002ல் 60 ஆக இருந்த சிறுகுழந்தைகள் மரண விகிதம், இப்போது 38 ஆகக் குறைந்திருக்கிறது.  மேற்கூறிய மற்ற பழங்குடியினர் அதிகமாக உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பாகவே உள்ளது.
இன்னொரு உதாரணம். ஒரு வருடத்திற்கு 1200க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்யும் யு.என்.மேத்தா இதய சிகிச்சை மையம் முற்றிலும் அரசு நிதியில் இயங்குகிறது. கடந்த பத்து வருடங்களில் இதற்கான நிதி 2 கோடியிலிருந்து 70 கோடி வரை உயர்த்தப் பட்டுள்ளது.
குஜராத்திற்கே உரித்தான சில காரணங்களால், கிராமப் புறங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, பிற மாநிலங்களில் இருந்து டாக்டர்களை வரவழைப்பவது உட்பட பல முன்னெடுப்புகளை மோதி தலைமையிலான அரசு செய்து வருகிறது.

தொடரும்--

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93/