This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 4 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
Friday, 30 May 2014
அரியலூர் ஓட்டக்கொவிலில் அரசுப்பேருந்து மீது லாரி மோதியதில் பத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
Friday, May 30, 2014
வ.களத்தூர் செய்தி
Thursday, 29 May 2014
Thursday, May 29, 2014
வ.களத்தூர் செய்தி
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசும் பொறுப்பேற்றாகி விட்டது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம் என அலசுவதானால் அது அரைத்த மாவை மீண்டும் அரைப்பதாகத்தான் இருக்கும். அதே வேளையில் பல் வேறு கருத்துக்கள், கட்டுரைகள் வந்தபின்னரும் வாராத கருத்துக்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தால் , ஆம் இருக்கின்றன என்றுதான் தெரிகிறது. இமாலய ஊழல்கள், வரலாறு காணாத உணவுப் பொருள்விலை, பெட்ரொல் விலை என்பன உட்பட விலைவாசி உயர்வு, பணவீக்கம், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உள்நாடு வியாபார விவசாய எதிர்ப்பு மசோதக்கள், சட்டங்கள், அமைச்சர் பெருமக்களின் அலட்சியப் போக்கு, அகங்கார வார்த்தைகள் என பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டாலும் அவற்றிற்கான அடிப்டையிலான நான்கு முக்கிய காரணங்களை யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. கண்ணை மறைத்துவிட்ட அந்த நான்கு முக்கிய காரணங்களை கண் முன் நிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
1. NAC எனப்பட்ட National Advisory Committee.. அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சோனொயாவின் தலைமையில் அரசாங்கம் அங்கீகரித்து உருவாகப்பட்ட அமைப்பு. எளிதில் சொல்வதானால் மன்மோகன் தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு. இந்தக் கமிட்டியில் உள்ள எந்த உறுப்பினர்களும் நேரடியாக பொது மக்கள் தொடர்பு கொண்டவர்கள் இல்லை. பல மக்கள் விரோத மசோதாக்களுக்கு இவர்களே காரணம். இந்த கமிட்டியில் ஒருவரான டீஸ்தா டெதல்வார்ட் குஜராத் கலவரத்தில் மோடி மீது அதிக பொய் பிரச்சாரம் செய்து உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு உள்ளானவர். பொய் காட்சி, பொய் சாட்சி உருவாக்கி அம்பலப்படுத்தபட்டவர். இதில் உள்ள ஜான் தயால் தான் மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பு வழங்க காரணமானவர். ” ” prevention of targetted communaல் violance bill ” இவர்களால் உருவானதுதான். இவர்களின் அழிச்சாட்டியங்களையெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி களும்எம் எல் ஏக் களும் இதர கட்சித் தலைவர்களும் நியாயப்படுத்த வேண்டியதாயிற்று. சோனியாவின் அந்நிய தேச வேர்களும் இந்திய அறியாமையும் அவரை என்றுமே இந்த தேசத்தை நேசிப்பவராக மாற்றவில்லை. எனவே, இந்த தேசத்தின் புராதனத்தையோ, மாண்பையோ அவர் என்றுமே புகழ்துரைத்ததில்லை. இந்த வெறுப்பே அவரை இத்தேசத்திற்கு எதிராக சிந்திக்க வைக்கஇவர்களுக்குக் போதுமானதாக இருந்ததது. தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை. ஆக, சோனியாவின் இந்த shadow cabinet தான் தோல்விக்கு முதல் காரணம்.
2. இரண்டாவது முக்கிய காரணம் பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூபாய் 26ம் நகர் புறத்தில் ரூ 32 ம் சம்பாதித்தாலே போதும் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என இவர் அறிவிக்க…, ஆமாம் ஆமாம் ஒரு ரூபாய்க்கு முழுசாப்பாடு கிடைக்கிறது, 5 ரூபாய்க்கு கிடைக்கிறது, 12 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றெல்லாம் நியாயப்படுத்தினார்களே அப்போதே காங்கிரஸ் கட்சி மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தப்பட்டு விட்டது. கழிப்பறை இல்லாத நாடு என்று காங்கிரஸ் கட்சி அமைச்சர்களே ஓங்கிப் பிரச்சாரச் செய்துவந்த போது, சுமார் 70 லட்சம் செலவில் திட்ட கமிஷன் அலுவலுகத்திற்கு மட்டுமே என கழிப்பறை கட்டியதுதான் இவர் சாதனை.
3. மக்களோடு தொடர்பற்ற NAC, மக்களோடு தொடர்பற்ற திட்ட கமிஷன், என இந்த வரிசையில் மக்களோடு தொடர்பற்ற பிரதமர் மூன்றாவது, முக்கிய காரணம். எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. 2004 ல் அவர் பிரதமர் ஆக்கப்பட்ட சூழல் வேறாக இருந்தாலும் அதன் பின் வந்த காலங்களில் அவரோடு மக்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். 2009 பொது தேர்தலில் அவரைப் போட்டி இட வைத்திருக்கலாம். சோனியா அம்மையாரோ, அவரது என் ஏ சி யோ மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர். தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஊடகங்கள் வரை பலவீனாமான பிரதமைரைத் தான் விரும்பின. அப்படியானால் தானே நீரா ராடியா முதல் பர்காதத் வரை அரசில் புரோக்கர் செய்ய முடியும். நன்றி உணர்வுள்ள பிரதமரும் ” இரண்டு பவர் செண்டர் ” தேவையில்ல…அது அவர்களாகவே இருக்கட்டும் ” என மனம் திறந்ததை அவரது முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு தனது accidental prime minister புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 2009 பொதுத் தேர்தலின் போது அத்வானி தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து மன்மோகன்சிங் தான் இதுவரை உள்ள பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர் எனக் கூறி வந்த போது அதை தனிநபர் விமர்சனமாகக் கருதி வாக்காளர்கள் பாஜகை நிராகரித்ததோடு அத்வானியையும் கண்டித்தனர். ஆனால் 2009 ற்குப் பிறகு சமூக ஊடகங்கள் பிரபலமான நிலையில் அத்வானி கூறிய உண்மை வெளிப்பட்டது. ஒரே ஒரு முறை அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அவர் பேட்டிக்காக சந்தித்ததே மாபெரும் செய்தி ஆயிற்று. தொடர்ந்து அது போல் சந்திப்பேன் என அவர் கூறினாலும் அதன்பின் அது போன்று ஒரு சந்திப்பு நடைப்பெறவே இல்லை. இதன் காரணாங்களா பலவீனமான, செயல்தன்மையற்ற, மக்களோடு தொடர்பற்ற பிரதமர் மீதான கோபம் இந்த அரசு வெளியேறப்பட மூன்றாவது, முக்கிய காரணம் ஆயிற்று.
4. கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. ” சும்மா போற ஓணான எடுத்து மடில உட்டுட்டு குத்துதே..குடையுதேன சொன்ன மாதிரி ” என்பார்கள். சிறுபாண்மை ஓட்டுக்காக ” இந்த நாட்டின் இயற்கை வளங்களிம் முதல் உரிமை மதச் சிறுபாண்மையினருக்கே ” என்ற பிரதமர், ஹிந்துகளை பயங்கரவாதிகளாகக் காட்ட எண்ணி ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ( இன்று வரை அவற்றில் ஒன்று கூட நீருபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ), அமைச்சர் சிதம்பரத்தின் ” காவி பயங்கரவாதம் ” என்ற அரிய கண்டு பிடிப்பு, அந்நிய நாட்டு ஊடகங்களிடம் ” உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை பயங்கரவாதமே இந்தியாவிற்கு ஆபத்து ” என ஜிகாதிகளுக்கு நற்சான்று வழங்கி ஹிந்துமக்களை பயங்கரவாதியாக சித்தரித்த ராகுல், எல்லாவற்றிற்கும் மேலாக ” இந்தத் தேர்தல் பாஜக வுக்கும் காங்கிரஸிக்குமான தேர்தல் அல்ல, ஆர் எஸ் எஸிக்கும் காங்கிரஸூக்குமான தேர்தல் எனக் கூறி ” இதோடு ஆர் எஸ் எஸ் ஒழிந்தது, ஹிந்து தேசியம் பேசுவோர் ஒழிந்தனர் ” எனப் பல்வேறு நடவடிக்கைகளால், அன்றாட அரசியலிலும் தேர்தல் அரசியலிலும் தலையிடாத ஆர்..எஸ்.எஸ். இயக்கத்தை தேர்தல் களத்தில் இறக்கியது தோல்விக்கான நான்காவது பெரும் காரணம். அண்ணால் காந்தியும், ஏன் நேருவும் இந்திராவும் கூட தேசத்திற்கு அவசியம் தேவையான இயக்கம் என்று உணர்ந்து உரைக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போய் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.
நன்றி- http://www.tamilhindu.com
Thursday, May 29, 2014
வ.களத்தூர் செய்தி
மோடியின் பத்து அம்ச திட்டம்....
01. அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல்
02. புதுமையான யோசனைகளை வரவேற்பதுடன், அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற அதிகாரம் அளித்தல்.
03. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை.
04. அரசின் இணைய ஏலத்தில் வெளிப்படை தன்மையை ஊக்குவித்தல்.
05. அமைச்சகங்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை களைய புதிய அமைப்பு.
06. அரசு நிர்வாகத்தில், மக்கள் தொடர்பான விஷயங்களுக்கு தனி அமைப்பு.
07. பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை.
08. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் சீரமைக்க நடவடிக்கை.
09. சரியான கால இடைவெளியில் கொள்கைகளை அமல்படுத்த நடவடிக்கை. 10. அரசு கொள்கைகள், நிலைத்தன்மை மற்றும் நிலைநிறுத்தும் திறன் கொண்டதாக இருக்க ஏற்பாடு .
vkalathur seithi .
Tuesday, 27 May 2014
Tuesday, May 27, 2014
வ.களத்தூர் செய்தி
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணாக்கர்கள் செய்வதாக தெரிய வருகிறது. லேமினேஷன் செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது லேமினேஷன் செய்திருந்தால் திருத்தம் செய்ய கடினமாக உள்ளது. வெளிநாடு செல்லும் மாணாக்கர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்க லேமினேஷனிலிருந்து சான்றிதழை பிரிக்கும் போது சான்றிதழ் சிதைய நேரிடுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணாக்கர்கள் லேமினேஷன் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- என்று கூறியுள்ளார v.kalathur seithi.
Monday, 26 May 2014
Monday, May 26, 2014
வ.களத்தூர் செய்தி
மொபைல் போன் வாடிக்கையாளர்கள் விரைவான இணையதள சேவை பெறும் வகையில், குறைந்தபட்ச இணையதள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்ளது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, '2ஜி' மற்றும் '3ஜி' தொழில்நுட்பத்தில் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.
Monday, May 26, 2014
வ.களத்தூர் செய்தி
வேப்பந்தட்டையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், வேப்பந்தட்டை வட்டத்திற்குள்பட்ட அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகள் உள்பட 29 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 90-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்களும், விவசாயிகளும் தங்களுக்கு தேவையான பட்டா, சிட்டா அடங்கல், மனைப்பட்டா பதிவு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்களுக்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டுமென எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து, வேப்பந்தட்டையில் உள்ள உழவர் சந்தை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 50 லட்சத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கட்டடம் கட்டும் பணி டிசம்பர் 2013-ல் நிறைவடைந்தது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையிலும் அது இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. மேலும், அங்குள்ள கண்ணாடிகளையும் சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.
எனவே, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தால் அரசுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை திறக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதோடு, சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை v.kalathur seithi.
-thinamani.
Monday, May 26, 2014
வ.களத்தூர் செய்தி
http://pmindia.nic.in/
இத்தளமானது ஏற்கனவே மோடி அவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் முகநூல் மற்றும் ட்விட்டர் இணையதளங்களையும் இதனுடன் இணைத்துள்ளார். பிரதமருடன் நேரடியாக தொடர்புகொள்ள எளிய ஒரு தொடர்பு சாதனம் ,பயன்படுத்திக்கொள்வோம்.
Friday, 23 May 2014
Friday, May 23, 2014
வ.களத்தூர் செய்தி
=============================
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2 மற்றும் 3-வது இடங்களை பெற்று பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. அகல்யா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். மாணவி கே. அகல்யா, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காமராசு - யசோதா தம்பதிகளின் மகள் ஆவார். இவர், டாக்டர் ஆவதே தனது விருப்பம் என்றார்.
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். பார்க்கவி 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
மாணவி ஆர். பார்க்கவி, லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - வெண்ணிலா தம்பதிகளின் மகள் ஆவார். இவர் டாக்டர் ஆவதே தனது விருப்பம் என்றார்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் கே. அகல்யா, ஆர். பார்க்கவி ஆகியோரை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் இனிப்பு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் செயலர் எம். விவேகானந்தன், பள்ளித் தலைமை ஆசிரியர் கோமதி, உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் v.kalathur seithi .
Friday, May 23, 2014
வ.களத்தூர் செய்தி
V.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் R.நிவேதா என்ற மாணவி 456 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், P.புவனேஸ்வரி என்ற மாணவி 451 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் , R.ஸ்ரீ மரிஷ் என்ற மணவி 449 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்கள் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
முதல் இடம் : நிவேதா
தமிழ் :95
ஆங்கிலம்:82
கணிதம் : 84
அறிவியல் : 99
சமூக அறிவியல் : 96
மொத்தம் : 456
இரண்டாம் இடம் : புவனேஸ்வரி
தமிழ் : 92
ஆங்கிலம்: 79
கணிதம் : 89
அறிவியல் : 93
சமூக அறிவியல் : 98
மொத்தம் : 451
முன்றாம் இடம் : ஸ்ரீமரிஷ்
தமிழ் : 94
ஆங்கிலம்: 75
கணிதம் : 90
அறிவியல் : 96
சமூக அறிவியல் : 94
மொத்தம் : 449
400 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.
பள்ளியின் சராசரி தேர்ச்சி விகிதம் :84.5.
Tuesday, 20 May 2014
Tuesday, May 20, 2014
வ.களத்தூர் செய்தி
இன்று காலை நடைபெற்ற அன்னதான விழாவில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பசியாறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை வ.களத்தூர் ஊராட்சி கழக கிளைச்செயலாளர் S P ரவி (காவ்யா ரவி) அவர்கள் முன்னின்று செய்தார்கள். விழாவில் S . கண்ணுசாமி, வேப்பந்தட்டை ஒன்றிய அதிமுக கழக செயலாளர், கந்தசாமி , கழக கிளை செயலாளர், M . ஜெயச்சந்திரன் வ.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Sunday, 18 May 2014
Sunday, May 18, 2014
வ.களத்தூர் செய்தி
நடந்துமுடித்தநாடாளுமன்ற தேர்தல் பிரச்சார நேரத்தில் ஆரம்பம் முதலே பாஜக மீது தாக்கி பேசாமல் இருந்த காரணம் இவர்களெல்லாம் எங்கு வெற்றிபெறப்போகிரர்கள் நினைப்புதான்.. ஆனால் உளவுத்துறையின் அறிக்கையில் பாஜக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என்று கூறியதன் காரணமாக பாஜகவை தாக்கி பேச ஆரம்பித்தார். மேலும் TNJ அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியபிறகு துலுக்கனின் ஒட்டு பறிபோய்விடும் என்று முஸ்லிம்களை சமாதானப்படுத்த மோடியை தாக்கி பேசுகிறார்.
இந்து அமைப்பைச்சேர்ந்த அனுதாபிகள் அதிமுக மற்றும் பாஜக வை இரட்டைக்குழந்தைகள் போன்று பாவிக்க காரணம் பாஜக வின் குறிப்பாக பாஜக தலைவர்களின் அதிமுக பாசம்தான் காரணம் . அதனால்தான் பாஜகவை ஆதரிக்க முடியாத காலக்கட்டங்களில் அதிமுகவை ஆதரிக்கிறார்கள்.
ஆனால் இந்து சிந்தனைகொண்ட தமிழக மக்களை தேவைக்கு ஏற்றாற்போல் ஜெயலலிதா பயன்படுத்திகொள்கிறார், முஸ்லிம்களின் 7 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கடிதம் எழுதும் ஜே .. TNJ கூட்டணிக்குத்தான் ஆசைப்பட்டாரே தவிர பாஜகவோடு கூட்டணியை எள்ளளவும் விரும்பவில்லை. இந்து சிந்தனை கொண்டவர் என்ற முகத்தை வைத்துக்கொண்டு நம்மை ஏமாற்றுகிறார்.
தமிழக பாஜக என்று அதிமுக எதிர்ப்பு நிலை எடுக்கிறதோ அன்றுதான் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும். இது தெரிந்தும் அதிமுக கூன்பாண்டிகளுக்கு இணையாக பாஜக தலைவர்கள் அதிமுக வெற்றிப் புராணம் பாடுகிறார்கள். பாஜக கூட்டணி பல இடங்களில் தோற்க காரணமாக இருந்தது ஜெவின் பணபட்டுவாடா எனத்தெரிந்தும் ராதாகிருஷ்ணன் ஜெவின் வெற்றிக்கு அவரின் நிவாக திறமை என்று பாராட்டுகிறார்.
மாநிலங்களைவையில் அதிமுக ஆதரவு தேவை என்பதற்காக பாஜக வின் தேசிய தலைமை ஜெவிற்கு அனுதாபம் காட்ட முனையலாம். ஆனால் தமிழகத்தில் பாஜக வளரவேண்டும் , 2016 சட்டசபைத்தேர்தலில் சிறந்த ஒரு வெற்றியைபெற, அதிமுக எதிர்ப்பு மனநிலையை எடுத்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலையை தமிழக பாஜக தலைவர்கள் தேசிய தலைமைக்கு உணர்த்தியே ஆகவேண்டும்.
ஆனால் நிலைமை வேறுவிதமாக உள்ளது..
///தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர ராவ் பேட்டி:
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜ.,வுடன் பல விஷயங்களில், அக்கட்சிக்கு ஒத்த சிந்தனையே உள்ளது. எனவே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, பிந்தைய நாட்களில், கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.////
தி.மு.க. மற்றும் அ.தி.மு. க.வுக்கு பல்லக்கு தூக்குவதுடன், ஜெ. வும் மோடியும் நண்பர்கள் என்று பொன். ராதாகிருஷ்ணனும், நாளை ஜெ. வுடன் பா.ஜ.க கூட்டணி சேரலாம் என்று முரளீதரராவும் சொல்கிறார்கள் என்றால், அந்த கட்சிகளுக்கு "பகுதி நேர ஊழியர்களாக(அடிமைகளாக)" செயல் படுகிறார்கள் என்றால் பா.ஜ.க. கட்சி தொண்டன் மட்டும் முழுநேர பா.ஜ.க. ஊழியனாக இருக்க வேண்டுமோ?
மோடி வேறு அனைவருக்கும் எதிரி என்பது போல், ஜெ. மற்றும் மோடியின் நட்பை பற்றி, தான் ஜெயித்த பிறகு மெச்சும் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தலுக்கு முன்னர் மெச்சிக் கொண்டிருக்க வேண்டியது தானே! அல்லது தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. பிரச்சாரம் செய்தது போல் "ஜெ. க்கு போடும் ஓட்டு மோடிக்கு போடும் ஓட்டு" என்று கூன்பாண்டியாய் மாறி பிரச்சாரம் செய்திருக்க வேண்டியது தானே! இன்று பொன்.ராதாகிருஷ்ணன் மெச்சுவது போல் ஜெ. மோடி நட்பை பா.ஜ.க தொண்டன் மெச்சியிருந்தால் ராதாகிருஷ்ணன் வென்றிருப்பாரா?
கட்சித்தலைமை வேறு கட்சிகளுக்கு பல்லக்கு தூக்குவது போல் இங்குள்ள தொண்டர்கள் மாறிவிட்டால் பா.ஜ.க.விற்கு போஸ்டர் ஒட்டவும் ஆள் இல்லாமல் போய் விடும். இது எச்சரிக்கை!
மோடி மற்றும் ஜெ. நட்பை பாராட்டி புழங்காகிதம் ஆக பா.ஜ.க வின் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
மலைச்சாமிக்கு இருக்கும் மானம் ரோஷம் கூட பா.ஜ.க. தலைவர்களுக்கு இல்லாமல் போனதே!
தமிழக பாஜக வை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்....
கட்டுரை உதவி- சுந்தரபத்மன் தமிழ் எலக்ட்ரிக்கல் டெக்னீஷியன்.
Saturday, 17 May 2014
Saturday, May 17, 2014
வ.களத்தூர் செய்தி
Saturday, May 17, 2014
வ.களத்தூர் செய்தி
Friday, 16 May 2014
Friday, May 16, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
22 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்,
ஆர்.பி. மருதராஜா (அதிமுக) - 4,62,693,
சீமானர் ச. பிரபு (தி.மு.க) - 2,49,645,
பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே) - 2,38,887,
மா. ராஜசேகரன்- (காங்கிரஸ்) - 31,998,
வி.எம். செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) - 2,924,
கி. ராமர்யாதவ் (தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்) -6,324,
பெ. தமிழ்செல்வன் (யுனைடெட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா) - 1,509,
ரா. அப்துல்ரகுமான் (சுயேச்சை) -1,018, கி. சிவபெருமாள் (சுயேச்சை) -986
சின்ன. ராஜேந்திரன் (சுயேச்சை) -877, த. சுப்பிரமணி (சுயேச்சை) -1,201, க அன்பில் தங்கமணி (சுயேச்சை) -1,636, என். பச்சமுத்து (சுயேச்சை) -2,762, ச. பிரபு (சுயேச்சை) -2,211, பி. மணி (சுயேச்சை) -1,302, பி. மருதராஜ் (சுயேச்சை) -3,940 த. ராஜசேகர் (சுயேச்சை) -1,490, மு. ரெங்கராஜ் (சுயேச்சை) -633, பெ. வடிவேலு (சுயேச்சை) -1,821, விஸ்வநாதன் (சுயேச்சை) -2,369, அ. வேலாயுதம் (சுயேச்சை) -2,995 வாக்குகள் பெற்றனர். நோட்டாவை - 11,605 பேர் பயன்படுத்தினர். 840 வாக்குகள் தள்ளுபடியானது.
இறுதியாக, தபால் வாக்குகள் உள்பட 10,31,666 வாக்குகள் பதிவானதில், அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா 4,62,693 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம், திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபுவை விட 2,13,048 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபு 2,49,645 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், ஐஜேகே வேட்பாளரான பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து 2,38,887 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றார் v.kalathur seithi .
-தினமணி.
Friday, May 16, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் 1,518 மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தபால் வாக்குகளில் பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்து 1,596 வாக்குகள் பெற்றார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
பெரம்பலூர் பாராளு மன்ற தேர்தலில் பெரம்பலூர் (தனி), திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி), முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பெரம்பலூர் பாராளு மன்றதொகுதியில் அ.தி.மு.க. தி.மு.க. பா.ஜ.க. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 14 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தபால் வாக்குகள்
6 சட்டமன்ற தொகுதி களையும்சேர்த்துபெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் விபரம்:
மொத்தம் பதிவானது: 4,044
தள்ளுபடி : 775
ஏற்கப்பட்டது : 3,269
செல்லாதவை : 13
பாரிவேந்தர் (எ) டி.ஆர்.பச்சமுத்து (பா.ஜ.க.)- 1,596
சீமானூர் பிரபு (தி.மு.க.)- 984
ஆர்.பி.மருதராஜா ( அ.தி.மு.க.)- 616
எம்.ராஜசேகரன் (காங்) - 27
நோட்டா - 25
வி.எம்.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)- 2
பெ.தமிழ்ச்செல்வன் (ஐக்கிய கம்யூ)-3
சின்னராஜேந்திரன் (சுயே)-1
பெ.வடிவேலு (சுயே)- 1
கி.சிவபெருமாள் (சுயே)-1
-தினத்தந்தி.
Friday, May 16, 2014
வ.களத்தூர் செய்தி
பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றிபெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு மகிழ்ச்சியை தெரி வித்தும், வரவேற்றும் பெரம்பலூரில் பா.ஜ.க. வினர் வெடிவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி னர் v.kalathur seithi .
பாரதீய ஜனதா வெற்றி
நடந்து முடிந்துள்ள பாராளு மன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள் ளது.
பாரதீய ஜனதா கட்சியின் அமோக வெற்றியை வரவேற்று மாவட்ட பா.ஜ.க. தலைவர் சி.சி.ஆர்.சந்திரசேகர் தலைமையில் பெரம்பலூரில் கடை வீதியில் வெடிவைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
ஊர்வலமாக
பிறகு அங்கிருந்து கட்சித் தொண்டர்கள் கொடிஏந்தி ஊர்வலமாக வந்து டவுன் பஸ்நிலையத்தில் வெடிவைத்து பொதுமக்கள், ஆட்டோ வாகனங்களில் பயணம் செய் வோருக்கு லட்டுகள் வழங்கினர்.
மேலும் பா.ஜ.க.வெற்றியை கொண்டாடும் வகையில் டவுன்பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து காமராஜர்வளைவு, சங்குப் பேட்டை, புறநகர் பஸ்நிலையம் உள்பட 5 இடங்களில் வெடி வைத்து ம்,நரேந்திரமோடியை பிரதமராக தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த மாபெரும் வெற்றியை தந்துள்ள நாடு முழுவதும் உள்ள வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுமக்களுக்கு பா.ஜ.க. வினர் இனிப்புகள் வழங்கி னர்.
இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் குரு.ராஜேஷ், மாவட்ட பொதுசெயலாளர் பாஸ்கர், பொருளாளர் சிவ சங்கர், பெரம்பலூர் ஒன்றியத்¢ தலைவர் தனபால், வேப்பந்தட்டை ஒன்றியத் தலைவர் பாலவெங்கடேஷ், வேப்பூர் ஒன்றியத்தலைவர் சீனிவாசன், மாவட்ட வரவேற்புக்குழுத்தலைவர் முத்துக்கமல், மாவட்ட துணை தலைவர்கள் வாசு தேவன், கண்ணன், நகர இளை ஞர் அணித்தலைவர் ராஜா ராம், மாவட்ட சிறுபான்மை யினர் மாவட்ட நிர்வாகிகள் சித்திரவேல், ஜார்ஜ்புஷ் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் ஜீவா சிவக்குமார், மாவட்ட பாஜ.க. பொதுச்செயலாளர் டி.பாஸ்கர், அமைப்புச் செயலா ளர் எம்.ராமசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ஈஸ்வர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர் - தினத்தந்தி.
Friday, May 16, 2014
வ.களத்தூர் செய்தி
1984க்குப் பிறகு, முப்பதாண்டு இடைவெளிக்குப் பின்னால், தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதே மிகப் பெரிய ஆறுதல். 16ஆவது மக்களவை மேலும் பல புதிய சரித்திரங்களைப் படைக்க இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த தலைமுறையின் தலைமையில் அமைய இருக்கும் முதல் மத்திய அரசு இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன்னால் பதவி வகித்த பிரதமர்கள் அனைவருமே அடிமை இந்தியாவில் பிரிவினைக்கு முன்பு பிறந்தவர்கள். 1950இல் பிறந்த நரேந்திர மோடி பிரதமராவதன் மூலம், தலைமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
அதேபோல, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்கப் போவதும்கூட ஒருவிதத்தில் சரித்திர நிகழ்வுதான். 1977இல் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது என்றாலும், அது கட்சிகளின் கூட்டணியாகக் காட்சி அளித்ததே தவிர, ஒரு கட்சியாக இயங்கவில்லை. கேரள மாநிலத்தையும், ஒரு சில வடகிழக்கு மாநிலங்களையும் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது என்பதும் முதல் முறை நிகழ்வு.
இந்தியாவின் பல பகுதிகளில் மோடி அலை அடித்தது என்றால், கேரளம், தமிழகம், ஒடிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நரேந்திர மோடியின் தாக்கம் காணப்பட்டது என்பதுதான் உண்மை. 50 நிமிடமே பிரசாரம் செய்த வதோதராவில், இந்தியத் தேர்தல் வரலாற்றில் சரித்திரம் படைக்கும் 5,70,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட வாராணசியில் மெளனப் புரட்சியாக வெற்றி. நரேந்திர மோடி மீது மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இவை வெளிச்சம் போடுகின்றன.
நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, என்னென்ன விமர்சனங்கள், எத்தனை எத்தனை எதிர்ப்புகள். அவை அனைத்தையும் பொய்யாக்கி, இந்தியா முழுவதும் புயல்போலச் சுற்றி அலைந்து, பா.ஜ.கவுக்கு சாதகமான பேரலையை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருக்கும் நரேந்திர மோடியைப் பாராட்டியே தீரவேண்டும். சுதந்திர இந்திய சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு மாநில முதல்வரால் தேசியத் தலைவராக, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏகோபித்த ஆதரவைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் மோடி.
2002 குஜராத் கலவரத்தை நரேந்திர மோடியுடன் இணைத்து, அவர்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டார் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியவர்கள் முகத்தில் கரி பூசியிருக்கிறார்கள் வாக்காளர்கள். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு உள்ளிட்ட அனைத்து விசாரணைகளும் குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்குத் தொடர்பில்லை என்று உறுதிப்படுத்தியும்கூட, அவரை "மரண வியாபாரி' என்று வர்ணித்து, சிறுபான்மை இனத்தவர் மத்தியில் பீதியை எழுப்பிய போலி மதச்சார்பின்மைவாதிகளின் பிரசாரத்தை மக்கள் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது.
நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என்பது போன்ற தவறான தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 17% மக்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் நம்பிக்கையால் இஸ்லாம் மதத்தினரே தவிர, பிறப்பாலும் உணர்வாலும் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்பதை நன்றாகவே உணர்ந்தவர் நரேந்திர மோடி. அவர் பிரதமரானால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்பது அரசியல் ஆதாயம் தேட சிலர் எழுப்பும் அனாவசிய பீதியல்லாமல் வேறொன்றுமில்லை.
அரசமைப்புச் சட்டம்தான் எனது புனித நூல் என்று நரேந்திர மோடி நமக்களித்த சிறப்புப் பேட்டியில் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையிலும், அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான பிரதமராக தான் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது போலி மதச்சார்பின்மை வாதிகளின் பொய்ப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வலிமையான, ஊழலில்லாத இந்தியா உருவாகட்டும். இளைஞர்களின் இந்தியா வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடட்டும். ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக தான் இருப்பதை உணர்ந்து, "சப்கா சாத், சப்கா விகாஸ்!'(அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக!) என்கிற கோஷத்துடன் ஆட்சியில் அமர இருக்கும் நரேந்திர மோடிக்கு நமது வாழ்த்துகள்!
Friday, May 16, 2014
வ.களத்தூர் செய்தி
புதுடில்லி:பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எட்டே மாதங்களில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வை, தனி பெரும்பான்மை பலத்துடன், மத்திய ஆட்சியில் அமரச் செய்துள்ளார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இதன் மூலம் நிலையான ஆட்சி மத்தியில் கைகூடியுள்ளது. நாடு முழுவதும் வீசிய, 'மோடி அலை'யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது. 16வது லோக்சபாவில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த, 1984ல், இரண்டு எம்.பி.,க் களுடன் இருந்த, பா.ஜ.,வுக்கு இப்போது, தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் மோடி. வரலாற்றுச் சாதனையாக, இப்போது, 283 இடங்களில், பா.ஜ., மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி வியூகம்
இந்த வெற்றியால், மத்தியில் நிலையான ஆட்சி அமைய உள்ளதால், பா.ஜ.,வினர் மட்டுமின்றி, தொழில் துறையினர் உட்பட அனைத்து துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மோடி தலைமையிலான, இந்த வெற்றிக்கு, ராஜஸ்தான் (25), குஜராத் (26), டில்லி (7), இமாச்சல பிரதேசம் (4), கோவா (2) ஆகிய மாநிலங்களில், அனைத்து தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றியதும் காரணம். அதுபோல், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் கூட் டணி பலத்தால், ஆந்திராவிலும், கர்நாடகாவில், கட்சியிலிருந்து வெளியேறி, தனிக்கட்சி துவக்கிய எடியூரப்பாவை மீண்டும், பா.ஜ.,வுக்கு கொண்டு வந்த அரசியல் வியூகத்தாலும், பா.ஜ., வின் வெற்றி, இந்த முறை கணிசமாக இருந்தது.முக்கியமாக, வட கிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாமில், யாருமே எதிர்பாராத வகையில், அங்குள்ள, 14 தொகுதிகளில், 7ல், பா.ஜ., வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது; ஆளும் காங்கிரசால், மூன்று இடங்களைத் தான் பிடிக்க முடிந்தது.அதேபோல், நாட்டிலேயே அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகளை கொண்ட, உ.பி.,யில், 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ.,வின் இந்த சாதனைக்கு, மோடியின் வலதுகரமாக வர்ணிக்கப்படும், மாநில, பா.ஜ., பொறுப்பாளர் அமித் ஷாவின் தேர்தல் அணுகுமுறை மற்றும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.மேலும், இறுமாப்புடன் இருந்த பீகார், முதல்வர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாருக்கு தக்க பாடம் கற்பிக்கும் வகையில், அந்த மாநிலத்தின் மொத்தமுள்ள, 40 இடங்களில், பெரும்பான்மையான இடங்களை (22) பா.ஜ., கைப்பற்றி, சாதனை படைத்துள்ளது.ஆளும் ஐக்கிய ஜனதா தளம், எதிர் அணியில் இருந்த காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளால், ஒன்றிரண்டு இடங்களில் தான் வெற்றி பெற முடிந்துள்ளது.மாநில ஆளும் கட்சிகளான, தமிழகத்தின், அ.தி.மு.க., மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சிகள், அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும், மூன்றாவது அணி அமைத்து, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற, அந்தக் கட்சிகளின் கனவு தகர்ந்துள்ளது.'மோடி பிரதமராகி விடக் கூடாது' என, திட்டமிட்டு அவரைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி விட்ட காங்கிரஸ், இரட்டை இலக்கங்களுடன் முடங்கி விட்டது. இன்று வரை ஆளும் கட்சியாக இருக்கும் அக்கட்சியால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கதி?
லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வேண்டுமானால், மொத்த இடங்களில், 10 சதவீத வெற்றி பெற்றிருக்க வேண்டும். நேற்று இரவு வரை வந்த தேர்தல் முடிவுகளைப் பார்த்தால்,
காங்கிரஸ் கட்சிக்கு, 44 இடங்கள் தான் கிடைத்துள்ளன. 54 இடங்களில் வெற்றி பெற்றால் தான், 10 சதவீத இடங்கள் என்ற கணக்கு வரும். போகிற போக்கைப் பார்த்தால், காங்., 54யைத் தொடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வந்த தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியே இல்லாத லோக்சபா அமையும் என, இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற சூழ்நிலை, பிரதமராக இருந்த இந்திரா கொலை செய்யப்பட்ட பிறகு, 1984 பொதுத் தேர்தலில் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட அனுதாப அலையால், ராஜீவ் தலைமையில் காங்கிரஸ், 415 இடங்களைக் கைப்பற்றியது. 10 சதவீத இடங்களை எந்த கட்சியும் பெறாததால், எந்தக் கட்சியும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை.
திராவிட கட்சிகள் இன்றி 18 ஆண்டுக்கு பின் மத்தியில் ஆட்சி
கடந்த 1996ல், இருந்து, திராவிட கட்சிகளின் பங்கு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைந்ததில்லை. இதில் தி.மு.க.,விற்கே பெரும் பங்கு இருந்து உள்ளது.கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த நிலை, தற்போது, பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளதால், மாறிஉள்ளது. இந்த தேர்தலில், தமிழகத்தில், 37 எம்.பி.,க்களை பெற்ற போதிலும், அ.தி.மு.க.,வுக்கு மத்திய அரசில் இடம் பெறும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்படி யொரு தெளிவான தீர்ப்பை, தேசிய அளவில், மக்கள் எழுதி விட்டனர். எனவே, அ.தி.மு.க., பெற்றுள்ள வெற்றி, அக்கட்சியின் பலத்தை நிரூபிக்க மட்டுமே உதவியிருக்கிறது. கூடுதலாக, தேசிய அளவில், மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் தேடித் தந்திருக்கிறது.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பது எப்போது?
பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்து, பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களுக்கு ஆளான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் சிங், இன்று மதியம், 12:45 மணியுடன் அந்த பெருமைமிகு பதவியில்இருந்து வெளியேறுகிறார்.மோடி தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக, மன்மோகன் சிங், இன்று மதியம்,ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜினாமா கடிதம் அளிக்கிறார். அதன் பிறகு, சம்பிரதாய முறையில், செய்தியாளர்களை சந்தித்து, பேசுகிறார். அதன் பிறகு, இப்போதைய பிரதமர் இல்லமான, 7, ரேஸ்கோர்ஸ் வீட்டில் இருந்து, 3, மோதிலால் நேரு சாலையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்கிறார்.மோடி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் யார் யார் என்பது உட்பட, அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள், டில்லியில் பரபரப்பாக துவங்கியுள்ளன.
ஆறு மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களை அள்ளிய பா.ஜ.,:குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், கோவா மற்றும் டில்லி என, ஆறு மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ என, நான்கு யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி முதல்வராக உள்ள, குஜராத் - 26, பா.ஜ., ஆளும் ராஜஸ்தான் - 25 மற்றும் கோவா - 2, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இமாச்சல பிரதேசம் - 4 மற்றும் உத்தரகண்ட் - 5, மாநிலங்களில், மொத்தமுள்ள, 69 லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ.,வே வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் உட்பட, சில தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.
*ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தமுள்ள, 25 தொகுதி களிலும், பா.ஜ., வெற்றி பெற்றதால், அந்த மாநிலத்தில் போட்டியிட்ட, ஐந்து மத்திய அமைச்சர்களான, சச்சின் பைலட், ஜிதேந்திர சிங், சந்திரேஷ் குமாரி, நமோ நாராயணன் மீனா மற்று கிரிஜா வியாஸ் ஆகியோரும், தற்போதைய காங்கிரஸ், எம்.பி.,க்கள் ஆறு பேரும் தோல்வி தழுவினர்.
*ராஜஸ்தான் மாநிலம், பார்மர் தொகுதியில், சுயேச்சையாகப் போட்டியிட்ட, பா.ஜ., அதிருப்தி வேட்பாளர், ஜஸ்வந்த் சிங்கும் தோல்வியை தழுவினார்.
*தலைநகர் டில்லியில், ஏழு தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
*சாந்தினி சவுக் தொகுதி யில், டில்லி மாநில பா.ஜ., தலைவர், ஹர்ஷ்வர்த்தன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து, ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, ஆஷுதோஸ், மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
*இதுபோல், புதுடில்லி தொகுதியில், பா.ஜ.,வின் மீனாட்சி லேகியும், மேற்கு டில்லியில், பர்வேஷ் வர்மாவும், வடகிழக்கு டில்லி யில், மனோஜ் திவாரியும், வடமேற்கு டில்லியில், உதித் ராயும் என, ஏழு தொகுதிகளிலும், பா.ஜ., வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும், காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.*அதேபோல், யூனியன் பிரதேசங்களான, அந்தமான் நிகோபார், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூவில் தலா ஒரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றிலும், பா.ஜ., வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
*அந்தமானில், பா.ஜ., வேட்பாளர் பிஷ்ணுபாடா ராய் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர், குல்தீப் ராய் சர்மாவை தோற்கடித்துள்ளார். சண்டிகரில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான,பவன்குமார் பன்சாலை விட, பா.ஜ., வேட்பாளர் கிரண் கெர் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
*தாத்ரா நகர் ஹவேலியில், பா.ஜ., வேட்பாளர், படேல் நடுபாய் கோமன்பாய், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தெல்கர் மோகன்பாய் சஞ்சிபாயை தோற்கடித்து, சாதனை படைத்துள்ளார்.
*டாமன் டையூவில், காங்கிரஸ் வேட்பாளர், கேதன் தயாபாய் படேலை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று, பா.ஜ., வேட்பாளர், படேல் லாலுபாய் பாபுபாய் வெற்றி பெற்றுள்ளார்.
காங்., கூட்டணி அரசு தோல்விக்கு காரணங்கள்
*முந்தைய வாஜ்பாய் அரசின் சாதனைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை.
*அமைச்சர்கள் மீதும் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்களான, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், 1 லட்சத்து, 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் 1 லட்சத்து, 86 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என அடுக்கான ஊழல் புகார்கள்.
*வாஜ்பாய் அரசு அறிவித்த நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமில்லாதது என ராகுல் அறிவித்தது.
*இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைக்கு, மத்திய, காங்., கூட்டணி அரசு முழு அளவு துணை நின்றதால் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி.
*தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தியுள்ள தாக்குதலில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
*சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள், நம் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிப்பதும், நம் ராணுவ வீரர்களை கொடூரமான முறையில் கொல்வதும் கடும் அதிருப்தியை, மத்திய அரசு மீது ஏற்படுத்தியது.
*அன்றாட வீட்டு உபயோக பொருட்களான சமையல் எண்ணெய், சர்க்கரை, பெட்ரோல், டீசல் போன்றவை, 350 சதவீதம் வரை விலையை உயர்த்தியது.
*பயங்கரவாதிகளை ஒடுக்க, பா.ஜ., கொண்டு வந்த, 'பொடா' சட்டத்தை, காங்., அரசு ரத்து செய்ததால், குண்டு வெடிப்பு சம்பவங்கள் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியது.
*காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, நெய்யாறு இடதுகரை சானல்களில் இருந்து முறைப்படி தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய தண்ணீரை பெற்றுதர மறுத்தது.இன்னும் பல.
நன்றி-தினமலர்.
RSS Feed
Twitter



























