அரசின்
திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள்
பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ்
அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
அரசின்
திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள்
பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்
தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
லஞ்சம்
வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். பொதுமக்களுக்கான அனைத்து
நலத்திட்டங்களும் நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு பணியாற்றுவது அரசு அலுவலர்களின் கடமையாகும்.
பொதுமக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் லஞ்சம் கேட்போர்
மீது எவ்வித அச்சமின்றி புகார் அளிக்கலாம். அனைத்து துறை அரசு
அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியரின் அலைபேசி எண்ணும், ஊழல் தடுப்பு
கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளரின் அலைபேசி எண்ணும்
எழுதப்பட்டிருக்க வேண்டும்
லஞ்சம்
கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றிவிடலாம் என்று நினைப்பது முறையான செயல்
அல்ல. எனவே பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றிய
தகவல்களை மாவட்ட ஆட்சியரிடம் 94441-75000 என்ற எண்ணிலோ, ஊழல் தடுப்பு
கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளரிடம் 94450-48952, 94450-48862
என்ற எண்களிலோ அல்லது அரியலூரில் கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஊழல்
தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரிலோ
தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள்
ரகசியமாக வைக்கப்படும்.
பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்ட எண்கள் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
0 comments:
Post a Comment