நரேந்திர மோடி – இந்தியாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு எதிராக பத்தாண்டுகள் பெரும் ஊடக முதலாளிகளும் அரசாங்கமும் சேர்ந்து மிகப் பெரிய பிரச்சார தாக்குதல் நடத்தியது நரேந்திர மோடிக்கு எதிராகத்தான். தொடர்ந்து மோடி கலவரங்களுக்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டார். கலவரம் முடிந்து ஒவ்வொரு நாளும் இந்த குற்றச்சாட்டுகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன.புது புது சாட்சிகள் உருவாக்கப்பட்டனர்.28 பிப்ரவரி 2002 இல் இஷான் ஜாஃப்ரி எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலவரம் செய்த ஒரு ஹிந்து கும்பலால் கொல்லப்பட்டார். அவர் இருக்கும் இடம் பாதுகாப்பானது என புகலிடம் தேடி வந்த முஸ்லீம்களில் 68 பேர் கொல்லப்பட்டனர். குல்பர்கா படுகொலை என அழைக்கப்படும் இந்த படுகொலையில் மோடியை தொடர்பு படுத்துவதற்குதான் நம் போலி மதச்சார்பற்ற ஊடகங்களூம் அதிகார வர்க்கமும் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றன. மே 2002 இல் இந்த படுகொலை குறித்த முதல் பொய்யை பரப்பியவர் அருந்ததி ராய் ஆவார்.
அருந்ததி ராய் |
நச்சல்களுடன் அருந்ததி ராய் |
சஞ்சய் பட் |
சிறப்பு புலனாய்வு பிரிவு மோடியை பல மணி நேரங்கள் விசாரித்தது. இது போலி மதச்சார்பின்மை ஊடகங்களில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்பட செய்தது. ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவின் அறிக்கை வந்த போது அவை அதிர்ச்சிக்கு உள்ளாகின. எப்படி சஞ்சய் பட் பொய்கள் சொல்லியிருந்தார், போலி ஆதாரங்களை உருவாக்கியிருந்தார், எப்படி சில ஊடகங்கள், சில தனிமனிதர்கள் மோடிக்கு எதிராக எந்த அளவுக்கும் சென்று பொய் சொல்ல துணிந்திருந்தனர் என்பதையெல்லாம் சிறப்பு புலனாய்வுத் துறை தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தது. சஞ்சய் பட்டின் மின்னஞ்சல்களை ஆராய்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அறிக்கை கூறியது:
சஞ்சய் பட், பல்வேறு என்ஜிஓக்களி சில அரசியல் தலைவர்கள் என உள்நோக்கம் கொண்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்து கொள்ள பார்க்கிறார்கள். திரு சஞ்சய் பட் இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்களுடன் ஒத்துழைப்பதன் காரணமே எப்படியாவது நரேந்திர மோடியின் மீது ஒரு குற்றப்பத்திரிகை பதிவாகிவிட வேண்டும் என்பதுதான்.இதே சக்திகளால் மீண்டும் ஸாக்கியா ஜாஃப்ரி தூண்டிவிடப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்கு எதிராக மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் மோடி விசாரணை செய்யப்படவேண்டும். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வருவதாக இருந்தது. ஏறக்குறைய இத்துடன் மோடியின் அரசியல் வாழ்வே அஸ்தமித்துவிடும் என்கிற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் எழுதின. மோடியை பிரதமமந்திரியாக முன்வைத்து பாஜக இயங்கும் போது இந்த தீர்ப்பு வருகிறது. இது மிக முக்கியமான தீர்ப்பு. ஆனால் தீர்ப்பு வந்தது. நரேந்திர மோடிக்கு 2002 கலவரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை ஏற்புடையது என்கிறது நீதி மன்றம்.
மோடி 2002 குஜராத் கலவரம் குறித்து என்ன சொல்கிறார்?
எனக்கு இந்த கலவரத்துடன் தொடர்பு உண்டு என்றால் இந்த கலவரத்தை நான் அரசு உதவியுடன் அனுமதித்தேன் என்றால் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டாம். தூக்கில் போடுங்கள். எத்தகைய கொடுமையான தண்டனை இந்த குற்றத்துக்கு பொருத்தமானதோ அந்த தண்டனையை அளியுங்கள்.இதைத்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். இதற்காகவே சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல ஒன்பது மணி நேரம் தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார்.ஆனால் போலி மதச்சார்பின்மை ஊடகங்களோ மீண்டும் மீண்டும் பொய்களையே அவருக்கு எதிராக பரப்பி வருகின்றனர். இந்த தீர்ப்பு மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க மட்டும் செய்யவில்லை. மேலும் மோடி மிகுந்த வேகத்துடன் கலவரத்தை அடக்க ராணுவத்தை அழைத்ததும் பாராட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், போலி மதச்சார்பின்மை சக்திகள், காங்கிரஸினால் வளர்த்துவிடப்பட்ட செல்லபிராணிகளான் ஊடகங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிடுகின்றன. மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன. அவர் சவால்களை மீறி வளர்கிறார். வெறுப்பு பிரச்சாரங்கள வளர்ச்சியின் சாதனைகளால் சந்திக்கிறார். மதச்சார்பின்மை பேசும் சக்திகள் மத அடிப்படையிலான வெறுப்பு பிரச்சாரங்களை ஆயுதங்களாக வீச, இந்துத்துவரான நரேந்திர மோடியோ மதம் கடந்த மனித நேய சமூக பொருளாதார வளர்ச்சியை தன் ஒரே ஆயுதமாக முன்னிறுத்துகிறார். அவரது ஒரே கவசம் அவரது நேர்மை. ஆனால் போலி மதச்சார்பற்ற சக்திகளோ தங்கள் பாடத்தை படித்ததாக தெரியவில்லை.
நன்றி-http://www.tamilhindu.com
0 comments:
Post a Comment