தொழில்பயிற்சி(ITI) ,
வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயபடிப்பு முடித்துள்ள
பதிவுதாரர்கள் இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதிகள் சரியாக உள்ளதா
என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு
தரேஸ் அஹமது இ.ஆ.ப. அவர்கள் தகவல்
பட்டயபடிப்பு
முடித்துள்ள பதிவுதாரர்கள் இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதிகள்
சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்
தலைவர் டாக்டர் திரு தரேஸ் அஹமது இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் அனைத்து
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின்
விவரங்கள் யாவும் இணையதளத்தின் வழி ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது
நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு
செய்துள்ள நபர்களின் பதிவு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ள விவரங்கள் முழுமைப்படுத்தும் பணிகள் தற்போது
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் பதிவு விவரங்களையும் சீரான
கால இடைவெளிகளில் குறிப்பிட்ட தகுதி பதிவுதாரர்களின் வகைபாடுகள் வாரியாக
இணையதளத்தில் சரிபார்த்து முழுமைப்படுத்திட உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள
அனைத்து வகையான தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ) முடித்துள்ள பதிவுதாரர்களுக்கும்,
வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயப்படிப்பு முடித்துள்ள (Dip. In Agri/Hortculture) பதிவுதாரர்களுக்கும் தங்களது பதிவு அடையாள அட்டையின் இணையதள கணினிப் பிரதி ஒன்றினை www.tnvelaivaaippu.gov.in என்ற
இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களின் பழைய வேலைவாய்ப்பு அடையாள
அட்டையில் பதியப்பட்டுள்ள கல்வித்தகுதிகள் மற்றும் இதர குறிப்புகள் யாவும்
சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள
வேண்டும்.
மேலும்
தகவல்கள் விடுபாடுள்ள பதிவுதாரர்கள் மட்டும் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின்
அசல் மற்றும் நகல் பிரதிகளுடன் 11.01.2014ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது பதிவு விவரங்களை
இணையதளத்தில் விடுபாடின்றி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். விபரங்கள்
விடுபாடுள்ள பதிவுதாரர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
0 comments:
Post a Comment