புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர்
பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது.
இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள்
இடம்பெற்றுள்ளன. இந்த ஜாதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி பயிலும்
போதும், வேலையில் சேரும் போதும், குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு
வழங்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள
இந்த பிரிவினரை திருப்திபடுத்தும் விதத்தில், மேலும், 60 ஜாதிகளுக்கு,
ஓ.பி.சி., அந்தஸ்து வழங்க, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. தேசிய
பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரையை அடுத்து, பிரதமர் தலைமையில் நேற்று
கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் நேற்று
வழங்கப்பட்டது
நன்றி-தினமலர்.
நன்றி-தினமலர்.
0 comments:
Post a Comment