பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
வேப்பந்தட்டை அருகேயுள்ள அயன்பேரையூர் கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜா (37). இவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் சனிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பார்த்தபோது அவருக்குச் சொந்தமான மற்றொரு மாடி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த வி. களத்தூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ராஜா அளித்த புகாரின்பேரில், வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நன்றி-தினமணி.
0 comments:
Post a Comment