Sunday, 26 January 2014



பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் பயிற்சி மையத்தில் கார் ஓட்டுநர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 20 வயதிலிருந்து 35 வயதிற்கு குறைவாகவும், 8- ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ், உரிமம், பொது வில்லை வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பமுள்ளோர் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
 குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்) ஆத்தூர் சாலை, பெரம்பலூர் (04328- 277896) என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment