டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பாரத் மாதா கீ,., பாரத் மாதா கீ என்று உரத்த குரலில் கோஷம் எழுப்பி பேச்சை துவக்கினார். பின்னர் அவர் பேசியதாவது: கடந்த 2 நாட்களாக நாம் இந்த நாட்டின் அரசியல் சூழலை ஆராய்ந்துள்ளோம். வரும் 2014 தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும். நல்ல மாற்றத்தை பார்க்க முடியும் .
தலைமை- கொள்கை இல்லை: நாடு உரிய தலைமை இல்லாமல், உரிய கொள்கைகள் இல்லாமல் இருந்து வருகிறது. இது போன்ற நிலையை நாம் இதுவரை பார்த்தது இல்லை. கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இது இந்த கட்சியை காப்பாற்ற நடந்தது. ஆனால் நாங்கள் இந்த நாட்டை காப்பாற்ற இங்கு முயற்சித்து வருகிறோம்.
சமீபத்திய கூட்டத்தில் காங்கிரஸ் பிரதமர் யார் என்று சொல்லவில்லை. இதனால் காங்., தொண்டர்களே மன உளச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். பிரதமர் வேட்பாளரை எதிர்பார்த்த இவர்களுக்கு 3 சிலிண்டர்தான் கிடைத்தது. பிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்., அஞ்சுகிறது. இதற்கு தோல்வி பயமே ! நான் காங்கிரசை கேட்கிறேன், ராஜிவ்காந்தியை பார்லி., போர்டு குழுவா பிரதமராக தேர்வு செய்தது ?
டீ விற்றவன் :
எனது பெயரை டீ விற்றவன் என்று கேலி செய்கின்றனர். ஆனால் இந்த டீ விற்றவனிடம் எப்படி போராட போகிறோம் என நினைத்து அஞ்சுகின்றனர். எனது பணி எனக்கு தெரியும். வலிமை வாய்ந்த காங்கிரஸ் டீ விற்பவரை பார்த்து அச்சமுறுவது ஏன்? நாட்டில் உள்ள அனைத்து டீ விற்பவர்களும் நாட்டின் பெருமை மிக்கவர்களாக தற்போது கருதப்படுகின்றனர். நாடு முழுவதும் டீக்கடை காரர்கள் குறித்த பேச்சு ஹாட் டாப்பிக்காக உள்ளது. டீ விற்றவர் இந்த நாட்டை எவ்வாறு வெற்றிகரமாக நடத்த முடியும் என்று அவர்கள் கேட்கின்றனர்.
சோனியா தாய் தியாகம் செய்வாரா ? மன்மோகன்சிங்கை எம்.பி.,க்கள் தேர்வு செய்யவில்லை. சோனியா நியமித்தார். இதனை மறுக்க முடியுமா ? வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. மோசமான நிலையில் இந்தியா இருக்கிறது. இது போன்ற ஊழல் நடந்ததை கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் நாங்கள் பார்த்தது இல்லை. தேர்தலில் வெற்றி பெற முடியாது, ராகுல் பிரதமராக முடியாது என்ற காரணத்தினால் தான் அறிவிக்கவில்லை. எந்த தாயாவது (சோனியா ) தனது மகனை தோல்விக்காக தியாகம் செய்ய முன்வருவாரா? அவமானத்தை சந்திக்க நேருமே என்று சோனியா அஞ்சுகிறார்.
ஜனநாயகமே இந்த நாட்டின் பெரும் சொத்து. வெறும் பிரதிநிதிகளாக இருக்க கூடாது. இந்த ஜனநாயகத்தின் உயிராக விளங்க வேண்டும். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அறிவுத்திறமையே மற்றொரு மூலதனம் . பல மாநில வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கமிட்டி வேண்டாம்; கமிட்மென்ட் தேவை : ஊழல் நடந்தபோது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு தேவை கமிட்டி அல்ல கமிட்மென்ட் வெளிநாட்டில் பதுங்கி கிடக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வந்தால் இந்த நாட்டை செழிப்படைய செய்ய முடியும். சிறந்த நிர்வாகமும், சிறந்த கட்டமைப்பும் தான் இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும்.
பெண்களுக்கு எதிராக குற்றம் பெருகி வருகிறது. இது இந்தியாவிற்கு அவமானத்தை தருகிறது. மகளிருக்கு எதிரான குற்றம் தடுக்கப்பட வேண்டும்.லட்சக்கணக்கான மக்கள் பா.ஜ.,வில் தற்போது இணைந்து வருகின்றனர். வரும் 2014 ல் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் வட கிழக்கு மாநிலங்களில் பெரும் வளர்ச்சியை தருவோம்.
* காங்கிரஸ் காரர்கள் இந்த நாட்டை தேன் கூடாக நினைக்கின்றனர். நாம் தாயாக உணர்கிறோம்.
*இந்த நாட்டில் 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்பட வேண்டும்.
*நாட்டில் வாழும் ஏழைகள் அனைவருக்கும் தங்கும் குடியிருப்புக்கள் வழங்க வேண்டும்.
*வேளாண் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.
*குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள பால் கூட்டுறவு சொசைட்டிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட வேண்டும்.
*அனைத்து இந்தியர்களும் தொழில்நுட்ப துறையில் கற்கும் நிலை உருவாக வேண்டும்.
*நாட்டு மக்களின் நலம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.
*ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையில்லை. ஹெல்த் உத்ரவாதம் தான் தேவை. * வறுமையை ஒழிக்க பாடுபட வேண்டும்.
* திறமை, வர்த்தகம், சுற்றுலா முன்னேற்றப்பட வேண்டும். இவைதான் நம்மை உலக அளவில் மதிப்பை உயர்த்த உதவும்.
*நான் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முன்பு தேர்தல் வெற்றிக்காக அத்வானியின் ஆசீர்வாதத்தை பெறுவேன்.
நான் விரும்பும் இந்தியா :
* இந்தியா குறித்து எனது எண்ணம் எல்லாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்,
*வன்முறையற்ற இந்தியா,
* நமது தாய்நாடே பிற நாட்டை விட அனைத்திலும் உயர்ந்து விளங்க வேண்டும் .
*வாரிசு அற்ற ஊழலற்ற அரசு வேண்டும்.
*நாட்டின் வளர்ச்சிக்கு 5 ' டி '- தேவை, அவை வருமாறு: டேலன்ட் ( திறன்), டிரெடிஷன், (பாரம்பரியம்), டூரிசம் (சுற்றுலா), டெக்னாலஜி ( தொழில்நுட்பம்) , டிரேட் ( வர்த்தகம்) .
இவ்வாறு பேசினார்.
நன்றி-தினமலர்.
0 comments:
Post a Comment