புதுடில்லி: தற்போதைய சூழலில் பார்லி., தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ., வே கூடுதல் சீட்டுக்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாகவும், காங்கிரசுக்கு கடந்த தேர்தலை விட பெரும் இழப்பு ஏற்படும் என்றும் , ராகுலை விட மோடியே பிரதமர் ஆக வேண்டும் என கூடுதல் சதவீதத்தினர் விரும்புவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சி.என்.என். சார்பில் நடத்தப்பட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பு 18 மாநிலங்களில் பல் தரப்பு வாக்காளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. நேரில் மற்றும் பேஸ்புக், இணையதளம் ஆகியன மூலம் இந்த கணிப்புகள் நடந்தன.
இந்த கணிப்பின்படி கடந்த 2009 நடந்த லோக்சபா தேர்தலை விட காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஏற்கனவே பெற்ற 206 தொகுதிகளில் 92 முதல் 108 வரை மட்டுமே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 211 முதல் 231 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. இது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு மிக ( 272 தேவை) குறைந்த வித்தியாசமே.
மாநில அளவிலான கட்சிகள் இந்த முறை அதிக இடங்களை பிடிக்க வாயப்பும் உள்ளது. குறிப்பாக மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி, தமிழகத்தில் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., கூடுதல் இடங்களை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், இந்த நேரத்தில் மத்தியில் பிரதமரை முடிவு செய்வதில் இந்த கட்சிகள் முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியே பிரதமர் ஆக வேண்டும்; மோடியே பிரதமர் ஆக வேண்டும் என அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 25 வயது வரையிலானவர்ககளில் 48 சதவீதத்தினர் மோடிக்கும், 25 சதவீதத்தினர் ராகுலுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், போன்ற மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு பெரும் வெற்றியை தேடித்தரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்.
RSS Feed
Twitter
Saturday, January 25, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment